ஒரு நாள் தப்பி தவறி சிரிச்சுட்ட பொறுமே..யாருக்கோ போருக்க மாட்டேன்குது அடுத்தநாளே ரவுண்டு கட்டி டென்ஷன் ஆகிடுவாங்க...யாரு ?? எல்லாம் கிரகம் தான் வேற யாரு...( நவ கிரஹத்த சொனேன் )
என்னிக்கும் இல்லாம மாமனார் கிட்ட கதை கேட்டு ஒரு பதிவு போட்டா...
அடுத்த நாளே அவருக்கு குளுர் ஜுரம்...பாகத்து ஆஸ்பத்திரில சேர்த்து ஒரே
டென்ஷன்...அங்கேயான ஏதேனும் ஒழுங்க நடக்குதா?? பாவம் ட்ரிப் எத்தறேன்ன்னு அவர் கையில ஒரு நாலு அஞ்சு வாட்டி குத்திநாங்க ...பாவம் அதுக்கே அவர் துடிச்சு போயிட்டார்..போறதுன்னு ரத்த பரிசோதனை ன்னு
சொல்லி அதுவேற தனியா முனு நாலு குத்து...எல்லாம் கத்துக்குட்டி நர்ஸ்கள் புண்யம் கட்டி கொண்டதுதான்...இப்படி வயதானவர்களை பார்த்துக்கொள்ள வாவது அனுபவம் உள்ள நர்ஸ் களை வைக்கலாமே.. உசி குத்தி ரத்தம் ஒரு இடத்துல வருது அத கவனிக்காம அடுத்த இடத்துல குத்த முற்படரங்க...( வர கோவத்துக்கு ) வந்த கோவத்தை கட்டுபடுத்திகொண்டு " மொதல்ல அங்க ஒரு பேண்ட்எய்ட் போடுங்கம்மான்னு பொறுமையா சொல்ல வேண்டிருக்கு...
படிபடிய பாவம் அவர் இனிக்கி ஒரு வழிய வீட்டுக்கு வர வரை அங்கே ஒரே டென்ஷன்..
*******************************************************************************
சரி ஆச்பத்ரில தான் இப்படின்ன விட்டுலயுமா...இந்த பள்ளி பல்லி இரண்டுமே எனக்கு அலர்ஜி , பள்ளில என்னடான்னா வராத கணக்க வா வா நா எப்படி வரும்??? அல்ஜிப்ரா , டிரிக்னாமென்ற்றி ன்னு என்னனமோ சொல்லி பயமுடுத்தியே கணக்கு மார்குல மண்ணள்ளிப் போட்டாங்க..பேப்பர் வந்தாலே டென்ஷன்..அதே போல் தான் இந்த பல்லி...பாவம் பாட்டுக்கு எங்கேயோ போகுது..ஆனா அத பாத்தா எனக்கு அண்டமும் கலங்குது !!! வசக்கதவ தொரக்கலாமுன்னு பாத்தா கதவு மேல பல்லி...அய்யா சாமி நகருன்னு பயந்து பயந்து அத கெஞ்சி குத்தடி வாசல்ல கால் மணிநேரம் தவம்கிடந்த அப்புறமா சார்வாள் நகர்ந்தார்...அப்பாடான்னு தயங்கி தயங்கி ஆஸ்பத்திரில இருக்குற மாமியாருக்கும் மாமனாருக்கும் காபி போட , சமையல் ரூமுக்கு போனா.....................பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய பல்லி..அய்யோன்னு அலறி அடிசுண்டு ,
ஓடி ஹாலுக்கு வந்தா கடவுளே ஜன்னல்ல ஒரு பல்லி...சரின்னு பால் எடுக்க அடுத்த ரூமுக்கு போனா ....பிரிட்ஜ் பக்கதுல இருக்குற பூஜை அலமாரிக்கு தாவுது ஒரு கிழப் பல்லி.....தேவுடா உன் படத்துக்கு பின்னாலயும்மா...( ஏன் ??? நான்தான் கேடச்சேனா??? என்ன சுத்தி என் எப்பவும் ஒரு பல்லிக் கூட்டம் ???? கார்பன் பூச்சினாலும் பரவ இல்லை துக்கி போற்றுவேன் இந்த பள்ளிய என்ன செய்ய..பாத்தாலே நூறு டிகிரி ஜுரம் வந்து படுதுடுவேன்..) இன்னிக்கி என்னடான்னாகாலைல வீட்ட பெருக்கின வேலைசெய்யும் அம்மா
" செல்லோ..இங்க பாரு"ன்னு அசைய கூப்புட நானும் என்னனு பாத்தா ஒரு குட்டி பல்லி செத்து கிடக்கு... ஐயோ !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
********************************************************************************
இதை தவிர அன்றாட டென்ஷன் இருக்கே...காலைல எட்டு மணிக்கு மேல தண்ணி வராதாம்..தண்ணி கஷ்டமுன்னு டைம் வச்சு தண்ணி உட்ரங்க...
