Recent Posts

31 Dec 2010

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்Happy New Year 2011 Orkut Scraps -.19 Dec 2010

வலைசரத்தில் முதல் நாள்

ஹாய் , ஒரு வழியா திக்கி திணறி வலைசரத்தில் என் முதல் போஸ்ட் போட்டுட்டேன்.
அப்பாடா ரொம்ப நாளா வேற வேற காரணத்தினால் ஒழுங்க தொடர்ந்து எழுத முடியவில்லை , நண்பர்கள்  வலைபூ பக்கமும் போகமுடியல, இனியாவது பழைய படி  வலை உலகத்தை சுத்து சுத்துன்னு சுத்தலாமுன்னு நினைக்கிறன்.

மக்களே உங்கள் ஆதரவு எனக்கு தேவை, பெரியமனசு பண்ணி  உங்களுக்கு
நேரம் கிடைக்கும்  பொழுது வலைசரத்தில் என் முதல் பதிவை படித்து உங்கள் கருத்துக்களை எழுதுங்க

நன்றி வணக்கம்உடையும் செய்தி

ஹலோ மக்களே உங்களுக்கு ஒரு உடையும் செய்தி ,அதாங்க பிரேக்கிங் நியூஸ்ன்னு சொல்ல வந்ந்தேன்.
நம்ம வலைசரம் பற்றி உங்க எல்லாருக்கும் தெரியும், இந்தவாரம் நான் தான். ஒரு வாரம் உங்கள ஒரு வழி பண்ண போறேன் ( அப்ப இது கண்டிப்பா மனம் உடையும் செய்திதான்).

அங்க எப்போவும் பெரிய பெரிய ஆளுங்க தான் எழுதுறாங்க , சீனா சார் பெரியமனசு பண்ணி பாவம் போனா போகுதுன்னு என்னையும் அழைத்து பெருமைப்படுத்தி விட்டார்.


முடிந்தவரை சுவாரஸ்யமாக எழுத முயற்சிக்கிறேன்.எல்லாரும் குழந்தை குட்டியோட வந்து படிச்சு சிரிச்சு சந்தோஷமா உங்க  கருத்துக்களை சொல்லுங்க.

நிறைய கமெண்ட்ஸ் & விசிட்டர்ஸ்னு பல சாதனைகளை பல பேர் செஞ்சுட்டு இருக்காங்க அங்க. ஆனா நான் வேறு வகையில சாதனை செய்ய முயற்சிக்கிறேன்...... அதென்ன வேறு வகையா? அதான் தப்பில்லாம தமிழ்ல எழுதிதான் ! ( நடக்கற கார்யமா???)

-------------------------------------------------------------------------------------------------------------
என் பதிவை தொடர்ந்து படிக்கும் தாய்மார்களே தந்தைமார்களே ஆந்தைமார்களே (ஆந்தை மாதிரி நைட்ல கூட முழுச்சு பதிவு படிக்கிறவங்க) வாக்காள பெருமக்களே.... வருகின்ற தமிழ்மண விருது தேர்தலில் "காமெடி, கார்டூன் பிரிவில்" போட்டியிடும் என்னை வெற்றி பெற செய்தால் வீட்டுக்கொரு லேப்டாப்பும் தெருவிற்கு ஒரு Wi-fi கனெக்ஷனும் இலவசமாக கொடுக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கிறேன்மக்களே  தயவு செய்து உங்க பொன்னான வாக்குகளை எனக்கு அளியுங்கள்

நன்றி  நன்றி நன்றி
4 Dec 2010

குட்டி வேண்டுகோள் !

தமிழை கொன்றது, கொல்வது . கொல்லபோவது  போராதென
இப்பொழுது ஆங்கிலத்தையும் ஒரு வழி செய்யலாம் என்ற நல்ல
எண்ணத்தில் , எனது தமிழ் தெரியாத ( உனுக்கு மட்டும் தெரிதா என்ன ?? )
நண்பர்களுக்காக ஆங்கிலத்திலும் ஒரு வலைபதிவை துடங்கி உள்ளேன்.

( தாயே இந்த கொலைவெறி தேவையா?? என்று நீங்கள் பதறுவது புரியுது!
நீங்கள் எனக்கு ஆதரவு தரவில்லை என்றால் யாரு தரபோறாங்க ! ? )

ஆகையால் நேரம் கிடைக்கும் பொழுது http://lifeophobia.blogspot.com/ 
சென்று படித்து உங்கள் அன்பு மழையை ??? !! ### அங்கும் பொழியுமாறு  கேட்டு கொள்கிறேன் .

நன்றி
25 Nov 2010

கொலை முயற்சி

கொஞ்ச  நாளா நான் வலைப்பக்கம் வருவதில்லை,பதிவும் போடுவதில்லை.பின்னூட்டமும் இடமுடியவில்லை!.அப்படா சந்தோஷம் என்று அலுத்து கொண்ட சிலரும்,நீ இல்லேன்னா பதிவுலகத்தோட அதான் நம்ம தமிழ் பதிவுலகத்தோட எதிர்காலமே கேள்விக்குறியாகிடும் என்று புலம்ப மனது ரொம்ப கஷ்ட பட்டேன்...

எல்கே அண்ணன் குஜராத் போறாராம், தங்கமணி அக்கா இந்தியா போய்ட்டு

இப்போதான் வீடு திரும்பினார், அருண் சினிமா புதிரா போட்டு மக்களை சிந்திக்க வைக்கிறார், ஆதவனோ சேட்டனின் சேட்டைகளை பதிவை போட்டு என்டி டிவி க்கு சவால் விடுகிறாராம், 

இவர்களிடமிருந்து மக்களை மீட்டு காப்பாற்ற வேண்டும் என்று ஒரு ரசிகர் மன்றாட.........வந்துவிட்டேன்..


ஆனா நான் ஏன் வரல? என்ன பண்ணேன் இவ்ளோ நாள்?? எப்படி என் கண்மணிகளை பிரிந்து இருந்தேன்?? இந்த கேள்விகளெல்லாம் உங்க மனசுல வந்திருக்கும் எனக்கு தெரியும் சொல்றேன் சொல்றேன் ...அதுக்குதான் வந்தேன்..

