Recent Posts

14 Jul 2010

பெண்களே உணருங்கள்!!

நான் எழுதும் இந்த பதிவு சில பெண்களுக்கு என் மேல் வெறுப்பு வர செய்யலாம்...ஏன் ஆண்களும் கூட கோவப்படலாம்..ஆனால் என்னக்கு அவர்களை பற்றி சிறிதும் கவலை இல்லை!.இவை என் மனதில் எழுந்த என்னச்சிதறலின் வெளிப்பாடு..என் பதிவுலக நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று இங்கே எழுதுகிறேன்!
குழந்தையை பெற்ற , குழந்தைக்காக ஏங்கி தவித்துக்கொண்டு இருக்கும் சிலருக்கு என் ஆதங்கம் புரிந்தால் போதும்..

பெற்ற குழந்தையை விடவும் ஒரு தாய்க்கு இந்த உலகில் பெரிய சொந்தம் ஒன்றுமே இல்லை!    

பசியோ பயமோ வலியோ எதையுமே சொல்லதெரியாமல் அழுகையால் மட்டுமே
தன்னை வெளிபடுத்தும் அப்பாவிகள் , நாம் கோவித்துக்கொண்டால் கூட அதை
மறந்து சிறிதுநேரத்தில் சிநேகம் பாராட்டும் பெருந்தன்மை உடைய நல்லவர்கள்,
யாருக்கும் மனத்தால் கூட கேடு நினைக்க தெரியாத உத்தமர்கள்..ஒரு துளி
புன்னகையால் நம் அளவில்லா துயரைக் கூட நொடி பொழுதில் மறக்க செய்யும் கடவுள்..குழந்தைகள்!!

இந்த பதிவு குழந்தைகளுக்காக ஒரு தாயின் குரல்..

நம் நாட்டில் எப்படியோ எனக்கு தெரியாது ஆனா இங்கே நான் கேள்வி பட்ட, படுகின்ற
சில விஷயங்களை என்னால் ஜிரணிக்கவே முடியவில்லை..

பணத்திற்காக கைக்குழந்தையை கூட பணிப்பெண்ணிடம் விட்டு விட்டு செல்லும் பெண்கள் இப்பொழுது அதிகரித்து கொண்டே போகிறார்கள். பிறந்து சில நாட்களே
ஆனா , பச்சிளம் குழந்தையை எப்படித்தான் விட்டு போக மனது வருமோ தெரியவில்லை..பணக்கஷ்டம் உள்ள குடும்பமானாலும் சரி..கணவன் நன்றாக சம்பாதிக்கும் பொழுது..சொந்தக்காலில் நிற்க வேண்டும் ..எதற்கும் கணவனை எதிர்பார்க்க கூடாது..தான் செய்யும் செலவினை கணவன் தட்டி கேட்க கூடாது
என்ற மன நிலை தற்பொழுது சில பெண்களிடம் அதிகரித்துக் கொண்டு வருகிறது.
அப்படி எதாவது தவிர்க்க முடியாத காரத்தினால் வேலைக்கு போயாகவேண்டிய கட்டாயம் என்றால் குழந்தையை பார்த்துக்கொள்ள பெற்றோகளை கேட்டு கொள்ளலாம் அல்லது சிறிது காலம் தான் தேவையை வாய் விட்டு சொல்லும் வயது வரை ஆவது குழந்தையை தாயே பார்த்து கொள்ளலாம்..

இந்த விஷயத்த எதுக்கு இப்போ பெருசா சொல்ல ஒரு பதிவுன்னு கேட்கலாம்..
இங்கே நடக்கும் சில சம்பவங்களை பற்றி கேள்விப்பட்டதிலிருந்து என்னால் துங்கவே
முடியவில்லை.

சம்பள பாக்கிக்கு குழந்தையா??       
மாத சம்பளம் சரியாக வழங்க படாத காரணத்தினால் தாய்க்கு தெரியாமல் பச்சிளம் குழந்தையை விற்றிருகிறாள் பணிப்பெண் ! அவள் அக்குழந்தையை விற்றது இந்திய மதிப்பில் 20000 ...  அவ்வளவுதான ஒரு உயிரின் மதிப்பு??

எஜமானி திட்டியதால் வீச முயன்றளாம் ! :
வீட்டு வேலையை ஒழுங்காக செய்ய வில்லை என்று கண்டித்ததர்காகவும் சம்பள பாக்கிக்க்காகவும் கோவத்தில் எஜமானர்களை பழிவாங்க வேண்டும் என்பதற்காக..ஐந்தே மாதமான பச்சிளம் குழந்தையை பால்கனியிலிருந்து வீச பணிப்பெண் முயற்சித்த பொழுது..அந்த குழந்தையின் நல்ல நேரம் கிழே ரோந்து பணியில் இருந்த போலீஸ் காரர் அந்த கொடூரமான செயலை தடுதுளர்..அப்பெண் இபொழு சிறையில்...

