Recent Posts

28 Jul 2010

கொடுமை கொடுமைன்னு கோயிலுக்கு போனா...

என்ன சுத்தி என்ன நடக்குதுன்னே தெரிய மாட்டேங்குது...வர வர மண்டை காஞ்சுண்டே போகுது...( தலைல வடாம் தாய வைக்கலாம் போல இருக்கு !! அதுக்குன்னு மாவதுகிண்டு வரவேணாம்!)
ஒரு நாள் தப்பி தவறி சிரிச்சுட்ட பொறுமே..யாருக்கோ போருக்க மாட்டேன்குது அடுத்தநாளே ரவுண்டு கட்டி டென்ஷன் ஆகிடுவாங்க...யாரு ?? எல்லாம் கிரகம் தான் வேற யாரு...( நவ கிரஹத்த சொனேன் )

என்னிக்கும் இல்லாம மாமனார் கிட்ட கதை கேட்டு ஒரு பதிவு போட்டா...
அடுத்த நாளே அவருக்கு குளுர் ஜுரம்...பாகத்து ஆஸ்பத்திரில சேர்த்து ஒரே
டென்ஷன்...அங்கேயான ஏதேனும் ஒழுங்க நடக்குதா?? பாவம் ட்ரிப் எத்தறேன்ன்னு அவர் கையில ஒரு நாலு அஞ்சு வாட்டி குத்திநாங்க ...பாவம் அதுக்கே அவர் துடிச்சு போயிட்டார்..போறதுன்னு ரத்த பரிசோதனை ன்னு
சொல்லி அதுவேற தனியா முனு நாலு குத்து...எல்லாம் கத்துக்குட்டி நர்ஸ்கள் புண்யம் கட்டி கொண்டதுதான்...இப்படி வயதானவர்களை பார்த்துக்கொள்ள வாவது அனுபவம் உள்ள நர்ஸ் களை வைக்கலாமே.. உசி குத்தி ரத்தம் ஒரு இடத்துல வருது அத கவனிக்காம அடுத்த இடத்துல குத்த முற்படரங்க...( வர கோவத்துக்கு ) வந்த கோவத்தை கட்டுபடுத்திகொண்டு " மொதல்ல அங்க ஒரு பேண்ட்எய்ட் போடுங்கம்மான்னு பொறுமையா சொல்ல வேண்டிருக்கு...
படிபடிய பாவம் அவர் இனிக்கி ஒரு வழிய வீட்டுக்கு வர வரை அங்கே ஒரே டென்ஷன்..

 *******************************************************************************

சரி  ஆச்பத்ரில தான் இப்படின்ன விட்டுலயுமா...இந்த பள்ளி பல்லி இரண்டுமே எனக்கு அலர்ஜி , பள்ளில என்னடான்னா வராத கணக்க வா வா நா எப்படி வரும்??? அல்ஜிப்ரா , டிரிக்னாமென்ற்றி ன்னு என்னனமோ சொல்லி பயமுடுத்தியே கணக்கு மார்குல மண்ணள்ளிப் போட்டாங்க..பேப்பர் வந்தாலே டென்ஷன்..அதே போல் தான் இந்த பல்லி...பாவம் பாட்டுக்கு எங்கேயோ போகுது..ஆனா அத பாத்தா எனக்கு அண்டமும் கலங்குது !!! வசக்கதவ தொரக்கலாமுன்னு பாத்தா கதவு மேல பல்லி...அய்யா சாமி நகருன்னு பயந்து பயந்து அத கெஞ்சி குத்தடி வாசல்ல கால் மணிநேரம் தவம்கிடந்த அப்புறமா சார்வாள் நகர்ந்தார்...அப்பாடான்னு தயங்கி தயங்கி ஆஸ்பத்திரில இருக்குற மாமியாருக்கும் மாமனாருக்கும் காபி போட , சமையல் ரூமுக்கு போனா.....................பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய பல்லி..அய்யோன்னு அலறி அடிசுண்டு ,
ஓடி ஹாலுக்கு வந்தா கடவுளே ஜன்னல்ல ஒரு பல்லி...சரின்னு பால் எடுக்க அடுத்த ரூமுக்கு போனா ....பிரிட்ஜ் பக்கதுல இருக்குற பூஜை அலமாரிக்கு தாவுது ஒரு கிழப் பல்லி.....தேவுடா உன் படத்துக்கு பின்னாலயும்மா...( ஏன் ??? நான்தான் கேடச்சேனா??? என்ன சுத்தி என் எப்பவும் ஒரு பல்லிக் கூட்டம் ???? கார்பன் பூச்சினாலும் பரவ இல்லை துக்கி போற்றுவேன் இந்த பள்ளிய என்ன செய்ய..பாத்தாலே நூறு டிகிரி ஜுரம் வந்து படுதுடுவேன்..) இன்னிக்கி என்னடான்னாகாலைல வீட்ட பெருக்கின வேலைசெய்யும் அம்மா
" செல்லோ..இங்க பாரு"ன்னு அசைய கூப்புட நானும் என்னனு பாத்தா ஒரு குட்டி பல்லி செத்து கிடக்கு... ஐயோ !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


********************************************************************************
இதை தவிர அன்றாட டென்ஷன் இருக்கே...காலைல எட்டு மணிக்கு மேல தண்ணி வராதாம்..தண்ணி கஷ்டமுன்னு டைம் வச்சு தண்ணி உட்ரங்க...
சரின்னு ஒருவழியா எல்லா வேலையும் முடிச்சு காய் வாங்க கடைக்கு போனா நல்ல காயெல்லாம் காலியாகி வத்தலும் சொத்தலுமாதான் காய் கெடைக்குது ( இதுனால மருமகளுக்கு காய் வாங்க தெரியலன்னு ஏன் பேரு டோட்டல் டாமேஜ் ! ) ஒரு வழியா வந்து சமைச்சு குழந்தைய சாப்ட வைகர்துக்குள்ள.....அப்பாடான்னு குட்டி துக்கம் போடவந்தா கரண்ட் போய்டுத்து...ஐயோ...அப்படியே சாயங்காலம் ஆகி வெளில சும்மா போனா ரோடு ல மாடு ஆடு நாய் பூனை ன்னு ஒரு பக்கமும்..அட்டோ அட்டுன்னு ஆட்டி கொண்டு போகும் ஆட்டோவும்..... ஒருபக்கமாய் சாய்ந்துகொண்டு  எப்போ படுத்துடுமொன்னு பாயமுடுதும் மாநகர பேரூந்தும்...தள்ளடிகொண்டு நடந்து செல்லும் முதியோர்களும்...இருட்டில் யார் பார்க்க போகிறார் என்று கற்பனையில் அங்கங்கே தெருமுனையில் ஜோடி ஜோடியாய் நிற்கும் இளவட்டங்களும்..வேலையில் இருந்து வீடு திரும்பும் டென்ஷனில் முண்டி அடித்து கொண்டு பறக்கும் பைக்களும் கார்களும் மறு பக்கமும் ....இருக்கும் குட்டி சாலையை ஆக்கிரமித்து கொள்ள நான் எங்க நடக்கறது ??? இதுலயுமா டென்ஷன் ??? ஒருவழியா வீடு வந்து சேந்து சமயல முடிச்சு சாப்டு துங்கபோனா.....
இந்த கொசு இருக்கே...( இதுக்கு ஒரு தனி பதிவு போடபோறேன் )..தூங்க விடுமா?? அப்படியே கனவாவது நிம்மதியா வருதா??? அதுலயும் கணக்கு பரிட்ஷய்க்கு இங்கிலீஷ் படிச்சுட்டு போயி முழிக்கறது ( நடக்கறது தானே ! ) ,
மாடி  மேல ஏறி கிழ எறங்க தெரியாம முழிகறது , யாரோ துரதறது , பல்லி பள்ளிய ரூம்புரா இருக்கறது , ன்னு டென்ஷன் ஏத்தி விட்டு துக்கத்த கேடுகர கனவாவே வருது..

*******************************************************************************
போரும்டா சாமி இப்படி போட்டு வருதேடுகறியே !!! ஏன் ஏன் நான் மட்டும் ஏன்..எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது ???? யாரான சொல்லுங்க !*********************************************************************************
26 Jul 2010

காலம் மாறிப்போச்சு !