கொஞ்ச நாள் முன்ன காலிங் பெல் அடிச்சது, நான் போய் திறந்தா.....

" உன்னபாத்துஎத்தன நாள் ஆச்சு? எப்டி இருக்கே ? நாங்க உங்க கூட கொஞ்ச நாள் தங்கிவிட்டு போகலாம்னு ஆசையா வந்துருக்கோம் என்றபடியே வீட்டினுள் என் அனுமதியை கூட எதிர்பார்க்காமல் உரிமையாய் என்டர் ஆனது அந்த குடும்பம்!
அம்மா அப்பா பிள்ளைகள் என்று ஆளுக்கொரு மூளைக்கு படையெடுத்தனர்.
இவங்கள யார் உள்ளவிட்டது என்று ரங்கமணி ஆத்திரமாய் சீற, என் பொண்ணோ அம்மா எனக்கு பயமா இருக்கு போக சொல்லுமா என்று அலற.. செய்வதறியாது திகைத்து நின்றேன்.
சிலர்  நம்ம வீட்டிற்கு வரமாட்டான்களா தங்கமாட்டாங்களா என்று நாம எண்ணி ஏங்குவோம்,  சிலர் எப்போடா போவாங்கன்னு விரக்தி அடைய வைப்பாங்க..இவர்கள் இரண்டாவது ரகம்..அம்மாக்காரிக்கு வேலையே இல்லையோ.... எத்தனை பிள்ளைகள்?? 

அப்பனோ ஜொள்ளு நான் போற இடத்துக்கேலாம் வந்து நிக்கறது...
கிச்சென்னுக்கு வந்து நான் சமைக்கறதயே உத்து பாக்குறது,
சமைச்சு  டேபிளுக்கு கொண்டு வந்து வச்சா துளி மூட மறந்தாலும் சாப்பாட்டுல கை வைகுறது, அட தூங்கும் பொழுது கூட பக்கத்துல படுத்து தூங்க பாக்குறான் அல்ப பிறவி. 

பிள்ளைகள்!! ஐயோ பசங்களா அதுங்க?? கண்ட எடத்துல ஏறவேண்டியது கண்டத்த தின்ன வேண்டியது, பட்னி போட்டா கூட தண்ணி குடிச்செனும் வாழ்வேன் ஆனா உன்ன விட்டு பிரியமாட்டேன் அன்பு தொல்லை.
இப்படியே  ஒரு மாசம் பொறுக்க முடியவில்லை ,

அப்பொழுதுதான் துணிந்து அந்த பாவ செயலை செய்ய துணிந்தோம்.. விஷம் கொடுத்து கொள்ள மனசு வரவில்லை, என்னதான் இருந்தாலும் விருந்தாளி.
ரங்கமணி பொறுமை இழந்தார், போன் போட்டார் இரண்டு அடியாட்களை தயார் செய்தார். சனிக்கிழமை நாங்க வரோம், குழந்தை இருந்தா நீங்க வெளில போயிடுங்க கொலை செய்வதை குழந்தை பார்த்தால் பிஞ்சு மனசு உறைந்து போகும், கொலை செய்வது எங்கள் வேலை ஆனா மத்தத நீங்கதான் பாத்துக்கணும் என்று கண்டிஷன் போட்டார்கள்..

அவர்கள் கொலை செய்வதில் பெயர்போனவர்களாம் ! ஒரே அடி டிக்கெட் நிச்சயம் என்று அனைவரும் பேசிக்கொண்டனர், இது ரொம்ப ஆபத்தான முடிவு என்று சிலர் எச்சரித்தனர்.

சனியன் சனிக்கிழமை வரான் என்று விருந்தினர்களிடம் நாங்கள் சொல்லவில்லை. மரணத்தை ஏற்று கொள்ளும் மனப்பக்கும் அவர்களுக்கு ஏன் யாருக்குத்தான் இருக்கிறது??

ஒரு வழியாக வந்தது சனிக்கிழமை, சத்தம் போடாமல் ஒவ்வருவராக தயாரானோம், வெளியில் செல்வதை காட்டிக் கொள்ளவில்லை !
மணி நாலு முப்பது அடித்தது

அதே காலிங் பெல் , கதவை திறந்தால்....இருவர் பார்க்க கொலைகாரகலைபோல் தெரியவில்ல மிகச்சாதாரணமாக இருந்தார்கள். நீங்க வெளியே போயிடுங்க நாங்க வேலைய முடிச்சுட்டு கீழே வந்து சொல்றோம்.
திரும்ப வந்து நீங்கதான் பிணங்களை அப்புற படுத்த வேண்டும் வாடை வீசலாம் பார்த்து கொள்ளுங்கள் என்று எச்சரித்துவிட்டு கொலைவெறியுடன் வீடு புகுந்தனர், நாங்கள் என்ன ஆகுமோ ஏதாகுமோ என்று உறைந்து கொண்டு கீழே சென்று நின்றோம் .என்ன அதிசயம் ஒரு சத்தம் இல்லை அலறல இல்லை பத்து நிமிடங்கள் கழிந்தன , வெற்றிப்புன்னகையுடன் அவர்கள் வந்தார்கள்.

" முடிச்சுட்டோம்! கொஞ்ச நேரம் கழிச்சு  போய் கிளீன் பண்ணிடுங்க, " என்று கூறி விடைபெற்றனர்.

மூன்றுமணிநேரம் செய்வதறியாது ஷாப்பிங் மாலுக்கு சென்று வீடு திரும்பினோம், ரங்கமணிக்கு அப்படி ஒரு துணிச்சல் , " நான் போய் பிணங்களை அப்புறப்படுத்துறேன் குழந்தை பார்க்க வேண்டாம் நீ கொஞ்ச நேரம் பொறுத்து மெல்ல வா " என்று உத்தரவு போட்டுவிட்டு வீட்டிற்குள் சென்றார்..