சரின்னு ஒருவழியா எல்லா வேலையும் முடிச்சு காய் வாங்க கடைக்கு போனா நல்ல காயெல்லாம் காலியாகி வத்தலும் சொத்தலுமாதான் காய் கெடைக்குது ( இதுனால மருமகளுக்கு காய் வாங்க தெரியலன்னு ஏன் பேரு டோட்டல் டாமேஜ் ! ) ஒரு வழியா வந்து சமைச்சு குழந்தைய சாப்ட வைகர்துக்குள்ள.....அப்பாடான்னு குட்டி துக்கம் போடவந்தா கரண்ட் போய்டுத்து...ஐயோ...அப்படியே சாயங்காலம் ஆகி வெளில சும்மா போனா ரோடு ல மாடு ஆடு நாய் பூனை ன்னு ஒரு பக்கமும்..அட்டோ அட்டுன்னு ஆட்டி கொண்டு போகும் ஆட்டோவும்..... ஒருபக்கமாய் சாய்ந்துகொண்டு எப்போ படுத்துடுமொன்னு பாயமுடுதும் மாநகர பேரூந்தும்...தள்ளடிகொண்டு நடந்து செல்லும் முதியோர்களும்...இருட்டில் யார் பார்க்க போகிறார் என்று கற்பனையில் அங்கங்கே தெருமுனையில் ஜோடி ஜோடியாய் நிற்கும் இளவட்டங்களும்..வேலையில் இருந்து வீடு திரும்பும் டென்ஷனில் முண்டி அடித்து கொண்டு பறக்கும் பைக்களும் கார்களும் மறு பக்கமும் ....இருக்கும் குட்டி சாலையை ஆக்கிரமித்து கொள்ள நான் எங்க நடக்கறது ??? இதுலயுமா டென்ஷன் ??? ஒருவழியா வீடு வந்து சேந்து சமயல முடிச்சு சாப்டு துங்கபோனா.....
இந்த கொசு இருக்கே...( இதுக்கு ஒரு தனி பதிவு போடபோறேன் )..தூங்க விடுமா?? அப்படியே கனவாவது நிம்மதியா வருதா??? அதுலயும் கணக்கு பரிட்ஷய்க்கு இங்கிலீஷ் படிச்சுட்டு போயி முழிக்கறது ( நடக்கறது தானே ! ) ,
மாடி மேல ஏறி கிழ எறங்க தெரியாம முழிகறது , யாரோ துரதறது , பல்லி பள்ளிய ரூம்புரா இருக்கறது , ன்னு டென்ஷன் ஏத்தி விட்டு துக்கத்த கேடுகர கனவாவே வருது..
*******************************************************************************
போரும்டா சாமி இப்படி போட்டு வருதேடுகறியே !!! ஏன் ஏன் நான் மட்டும் ஏன்..எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது ???? யாரான சொல்லுங்க !
*********************************************************************************