அந்த காலத்தில் இப்பொழுது உள்ளார் போல் மாமியார் மருமகள் சண்டை போல் இல்லாமல் வேறுமாதிரி தமாஷாக இருக்குமாம்…என் மாமனார் அவர்கள் சொன்ன கதைகளில் உதாரணத்திற்கு இரண்டு இங்கே….
மாமியாரின் லூட்டி :
ஒரு நாள் மருமகள் தோசைகளை வார்த்து விட்டு சாப்ட அமரும் பொழுது “ ஏண்டி மா  எத்தனை தோசை வார்த்தே பன்னிரண்டு வார்தாப்புல இருக்கே..அவன் ரெண்டு சப்டான் நான் ரெண்டு சப்டேன்..அப்போ உனக்கு “ என்றார்..மருமகள் திகைத்து போனாள்..இது தினமும் தொடர…மாமியரிடமே ஒருநாள் கேட்டுவிட்டாள்..அதெப்படி         “ நீங்க சமயலறைக்கு வராமலே  எத்தனை தோசை வார்கறேன்னு சொல்றேள் “ ( அவ்வ்வ் சூப்பர் கொக்கி ) என்று கேட்க..
அதுவா சொய்ங் ரெண்டுக்கு தோசை ஒன்னு என்று சொன்னார்களாம்.. ( அதென்ன சொய்ங்???? அதாங்க தோசை வார்கரப்போ சவுண்ட் வருமே சொய்ங்ன்னு !!! அடக் கடவுளே ) ஒரு தோசையை வார்க்கும் பொழுது  ஒரு சொய்ங்..அதை திருப்பிப் போடும் பொழுது ரெண்டாவது சொய்ங் ஆக மொத்தம் ரெண்டு சொய்ங் = ஒரே தோசை…( ஆத்தாடி இப்படி போகுதா கதை ??  )அன்று முதல் அவள் தோசையை ஒரு பக்கம் மட்டும் சுட்டு நிறைய தோசையை சாப்பிட்டாளாம்..( ம்ம வயறு கலக்கினால் என்ன நிறைய தின்னா போதுமுன்னு நினைச்சுருக்கா ) இப்படி போகிறது கதை….
மருமகள் அடிக்கும் லூட்டி :
பாவம் மாமியாரை மட்டும் என் குத்தம் சொல்ல வேன்டும்..( அதானே மாமியாருக்கு ஒரு சப்போர்ட் வேண்டாமா??? ) மருமகள் செய்வதையும் பார்ப்போமே..மாமியாரை நாடு வீட்டில் ஒட்காரவைத்து வயறு முட்ட முட்ட சாப்பிடவைப்பாளாம்…( என்ன ஒரு நல்ல எண்ணம் !! ) மகன் அவளிடம் இரவுக்கு என்ன சாப்பிட வேன்டும் என்று அம்மாவை கேள் என்று சொன்னால் மாமியாரை சமையல் அறைக்கு  அழைத்துசென்று..காதில் மெதுவாய் “ அம்மா கண்ணனுக்கு மை வச்சுக்கறேளா…நெற்றிக்கு போட்டு வைக்கவா என்று எதாவது கேட்பாளாம்.. ( !!?? ) அவரும் “ ஒன்னும் வேண்டாம் “ என்று உரக்க சொல்வாராம்…இதை வாசலில் நின்றுகொண்டு கேட்கும் மகன் அம்மாக்கு ராத்திரிக்கு ஒன்னும் வேனாம்முன்னு நெனச்சு போய்டுவானாம்..( அடக்கடவுளே இப்படி போகுதா கதை ! )  
இப்படி இருக்கு மருமகளின் லூட்டி…. இது அந்த காலம்….இப்பொழுது…..நாளை சொல்றேன்…..  ( பின்ன அவர் சொன்னத வச்சு ஒரு பதிவ தேத்திடேன்..நாளை கதை நாளை யோசிக்கலாம்..) 
டிஸ்கி : இது உங்க சொந்த கதையா என்று கேட்க வேண்டாம்…
ஒன்று இப்பொழுது டிவி அலறும் வீடுகளில் இந்த சொய்ங் டெக்னிக் உதவாது…இரவுக்கு என்ன வேன்டும் என்று கேட்டு ஏமாற்ற மருமகளாலும் முடியாது..அவள் சமையலுக்கு நிம்மதியாய் ஹோடேலில் சாப்பிடலாமே !! 
சோ லாஜிக் இல்லாமல் சிரித்து விட்டு உங்க கருத்துக்களை எழுதிட்டு போங்க…

22 Jul 2010

வலைய்பதிவுக்கு லீவு

டியர் நண்பர்களே .

எஸ் ஐ ஆம் சப்பிரிங் ப்றோம் பிவேர்...செய்....நான் இன்று முதல் ஒரு வாரம் வலைபதிவு பக்கம் வர முடியாமல் போகலாம்.....இன்று இரவு  சென்னை நோக்கி நான் பயணிக்க உள்ளதால் நான் காணவில்லை என்று யாரும் தவறாக என்ன வேண்டாம்...முக்கியமாக சகோதரர் திரு. அருண் அவர்கள் என் பயோடேட்டாவை போட்டு ப்லோக்கில் மக்களை குஷி படுத்த விடுவாரவே என்ற நல்ல ???? எண்ணத்தில் டிஸ்கி கொடுத்துவிட்டேன்...

நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம்வலைபதிவு பக்கம் எட்டிப் பார்ப்பேன்...
கருத்துக்களை நண்பர்கள் பதிவுகளில் எழுதுவேன்...நானும் ஏதேனும் பதிவு எழுதி உங்கள் அனைவரையும் சிரிக்க ?? வைப்பேன்....

டாட்டா டீச்சர்...

நன்றி
G3

19 Jul 2010

பால் அக்டோபாஸ் இப்பொழுது அப்போலோவில்!!!

மறுபடியும் பாலான்னு கடுப்பேற வேண்டாம்..

பால் நம் நாட்டுக்கு வந்து ஜோசியம் செய்யும் தொழிலை மேற்கொண்டால் என்ன ஆகும்?? ( பாலுக்கே பாலுறும் நிலைதான் வரும் )

ஒரு குட்டி ( ?!# ) கற்பனை..

மொதல்ல நம்ம தமிழ் நாட்டுக்கு வருது..விமான நிலையத்தில் ராணுவ படைசூழ பெரிய வரவேற்பளிக்க படுகிறது...பால் வாழ்க..எதிர்கால தமிழ்நாட்டின் நம்பிக்கை சின்னம் பால் வாழ்க...வருங்கால இந்திய பிரதமர் !!!!!!! பால் வாழ்க என்று கோஷங்கள்கேட்கிறது...இதுலே பாதி பாலுக்கு புரிந்துவிட்டது....இது தேறாது...ன்னுதான் !!

இபொழுது நேராக ஜோசியம் பார்க்கவேண்டிய இடத்திற்கு செல்கிறது..பின்ன அடுத்த இரண்டு மணி நேரத்தில் அது ஆஸ்திரேலிய செல்ல வேண்டுமே
காசென்றாவை சந்திக்க...எல்லாம் லவ்ச்தான்..அதென்ன நம்ம ஊரு அரசியல் வாத்தியா.... போட்டி போடுகின்றவர்களை சண்டைக்கு அழைத்து மேடையில் மொக்கை போட????????

பாவம் அது எதோ, ரெண்டு போட்டில சோற்றை போட்டு குறி சொல்ல சொல்லுவாங்கன்னு பாத்தா...
அதுக்கு மாரடைப்பு வந்து நேரா அப்போலோக்கு போகுது..பட் வை ???

நடந்தது  என்ன ??? 

அங்கேயாவது இரண்டு பொட்டிதான் இங்கே தன ரூம் புள்ள பொட்டி பொட்டிய இருக்கே !! பின்ன எல்லா கட்சிகளும் இருக்கணுமே ( வோட் பெட்டி பா..சம்திங் பெட்டி இல்லை.. அது என்ன நாமள மாதிரி மானம் கெட்ட பொழப்ப நடத்துது?? பாவம் சோறு கண்ட இடம் சொர்கம்னு அலையுது ) 

கொஞ்சம்  பின்னோக்கி செல்வோம்!!

அங்கே என்ன நடந்தது அக்டோபசுக்கு மாறைப்பு வரும் அளவிற்கு  ????????

அங்கே நம்ம கலைஞர் அய்யா தான் மொதோ போட்டியோட நிக்கராறு...
" தம்பி பால்... என் பொட்டிய நி தேர்ந்தெடுத்தால்...நீ அனிமல் ப்லாநெட் பார்பதர்கேன்றே 3D LED டிவி ஒன்றை சண் HD சேவையுடன் பரிசளிப்பேன்..
முதல்  ஆறுமாதம் இலவசமான சேவை அளிக்கப்படும்..அதுமட்டும் இல்லாமல்..செம்மொழியாம் தமிழ்ப்போல் உன் புகழ் நிலைத்துநிர்க்க
செம்பீராநியாம் பால் அக்டோபாஸ் என்ற பட்டத்தையும் உனக்களித்து பெருமை படுத்துவேன்..( அக்டோபாஸ் திரு திரு வென முழிக்கிறது )

இப்போது நம் தலைவி நிக்கறாங்க...அந்த மைனாரிட்டி **** அரசால் அப்படி "என்ன பெருசாக தந்து விட முடியும் ?? டிவியா ச்சே நான் உணகேன்றே தண்ணீருக்கடியில் பிரைவேட் சினிமா தியேட்டர் கட்டிதரேன்..நீ  ஜாலியா என்ன வேணுமோ பார்த்துக்கோ..அதை தவிர ஜாக்பாட் நிகழ்ச்சியையே தொகுத்து வழங்கலாம்..இத்தையும் சேர்த்து பெங்களுருவிலோ மைசூரிலோ ஒரு தோட்டம் கட்டிதறேன்..அது போரவில்லை என்றால் இந்தய தேசிய மிருகம் நீ என்று அறிவிக்க செய்வேன்.."( இது அந்த புலிக்கு தெரியுமா?? பாவம் அது பொழப்புல மண்ணள்ளி போடணுமா???)அக்டோபசுக்கு தலை சுற்றுகிறது...( நமக்கும் தான் )

நமது  விர சிங்கம் விஜயகாந்த்..." உலகத்துல மொத்த பெருங்கடல்கள் இந்து , சமுத்திரங்கள் நூற்றிஎட்டு ( யார் பொய் எண்ணி பாக்க போறா) அதுல மொத்த கடல் இனங்கள்.....".நு ஒரு பெரிய புள்ளி விவரத்த சொல்லிமுடிக்கறதுக்குள்ள
பாவம் நம் பால் எட்டுக்கால் பாய்ச்சலாய் அடுத்த கட்சிக்கு போகிறது..

இப்படியே ஒருஒரு கட்சிய போகுது..இதுல நம்ம விஜயும் , ரஜினியும் இருக்கிறார்கள்..அனால் கட்சி துடங்குவதா வேண்டாமா என்று தெரியாமல் விழித்துக்கொண்டிருப்பதால் பாலிடமே கேட்டு விடலாம் என்று நிற்கிறார்கள்..

இப்படி பெரிய கும்பலை பார்த்து மிரண்டு போன பால்..மாரடைப்பு வந்து விழாமல் என்ன செய்யும்..?? அது என்ன தமிழ்நாட்டு மக்களா எல்லா வற்றையும் பொறுத்துக்கொண்டு..ஒரு ஒரு தேர்தலிலும் வாக்களித்து தனக்கு தானே ஆப்படித்து கொள்ள...???