சிலநிமிடங்கள் கழித்து....

காயத்ரி......................... என்று ஒரு அலறல், உயிர் நின்றே போனது எனக்கு
பதறி அடித்து கொண்டு போனேன்!!!

கடவுளே என்ன காரியம் செய்துவிட்டோம் என்று பயம் வேறு தொற்றிக்கொண்டது ..மெதுவாய் கதவை திறந்தேன்.
 
முகம் முழுதும் வியர்வையும் பயமும் தாண்டவமாட கண்கள் சிவந்து
கண்ணீர மல்க ரங்கமணி,

" காயத்ரி நாம பட்ட கஷ்டமெல்லாம் இப்படி ஆகிடுச்சே! அவங்க சாகல போகவும் இல்லை!! என்ன செய்ய போறோம்?? நாம இவங்க கூடத்தான் வாழனுமா ?? அவனுக்க கொன்னுட்டதா போய் சொல்லிட்டாங்க?? பாரு என்று காட்ட "

இதுவரை அப்படி அதிர்ந்ததில்லை. ஒருவருக்கும் ஒன்றும் ஆகவில்லை அடிகூட படல!! அவனுங்கள பேசி கவுத்துடான்களோ?? என்ன கொடுமை?? எப்படி இப்படி???

எப்படி இவங்க இப்படி தப்பிச்சாங்க?? விடை கிடைத்தது அது கடைசியில் !
இப்பொழுது வேறு வழி இன்றி அவர்களுடன் ஒன்று பட்டு வாழ மனதை தயார் செய்துகொண்டு வருகிறோம் :(

எப்படி  தப்பித்தார்கள்?????
மேல ஏறித்தான்!! பாவி பசங்க கீழே அடிச்சா இவங்க மேல ஏறி டேக்கா குடுத்திருக்காங்க!!!
அவங்கள பாக்கனும்னு ஆசையா இருக்க?
இவங்க தான் அவங்க எங்க வீடு விடா கண்டன் கொடா கண்டன் போகாமல் சாகடிக்கும் விருந்தாளிகள்
.

.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.


7 Nov 2010

சந்தேகத்தின் விடை

ஹாய் நணபர்களே,


என்னோட சந்தேகக சம்பராணி பதிவுல எல்லாரும் பதிலளிச்சுருகீங்க,
ரொம்ப நன்றி.


நான் பசி பற்றி என் தோழியிடம் பேசிக்கொண்டு இருந்த பொழுது அதை பற்றி
கொஞ்சம் பொழுது போகாமல் இன்டர்நெட்டில் ஆராய்ச்சி செய்ய போய் தெரிந்து கொண்ட வை..

ஒன்று பசி என்ற இந்த உணர்வு அளவினை மீறும் பொழுது மற்ற உணர்வுகளை மீறி அது வெளிப்படும் என்பது ,

இரண்டு பசி வரும் பொழுது , மற்றவரிடம் வாய் விட்டு உணவு கேட்க தூண்டும் அளவிற்கு அது நம் மனதினை மாற்றும் என்பது , இதனால் நான் என்ற எண்ணம் ஒடுக்க படுகிறது ,

மூன்று  பசி என்ற ஒன்று கட்டுபாட்டை மீறும் பொழுதுதான் மனமும் கட்டுபாட்டை இழக்கிறது, உலகில் திருட்டு , கொள்ளை போன்ற  குற்றங்கள் தூண்டப்படுவதே பசியால் தான் .

இதெல்லாம் நான் ஒன்னும் சொல்லல , படிச்சேன் உண்மையான்னு பார்க்கத்தான்.. ( எனக்கெங்கே இவ்ளோ தோனபோகுது ?)

அவரிடம் பணத்தை கொடுத்து விடுவேன் என்று சொன்ன சிலர் தான்
இந்த மூன்று விதியையும் மீறி  சிந்தித்து இருகின்றனர்...

அதுக்காக  சாபிடுவேன்னு சொன்னவங்களும், கேட்டுட்டு சப்டுவேன்னு சொன்னவங்களும் தப்புன்னு சொல்ல..இப்படி சொன்னவங்க எல்லாம் மேலே கண்ட மூன்று விதியினுள் அடக்கம்..

ஆனால் உண்மையான பசி வந்தா தான் நமக்கே நம்மளை பற்றி தெரியும்..
 
சரி...நான் என்ன செஞ்சுருப்பேன்??

 கையேந்தி பவன் ல போய் சாப்டுட்டு , அப்போவும் அவர் காச தேடினு இருந்த போய் நன்றி சொல்லிட்டு போய்டுவேன்..

நான் ஏன் நன்றி சொன்னேன்னு தெரியாம அவர் காச தேடுவைதை விட்டுட்டு குழம்பிய் போய்டுவார்.
3 Nov 2010

சந்தேக சாம்பிராணி

மக்களே!

இது  ஒரு கற்பனை...இதுல ஹீரோ ஹீரோயின் எல்லாம் நீங்கதான்.

இதான்  சிச்சுவேஷன்..

பகல் பன்னிரண்டு மணி, சென்னை வெயில் மண்டைய பிளக்க ,
கால்ல செருப்பு இல்லை , பைல காசு இல்லை , வேலை இல்லை ,
வெட்டி இல்லை ...

உங்களுக்கோ ஒரே பசி , நொந்து நடந்து போறீங்க... அப்போ
உங்க கண்ணுல...ஒரு பத்து ரூபா நோட்டு படுது..
ரோடுக்கு ரைட் சைடு ல ஒரு கையேந்தி பவன் இருக்கு , உங்களுக்கோ அசுர பசி , தொலைவுல ஒருத்தர் தன் பத்து ரூபாய கானுமுன்னு தேடினு இருகக்ர் ,
அவர பார்த்தா பஞ்சதுல அடிபட்ட மாறி இல்லை பகட்டாத்தான் இருக்கார்,

இப்போ..

நீங்க...

அந்த பத்து ரூபாவ அவருகிட்ட குடுப்பீங்களா ?