அழுதால் தூக்க மாத்திரை! :
குழந்தை என்றல் அழத்தான் செய்யும் அதை பொறுத்துக்கொள்ள முடியாத உத்தமமான பணிப்பெண் பாலில் தூக்க மாத்திரையை போட்டு கொடுத்துக்கொண்டு வந்துருக்கிறாள்..எதேச்சையாக அலுவலகத்தில் இருந்து வந்த தாய் இதனை பார்க்க
நேரிட்டு ஏன் என்று கண்டித்ததற்கு அவள் சொன்ன பதில் .."அழுதுண்டே இருக்கிறாள் என்னால் வேலையே செய்ய முடியவில்லை அதான்..பாதி மாத்திரைதான் கொடுத்தேன் கவலை படதே"  என்று !!!இப்பொழுது அந்த நல்லவளும் சிறையில்..

இவை நான் கடந்த சில வாரங்களில் படித்த சிலவே..பத்திரிகையில் வந்தவை
இவை, வெளிவராமல் போகின்றவை எத்தனையோ..பெண்கள் வேலைக்கு போகவே கூடாது என்று நான் சொல்லவே இல்லை.. தன்னை ஒருவர் துன்புறுத்துகிறார் என்பதை தன்னால் தாயிடமோ தந்தையிடமோ சொல்லும் வயது வரும் வரையாவது குழந்தையை தாயே பார்த்துகொள்ளலாமே.

குழந்தையே இல்லை என்று பலர் மனம் உடைந்து போகின்றனர்..அரசமரத்திலிருந்து..புல் பூண்டு வரை எதைவேண்டுமானாலும் சுட்டற பலர் தயாராக உள்ளனர்..எத்தனை லட்சம் வேண்டுமானாலும் செலவு செய்யவும் தயாராக எத்தனை தம்பதியினர் இருகிறார்கள் ! கடவுளாய் நமக்கு கொடுக்கும் ஒரு வரம் குழந்தைகள்..அவர்களை ராஜாவைப்போல் வளர்க்காவிட்டாலும் பரவா இல்லை, இப்படி படுகுழியில் தள்ளாதீர்கள்..கோடி கோடியாய் பணம் கூட வரும்... உயிர் ????54 கருத்துக்கள்:

அருண் பிரசாத் said...

அய்! மீ த பர்ஸ்ட்.

படிச்சிட்டு வந்துடறேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

naan 2nd

பொன் மாலை பொழுது said...

Submit you story in tamilish.com.

அருண் பிரசாத் said...
This comment has been removed by the author.
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அருமையான கருத்து சகோதரி. எனக்கு தெரிஞ்ச இடத்துல ஒரு வேலைக்காரி குழந்தைக்கு சிறுநீர கொடுத்து இருக்காள். அவளும் இப்ப சிறையில்...சிங்கபூர்ல தமிழ் பெண்களை விட, Indonatioa, Philiphines, China பொண்ணுங்க குழந்தைகள நல்லா பாத்துகிறாங்க.

அருண் பிரசாத் said...

அருமை சகோதரி! உங்கள் உணர்வின் வெளிப்பாட்டிற்கு பாராட்டுக்கள். thamlish ல submit பண்ணுங்க vote போடனும்.

எழுத்துப்பிழை ஒரேடியா குறைஞ்சிடுச்சி, உங்க தனித்துவம் போய்ட்ட மாதிரி ஒரு உணர்வு

Gayathri said...

@ அருண் பிரசாத் : நன்றி..சப்மிட் பன்னிட்டேன்.தனித்துவம் போனது நல்லதா கெட்டதா? தப்பு பன்னிட்டேனோ? he he

Gayathri said...

@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)- நன்றி..உலகமே இப்படித்தான் பொகுதா..உருப்படாது..நீங்கள் சொன்ன தகவல் எனக்கு மிகுந்த அதிர்சியயும் வருத்தத்தையும் தந்தது..பகிர்தலுக்கு நன்றி.

Gayathri said...

@ கக்கு - மாணிக்கம் - செய்துவிட்டேன். நன்றி.அடிகடி நம்ம வலய்பதிவு பக்கம் வாங்க.

சௌந்தர் said...

தூக்க மாத்திரை! என்ன கொடுமை.....

Gayathri said...

@ சௌந்தர் - ஆமா ரொம்பவே கொடுமை..நன்றி..

Anonymous said...