நிகழ்காலம் : இடம் அப்போலோ :

பால் பாவமாக தண்ணீர் தொட்டி ஒன்றில் ஒருபுறம் டிரிப்ஸ் ஏற..கண்ணை முடிகொண்டிருக்க..அங்கே யாரும் இல்லை என்பதை உறுதி செய்துகொண்டு கண்திரகிறது..உஸ்ஸ் அப்படா ஒரு வழியா தப்பிசுடேன்..நு எண்ணி பெருமூச்சு விடுகிறது..

நடக்க  போகிறது என்ன :அது விட்டால் போதுமென்று தாய்நாட்டிற்கு சென்றுவிடும்..நாமோ அதே மொக்கை தேர்தல்..மொக்க வாக்குறுதிகள் என்று அலைந்து கொண்டிருப்போம்..கவலை மறக்க எந்திரின் . சந்திரன்னு எத்தான பாத்துட்டு துக்கம் கேட்டு அலைய்வோம்..


பாடம் : அக்டோபசுக்கு இருக்கும் புத்தியில் பாதி நமகிருந்தால் கூட தமிழ்நாடும் நாமும் உருப்படுவோம்..

உண்மை  : நம்மா தலைவருகளுக்கு மட்டும் தான் மாரடைப்பு வந்ததுப்போல் நடிக்க வருமா?? அக்டோபசுக்கும் தெரியும்...

டிஸ்கி  : நான் யார மனதையும் புண்படுத்தநினைக்க வில்லை.நீங்க பாட்டுக்கு என் விட்டுக்கு சுமோ அனுபிடதிங்க...அப்புறம் மொக்கை போட்டு சுமோ பஞ்சர் ஆகிவிடும்..உங்கள் ரௌடிகள் நடந்து விடு செல்ல வேண்டிருக்க்ம்..நானும் பாலுக்கு துணையாய் ???? அப்போலோ செல்ல நேரிடும் ..தேவையா??????சமாதனம போயிடலாம்..

பால் மாதிரி பால் மாறாம உங்க கருத்துகள பொட்டில போடுங்க..
இங்க ஒரு பொட்டிதான் இருக்கு !!!!!

18 Jul 2010

அக்டோபாஸ் பாலுக்கு போட்டி !!

கால்பந்தாட்ட உலகில் ஜோசிய புயலை கிளப்பிய பால் ( அக்டோபஸ் ) பற்றி உலகமே அறியும்..ஆ ஊ நா அக்டோபாஸ் கு டப்பா ல கொடிய நட்டு ஜோசியம் கேட்டுன்னு சுத்திகுன்னு இருந்த ஆர்வக்கோளாறு பயலுக பைத்தியம் இப்போ ஆஸ்திரேலியா வரை பரவிடுச்சு..
நீங்க மட்டும் தான் அக்டோபஸ் கிட்ட ஜோசியம் கேட்பின்களா ??? நாங்களும் கேட்போம்முல்ல ன்னு ஆச்திறேலியால புதுசா களம்பிய்டாங்கைய்யா களம்பிய்டாங்க... 


 photo courtesy : http://www.nydailynews.com

ஆமா பாலுக்கு போட்டி இப்போ காசென்றா என்ற அக்டோபஸ்ஸ கண்டுபிடிசுட்டங்கல..நம்ம பதிவுலக நண்பர்களின் ஆசை இன்று நிறைவேறியது...ஆமா இந்த அக்டோபஸ்.. கணித்திருப்பது கால்பந்தாட்டத்தை பற்றி அல்ல...நாற்காலி பந்தாட்டத்தைபற்றி..
ஆமா இது அரசியல் அக்டோபஸ்!!!!!!
அங்கே இன்னும் தேர்தலுக்கு ஒரு மாசத்துக்கு மேல உள்ள நிலையில இப்போ இந்த கூத்து....ஆஸ்திரேலியாவில் இருக்கற "Sydney Institute of Marine Science " லத்தான் இந்த குட்டி அக்டோபாஸ் இருக்கு...
ஆர்வக்கோளாறு தின செய்தித்தாள் ஒன்று போய் தேமேன்னு இருந்த அந்த
காசென்றாவ ஜோசியம் பாக்க வச்சுருக்கு ( நல்ல வேலை !!) அங்கே தேர்தல்ல போட்டி இடும் தற்போதைய பிரதம மந்திரி " ஜூலியா கில்லார்ட் " மற்றும் 
" டோனி அப்பாட் " இருவரையும் ( அவங்க புகைப்படங்களப்பா.....) அக்டோபாஸ்ஸின் கூண்டுக்குள் இறக்கி விட்டு ஆ நு வாய பொளந்துக்கிட்டு
 பாத்துகிட்டு இருக்க....
அது போய் சமத்தா ஜூலியாவின் புகைப்படத்தை கட்டிகுச்சாம்....( காசென்றா ஒரு பெண் அக்டோபாஸ் என்பதை ஆர்வக்கோளாறு நண்பர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்..ஏதான எசக்கு பிசக்கா யோசிக்கவேணாம்..!!)
இதுனால  சகலமானவர்களுக்கும் அது தெரிவிப்பதேன்னவேன்றால்…ஜூலிய அம்மா தான் ஜெயிக்க போறாங்கன்னு…
டிஸ்கி : “அக்டோபாஸ் எப்போவேனா தன முடிவை மாத்திக்கிட்டுடோனியோட கூட்டு சேரலாம் “..இந்த டிஸ்கிய விட்டிருப்பது நான் இல்ல அந்த செய்தித்தாள் தான்… 
ஆகையால இப்போ நம்ம தமிழ்நாட்டுல நாம்மாளுகளும்
கூடிய விரைவில் ஒரு அக்டோபாஸ்சயோ , முதலையோ , கையில் மாட்டும் அப்பாவி விலங்கு ஏதுவாக இருந்தாலும் ஜோசியம் கேட்டா ஆச்சரிய படுவதற்கில்லை..
 
துணுக்கு செய்தி: நானும் போயி ஏதான ஒரு அக்டபாஸ்
கிட்ட ஜோசியம் கேக்கலாம்னு இருக்கேன் “ நம்ம மக்கள் எப்போ இந்த மூட நம்பிக்கையில் இருந்து விடுபெருவார்கள்” என்றுதான்
 ஹா ஹா ஹா….. 

“ ஓணான் ஆபீசுக்கு போனா உனக்கென்ன??? கிளி கச்சேரிக்கு போகுதுன்னு சொல்லிட்டுப்போ..” ஹை புதிய தத்துவம் 2……

முதல் தத்துதவதுக்கு “ ரீல் விடும் ரீல்கள்"   பதிவை படிக்கவும்...


மறக்காம உங்க கருத்துக்கள எழுதுங்கப்பா...வர்ட்டா..
 


      

17 Jul 2010

ரீல் விடும் ரீல்கள்...

