Recent Posts

29 Jun 2010

என் பதிவுலக நன்பர்களுக்கு..

பதிவுலகத்திர்க்கு  வந்த சில நாட்களிலேயே இத்தனை நன்பர்கள்  கிடைத்தது மனதிர்க்கு  சந்தோஷமாக இருகிறது.
சந்தியா மாமி , யெல் கே , அப்பாவி தங்கமணி , சித்ரா , ஜெய் , காலநேசன் ,தக்குடுபாண்டி,புன்னகை தேசம்,kausalya and sriram.இவர்கள் அனைவருக்கும்  இந்த விருதினை வழங்குவதில்  பெருமிதப்படுகிரேன்.
Please place this on your blog..

28 Jun 2010

இக்கரைக்கு அக்கரை பச்சை..

எதுவுமே இல்லாத பொழுதுதான் அதன் அருமை தெரியும்னு ரைட்டா தான் சொல்லிருக்காங்க . நான் இப்போ மிஸ் பன்னர்து எனது அழகான  இன்தியாவைத்தான்.
ஆறு வருஷமாச்சு இந்தியாவ விட்டு வந்து. வந்த புதுசுல ஒன்னும் தெரியல இங்க இருக்கற வாழ்க்கைமுறை நவீனமான சுறுசுறுப்பான வாழ்கைன்னு புடிச்சுதான் இருந்துச்சு ஆனா ரொம்பநாள் அந்த சந்தோஷம் இல்லை . நம்மூர்ல, நாள் கழமைன சந்தோஷமா சமையல் செஞ்சு சொந்தகரா , பக்கத்தாத்து மனுஷான்னு குடுக்கலாம். யாறன ஒருத்தர் வீட்டுக்கு வருவாங்க நாமளும் வெளியேபோய் பாத்துட்டு விசாரிச்சுட்டு வாழ்த்துக்கள் சொலிட்டு வருவோம். இங்க அப்படி ஒன்னுமே இல்லையே நாள் இல்ல கிழமை இல்லை எல்லா நாளும் ஒரே மாரிதனே இருக்கு பண்டிகைனா மொதல்ல அவருக்கு ஆபிஸ் லீவே இல்ல இங்க நம்ம ஊரு பண்டிகைக்கு யார் லீவ் விட போற ?

அவரோ ஆப்ஸ், குழந்தையோ ஸ்கூல் நான் என்ன  பண்றது தனியா பண்டிகை அதுவுமா சமைக்க தோணுமா , சாப்ட தோணுமா  பண்டிகையே டிவி ல வர சிறப்பு நிகழ்சிகள பாத்துதான் தெரிஞ்சுக்க வேண்டி இருக்கு .


நம்ம பெற்றோருக்கோ உறவினருக்கோ நண்பர்களுக்கோ உடல்நிலை நன்றாக இல்லேன்னா இங்கேந்து ''get well soon ' ஒரு கார்ட் மிஞ்சிபோனா ஒரு போன் அவ்ளோதான் செய்யமுடியுது ஒரு தடவ நேரபோய் பாத்துட்டு வரமாதிரி  ஆகுமோ ?

அங்கேனா  மனசு சரி இல்லைனா கோவிலுக்கு போலாம் இங்க கோவிலுக்கு போறதே ஊருக்கு போறாப்ல தானே இருக்கு .ஷர்ஜா லேந்து துபாய்ல இருக்கற கடவுள போய்  பாகர்துக்குள்ள திருப்பதிலியே சுவாமிய 2 தடம் பாத்துடலாம் போல இருக்கு .

நம்ம ஊரு காய்கறி காரங்க பாவம் கொஞ்ச லாபத்துக்கு விக்கிற காய்கரிய பேரம் பேசி வாங்கி பெரிய போரை வேன்றமாதிரி பெருமையா  முகத்த வெச்சுண்டு வருவோம் இங்கயோ வத்தலும் சொத்தாலும் வித்தாலும் போட்டு இருக்கற  விலையை  குடுத்துட்டு வாய முடின்னு விட்டுக்கு வரணும்.. (எல்லாம் காய்கறி கார விட்ட சாபம் தான் )
ஒரு ஒரு வருஷமும் எபோதான் உருக்கு போவோம் எல்லாரையும் பப்போம்ம்னு இருக்கு .இப்படியே வாழ்கை போன சொந்தங்களை போட்டோல காட்டி தான்  குழந்தைய வளக்கணும். கூடிய சீக்கிரம் இந்தியால வேலை கிடைச்சு போய்டணும் கடவுளேனு தான் வேண்டதோணுது இபோதுலாம் .