இல்லைஅத எடுத்துண்டு போய்  கையேந்தி பவன்ல சாப்டுட்டு
நீங்கபாட்டுக்கு போவீங்களா?

இல்லை வேற என்ன செய்வீங்க??

சொல்லுங்க...

இதன்  பின்னால் இருக்கும் உளவியல் விஷயத்தை நான் நாளைக்கு சொல்றேன்

2 Nov 2010

சூரியன் பிறந்த நாள் !

இன்று நம்ம பதிவுலக சூரியன்.ஆதவன் அவர்கள் பிறந்தநாள்
சூரியன் எப்போவும் எப்படி டல்லடிக்காதோ , அதே மாதிரி ஆதவன் சார்

வலைப்பூவும் எப்போவுமே போர் அடிக்காது..

எப்போவும் அவர் சந்தோஷமா, ஜாலியா, நிம்மதியா இருக்க எல்லோரும்

அவருக்கு வாழ்த்து சொல்லுங்கஇனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் சகோதிரரே .......


HAPPY BIRTHDAY !!


பாசக்கார சகோ ,

காயத்ரி
1 Nov 2010

ஹாய் நான் வந்துட்டேன்!!


ஹாய் ,என்ன கானுமுன்னு ரொம்ப பீல் பன்னேளா

எல்லாரும்?   நானும் ரொம்ப பீல் பண்ணேன் ! போன தேதி
ராத்திரி எப்படியான ஒரு பதிவு எழுதியே ஆகணும்னு

எடுதேனா…………………… என்ன கொடுமை இது லேப்டாப் ஸ்க்ரீன்

அப்போடியே ஒடஞ்சு பின்னாடி போய்டுச்சு…

எவ்வளோ நாள்தான் என் தமிழ தாங்கும் பாவம் அதுக்கு வாய் இருந்துருந்தா அழுதுருக்கும் அதன்   பண்ணிண்டுடுத்து !


அதுக்காக அப்படியே விட முடிமா??  ஒடனே அத எடுத்துகிட்டு ரிப்பேர் பண்ற கடைக்கு . அங்கப்போனா “ புல் ஸ்க்ரீன் மாத்தணும் குறைஞ்சது ஆயிரம் லேந்து ஆயிரத்தி ஐநூறு  திராம்ஸ் ஆகும் . அய்யா சாமி எதன ஒட்டு போட்டு குடுய்யா போரும். நீ சொல்ற காசுக்கு புது லேப்டாப்பையே வாகிடலாம்னு .. ஒரு வழியா ஐநூறுக்கு ஒத்துக்கிட்டு ஒட்டு போட்டான். பதிவு நான் இல்லாம இருக்குற விஷயம் அவனுக்கு எப்படி தெரியும்?

ஒரு வாரமா அல்லோல கல்லோல பட்டு இப்போத்தான் என்
ஏன் கைல கெடச்சுது..இதனை சகல மாணவர்களுக்கு என்னவென்றால் இனிமே நான் தினமும்  பதிவெழுதி உங்கள எல்லாம் வென்னு தாழ்மையுடன் தெரிவித்து
கொ(ல்)ள்கிறேன் …என்ன சந்தோஷம் தானே ? … ஹலோ ஹலோ ! நில்லுங்க நில்லுங்க ப்ளீஸ்..மறக்காம கிழ பொட்டில 

சரியாகுறிப்பு :   இப்போவும் ஸ்க்ரீன் சரி ஆகல பின்னாடி போயிடுது ! அதுக்காக வரமாட்டேன்னு போடவேண்டாம்! நான் வருவேன் திரும்பவும் வருவேன்…
நோ நோ இப்படி ஆகிடக்குடாது..எல்லாரும்

9 Oct 2010

உங்க கிட்ட பழைய ஆடைகள், பொம்மைகள் இருக்கா? (தொடர் பதிவு )

உங்க கிட்ட நீங்க உபயோகப்படுத்தாத பொருட்கள் ஆடைகள், பொம்மைகள் இருக்கா? அதை தூக்கி எறியவும் மனசு இல்லாமல் என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கிங்களா? அதை எங்களிடம் குடுங்க நாங்க அதை ஏழை எளியவர்களுக்கு குடுக்குறோம்.


CTC - Chennai Trekking Club என்று ஒரு இயக்கம் இருக்கிறது.. நீங்க மேற் சொன்ன விஷயங்களை எங்களிடம் அளிக்க விரும்பினால் இந்த சுட்டியில் உள்ள Excel Formஜ நிரப்பினால் எங்க தன்னார்வலர் ஒருவர் உங்களை தொடர்பு கொண்டு உங்களை சந்தித்து அதை பெற்றுக்கொள்வார். இப்போதைக்கு இது சென்னையில் உள்ளவர்களுக்கு மட்டுமே.. உங்களால் நீங்க அளிக்க இருக்கும் பொருட்களை சென்னைக்கு அனுப்ப முடிந்தால் நீங்க கூட எங்களை தொடர்பு கொள்ளலாம்.

முத்துலட்சுமி அக்கா சொன்ன மாதிரி இது ஆதரவற்ற முதியோர்களுக்கும், குழந்தைகளுக்கும் குடுக்க போறாங்க..எனவே தயவு செய்து திரும்ப உபயோகப்படுத்தும் நிலையில் இருந்தால் மட்டும் குடுங்க.. கிழிந்த துணிகளை எல்லாம் குடுக்காதிங்க பிளீஸ்..

பொதுவா நான் ஓட்டு போடுங்க, கமெண்டு போடுங்கன்னு கேக்க மாட்டேன். இது ஒரு நல்ல விஷயம் நாலு பேருக்கு தெரிந்தால் கூட நாலு ஜந்து பேருக்கு உதவி செய்யலாம். இந்த விஷயத்தை உங்களால் முடிந்தால் நாலு பேருக்கு பகிருங்க.