சினிமாக்கள் வர வர எனக்கும் சந்தேக்கங்கள் அதிகரித்துக்கொண்டே போகிறதே தவிர குறைந்த பாடில்லை…
அதெப்படி நம்ம..  ஹீரோ நல்லவரோ கேட்டவரோ அவரைப் பற்றி தெரியாத மக்களே யாரும் இருக்கறது இல்ல ???
நம்ம ஹீரோக்கள் எவ்வளோ பணக்கரராய் இருந்தாலும்…. பாவம் கொட்டாம் பட்டி ட்ரவுசர தவிர வேற ஒன்னும் போட கிடைக்க மாட்டேங்குது..அதான் அழகான வேட்டி கட்டிகரங்க அப்படியும் ஏன் இந்த கோலம்???  ( ராஜ்கிரண் , ராமராஜன், சத்யராஜ்..லிஸ்ட் போகுது அதுபாட்டுக்கு )
அவன் அவன் காட்டுகத்தா கத்தியே பக்கத்துல இருக்கறவங்களுக்கு ஒன்னும் கேட்கிறது இல்ல….ஆனா ஊர்கொடில இருக்கற ஹீரோ படுவது மட்டும் எங்கயோ இருக்கற ஹீரோயினுக்கு கேட்டு ஓடி வருவாங்க ( சின்ன தம்பி கிளைமாக்ஸ் பாருங்க புரியும் )…ஹீரோக்கு மட்டும் இந்த அதீத குரல் வலிமை இல்லை  ஹிரோயனுக்கும் அந்த அற்புத சக்தி உண்டு..ரயில்வே ஸ்டேஷன்ல ஸ்பிகேர்ல அலற அலற அறிவிப்பு போய்கொண்டு இருந்தாலே யார் கதுலாயு கேட்ட பாடில்ல..ஆனா அம்மா அங்கேந்து தம்தூண்டு சத்தத்துல பாடினா ஹீரோக்கு மட்டும் கரீட்டா கேட்கும்ல….(ஆனந்த பூங்காற்றே பட கிளைமாக்ஸ் அதிசயம் இது ! )
எம் சி எ படிக்கற பொண்ணுக்கு டவுட் வரும் அத ஹீரோ கிட்ட கேட்டதும் அவர் ஒடனே…. தன் லாப்டாப் ல கால்குலேட்டர் ல ஏதான தட்டுவார்..”வாவ் இந்த ப்ரோக்ராம் என்னக்கு எவ்ளோ புரியாம இருந்துச்சு தெரியுமா யு ஆர கிரேட்..” தாட் பூட்ன்னு புகழ்ந்து தள்ளும்..கால்குலேட்டர  பெருசா காட்டி தட்டினா நாங்க வாய பொளந்து பாப்போம்னு என்ன ஒரு நம்பிக்கை பா…. நம்பிக்கை இல்லையா?? வருஷமெல்லாம் வசந்தம் படம் பாருங்க..( இதெல்லாம் கேட்க ஆளில்ல ம்ம்ம் இருக்கட்டும்..)
குஷியாவோ சோகமாகவோ ஆட ஆரம்பிக்கும் நம்ம ஹீரோ கூட சேர்ந்து ஆட வரும் அனைத்து மக்களுக்கும் அவர் ஆடப் போகும் ஸ்டெப் எப்படியும் தெரியும்..அப்படி ஒரு ஒற்றுமை இருக்கும்..(கனவு சீனுக்கு கூட ஒத்திகைப் பார்த்துக்கொண்டு தான் வருவாங்க போல..ஆடத்தான்!!! அய்யய்ய)
பணிகொட்டும் மலைச்சாரலில் நடணமாடும் ஹீரோக்கள் லெதர் ஜாக்கெட் லெதர் பேன்ட் என்று இருக்க, ஹீரோயின் மட்டும் பாவம் அரைகுறையாய் ஆடிக்கொண்டு இருப்பார்…(அதான் இருக்கிறதெல்லாம் ஹீரோ போட்டுகொண்டு இருக்கிறே!!! பாவம் துநிபஞ்ச்செம் போல…)
கல்லூரிகள், பள்ளிக்கூடங்கள் என்று எங்கு பார்த்தாலு, அரைகுறை ஆடைத்தான்..என்ன கர்மமோ
சண்டை காட்ஷினா கடவுளே அந்த காமெடிக்கு அளவே இல்லப்பா…ஒரு ஹீரோ, சுத்தி… பார்க்கவே பயங்கரமான  பத்து பன்னிரெண்டு ரவுடிகள் ,  அடிக்க அபிநேயம்மெல்லாம் பிடித்துக்கொண்டு ஆயத்தம் ஆவார்கள்..ஆனா அடிக்க மட்டும் ஒரு ஒருத்தரா பொறுமையாத் தான் வந்து அடிவாங்கிக்கிட்டு போவங்க..
அதுலயும் நம்ம ஹீரோ அப்படி கையால ஸ்டைலா ஆட்டோவ ஒரு குத்து விட்டா காத்துல பறந்துபோய் விழும்..
வில்லன் தப்பிக்க நினைக்கிற கார ஹீரோ தன் கையால காரோட பின்பாகத்த கட்டியா புடிச்சுகிட்டா போரும்…அவன் என்னதான் ஆக்சிலேட்டர்ர போட்டு அழுத்து அழுத்துன்னு அழுத்தினாலும் காரு நகராதுல்ல…
இதை தவிர ஓடும் காரை ஓடிப்போய் பிடிப்பது..ஒடும் ரயிலின் மேல் கொஞ்சமும் சருக்காமல் ஓடுவது ஆடுவது..பறக்கற விமானத்த அசாத்தியமா தரை இறக்குவதுன்னு..அட போங்கய்யா மனசட்ஷி இல்லாம ரீல் விட்ராய்ங்க..
அட நம்ம ஊருலதான் இந்த கூத்து கூத்து நா….ஹாலிவுட்  மட்டும் இளச்சதா என்ன?? அங்கே சுதர ரீல் கொஞ்ச நஞ்சமா ????…
டைனோசரையே அடச்சுவைக்கற அளவுக்கு தொழில் நுட்பதுல முன்னேறி இருக்கும்..ஆராய்ச்சிக் கூடத்தோட கம்ப்பியுட்டர் மட்டும் ஒரு பத்து வயசுப் பொண்ணு ஆப்பரேட் செய்யும் அளவுக்கு அத்தனை சுலபமா இருக்குமாம்.” திஸ் இஸ் யுனிக்ஸ் ஐ நோ இட்” ன்னு சொல்லிடு கொஞ்ச நிமிஷத்துல ஆராய்ச்சிக் கூடத்தையே ஒரு ஆட்டு ஆட்டிடுமாம்.. (என்னங்கய்யா கூத்து இது???? எலி ஸ்கூலுக்கு போச்சுன்னு சொன்னா இளிச்ச வாயன் வாயப் பிளந்தானாம்…..ஹை எப்படி ஏன் சொந்த புது மொழி ?? காதுல ரத்தம் வருதா?? “) ரொம்ப யோசிக்க வேணாம் ஜுராசிக் பார்க் படம்தான் அது…ஆனைக்கும் அடி சறுக்கும்..ஜேம்ஸ் கேமரூனுக்கும் அப்போ அப்போ சருக்கும்ல…
அமெரிக்க ல இருக்குற பெரிய பெரிய பெண்டகன் , உளவுத்துறை ஆகிய இடங்கள்ல இருக்கற கம்ப்யூட்டர்ர கூட நம்ம ஆளு ரெண்டு மூணு முயற்ச்சில பாஸ்வேர்ட்ட கண்டுபிடிச்சு உள்ள பூந்துருவார்ல ஆமா..( லிஸ்ட் கணக்கில் அடங்கா..)
ஹீரோவ பார்த்து சுமார் பத்து இருவது வில்லனின் ஆட்கள் சுட்டாலும் இவர்மேல் ஒரு குண்டு கூட பாயாது ஆனா இவர் அப்போ அப்போ எட்டிப்பாத்து சுட்ட ஒருத்தன் கூட தப்பிக்க மாட்டான்..ஹீரோ ஒரு சாதாரண ஆளாக இருந்தாலும் குறிதவறாமல் சுட்வார்ல..( வில்லன்களை ஹீரோக்கள் கிட்ட டியூஷனுக்கு அனுப்பலாம்…)
பேய்ப்படம், திகில் படங்கள் என்றால்…அமானுஷ சத்தம் ஏதேனும் கேட்கும் பொழுது பெண்கள் தான் அரைகுறை ஆடை உடன் சென்று என்ன வென்று பார்க்க வேண்டும்..ஆண்கள் தப்பித்தவறிக் கூட போக மாட்டார்கள்…

இன்னிக்கி இது போரும்..பாகம் இரண்டு அப்பாலிக்கா போடறேன்..
மறக்காமல்உங்க கருத்துகள எழுதுங்க…

15 Jul 2010

இது தான் சேதி…

நமக்கிந்த சீரியஸ் போஸ்ட் சரிவராதுன்னு ரசிக பெருமக்கள் ...எனது சில நண்பர்களும் ,  எசக்கு பிசக்கான முகபாவத்தோடு நேத்து நொந்து நூட்லஸ் ஆய்போனமதிரி போலம்பிய் தள்ளி விட்டார்கள்..என்னமோ என் மனதில் பட்டதைதான் நான் எழுதுகிறேன்.இனியும் எழுதுவேன்..
ஆதவன் சார் சொன்னமாதிரி “தலைப்பை மாற்ற முடியாயதுனா சீரியஸ் பதிவ தவிர்கலாம்”..பேசாம இதே மாதிரி சீரியஸ் பக்கம் ஒன்ன துவங்கிடலம்னு ஒரு பக்கம் தோனிய பொழுது...
அவன் அவன் ஏற்கனவே தினமும் வேலை சுமை , தான் செய்த வேலைக்கு பாராட்டை வெட்கமில்லாமல் பெறும் அற்புதமான மேலதிகாரி , பதவி உயர்விற்காக இங்கே என்னதான் தலைகிழாக வேலை செய்தாலும்.......சோப்பு , ஜால்ரா போன்ற  சிறப்பு தகுதிகள் இல்லாத ஒரே காரணத்தினால்  , வாய்ப்பை தன்னுடன் வேலைபார்க்கும் திருவாளர் ஜால்ரா அவர்களுக்கு விட்டு கொடுத்துவிட்டு பொலம்பிய் கொண்டும் ,மதிய உணவிற்காக மனைவி கொடுத்த தயிர் சாதத்தில் தயிரெல்லாம் வழிந்தோடி வெறும் ஊறுகாய்  சாதம் மட்டும் இருப்பதை கண்டு செய்வதறியாது முழித்துக்கொண்டும்,  வரும் தூக்கத்தை கட்டுபடுத்த முடியாமல்( இதை போன்ற பதிவை படித்து துங்காம என்னத்த பண்றது ?? ) அரைதூக்கத்தில், மீடிங்கில் ஆணி புடுங்கி விட்டும் , வீடு திரும்பும் பொழுது கண்டபடி வண்டி ஒட்டி தன்னை கடுப்படிக்கும் நல்லவர்களையும் பொறுத்துக்கொண்டு ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தால்.......போரும் முடியல.... இதனை கொடுமைகளையும் அன்றாடம் சந்திக்கும் சகோதிரர்களே...( அப்பா...இப்போவே கண்ண கட்டுதே..)