வெளி நாட்ல இருக்கறது உள்ளுறுல இருகறவங்களுக்கு பெருமையா தெரியலாம் அனா அங்க இருக்கறவங்க கஷ்ட்டம் அவங்களுக்கு மட்டும்தான் தெரியும்.


இக்கரைக்கு அக்கரை பச்சை!!

27 Jun 2010

வண்ண மயமான இட்லி

உங்க விட்லே இருக்கர சுட்டி எப்படியோ ,பட் என் பொன்னு ஒரு வாய் சாப்பட்ரதுக்கு மின்னாடி ஒரு மெகா சிரியலே முடிஞ்சுடும்
அதுக்காக நான் கண்டுபிடுச்சது தான் கலர் புல் இட்லிஸ்..

பிங்க் இட்லி :ஒரு கரன்டி இட்லி மாவுல இரண்டு ஸ்பூன் பீட்ரூட் சாரு சேர்த்து இட்லி செய்யவும். சிம்ப்ள் ல ?


பச்சை இட்லி:
ஒரு கரண்டி இட்லி மாவுக்கு 4 அல்லது 5 ஸ்பூன் கீரை சாரு சேர்து இட்லி செய்யவும்.
குறிப்பு: கீரையய் மிக்ஸியில் அரைத்து சிறிது நேரம் கொதிக்க வத்து சூடு ஆறியதும் இட்லி மாவில் சேர்கவும்.

ஆரஜ்ஜு இட்லி :
ஒரு கரன்டி இட்லி மாவுல இரண்டு ஸ்பூன் கேரட் சாரை சேர்த்து இட்லி செய்யவும்.இன்னும் கலர் வேனும்னா கேரட் சாரை அதிகரித்து கொள்ள்வும்.

 பின் குறிப்பு  : 
1.          2 வயது முதல் உள்ள குழந்தைகள்ளுக்கு இதை குடுத்து முயற்சிக்கலாம் !!
2.          இட்லியை அப்படியே குடுக்காமல் அவைகளை cookie/biscuit cutter களைக்கொண்டு கட் செய்து வெவேறு வடிவங்களில் குடுக்கலாம்.  cookie/biscuit cutter இல்லை என்றால் கத்தியை வைத்து சதுரம் . பூ , வீடுன்னு கட் செய்தும் குடுக்கலாமே ...
இதைலாம் சமச்சு,சாப்டு பாத்து எப்படி உங்க கருத்துகளை எனக்கு எழுதுங்க ..
மத்த கலருக்க்கெல்லாம் இடியா கைவசமிருன்தால் போஸ்ட்  பன்னுங்க.. 

PLEASE NOTE : NO ARTIFICIAL FLAVORS OR COLORS ADDED 

25 Jun 2010

வரும் ஆனா வராது !!!

என் நாலு வயசுப்பொன்னு சுவர்ணா எப்பொவும் கார்டூன் பார்துன்டே இருக்கான்னு இன்னிக்கு கொஜ்ஜம் கோவப்பட்டேன் "இப்படி டிவி எப்பொவும் பாதுன்டே இருக்கியே எப்போ படிக்க வரபொரே மா நீ?, நீ படிக்கலனா ரிப்பொர்டு கார்டுல ஸ்மைலி எப்படி வரும்?"னு கேட்டேன். இவ யுகெஜி படிகரா ரிபோர்ட் கார்டுல நல்லா  படிக்கர பசங்களுக்கு ஸ்மைலி பொம்மை ஒட்டு வாங்க.நான் கேட்டது தான் தாமதம் ஒடனே அவ சொன்னா "வரும் ஆனா வராதுன்னு !!!!"

24 Jun 2010

வணக்கம்


நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.ரொம்ப நாளா நானும் ஒரு வலைபதிவு எழுதனும்னு யோசிச்சுகிட்டே இருந்தேன் இன்னைக்கு ஆரம்பிசுடேன். என் கொடுமையய் தயவுசெய்து  பொருத்துக்கோள்ளவும். நானும் தமிழ வளக்கலாம்னு.....
 தமிழ்லயெ எழுத முயற்ச்சிப் பன்ரேன் கண்டிப்பா எழுத்துப்பிழை இருக்கும்  தயவு செய்து  மன்னிக்கவும் .சரி படாதுமா நீ ஒன்னும் தமிழ வளக்கரேன்னு தமிழ கொல்லதென்னு சொல்ரெளா நல்லதுன்னு வலைபதிவ ஆங்கிலதுக்கு வேணும்னா மாத்திர்ரேன்.எல்லாம் உங்க கருத்துகள வச்சுத்தான் முடிவு செய்யனும். நன்றி .