டிஸ்கி :உதவி பண்றேன்னு பெருமைக்காக நிறைய பேர் கிழிந்த , உடைந்த பொருட்களை தருகிறார்கள் , உங்களை யாரும் கட்டாயப் படுத்தவில்லை , கொடுக்கபோகும் துணிகளை நன்றாக துவைத்து , அயன் பன்னி உபயோகிக்கும் நிலையில் கொடுங்கள் இல்லையென்றால் சும்மா இருங்கள் யாரும் உங்களை குறைசொல்ல மாட்டார்கள். . அனைவரும் கட்டாயம் ஓட்டுப் போடுங்க , அது நிறைய பேரை சென்றடைய உதவும் .


நன்றி : மங்குனி அமைச்சர் மற்றும் சந்தோஷ்பக்கங்கள்.

நணபர்களே  முடிந்தால் உங்கள் வலைப்பூவில் ஒரு நாளாவது இந்த பதிவை
போடுங்கள்..முடிந்தவரை அனைவருக்கும் இவிஷயத்தை பகிருங்கள்.

6 Oct 2010

கொலு கொலுவா முந்திர்க்கா !

எச்சரிக்கை : பதிவு கொஞ்சம் சின்னதா போச்சுது..முடிஞ்சா ஒரு ப்ளாஸ்க்ல காபி தண்ணி போட்டு வச்சுக்கிட்டு கூடவே சமோசா , போண்டான்னு வச்சுக்கிட்டு படிக்க ஆரம்பிங்க..முக்கியமா ஒரு பாட்டில் குளுகோஸ் முக்கியம். என் கடமை சொல்லி புட்டேன். முக்கியமா ஆம்புலேன்ஸ் நம்பர் வச்சுகோங்க !!


முஸ்கி : இந்த பதிவு முழுக்க முழுக்க சிரிக்க மட்டுமே! யார் மனதையும் புண்படுத்த இல்லை..சிரிப்பு வந்தா சிரிங்க ! வரலைன்ன ?? கமென்ட்ல புலம்பிட்டு போங்க!------------------------------------------------------------------------------------------------------இந்திய இல்லை உலக பதிவுலக வரலாற்றிலேயே முதல் முறையாக நம்ம பதிவுலக நண்பர்கள் எல்லாருமா சேர்த்து கொலுவுக்கு போகபோறோம் அதுவும் நம்ம சினிமா ஸ்டார்ஸ் வீட்டுக்கு..( இப்படியெல்லாம் காட்டு கத்தா கத்தி பிரச்சாரம் பண்ணினாதான் வராங்க என்ன செய்ய )

நம்ம கும்பலோ பெருசு பஸ் விட்டாலே போறாது ஆனா பாருங்க

பட்ஜெட் இடிக்கும் காரணத்தினால் ஒரே அம்பாசிடரில் இடித்துக்கொண்டு போகவேண்டி உள்ளதால் அனைவரும் பொறுமையுடன் அமரும் படி கேட்டு கொள்கிறேன்...! போலாமா? ஜூட் !


முதலில் நம்ம வண்டி AIRD ( ஆர்டிபிசியால் இன்டலிஜென்ஸ் ரிசெர்ச் அண்ட் டே வேலோப்மென்ட் ) வாசலை சென்று அடைகிறது. காலைவச்சு ஒரு நிமிஷம் ஆகல அதுக்குள்ள அங்கேந்து ஏதோ மெசினும் கையுமா ஒரு ரோபோட் வந்து " இன்விடேஷன் கார்டை இங்க ஸ்வைப் செய்யுங்க ! "என்று பயமுறுத்த நம்ம அறிவியல் சிங்கம் கணேஷ் இறங்கி போய் கார்டை ஸ்வைப் செய்ய..' அக்செஸ் க்ராண்டேட் " கேட் திறக்கிறது ! இரண்டு பக்கமும் பெண் ரோபோக்கள் அழககழகா தாவணி போட்டுக்கிட்டு சூப்பரா நிக்க... குஷயாய் உள்ளே செல்கிறோம்.


நம்ம எல்கே " தலைவர் படி படியா கொலு வைப்பார்னு பாத்தா என்னடா இது எதோ மியூசியம் மாதிரி இருக்கு ? "வரவேற்பறையில் பிரமாண்டமான ரோபோட் ரஜினி " வெல்கம் போல்க்ஸ் ! கொலுவுக்கு வந்தோமா சுண்டல தின்னோமான்னு போய்கிட்டே இருக்கணும்!

அதவுட்டு எதனா பாட்டு கீட்டு பாடினா அவ்ளோதான் உங்கள டிஸ்மாண்டில் பண்ணிடுவேன். டாட் !" என்று ஆசையாய் !? வரவேற்கிறது..


சரி வா பொறுமையா பார்ப்போம் என அனைவரும் செல்ல ஒரு நிமிஷம் டைனோசார் போல் காட்சியளிக்கும் பொம்மை அடுத்த ஐந்து நிமிடத்தில் ராட்சத பாம்பை மாறுகிறது..அடுத்த ஐந்து நிமிடத்தில் அதுவே ஒரு பெரியா சிங்கம் ! என்ன கொடுமைடா இது எப்படி இப்படிலாம் தோணுதேன்னு ஆர்வக்கோளாரில் நம்ம

பிங்கி ஒரு பெண்ணை கேட்க ! " ஹா ஹா ஹா அது பொம்மை இல்லை

" ஏலேக்ட்ரோ மாக்னேட்டால்" இணைந்து உருவம் மாறும் ரோபோக்கள்

கிட்டத்தட்ட ஒரு ஐநூறு குட்டி ரோபோக்கள் ! " அன்று கூறி மறைகிறது!! அட அது வர்ச்சுவல் பெண் உருவம் ! "


இங்க எது உண்மை எது ரோபோ எதுஎன்ன வென்றே புரியல..அதுக்குள்ள அங்குள்ள இன்டர்காமில் " சுண்டல் குடுக்குறாங்க. டீம் க்கு ஒரு ஆள் வந்து சுண்டலை பெற்று கொள்ளவும் "


" முதோ வெட்டு " என்று அருண் பாய் ! அடுத்து அடுத்து பலரும் பாய , சுண்டளுடன் பெட்டியுடன் வரும் அருண் முகத்தில் சோகம்! " என்ன தோழா என்னாச்சு? " என்று ஆறுதலாய் நம்ம டெர்ரர் கேட்க கையில் இருக்கும் பெட்டியை கொடுக்கிறார். டெர்ரர் டெர்ரராக முழிக்கிறார்.