காலைல எழுந்து கண் கண்ட தெய்வத்தையும் (கணவன்மார்கள சொன்னேன் பா  இதுகூடவா சொல்லிதரனும் ?  ) ,  நண்டு சுண்டு களையும் எழுப்பிவிட்டு.. ஆபீசுக்கு டைம் ஆகுது , பள்ளிக்கூடத்துக்கு லேட் ஆய்டும் என்று கூவி கூவி தொண்டை வரள அவர்களை கிளப்பி, ப்ரேக் பாஸ்ட் செய்து , லஞ்ச் செய்துஇதற்கென்று ஒரு தனி வலைபதிவே போடலாம்… அப்பாக்கு இட்லி வேணும்னா பொண்ணுக்கு வேற ஏதான தானே வேணும்…குடும்பத்தில் அனைவரும் ஒரே மாதிரி சாப்பிட்டால்தான் நிம்மதியாச்சே.)…  ஒருவழியாக கணவரை கிளப்பி…. ( ஆபீஸ்க்கு பாஸ்…காலிலேயே சண்டைக்கு கிளப்பும் நல்லெண்ணம் எனக்கில்லை)    ஸ்கூல் பஸ்ஸை ஓடிப்பிடித்து குழந்தைகளை ஏற்றிவிட்டு வீடு வந்து அடுத்தடுத்த வீட்டு வேலைகளை செய்து முடிபதற்குள் ( வேலைக்கென்று ஆள் இல்லாமல் இருக்கும் பொழுது வேற யார் செய்வா? ), பள்ளியில் இருந்து வரும் குட்டிஸ அழைத்துவந்து அவர்கள் படிக்கிறார்களோ இல்லையோ! அவர்களுக்காகப் படித்து ( நம்ம அம்மாவ நாம படுத்தியதால் வந்த  பாவம் தான் இதுலாம்.. ஒரு வரி எழுத முதுகில் வரிகளை வாங்காமல்த்தான் நாம் வீட்டுப்பாடம் செய்ததே இல்லையே!)…    ராத்திரி உணவு சமைத்து ( சரி சரி மதிய உணவை சூடு செய்து ஒப்பேற்றும் கண்மணிகளை நான் சொல்ல வில்லை…யாரான என்ன கை காட்டினால் அவ்ளோதான்…ஆமாம் !  ஹி ஹி ஹி ) ஆபீஸ் லேந்து வரும் தலைவரின் எரிச்சலை தாங்கிக்கொண்டு (  வேற வழி??? நாமும் சேர்ந்து கத்தினால் தான் பிள்ளைகள் நம்ம எதோ “ ஹை!  டாம் அண்ட் ஜெர்ரி விட அப்பா அம்மா பைட்டு சூப்பர் “  என்பது போல் மெய்மறந்து பார்ப்பார்களே! …வீட்டுக்கு வீடு இதெல்லாம் சகஜம் தானே !)   இப்படி போய்கொண்டிருக்கும் சகோதரிகளும்…( ஹைய்யா ஒரு வழியா போஸ்ட்ட ஒரு பக்கத்துக்கு நீட்டிட்டோம்ல !! அவ்வ்வ் )
இங்கு வந்து இந்த மொக்கையை எனக்காக படிக்கும் பொழுது நானும் எதற்கு சீரியஸா பேசி கழுத்தருக்கணும் ??????????? இந்த பதிவே ஒரு கழுத்தறுப்பு என்று யார் சொன்னது??? உங்க வீட்டுக்கு பக்கத்துல சுமொவருதன்னு பாத்துட்டு பேசவும் !! (ஹை நான் கூட நம்ம ஹீரோக்கள் மாதிரி வெட்டி சவுண்டு   உட ஆரம்பித்துவிட்டேன் )
ஸோ மொக்கை பதிவே போதும்…ஆணியே புடுங்கவேன்டம் …பிழிந்து பிழிந்து அழவைக்க டிவிக்கள் சீரியல்கள் என்ற பெயரில்  நற்சேவை செய்துவருகிறார்களே…நானும் அவிங்க கூட சேந்து கும்மி அடிக்க விரும்பவில்லை…
மூச்சு வாங்குது நாளைக்கு பாப்போம்…………………………….. ஒருவழியா ஒரு பக்கம் பூராவும் உளறிமுடிதாகிவிட்டது..நன்றி நன்றி நன்றி ( ஒரு ஆப்பிள் ஜூஸ் ப்ளீஸ் )

டிஸ்கி : இதை படித்து என்மேல் கொலைவெறி கொள்ளாமல் உங்கள் கருத்துகளையும் அர்ச்சனைகளையும் கமென்ட் போட்டில கொட்டி தீர்த்துவிட்டு போங்க..புன்யமா போகும்…….

14 Jul 2010

பெண்களே உணருங்கள்!!

நான் எழுதும் இந்த பதிவு சில பெண்களுக்கு என் மேல் வெறுப்பு வர செய்யலாம்...ஏன் ஆண்களும் கூட கோவப்படலாம்..ஆனால் என்னக்கு அவர்களை பற்றி சிறிதும் கவலை இல்லை!.இவை என் மனதில் எழுந்த என்னச்சிதறலின் வெளிப்பாடு..என் பதிவுலக நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று இங்கே எழுதுகிறேன்!
குழந்தையை பெற்ற , குழந்தைக்காக ஏங்கி தவித்துக்கொண்டு இருக்கும் சிலருக்கு என் ஆதங்கம் புரிந்தால் போதும்..

பெற்ற குழந்தையை விடவும் ஒரு தாய்க்கு இந்த உலகில் பெரிய சொந்தம் ஒன்றுமே இல்லை!    

பசியோ பயமோ வலியோ எதையுமே சொல்லதெரியாமல் அழுகையால் மட்டுமே
தன்னை வெளிபடுத்தும் அப்பாவிகள் , நாம் கோவித்துக்கொண்டால் கூட அதை
மறந்து சிறிதுநேரத்தில் சிநேகம் பாராட்டும் பெருந்தன்மை உடைய நல்லவர்கள்,
யாருக்கும் மனத்தால் கூட கேடு நினைக்க தெரியாத உத்தமர்கள்..ஒரு துளி
புன்னகையால் நம் அளவில்லா துயரைக் கூட நொடி பொழுதில் மறக்க செய்யும் கடவுள்..குழந்தைகள்!!

இந்த பதிவு குழந்தைகளுக்காக ஒரு தாயின் குரல்..

நம் நாட்டில் எப்படியோ எனக்கு தெரியாது ஆனா இங்கே நான் கேள்வி பட்ட, படுகின்ற
சில விஷயங்களை என்னால் ஜிரணிக்கவே முடியவில்லை..

பணத்திற்காக கைக்குழந்தையை கூட பணிப்பெண்ணிடம் விட்டு விட்டு செல்லும் பெண்கள் இப்பொழுது அதிகரித்து கொண்டே போகிறார்கள். பிறந்து சில நாட்களே
ஆனா , பச்சிளம் குழந்தையை எப்படித்தான் விட்டு போக மனது வருமோ தெரியவில்லை..பணக்கஷ்டம் உள்ள குடும்பமானாலும் சரி..கணவன் நன்றாக சம்பாதிக்கும் பொழுது..சொந்தக்காலில் நிற்க வேண்டும் ..எதற்கும் கணவனை எதிர்பார்க்க கூடாது..தான் செய்யும் செலவினை கணவன் தட்டி கேட்க கூடாது
என்ற மன நிலை தற்பொழுது சில பெண்களிடம் அதிகரித்துக் கொண்டு வருகிறது.
அப்படி எதாவது தவிர்க்க முடியாத காரத்தினால் வேலைக்கு போயாகவேண்டிய கட்டாயம் என்றால் குழந்தையை பார்த்துக்கொள்ள பெற்றோகளை கேட்டு கொள்ளலாம் அல்லது சிறிது காலம் தான் தேவையை வாய் விட்டு சொல்லும் வயது வரை ஆவது குழந்தையை தாயே பார்த்து கொள்ளலாம்..

இந்த விஷயத்த எதுக்கு இப்போ பெருசா சொல்ல ஒரு பதிவுன்னு கேட்கலாம்..
இங்கே நடக்கும் சில சம்பவங்களை பற்றி கேள்விப்பட்டதிலிருந்து என்னால் துங்கவே
முடியவில்லை.

சம்பள பாக்கிக்கு குழந்தையா??       
மாத சம்பளம் சரியாக வழங்க படாத காரணத்தினால் தாய்க்கு தெரியாமல் பச்சிளம் குழந்தையை விற்றிருகிறாள் பணிப்பெண் ! அவள் அக்குழந்தையை விற்றது இந்திய மதிப்பில் 20000 ...  அவ்வளவுதான ஒரு உயிரின் மதிப்பு??

எஜமானி திட்டியதால் வீச முயன்றளாம் ! :
வீட்டு வேலையை ஒழுங்காக செய்ய வில்லை என்று கண்டித்ததர்காகவும் சம்பள பாக்கிக்க்காகவும் கோவத்தில் எஜமானர்களை பழிவாங்க வேண்டும் என்பதற்காக..ஐந்தே மாதமான பச்சிளம் குழந்தையை பால்கனியிலிருந்து வீச பணிப்பெண் முயற்சித்த பொழுது..அந்த குழந்தையின் நல்ல நேரம் கிழே ரோந்து பணியில் இருந்த போலீஸ் காரர் அந்த கொடூரமான செயலை தடுதுளர்..அப்பெண் இபொழு சிறையில்...

அழுதால் தூக்க மாத்திரை! :
குழந்தை என்றல் அழத்தான் செய்யும் அதை பொறுத்துக்கொள்ள முடியாத உத்தமமான பணிப்பெண் பாலில் தூக்க மாத்திரையை போட்டு கொடுத்துக்கொண்டு வந்துருக்கிறாள்..எதேச்சையாக அலுவலகத்தில் இருந்து வந்த தாய் இதனை பார்க்க
நேரிட்டு ஏன் என்று கண்டித்ததற்கு அவள் சொன்ன பதில் .."அழுதுண்டே இருக்கிறாள் என்னால் வேலையே செய்ய முடியவில்லை அதான்..பாதி மாத்திரைதான் கொடுத்தேன் கவலை படதே"  என்று !!!இப்பொழுது அந்த நல்லவளும் சிறையில்..

இவை நான் கடந்த சில வாரங்களில் படித்த சிலவே..பத்திரிகையில் வந்தவை
இவை, வெளிவராமல் போகின்றவை எத்தனையோ..பெண்கள் வேலைக்கு போகவே கூடாது என்று நான் சொல்லவே இல்லை.. தன்னை ஒருவர் துன்புறுத்துகிறார் என்பதை தன்னால் தாயிடமோ தந்தையிடமோ சொல்லும் வயது வரும் வரையாவது குழந்தையை தாயே பார்த்துகொள்ளலாமே.

