Recent Posts

28 Jun 2010

இக்கரைக்கு அக்கரை பச்சை..

எதுவுமே இல்லாத பொழுதுதான் அதன் அருமை தெரியும்னு ரைட்டா தான் சொல்லிருக்காங்க . நான் இப்போ மிஸ் பன்னர்து எனது அழகான  இன்தியாவைத்தான்.
ஆறு வருஷமாச்சு இந்தியாவ விட்டு வந்து. வந்த புதுசுல ஒன்னும் தெரியல இங்க இருக்கற வாழ்க்கைமுறை நவீனமான சுறுசுறுப்பான வாழ்கைன்னு புடிச்சுதான் இருந்துச்சு ஆனா ரொம்பநாள் அந்த சந்தோஷம் இல்லை . நம்மூர்ல, நாள் கழமைன சந்தோஷமா சமையல் செஞ்சு சொந்தகரா , பக்கத்தாத்து மனுஷான்னு குடுக்கலாம். யாறன ஒருத்தர் வீட்டுக்கு வருவாங்க நாமளும் வெளியேபோய் பாத்துட்டு விசாரிச்சுட்டு வாழ்த்துக்கள் சொலிட்டு வருவோம். இங்க அப்படி ஒன்னுமே இல்லையே நாள் இல்ல கிழமை இல்லை எல்லா நாளும் ஒரே மாரிதனே இருக்கு பண்டிகைனா மொதல்ல அவருக்கு ஆபிஸ் லீவே இல்ல இங்க நம்ம ஊரு பண்டிகைக்கு யார் லீவ் விட போற ?

அவரோ ஆப்ஸ், குழந்தையோ ஸ்கூல் நான் என்ன  பண்றது தனியா பண்டிகை அதுவுமா சமைக்க தோணுமா , சாப்ட தோணுமா  பண்டிகையே டிவி ல வர சிறப்பு நிகழ்சிகள பாத்துதான் தெரிஞ்சுக்க வேண்டி இருக்கு .


நம்ம பெற்றோருக்கோ உறவினருக்கோ நண்பர்களுக்கோ உடல்நிலை நன்றாக இல்லேன்னா இங்கேந்து ''get well soon ' ஒரு கார்ட் மிஞ்சிபோனா ஒரு போன் அவ்ளோதான் செய்யமுடியுது ஒரு தடவ நேரபோய் பாத்துட்டு வரமாதிரி  ஆகுமோ ?

அங்கேனா  மனசு சரி இல்லைனா கோவிலுக்கு போலாம் இங்க கோவிலுக்கு போறதே ஊருக்கு போறாப்ல தானே இருக்கு .ஷர்ஜா லேந்து துபாய்ல இருக்கற கடவுள போய்  பாகர்துக்குள்ள திருப்பதிலியே சுவாமிய 2 தடம் பாத்துடலாம் போல இருக்கு .

நம்ம ஊரு காய்கறி காரங்க பாவம் கொஞ்ச லாபத்துக்கு விக்கிற காய்கரிய பேரம் பேசி வாங்கி பெரிய போரை வேன்றமாதிரி பெருமையா  முகத்த வெச்சுண்டு வருவோம் இங்கயோ வத்தலும் சொத்தாலும் வித்தாலும் போட்டு இருக்கற  விலையை  குடுத்துட்டு வாய முடின்னு விட்டுக்கு வரணும்.. (எல்லாம் காய்கறி கார விட்ட சாபம் தான் )
ஒரு ஒரு வருஷமும் எபோதான் உருக்கு போவோம் எல்லாரையும் பப்போம்ம்னு இருக்கு .இப்படியே வாழ்கை போன சொந்தங்களை போட்டோல காட்டி தான்  குழந்தைய வளக்கணும். கூடிய சீக்கிரம் இந்தியால வேலை கிடைச்சு போய்டணும் கடவுளேனு தான் வேண்டதோணுது இபோதுலாம் .

வெளி நாட்ல இருக்கறது உள்ளுறுல இருகறவங்களுக்கு பெருமையா தெரியலாம் அனா அங்க இருக்கறவங்க கஷ்ட்டம் அவங்களுக்கு மட்டும்தான் தெரியும்.


இக்கரைக்கு அக்கரை பச்சை!!

16 கருத்துக்கள்:

அப்பாவி தங்கமணி said...