என்னதான் நடக்குதுன்னு எட்டி பார்த்தா...... எதோ உலோக பெட்டி மேல ஒரு குட்டி கீபோர்ட் ! "அதுல ஒழுங்கா பாஸ்வோர்ட் போட்டாத்தான் போட்டி தொறந்து சுண்டல் வெளியே வருமாம்! நாசமா போச்சு ! எப்போ திறந்து எப்போ சாப்பிட்டு ?? பேசாம அதை தூக்கி உள்ள வைங்க நாம கார்ல திறந்துக்கலாம் " என்று மாதவன் நேரமாவதை சுட்டி காட்டி சமயோஜிதமாய் ஐடியா கூற..

அனைவரும் அங்கிருந்து வெளியே வந்தனர்.

இதற்கிடையில் சாலையெங்கும் பெரிய பெரிய தொல்லை காட்சி. " பன் பிக்சர்ஸ் குலாநிதி மாறன வழங்கும் " நவராத்திரி " மாபெரும் கொலு படி கட்டும் விழா காணத்தவறாதீர்கள் ! " என்று ஐந்து நிமிடத்துக்கு ஒரு முறை நம்மை வதைக்கிறது.


மெதுவாய் நம்ம டி ஆர் வீட்டுக்குள் நுழைய " நாமே எங்க இருக்கோம்?? ஹை எகிப்தா ? எவ்ளோநாளா நானும் ஆசை படறேன் இன்னிக்காவது வந்தோம் " என்று காயத்ரி குதிக்க ( நானேதான் ! ) " ஆத்தா இது எகிப்தில்ல நம்ம

டீ ஆர் சார் வீடு கொலுவுக்கு செட்டு போட்டுருக்குறார் , இருந்தாலும் இது ஓவரு! " என்று ஒரு குரல் மிரட்ட... மிரட்டுவது நம்ம டெரர்..மெதுவா ஒரு ஒரு தரா உள்ள போனா.......அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்


கொலுபடியே காணும்!! பெரிய செட் ஒன்னு இருக்கு அவ்ளோதான் அதுல பெருசா நம்ம சந்தரலேகா பட கிளைமாக்ஸ் காட்சி பாட்டுல வருமே அந்த மாதிரி ஒரு பெரிய ட்ரம் அதுமேல நம்ம டி ஆர்! " இருந்தாலும் இது கொஞ்சம் டூ மச். இப்படியா அலம்பல் பண்றது? " தங்கமணி அக்கவால் அங்க நிக்க முடியல! " என் இட்லியே இதுக்கு தேவலை!! " என்று மனதுக்குள் அலுத்துக்கொண்டார்.


ஆச்சர்யத்துடன் , வரும் சிரிப்பையும் அடக்கி கொண்டு நம்ம ஜெய்லானி சந்தேகமாய் " சார் என்ன இது பொம்மையே வைக்காம நீங்களே இப்படி உட்கார்ந்து இருக்குறீஇங்க? ஒண்ணுமே புரியலையே? ""அடுக்கு மொழிக்கு டீயாறு !

அடுக்கடுக்கா கொலுவைக்க வேற ஆள பாரு !அஜித்து ஓட்டுவாறு காரு !

நான் ஒக்காந்த கொலுவ வந்து நீ பாரு !கொலுவச்சா கொடுப்பாங்க சுண்டல் !

என்ன பார்த்து பண்ணாதே கிண்டல் !Sorry for the interruption !

this is only my introduction !

decoction of the constipation of the action and direction


ஹேய் டண்டனக்கா , டனக்கு டக்கா! "


அவர் பாடி முடிக்கும் முன் அங்கிருந்த நம் பதிவுலமே கண்கலங்கி மனம் உடைந்து சுண்டளுக்காக காத்திருக்காமல் காரினுள் பாய , கார் அசுர வேகத்தில் அங்கிருந்து ஓடுகிறது...


" இப்போவே கண்ணா கட்டுதே !!" என்னப்பா இது எதோ கொலு சுண்டலுன்னு ஆச காட்டி இப்படி பாடா படுத்துறீங்க! " என்று சௌந்தர் நொந்து கொள்ள ! " இருங்க நாம அந்த எந்திரன் வீட்ல குடுத்த சுண்டல கொஞ்சம் சாப்புடலாம் அதுக்குள்ள அடுத்த வீடு வந்துரும் சரியா !" என்று தேவா ஐடியா தர..அனைவரும் ஒப்புக்கொண்டனர்


ஆளாளுக்கு ஒரு ஒரு பச்ச்வோர்ட் ட்ரை பண்ண ஒன்னும் வேலைகாகரமாதிரி இல்லை ! கடைசியா பிங்கி சனா என்று டைப் செய்ய பெட்டி திறக்கிறது..அனைவரும் ஆவலுடன் பெட்டியை எட்டிப்பார்த்தனர்.


பெரிய பல்பு ! சுண்டல் இல்லை நிறைய நட்டும் போல்டுமா இருக்கு!! ( பின்ன எந்திரன் வீட்ல என்ன தேங்கா மாங்கா பட்டாணி சுண்டலா கிடைக்கும்???? )

இதை பார்த்த எல் கே அண்ணாவுக்கு கவிதை பொங்க" பொம்மை
பார்க்க வந்தோம்
பொம்மையே
பரிசிலாய் வந்தால்
மனமது கூத்தாடும் - ஆனால்
பரிசிலும் இல்லாமல்
பசியாற வகையும் இல்லாமல்
இதை கொடுத்ததேன்? "

( நெஜமாவே இது எல் கே அண்ணா எழுதின கவிதை )

:- நன்றி அண்ணாஅனைவரும் ஜோரா கைதட்டம் போது ஒரு குரல் அலறியது. அதே தொல்லை காட்சி. " உலக தொலைகாட்சியில் முதல் முறையாக குலாநிதிமாறன் பெருமையுடன் வழங்கும் "நவராத்திரி " கொலு பார்க் கட்டும் விழா மலேசியாவிலிருந்து நேரடி ஒளிபரப்பு ! திரை உலகமே திரண்டு வந்து வாழ்த்தும் உன்னத நிகழ்ச்சி.