குழந்தையே இல்லை என்று பலர் மனம் உடைந்து போகின்றனர்..அரசமரத்திலிருந்து..புல் பூண்டு வரை எதைவேண்டுமானாலும் சுட்டற பலர் தயாராக உள்ளனர்..எத்தனை லட்சம் வேண்டுமானாலும் செலவு செய்யவும் தயாராக எத்தனை தம்பதியினர் இருகிறார்கள் ! கடவுளாய் நமக்கு கொடுக்கும் ஒரு வரம் குழந்தைகள்..அவர்களை ராஜாவைப்போல் வளர்க்காவிட்டாலும் பரவா இல்லை, இப்படி படுகுழியில் தள்ளாதீர்கள்..கோடி கோடியாய் பணம் கூட வரும்... உயிர் ????12 Jul 2010

தமிழை தமிழாய் எழுத உதவுங்கள்

நானும் தமிழ தப்பில்லாமல் எழுதனும்னு என்னனமோ பண்ணி பாக்கறேன் ஆனா ஒன்னும் சரிவரமாதிரி தெரியல! தப்பு தப்பாகத் தான் எழுத வருகிறது..பதிவுலக நண்பர்களே உங்கள் யாருக்காவது ஏதேனும் தமிழ் spell check  software பற்றி தெரிந்தால்
எனக்கு சொலுங்கள்..பாவம் எத்தனை பேர்தான் தவறை திருத்தி கொள்ளுங்கள் ன்னு எழுதிட்டு போவாங்க ? எப்போதான் நானும் தமிழை பிழை இல்லாமல் எழுத
போறேனோ! தமிழ் தட்டச்சு லம் உதவாது எனக்கு தமிழே தகராறு ஆகையால் நான் எழுதும் தமிழை சரி பார்க்கும் மென்பொருள் தேவை.

 HELP ME OUT OF THIS  EMBARRASSING PROBLEM !!!!!


11 Jul 2010

முட்டி மோதும் குட்டித் தூக்கம் !

நாம எல்லாரும் தான் தூங்கறோம் இதுல என்ன பெரிய விஷயம்னு கேட்கறிங்களா ?

சரிதான் , ஆனா இந்த பதவு நம்மளும் நம்மைச்சுற்றி மற்றவர்கள் போடும் குட்டி
தூக்கத்தை பற்றிதான்.

இந்த குட்டிதுக்கம்னாலே வகுப்பறைய அடுசுக்க எதுவுமே கிடையாது!

தினமும் காலையில அடிக்கற அலாரத்த அப்படியே அமுக்கி..அதன் இந்த snooze பண்ணி,
அம்மா வந்து தண்ணி கொட்டாத கொறையா எழுந்து கலம்பார்தேதான், அம்மா தன்

பாசத்த கொட்டி சாப்ட சொல்லி ஓடிவருவாங்க..( இல்லேனா யாரு இப்போ உட்டா ?
நாமளா பொய் கிட்சென் புகுந்து தின்னுவோம்ல! )

இப்படி வயிறு முட்ட முட்ட தின்னுட்டு கல்லுரி போனா ( அதுவும் நாம துங்கனும்னு
அசையா ராகம் பாடி வதியார் படம் நடத்தும் பொழுது ) தூக்கம் வரும் பாருங்க சும்மா சொக்கிண்டு வரும்.நாம என்ன தனுஷா என்ன?.. தூக்கத்துல எழுப்பி கேட்டாலும் போய்

ஒழுங்க கணக்கு போட? முழிசுகுட்டு இருக்கும் பொழுதே தலைல ஒன்னும் ஏறாது இதுல
தூக்கத்துல சுத்தம் !.அப்படியே மாட்டினா கூட, எதோ எடிசன் எதிர்வீட்டு ஆளு மாதிரி
தூங்கல சார் நீங்க சொன்னத யோசிச்சுக்கிட்டு இருந்தேன்னு கூலா புழுகிட்டு மீதி
தூக்கத்த தொடருவோம்..


இதுல சில நல்லவர்கள் முதலைமாதிரி கண்ணை திறந்துகொண்டே ( என்ன
மாதிரித்தான் ) தூங்குவார்கள்!! HOD வகுப்புன என்ன அட ப்ரின்சிபாலே வந்து பாடம்
நடத்தினா என்ன தூங்கும் தங்கங்கள் தூங்கிகொண்டேதான் இருக்கும்.


நான் படிச்சது வேற" visual communication " கேட்கவா வேணும் .இதுல பதி நேரம் சினிமா
படிப்புதான் ( விடிஞ்சுது !) ஓசில சினிமா பாக்க சொன்ன கசக்குமா? நல்ல புது படம்னா
எதோ பி சி ஸ்ரீராமுக்கே கேமரா புடிக்க சொல்லிதரவங்க மாதிரி அப்படி ஒரு மும்முரமா

பாப்போம்... .இதுவே பழைய '' Casablanca , Roman holiday''  போன்ற படம்னா முக்கால் வாசி
பசங்க தூங்கிபோய்ருபங்க..சினிமா சத்ததுல கொறட்டை சதம் கேட்கவா போகுது??


வகுப்பறைக்கு அடுத்து குட்டி தூக்கம் போட சிறந்த இடம்  பேரூந்து! அவன் அவன்
ஒக்கார இடம் இல்லாமல் தள்ளாடி நின்றுகொண்டிருக்கும் பொழுது கிடைத்த இடத்தை
படுக்கையாக மாற்றிக்கொள்ளும் நல்லவர்கள் நாம் அனைவரும் பார்த்த பார்கின்ற

ஒன்றே !! கும்மிடிபூண்டி வந்த எழுப்புங்கன்னு சொல்லிட்டு துக்கத்துல கும்மியடிக்க
போய்டுவாங்க..ஐயோ நம்மளையும் நம்பி ஒருத்தன் துங்கரநேன்னு நாமளும் தூங்காம
தேவுடு காத்துகிட்டு இருப்போம்..கும்மிடிபூண்டி வந்ததும் நம்மால எழுப்பி வழியனுப்பி
வைப்போம்..அடடே நாம அடுத்த ஸ்டாப் ல தானே எறங்கணும்!! நாம எப்போ தூங்கறது?

இப்படி போகுது பேரூந்து தூக்கம்.இது இரயில் பயணங்களுக்கும் பொருந்தும்,

Source : here 

அடுத்து வருவது என்னக்கு பிடித்த ஒன்று நம் வீட்டு ரங்கமணிகள் போடும்

குட்டித் தூக்கம்!!.காலைலேந்து அலுவலகத்துல மண்டைகாஞ்சு வேலை செஞ்சுட்டு

வீட்டுக்கு வந்தா..நாம அதான் தங்கமணிகள் விடுவோமா ? காலைல ஆரம்பிச்சு இந்த

நிமிடம் வரை நடந்த விஷயத்த , எதோ  நாளைக்கி விடியவே விடியதுன்றமாதிரி தட

தடவென டின்னர் பரிமாறிக்கொண்டே கொட்டிதள்ளிடுவோம்..கொஞ்சநேரம் மண்டை
ஆட்டிக்கொண்டே சாப்பிடும் ரங்கமணிகள் சிறிது நேரம் கழித்து பார்த்தால்...கொறட்டை
இல்லாமலே !!! தலையை ஆட்டிக்கொண்டே தூங்கிகொண்டிருப்பர்கள் !


அதென்ன மாயமோ நாம் பேசுவதை நிறுத்திவிட்டால் எழுந்து சாப்பிட தொடங்கி விடுவார்கள்..நாம பேசறதென்ன  தாலாட்டு மாதிரியா இருக்கு?(இருக்கோ என்னமோ !)


அழகான குட்டித் தூக்கமும் உண்டு, நம்ம வீட்டு வாண்டுகள் நாள் முழுவதும் ஆடிவிட்டு
டிவி பார்த்துக்கொண்டே சோபாவில் டிங் டிங் ன்னு தலை அடிகொண்டு இருக்க அழகாய்
குட்டி தூக்கம் போடுவார்கள்.


 Source: here

தூக்கங்களும் சுவாரசியங்களும் தொடரும் !!

நானும் ,தெரு நாயும் , கொட்டாங்குச்சியும்

அப்போ எனக்கு ஒரு முன்று வயசு இருக்கும்.. என் அம்மா எனக்கு பால பால் பாட்டில்ல கொட்டி வைப்பாங்க..நான் அதை குடிக்காம இல்லாத வேலை எல்லாம் பண்ணுவேன்.என் முதல் வேலையே தெருவுல இருக்கற நாய புடிகர்துதான்! அத்தையேன் புடிகறேன்னு கேக்கறிங்களா ? எல்லாம் ஒரு பாசம்தான்..

கொல்லபக்கதுல இருக்கற கொட்டங்குச்சிய கொண்டுவந்து..அம்மா பாட்டில்ல கொட்டி வச்சுருக்கற பால அதுல விட்டு, புடிச்சுட்டு வந்த நாய்க்குட்டிய வாசக்கதவுல கட்டி இந்த பால அதுக்கு குடுத்து அது குடிகரத பக்கர்துல அப்படி ஏதோ சாதிச்சுட்ட மாறி ஆனந்தம்.குடிச்சதும் அந்த நாய்க்குட்டிய கயற்றி விட்டுடுவேன்  இதையே ஒருவேலையா தினமும் செய்துவந்தேன் ! ( எவ்வளோ நல்ல எண்ணம்) அந்த நாய்க்குட்டியும் என்ன நடக்குதுன்னு தெரியாமலேயே பாலகுடிச்சுட்டு விட்ட போரும்னு ஓடியே போய்டும்.அம்மா எத்தனையோ தரம் கண்டிச்சு இருகாங்க இதுலாம் செய்யாதே நீ செய்யறது உனுக்கும் நல்லது இல்ல , அந்த நாய்க்கும் சரி இல்லன்னு.. நான் எதையும் கேட்டதே இல்ல ..( ஆமா நாமலாம் என்னிக்கி சொன்னத கேட்டு இருக்கோம் ?? )

இப்படியே என் லூட்டி தொடர்ந்தது,ஒரு நாள் மதியம் வழக்கம் போல அந்த நாய்க்குட்டி பால குடிச்சது நானும் கயத்த கயற்றிவிடேன்.அப்போ தான் அந்த கொடுமையான  சம்பவம் நடந்தது..எங்க வீடு மெயின் ரோடுல இருந்தது..வீட்டைவிட்டு  ஓடின நாய்க்குட்டி சாலையை கடந்தப்போ ரோடுல வந்த பல்லவன் பஸ் அதுமேல ஏறிடுச்சு ..அப்போ அந்த நாய் குட்டி அலறியது என்னக்கு இன்னி வரை கேட்குது..அந்த தெருவே ஒரு நிமிடம் உறைந்தது போனது அதிர்ச்சியில்! என் அம்மா கோவத்துல என்ன அடிச்சுட்டு அழுதுண்டே போனாங்க..என்னால நடந்தத நம்பமுடியல.நானும் அழுகொண்டேதான்  இருந்தேன் .ஆனா அழுது என்ன ஆகபோகுது போன உயிர் போனதுதான் ! அதுவும் என்னால போச்சு..