//வெளி நாட்ல இருக்கறது உள்ளுறுல இருகறவங்களுக்கு பெருமையா தெரியலாம் அனா அங்க இருக்கறவங்க கஷ்ட்டம் அவங்களுக்கு மட்டும்தான் தெரியும்//

ஆயிரத்தில் ஒரு வார்த்தை.... நானும் இந்த வரிகள் அடிக்கடி சொல்லுவேன்

அப்பாவி தங்கமணி said...

ஓ... நீங்க ஷர்ஜால இருக்கீங்களா... நாங்க முன்னாடி துபாயில் இருந்தோம்... bur துபாய்.... கோவில் பக்கத்துல தான்... பேங்க் ஸ்ட்ரீட்க்கு அடுத்த Streetல இருந்தோம்... உண்மைய சொல்லணும்னா ஐ மிஸ் துபாய்... இங்க (கனடா) அதை விட கொடுமை...But India is the best of all... என்ன இருந்தாலும் நம்ம ஊரு நம்ம ஊரு தான் காயத்ரி... well said

Chitra said...

நம்ம ஊரு காய்கறி காரங்க பாவம் கொஞ்ச லாபத்துக்கு விக்கிற காய்கரிய பேரம் பேசி வாங்கி பெரிய போரை வேன்றமாதிரி பெருமையா முகத்த வெச்சுண்டு வருவோம் இங்கயோ வத்தலும் சொத்தாலும் வித்தாலும் போட்டு இருக்கற விலையை குடுத்துட்டு வாய முடின்னு விட்டுக்கு வரணும்..

..... ரொம்ப கரெக்ட்.

Unknown said...

நல்லா சொன்னீங்க. சொர்கமே என்றாலும் அது நம்ம ஊரப் போல வருமா....

எல் கே said...

arumayana pagiruvu g3.. ennathan irunthalum namma oor namma oorthan

Gayathri said...

நன்றி அப்பாவி தங்கமணி,Chitra,கலாநேசன்,LK

Gayathri said...

அப்பாவி தங்கமணி - ஆமாம் ஷர்ஜால தான் இருக்கோம்.கேனடா எப்படி இருக்கு.

Anonymous said...

வெளி நாட்ல இருக்கறது உள்ளுறுல இருகறவங்களுக்கு பெருமையா தெரியலாம் அனா அங்க இருக்கறவங்க கஷ்ட்டம் அவங்களுக்கு மட்டும்தான் தெரியும்."

அப்பிடியா சொல்லறே ?இக்கரைக்கு அக்கறை பச்சை அனுபவபெட்டவங்க சொன்னா சரியா தான் இருக்கும் ..அப்புறம் ஊருக்கு வந்து செட்டில் ஆனா பிறகு தினமும் நான் வீட்டுக்கு வந்தா ஏன் ஊருக்கு வந்து செட்டில் ஆனோம்ன்னு நி புலம்ப கூடாது சொல்லிட்டேன் ...

Gayathri said...

Sandhya - ஆகா நம்பிக்கைதான் வாழ்க்கை ..கவலை வேண்டாம் மாமி

தக்குடு said...

அக்கா, நீங்க மட்டும் தோஹால இருந்திருந்தேள்னா இப்படி பொலம்பியே இருக்கமாட்டேள். உங்களுக்கு எப்போ சாப்பாடு போடனும்னு(சொந்தக்காராளுக்கு) தோனினாலும் ஒரு போன் போட்டா போதும் தக்குடு வந்து நின்னுடுவான்...:) இங்க நிறையா பேருக்கு இப்பொ நாந்தான் தம்பி...;)

Gayathri said...
This comment has been removed by the author.
Gayathri said...

அக்காவா எனக்கும் 26 வயசுதான் சகோதரரே !!
கருத்துக்கு நன்றி ..

தக்குடு said...

Point noted gayathri madam!,,,:)

Sundharadhrusti said...

Akkaraikku ikkarai pachai - vice versa

cheena (சீனா) said...

அன்பின் காயத்ரி

எப்பொழுதுமே இக்கரைக்கு அக்கரை பச்சை தான். இருக்குமிடத்தில் உள்ள நல்லவைகளை எண்ணி மகிழ வேண்டியதுதான்.

நல்வாழ்த்துகள் காயத்ரி
நட்புடன் சீனா

GSV said...

இதுலயும் என்ன மாதிரி தனியா இருந்தா ரொம்ப "குஷ்டம்"... நல்லா எழுதிருகீங்க.. வாழ்த்துக்கள்.