காணத்தவறாதீர்கள்! " என்ன கொடுமைடா இதுகேல்லாமா விளம்பரம்!அடுத்து இயக்குனர் ஷங்கர் வீடு வந்தது. இப்படியும் எளிமையான வீடா அசந்தே போனோம்..உள்ள போனாதான் தெரிது. எங்கயோ வெளிநாட்டு மாளிகையில் வந்தது போல் இருக்கிறது..செட்டு ச்சே டிசைன் போட்டது தோட்டா தரணியாமே? இப்போவே கண்ணா கட்டுதே.

" வாங்க.. வாங்க.. இது என் நான்கு வருட கனவு இப்பொழுதுதான் நினைவாயிருக்கு.." என்று பெருமை பேச " எங்கய்யா கொலுவ காணும் படியையும் காணும்! " என்று ஆர்வமாய் தம்பி சிவா கேட்க " என்ன இப்படி கேட்டுடீங்க?? மோதல் படிய இத்தாலில வச்சுருக்கேன்! இரண்டாவது படிய பிரேசில்ல வச்சுருக்கேன் , மூணாவது படிய துபாய் புர்ஜ் கலிபா பில்டிங் கடைசி மாடில வச்சுருக்கேன் , நாலாவது படிய ஆஸ்திரேலியா ல வச்சுருக்கேன், அஞ்சாவது படிய இப்போ நிலாவுல இப்போதான் வச்சேன்...."

"ஆறாவது படிய.." என் தலையில வை என்று அசரீரி ஒலிக்க.. " சார் கப் சிப் " அப்போ நாங்க என்ன செய்றது? என்று ஆவலாய் அனானிமஸ் குரல் ஒலிக்க " காத்திருங்கள் விரைவில் தெரிவிப்பேன் என்று சொல்லி சார் எஸ் !இவரோட பிரமாண்ட அலம்பளுக்கு அளவில்லையா?? நிலாவுல வைக்கிறாராம் நிலாவுல! கடவுளே....என்று நொந்து நூடுல்ஸ் ஆகி நடயைக்கட்டினர் பதிவர்கள்." ஏன்ப்பா டிரைவர் அடுத்து எங்க போறோம்?? நல்ல இடமா கூட்டிகிட்டு போப்பா ப்ளீஸ் " என்று ரமேஷ் ( சத்தியமா இவரு நல்லவரு ) கோவத்தை கட்டு படுத்தி கொண்டு கேட்டார். . "கண்டிப்பா நல்ல காமெடியான இடம் தான். "என்று டிரைவர் பதிலளித்தார்.கார் போய் நின்றது அட நம்ம விஜகாந்த் வீடு. வீடே சும்மா கம்பீரமா இருக்கு. ஆசை ஆசையாய் உள்ளே செல்கிறோம் " வாங்க வாங்க உட்காருங்க எப்படி போகுது பதிவெல்லாம்?? " என்று ஆசையாய் விசாரிக்கிறார்..


"என்ன நீங்க இத்தன படி வச்சிருக்கீங்க?? ஒரு முப்பது நாற்பது படி இருக்கும் போலிருக்கே ! " என்று ஆர்வமாய் அருண் கேட்டார்.


" இந்தியாவுல இந்த கொலுவ கொண்டாடுரவங்க மொத்தம் அறுபது கொடுயே நாலு லட்சம் பேர். அதுல கொலு வச்சு கொண்டாடுறவங்க முப்பது கோடியே மூணு லட்சம் பேரு, அதுல மூணு படி வைக்கிறவங்க இருபது கோடியே நாற்பது லட்சத்தி எட்டாயிரம் பேரு, இது பார்க் கட்டி ஆறேழு படிவைக்கிறவங்க பத்து லட்சத்தி அறுபத்தி ஐந்து பேர், இப்படி முப்பது கொலு வைக்குறது நான் மட்டும் தான்!..."பாதிவுலகமே தலை கிர்ர் கிர்ர் என்று சுத்த கண்கள் இருட்ட திக்கு முக்காடி போகுது."இப்படி பேசிட்டே போனா என்ன அர்த்தம் ? நீயே சொல்லு கார்த்தி இதுலாம் சரி இல்ல! எங்கபோய் முடியுமோ! நான் போறேன் போய் ஒரு மில்க் ஷேக் சாப்டு வரேன் அப்போதான் கூல் ஆகும்..ச்சே ச்சே டென்ஷன் ! " என்று சந்தியா மாமி கிடைத்தா கேப்பில் வீட்டுக்கு பறந்து விட்டார் !" அதுலயும் வேர் கடலை சுண்டல் செய்ரவங்க.." என்று அவர் தொடர

" பீம்பிளிக்கி பீலாபி!! மாமா பிஸ்கோத்து ! " என்று ஜெய் , எல் கே , தேவா , மங்குனி , பட்டாபட்டி , சௌந்தர் , அப்பாவி தங்கமணி , பிங்கி, சிவா , ரமேஷ் " எல்லாரும் கூட்டமாய் கத்தநம்ம விஜயகாந்த் கொவாமாக துப்பாக்கி எடுக்குறார். " நாங்கல்லாம் தாய்லாந்து புலிக்கே தண்ணி காடுரவங்க உங்க துப்பாக்கிக்கு எல்லாம் பயப்படமாட்டோம்.. " என்று நம்ம ஆதவன் கம்ப்ஹீரமா முன்னே செல்ல..

தமிழ் ல எனக்கு பிடிக்காத ஒரு வார்த்த " புலி " ! பீர் கூட மோராகும் ஆனா நாய் நரியாகுமா?? " என்று ஏதேதோ பொலம்ப ஆரம்பிக்க அடுத்த கணமே அனைவரும் மாயம் !