பதிவு படிச்சு நான் ரொம்ப ஷாக் ஆயிட்டே காயத்ரி இப்பிடி ஒரு கொடுமையா ?? தாங்க முடியலை ..அழுகையா வருது ...
கொழந்தகளே ஆயா கிட்டே விட்டிட்டு வேலை போற தாய்கள் இதே படிச்சாவது திருந்த வேண்டும்

Gayathri said...

@ சந்தியா மாமி - நன்றி..எனக்கும் செய்திலாம் படிசுட்டு மனசே கெக்கல அதான்.

Anonymous said...

appada Raja maathiri paathukka sonnathukku nandri. Naan than antha Raja. Nice Article. Keep up the good work. Sorry yenakku tamil la type panna theiryaathu.

Gayathri said...

@ ராஜா ஷா : நன்றி..அப்பப்போ வந்து,படிச்சு உங்க கருத்துக்களையும் எழுதுங்க..

எல் கே said...

@காயத்ரி

இந்தியாவில் இது இன்னும் அதிகம்.

. தங்கள் உரிமைக்காக எதையும் இழக்கத் தயாராக இருக்கின்றனர் சிலர். தாய்மை அது இது என்று சொல்லி அவர்களை தடுக்காதீர்கள். அவ்வாறு செய்தால் நீங்கள் ஆணாதிக்கவாதி ஆவீர்கள். ஏன் அந்த குழந்தையின் தந்தை வீட்டில் இருந்து கவனித்துக் கொள்ளலாமே?? ஏன் பெண்களே வீட்டில் இருக்க வேண்டும்

இது போன்ற பதில்கள் வரும். ஏன் என்றால் இங்க பதிவுலகத்திலேயே அப்படிப்பட்டவர்கள் இருக்கிறார்கள்

Gayathri said...

@ எல்கே : வரலாம் ஆனால் அதை எல்லாம் ஒத்துக்கொள்ள முடியுமா? தாய்மை பெண் களுக்கேன்றே கடவுள் குடுத்த வரம். ஆன்கள் தான் குழந்தையய் பார்த்துக்கொள்ளவேண்டும் என்றால் தாய்மையய் இயற்கய் ஆன்களுக்கே கொடுத்திருக்கலாமே..குழந்தை பிரப்பதில் உள்ளதுப் போல் வளர்ப்பிலும் இருவருக்கும் பங்கு உண்டு ஆனால் எப்பொழுதும் எவர் வந்தாலும் தாயய் எவராலும் ஈடுசெய்யவே முடியாது..தாய் இல்லமல் அவதிபடுவதின் கொடுமை அப்படி அவதிப்படும் குழந்தையின் மனது ஒன்றே அறியும்..அப்பா என்னதான் விழுந்து விழுந்து பார்த்துக்கொண்டாலும் குழந்தை அம்மா என்றுதானே அழும்?

உங்கள் கருத்திர்க்கு மிக்க நன்றி சகோதிரரே..

kousalya raj said...

குழந்தையை பெற்ற தாய்க்குத்தான் கவனம் அதிகமாக இருக்க வேண்டும். குழந்தையின் எதிர்காலம் நல்லா இருக்கணும் என்றுதான் வேலைக்கு போகிறோம் என்று காரணம் சொல்வார்கள். ஆனால் அக்குழந்தையின் நிகழ்காலமே நாசமா போயிட்டு இருக்கும் போது எதிர்காலம் என்று ஒன்று எங்கே இருக்கிறது....??

Unknown said...

சபாஷ்

போனதடவை சொன்னது மாறியே எழுத்துப்பிழை 90சதம் குறைஞ்சிருக்கு இன்னும் நிறைய பெரிய பெரிய சவுக்கடி போஸ்ட் எழுதுங்க எழுத்து வளரும் சகோதரி..

Gayathri said...

@ கௌசல்யா : மிக அருமையாய் சொன்னீர்கள்..இதை அவர்கள் உனரவேண்டுமே..கினற்றுதவளைப்போல் கத்துவதுதான் மிச்சம்..ஆனாலும் நாம் தொடர்ந்து கத்திக்கொண்டே இருப்போம்..ஒரு குழந்தை இதனால் மகிழ்ந்தால் கூட போருமே

Gayathri said...

@ ப்ரியமுடன் வசந்த் : நன்றி சகோதிரரே. உங்களை போன்ற பதிவுலக நன்பர்களின் ஊக்கமும் அன்பும் தான் எனக்கு நம்பிக்கையயும் , உர்சாகத்தையும் அளிகிரது..

ராம்ஜி_யாஹூ said...

காயத்ரி உங்களின் வருத்தம், ஆதங்கம் புரிகிறது.