அம்மா சொன்னத கேட்டு இருந்தா..நான் அந்த நாய புடிக்காம இருந்து இருந்தா அது அன்னிக்கி அப்படி ஒரு பரிதாபமான கொடுமையான முடிவ சந்திச்சுருக்காது.
இப்பொழுதும் எந்த நாய்க்குட்டிய பார்த்தாலும் அந்த நாய்க்குட்டி ஞாபகம் தான் வருது..எனக்குள் அந்த குற்றஉணர்வு அழியவே இல்லை..


இந்த பதிவு அந்த குட்டிநாய்க்கு சமர்ப்பணம்..நீ என்னை மன்னிப்பாயா ?       10 Jul 2010

தூரமாய் போய்விட்ட தூர்தர்ஷன்

நான் அப்பொழுது UKG படிச்சுகிட்டிருந்தேன்! பம்மல்ல பல்லவா நற்செரி ஸ்கூல் ல ( ரொம்ப முக்கியம்!?), அப்போ ஏது இந்த சுட்டி டிவி , கார்டூன் நெட்வொர்க் எல்லாம்..அப்போ கேபிள் டிவியே கிடையாது..எனக்கு அப்போ வர ஒளியும் ஒலியும் , டி டி யின் நான் ஸ்டாப் நான்சென்ஸ் ( அப்போவே என் வலை பதிவிற்கு பொருந்துகிற மாதிரி பெயர் வச்சுருக்காங்க !), ஜெயின்ட் ரோபோ, ராமாயணம் மற்றும் மகாபாரதம் இது அத்தனையும் பாக்கனும்னு அப்படி ஒரு ஆசை..

ஆசை எல்லாருக்கும் தான் இருக்கும்..இப்போ நம்ம ஊரு அரசியல்வாதிகள் பொறுப்பா இருக்கணும், நாடு அமைதியா இருக்கணும், ஜாதிகள் சண்டை ஒழிஞ்சு மக்கள் ஒத்துமையா இருக்கணும் இப்படி நிறைவேறாத ஆசைகள் சிலருக்கும்..சாக்லேட் வீடு , சாக்லேட் நீச்சல் குளம் வேணும்ன்னு (நம்ம சின்ன அம்மணி அழகா அசைபடர மாதிரி ) , teleportation power வேணும்ன்னு என்ன போல சின்ன சின்ன அசை சிலருக்கும்!! இருக்கறது சகஜம் தானே..அந்த சின்ன வயசுல எனகென்ன பெரிய அசை இருந்திட போகுது ? என் அபிமான நிகழ்ச்சிகளை டிவி ல பாக்கணும் , தினமும் 5star சாக்லேட் வேணும்னு தான்  ஆசைபடுவேன் ( அப்போ கூட படிப்புமேல ஆசையே இல்ல !! ஹா ஹா விளையும் பயிர் முளையிலே தெரயும்னு சரியதனே சொல்றாங்க )..
இதுல இந்த சாக்லேட் அசைகூட  அப்போ அப்போ நிறைவேறிடும் ஆனா இந்த டிவி ஆசை இருக்கே..தெய்வமே நன் என் அம்மா வ கெஞ்சின மாதிரி அந்த கடவுள கெஞ்சிருந்தா  கேட்ட வரமெல்லாம் கிடைச்சுருக்கும் !..

மொதல்ல போய் வீட்டுபாடத்தை முடி ( என்ன பெருசா 1 2 3 .A B C D  தான்) rhymesa படி ன்னு குறைஞ்சது 2 மணிநேரமாவது பெண்டகயட்டி அப்றமாத்தான் டிவியை  கண்ணுலயே காட்டுவாங்க..அப்படி நான் பார்த்த என் அபிமான நிகழ்ச்சிகள நேத்து www.youtube.com ல பாத்தேன் ஏதோ ஒரு புண்யவான் சிலத போட்டு இருக்கறார்..இதோ சில..    


Signature tuneGiant Robot:DiDi's Nonstop Nonsense


Mile sur mera thumara..Song


He-man


Courtesy http://ddnational.blogspot.com.

8 Jul 2010

முக்கிய அறிவிப்பு !

கீழ்கண்ட அறிவிப்பினை திருமதி ஷோபனா ரவியோ அல்லது திருமதி பாத்திமாபாபு அவர்களோ படிப்பதுபோல் கற்பனை செய்துக்கொள்ளவும் !

வணக்கம்! ஒரு முக்கிய அறிவிப்பு ''இது நாள் வரை விடுமுறை கிடைக்காது என்று காயத்ரியை கடுப்படித்துக்கொண்டிருந்த  தலைவர் திரு.மணிகண்டன் அவர்கள் இப்பொழுது மனதுமாறி லீவ் கோரி டிக்கெடும் புக் செய்து விட்டக்காரனத்தினால் அவர்கள் தலைவி சுவர்ணவுடன்  , இந்த மாதக்கடைசியில் சென்னை வருகிறார்கள்..இதனையொட்டி சென்னையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது ( சென்னைய காப்பாற்ற வேண்டாமா ?? ). சென்னையில் பெருந்தலைவர்களை
  ( பெற்றோர்களை ) சந்தித்துவிட்டு மற்ற  ஊர்சுற்றுவது, நண்பர்களை சென்று சந்தித்து அவர்களை கடுப்படிப்பது, சினிமா பார்ப்பது , படித்த பள்ளி கல்லூரி போன்றவற்றிக்கு சென்று ஆசிரயபெருமக்களை சந்தித்து ஆசி பெறுவது போன்ற மேலான பணிகளை  முடித்க்கொண்டு ஒருமாத முடிவில் தலைவி சுவர்ணவிர்க்கு பள்ளி திறக்கின்ற காரணத்தினால் மீண்டும் ஷார்ஜா  திரும்புவார்கள் என்று எதிர்பர்க்கப்படுகிறது ''
'' பதிவுலக நண்பர்களே ! ( பலத்த க(கா)ரகோஷம்! ) சென்னையில் என்னவெல்லாம் புதுசா வந்துருக்கு ? எங்க லம் போய் பாக்கலாம் ? உங்கள் கருத்துக்களை கமெண்ட்ஸ் பொட்டில போடுங்க !" என்று காயத்ரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.'' இத்துடன் இந்த முக்கிய அறிவிப்பு நிறைவடைந்தது..( ஆளைவிட்ட போறும்ட சாமி என்று செய்திவாசிப்பாளர் ஓடுவது உங்கள் கண்களுக்கு தெரிகிறதா?)

6 Jul 2010

தேடுதல் வேட்டை

வலைபதிவின் பெயரைப்பர்த்துவிட்டு எதோ சன் டிவி பிளாஷ் நியூஸ் என்று பதறி அடித்துக்கொண்டு  வந்தவர்களுக்கும், என் பதிவை ஆர்வமா படிக்கவந்த தியாகிகளுக்கும்,இது ஒரு ரோதனைபா இந்த பொண்ணோட ,எதோ ஒன்னு எழுதி என் டைம் வேஸ்ட் பண்றா என்று அலுத்துக்கொள்ளும் சீன் பார்ட்டிகளுக்கும்,  என் வணக்கம். 


Google கூகுள், இதை பற்றி தெரியாதவர்களே இல்லை என்னரே சொல்லலாம் , எந்த ஒரு விஷயத்தைப்பற்றிய தகவலை அறிந்துகொள்ள வேண்டும் என்றாலும் இப்பொழுது www.google.com  சென்று தேடுவது என்பது மிகவும் சாதாரணமான  ஒன்றாகிவிட்டது. கூகுளில் சில சுவாரசியமான வசதிகள் உள்ளதைப்பற்றி  சிலருக்கு தெரியாமல் இருக்கலாம், அவர்களுக்காக இதோ..

1 வானிலை நிலவரம்  (Weather):
                         வானிலை பற்றி தெரிந்து கொள்ள கூகுளில்'' weather '' என்று டைப் செய்து ''space"  இடைவெளி விட்டு ''cityname '' டைப் செய்து சர்ச் பட்டனை அழுத்தினால், நீங்கள் விரும்பும் நகரத்தின் தற்போதைய வானிலை நிலவரம் உங்களுக்கு தெரியும் .

 
   

2  கடிகாரம் (World time):
    உலகில் இப்பொழுது எங்கு என்ன நேரம் என்பதினை  தெரிந்து கொள்ள டைம் space நகரத்தின் பெயர் (time city name ) என்று டைப் செய்து சர்ச் பட்டனை அழுத்தினால், நீங்கள் குறிப்பிட்ட நகரத்தின் நேரத்தை தெரிந்துகொள்ளலாம் !. 3 விளையாட்டு  ஸ்கோர்  (Game Score):
 தற்பொழுது நடந்து கொண்டிருக்கும்  ஏதேனும் விளையாட்டை பற்றிய ஸ்கோர் நிலவரத்தினை தெரிந்து கொள்ள விளையாட்டின் பெயர் அல்லது அணியின் பெயரை டைப் செய்து சர்ச் பட்டனை அழுத்த, நீங்கள் விரும்பும் அணியின் தற்போதைய ஸ்கோர் உங்களுக்கு வரும்.இதோ தற்போது நடைபெறும் பிபா கால்பந்தாட்ட ஸ்கோர் !