உஸ்ஸ் அப்பா இப்போவே பாதி உயிர் போயிடுச்சு என்னய்யா இது இப்படி ஆளாளுக்கு போட்டு டார்ச்சர் பன்றாங்களே! என்று அனைவரும் கண்ணில் ரத்தம் வடிய நொந்து கொண்டிருந்தனர்


சாலையோர தொல்லை கட்சியில் " சன் பிக்சர்ஸ் குலாநிதி மாறன் பெருமையுடன் வழங்கும் "நவராத்திரி " துபாயில் நடந்த ,முதல் கொலு பொம்மை வைக்கும் கோலாகல நிகழ்ச்சி உங்கள் பன் டிவியில் காணத்தவராதீ....." டமாஆஆஆஆஆஆஆஆஆல் " அசுர வேகத்தில் பதிவுலகமே ஆத்திரமாய் அந்த தொல்லை பெட்டியை உடைத்து விட்டு நேரா கீழ்பாக்கில் ஒரு வார்டையே புக் செய்து அட்மிட் ஆனது.


அனைவரும் முணுமுணுக்கும் அந்த ஒரே வார்த்தை!!!


" ஆணியே புடுங்க வேணாம் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! "

4 Oct 2010

சனி பகவான் பராக் ! பராக் !

அன்புள்ள  பதிவுலக நணபர்களே ! 

அழகா அமைதியா இருக்குறநமது பதிவுலகிற்கு சனி பிடித்துவிட்டது..
ஒன்னு  கண்டனம் , இல்லையா எதிர்பதிவு... இல்லையா கமெண்ட் ல சண்டை அதுவும் இல்லையா கம்மேன்ட்ட வச்சு ஒரு கண்டன பதிவு...

வெயிட் இது வலைபதிவா இல்லை ஆப்கானிஸ்தான் பர்டேரா???

என்ன மக்களே என் உடைந்து போன தமிழயே பொறுமையா படித்து ஆதரவு தரும் நீங்கள்..பொறுமை இழந்து அடித்து கொள்வதென்பது என்னால் ஜீரணிக்க முடியாத ஒன்றாக உள்ளது ( உனக்கென்ன அஜீரனமா ?? அப்டின்னு கேட்டா? சண்டை போடமாட்டேன் சிரிப்பேன் அவ்ளோதான் )

இங்கே சண்டை மண்டை உடைகிறது !  நாற்காலிகளுக்கு பதில் கம்மேன்ட்டுகள் பறக்கின்றன ! அரசியல் வாதிகளை போல் பதிவர்கள்
வெளிநடப்பு செய்கின்றனர், ஆளும் கட்சி எதிர் காட்சிபோல் குரூப் சேர்ந்து வாக்குவாதம் நடக்கிறது!!

என்னப்பா நடக்குது??வொய் இந்தகொலை வெறி ??  நடுல நீ என்ன நாட்டம்மை
பன்றியான்னு கேட்டா பிசுபுடுவேன் பிச்சு ( சிரிங்கப்பா ) எல்லாரும்
சிரிக்க மறந்து விட்டீர்கள்..


சண்டை சச்சரவு எல்லாம் வேண்டாம்..பிடிச்சத எழுதுங்க , பிடிச்சத படிங்க, சந்தோஷமா இருங்க...

அன்றாட வாழ்கையில் தான் ஆயிரம் தொல்லை, நிம்மதியா இருக்க ஒரு ஒருத்தரும் பதிவேழுதறீங்க..அங்கேயுமா சண்டை டென்ஷன் எல்லாம்..


இது அறிவுரை இல்லை...உங்கள கெஞ்சி கேட்டுக்கறேன் சமாதனம்...

பொறுமை கடலினும் பெரியது 
எருமை நம்மைவிட பெரியது 

               :- வருங்கால சித்தர் வாக்கு 

அதனால் எல்லாரும் புறாவ பறக்க விடுங்கள் ! ப்ளீஸ்

எப்போவும்  போல எல்லாத்தையும் கமெண்ட் போட்டில போடுங்க !

தாழ்மையுடநும் மனஉளைச்சலுடனும் ,

உங்கள் சகோதரி

காயத்ரி

28 Sep 2010

பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்மக்களே!!! பொழுதே போகலைன்னு டிவி பொட்டிய போட்டேன்
( கிழ போடலே  ஆண் செஞ்சேன் )  சன் டிவில நம்ம எல் கே
என்னடா விஷயமுன்னு பாத்தா....மழலையர் வாழ்த்து!!
அடக்கடவுளே..அவருக்கு இன்னிக்கி பிறந்த நாளாமே!!
பாருங்க....
தேடலில் கூகிள் ! ,
கவிதையில் ஷேக்ஸ்பியர் !,
மொக்கையில் வடிவேலு !  ,

நட்பில் கர்ணன் !
பாசக்காரா அண்ணன் !
அஞ்சா நெஞ்சன் !
சொல்லின் செம்மல் !
பிரச்சார பீரங்கி !
பேஸ்புக் நாயகன் !


நம்ம எல் கே எனப்படும் கார்த்தி அவர்கள் இன்று தனது பிறந்தநாளை
கொண்டாடுகிறார்,,அவரை அனைவரும் வாழ்த்தி , அவர் நீண்ட நாள் இன்புற்று  வாழ இறைவனை வேண்டுமாறு பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன்..


              HAPPY BIRTHDAY BROTHER


இப்படிக்கு பாசக்கார தங்கை ,

22 Sep 2010

கடிகாலம்!!

என்ன மக்களே ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க போலிருக்கே!!

ம்ம ஒரு மாறுதலுக்கு எழுதாம இருக்க போறேன்..( ஹாய் ஜாலி !! ) யார் அங்கே?ஆசைய பாரு..அஸ்கு புஸ்கு...எழுத தான் மாட்டேன்..பதிவெழுத மாட்டேனா சொன்னேன்??