4 கல்குலடோர்  (Calculator) :
சின்ன சின்ன கணக்குகளை கூகுள்லில் உள்ள இந்த வசதியினை கொண்டு போடமுடியும் . வேண்டிய கணக்கை டைப் செய்து சர்ச் பட்டனை தட்டுங்கள் ,கணக்கு வாத்தியாரின் குட்டிலாமல் விடை வந்து விழும் ( இதெல்லாம் அபோவே இருந்த நன் நாராய மார்க் வாங்கிருப்பேன் !!. ஹாய் கதையாம்ன்னு நீங்க சொல்றது என் காதுல விழுது..அமைதி அமைதி !!)

என் கணக்கு புலமை பற்றி அறியாதவர்கள் http://funaroundus.blogspot.com/2010/07/1.html 
இங்கு சென்று தெரிந்து கொள்க ( ரொம்ப முக்கியம் ?#!)
 

 5 அலகு மாற்றம் (unit conversion )   :
இது சரியான தமிழாக்கமா  என்று தெரியவில்லை தெரிந்தவர்கள் உதவலாமே. நான்  பெரியார் கட்சி tolded என்று போட்டால் குட அர்த்தம் புரியும் அப்புறம் என்ன ? எப்படியும்  உங்கள்ளுக்கு புரியுது அதுபோறதா??..எங்க கஷ்ட்டம் எங்களுக்குன்னு நீங்க சொல்றது எனக்கு கேக்குது ??..கொடுமையை பொறுத்துக்கொண்டு மேலே படிக்கவும்..அட மேலனா மேல இல்ல கிழ ஹி ஹி ஹி ..
எத்தனை கிலோ ஒரு டன் ,எத்தனை MB ஒரு TB இப்படி சின்ன சின்ன மாற்றங்களை கூகுள் முலம் தெரிந்துக்கொள்ளலாம் .

          
6 அகராதி ( Dictionary ) :
    நீங்கள் தெரிந்துக்கொள்ள நினைக்கும் வார்த்தைக்கு முன்னால் "Define'' என்று டைப் செய்து நீங்க விரும்பும் வார்த்தையை டைப் செய்து சர்ச் பட்டனை அழுத்துங்கள், நீங்கள் கேட்ட வார்த்தையின் அர்த்தம் உங்களுக்கு வரும்.நீங்கள் பிரபாலமானர்வர்களை பற்றி தெரிந்துக்கொள்ள நினைத்தாலும் பெயரையும் டைப் செயலாம்..( என் பெயரை போட்டு தேடவேண்டாம் என்று தாழ்மையுடன் (?!) கேட்டுகொள்கிறேன்.7 .உங்கள் நகரத்தில் உள்ள ஒரு இடத்தினை தேட  ( Local Search ):
    ஏதேனும் ஒரு அலுவலகமோ அல்லது கோவிலோ அல்லது கடையோ எங்கிருக்கிறது என்று தெரிந்துகொள்ள , கூகுளில் நீங்க தேட விரும்பும் இடத்தின் பெயர் சிறிது இடைவெளி விட்டு நீங்கள் தேடும் நகரம் டைப் செய்து ( dominos pizza chennai ) என்று நன் தேடிய ( ஏதான கமெண்ட் அடிச்சா அடி  !!) பொழுது எனக்கு வந்த ரிசல்ட் இதோ.. 
8 . (நாணய) மாற்று விகிதம்:( Currency Conversion )
நீங்கள் தற்போதய  (நாணய) மாற்று விகிதம்பற்றி தெரிந்து கொள்ள
1 INR to JPY என்றோ அல்லலது 1 indian rupee to japanese yen என்றோ டைப் செய்தால்,அபோழுதய நாணய மாற்று விகிதம் உங்கள்ளுக்கு தெரியும்.

9 சூரியோதயம் மற்றும் சூர்யாஸ்தமனம் : Sunrise and sunset 
நீங்கள் விரும்பும் இடத்தில எபொழுது சூரியம் உதிக்கு எபொழுது மறையும் என்பாயகுட கூகுள் உங்கள்ளுக்கு சொல்லிவிடும் , நீங்கள் செய்யவேண்டியது எல்லாம் , sunrise or sunset என்று டைப் செய்து place ( இடம்) என்பதையும் குறிப்பிட்டு 
சர்ச் பட்டனை அழுத்தவேண்டியதுதான்..

இன்னும் ஏதேனும் தெரிந்தால் பகிர்ந்து கொள்ளுங்களேன் !  

1 Jul 2010

நான் தனி ஆள் இல்ல!!

நான் தான் கணக்குல புலின்னு நெனச்சுட்டு இருந்தேன் இதோ என்ன விடவும் புத்திசாலிங்க இருகாங்க பாருங்க...


என் சா(சோ)தனைகள்(??????)- பாகம் 1

நான் அப்போ 10த் படிசுட்டு இருன்தேன் ( படிச்சியான்னு கேக்கப்டாது அபீஷ்டு)
அரை ஆண்டு தேர்வு முடிஞ்சு எல்லாருக்கும் கணக்கு மார்க் குடுத்துட்டு இருந்தங்க,

கண்க்கு டிச்சர் : "எல்லார் கைலயும் இப்போ உங்க பேப்பர் குடுக்க போரேன் , வாங்கி சரிப் பார்த்துட்டு என் கிட்ட திருப்பி குடுக்கனும் சரியா'ன்னு சொல்லிட்டு ஒரு ஒருத்தரயா கூப்டு பேப்பர குடுக்க ஆராம்பிச்சாங்க ( இதை தான் நம் முன்நோர்க்ள் சனி புடிக்கர்துன்னு சொல்ராங்களோ ??)..என் தோழிக்கு கண்லாம் கலங்கி போய் இருந்தது "என் டீ அழர எவ்ளோ மார்க் ? நு கேட்டேன் ." அவ " போடி 80 தன் நன் 90 மேல எதிர்பாத்தேன்''ன்னு சொல்லின்டே அழுகய தொடர ஆரம்பிச்சா..(இது லாம் ஒவெரா இல்ல?)  எங்க வகுப்பே ஒரு அல்லேல் கல்லேல்ப்ப்ட்டிடுன்டு இருந்தது.எல்லாரும் அவன் அவன் பேப்பர விட்டு அடுத்தவன் பேப்பர அராய்ச்சிப் பன்னிட்டு இருந்தாங்க.
அப்போதான் ''காய்த்ரி ..''ன்னு கேட்டுது .எல்லார் பேப்பரையும் குடுத்துடு கடசியா என்னை குப்பட்ரதுனால ஒரு ஸஸ்பென்ஸோட வகுப்பே என்னை ஆர்வமா பத்து கொண்டிருக்கும் போது ..கொஞ்சம் தயக்கம் கொஞ்சம் பயம்னு இருந்த உனர்வு எதயும் வெளியில் காட்டிக்கொளாம ,நானாவது பயமாவதுன்னு?ன்ற  ஒரு முக பாவத்தோட போய் என் பேப்ர வாங்கினேன் .உட்டா பொரும்டா சாமின்னு என் பென்ச்சுக்கு ஓடி வந்து பேப்பர தொரந்தா............. 1/2 / 100 ???????????????
ஒரு ந்மிஷம் உயிர் மேலே போய் வந்துது. என்னடா இது . நான் ஒரு 15 பக்கத்துக்கு குறயாம எழுதிருக்கேன் என்ன இது 1/2 இதுலாம் அக்ரமம்ன்னு ஒரே ஆத்ரம். அப்போ கணக்கு டீச்சர் என்னயே பாத்துட்டு இருக்கர்து என் கண்னுக்கு ( அறிவுக்கண்னுக்கு  )
தெரிஞ்சுது..இந்தமாதிரியான சமயங்களில் நடிச்சே ஆகனும் இல்லனா மானம் போய்டும் ( என்ன இருக்கு போக??)
டீச்சர் அப்டியே நம்ம சிங்கம் சூர்யா மாதிரி ஆத்திரமா " காயத்ரி..நீ என்ன தான் பன்ரேன்னு பக்க நானும் பொருமயா இருக்கலாம்னு நென்ச்சா ..நீ யெதோ 100 மார்க்க 1 மார்க் ல கோட்ட விட்டவமாரி அப்டியென்ன தேட்ர பேப்பர்ல??''னு கேட்டாங்க.
அவங்க அப்படி கேட்டதும் வகுப்பே சிரிப்புச்சத்தத்துல ஆடிபோச்சு!! ( எனக்கு இத்தனை ரசிகர்களா நு பெருமைல திளைத்துப்போன ( நெனப்புத்தான் ) என் முகத்தோட கம்ப்கிராமா??? எழுந்து நின்னு ''அதுவா டீச்சர் ..நானும் தேடி தேடி ப்பாத்தேன் இந்த அறை மார்க் எங்கேந்து வந்துதுன்னு பாத்துனு இருக்கேன் அவ்லோதான் !!''னு சொன்னேன் .. அப்போ பருங்க என்ன ஒரு கரகோஷம் !( என் மனசுக்குள்ள தான்..பின்ன நெஜமாவா..அதான் வகுப்பே அதிர்ச்சீல ஒரஞ்சு போய்ருக்குல )..இப்படி ஒரு பதிலை எதிர்பாக்காத டீச்சர் எப்படி இதுக்கு பதில் சொல்ரதுன்னு தெரியாம அப்படியே ..ஆடிப்போய் நாற்காலில ஒக்காந்துன்டாங்க..நானும் கண்ல இருந்த ஆன்ந்த ????????கண்ணீர யாருக்கும் தெரியாம துடைத்து கொன்டு உட்கார்ந்தேன்.
(அப்போ ஏர்பட்ட அவமானத்தை மறக்க படிச்சு 12த் ல நானும் ''school topper"கள் ல ஒருத்தரா வந்து பெருமையோட பள்ளிப்படிப்ப முடிசுட்டு வந்தேன்ரது தனி கதை !!)
Special note to my maths teacher ( if you are reading) : Sorry !!