அந்த தாய்களும் அப்படி விரும்பி செய்வதில்லை. எல்லாருக்கும் பணம் அதிகமாக சம்பாதிக்க வேண்டும், சேமிக்க வேண்டும், வீடு கார் நகைகள் வேண்டும், குழந்தைகளின் மேல் படிப்புக்கு பணம் வேண்டும், நாம் பணம் இல்லாததால் பட்ட கஷ்டங்களை, வலிகளை நம் குழந்தைகள் பட கூடாது என்றே இந்த செயல்களை செய்கின்றனர்.

in 99% of the NRI family both have been working, thats the main issue. In US, UK without dual salary its very difficult to run family.

Radhakrishnan said...

மிகவும் வருத்தப்பட வைக்கும் விசயம். நம் குழந்தை மீது நமக்கு இல்லாத அக்கறை எவருக்கு இருக்கும்?

ஒரு வருடம் பணியில் இருந்து விடுமுறை தருவதுண்டு. தாத்தா பாட்டி என பக்கத்தில் இருந்தால் எல்லாம் சவுகரியம் தான்.

கிராமத்தில் எவரேனும் குழந்தையை தூக்கிக் கொண்டு கொஞ்சிக் கொண்டிருப்பார்கள். வெளிநாடுகளில்...???

Gayathri said...

@ ராம்ஜி_யாஹூ : நானும் ஒரு NRI தான்..எங்களிடம் காரும் இல்லை ஊரில் பங்களாவும் இல்லை ஆனால் நான் வேலைக்கு போகவும் இல்லை..என் குழந்தைகாக நான் வீட்ட்ல் தான் இருக்கிரேன்..எப்பொழுது அவளால் அவளின் உனர்வுகளை என்னிடம் சொல்லமுடியுமோ அதுவரை நான் வீட்டில் தான் இருப்பேன்,,
என்னை பயந்தான்குலி என்று கூட நீங்கள் சொல்லலாம்..என் குழதையின் பாதுகாப்பில் விளையாடுவதை விட இப்படி இருப்பதே என் மனதிர்க்கு மகிழ்ச்சி.பெண்கள் வேலைக்கு போகக்குடாது என்று நான் சொல்லவே இல்லை.குழந்தைகு புத்திதெரியும் வரை தாய் குடவே இருந்து பார்த்து கொள்ளலாமே. இல்லை பெற்றேர்களின் உதவியய் நாடலாம்.எவ்வளவு நாள் குழந்தய்கள் நம்மை எதிர்பார்க்க போகிறாற்கள்?..அனைவருக்கும் அன்பான பனிப்பெண்கள் அமைவதில்லயே..அப்படி அமையாமல் போவதின் விளைவுகள் என்னை பாதித்தது அதையே எழுதினேன்.யாரயும் புன் படுத்தும் நோக்கம் எனக்கில்லை..

உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி சகோதிரரே.

Gayathri said...

@ V.ராதாகிருஷ்னன்: மாறி கொண்டுவரும் வாழ்க்கய் முறையும் காரனம்தான்.
உங்கள் கருத்திற்க்கு மிக்க நன்றி சகோதிரரே..

துளசி கோபால் said...

காயத்ரி,

பதிவு படிச்சுட்டுக் கோவம் எதுக்கு வரணும்? குழந்தையா இல்லை காசான்னு இருந்த நிலையில் குழந்தைதான் முக்கியமுன்னு கிடைச்ச வேலையை உதறித்தள்ளியவள் நான். இத்தனைக்கும் மகளுக்கு நாலரை வயசு நாங்க நியூஸி வந்தப்ப.

பேபிசிட்டர்கள் மேல் அவ்வளவா நம்பிக்கை இல்லை எனக்கு.

ஒரு குழந்தைக்காக ஏங்கி 9 வருசம் காத்திருந்த எனக்கு எது முக்கியமா இருந்திருக்கும்?

நல்ல பதிவுதான்.

எங்க ஊரில் குழந்தைக்கு ஒரு வயதாகும் வரை லீவு (சம்பளமில்லாதது) இப்போ கிடைக்குது. தாய் அல்லது தகப்பன் யார் வேணுமுன்னாலும் எடுத்துக்கலாம். திரும்பிப்போகும்போது அதே வேலையை அவுங்களுக்குத் தரணும் என்பது சட்டம்.

துளசி கோபால் said...

ஃபார் ஃபாலோ அப்

Prasanna said...

உங்கள் கருத்து புரிகிறது,, ஆனால், இருவரும் சம்பாதித்து தான் ஆக வேண்டும் என்ற நிலை இருக்கும் குடும்பங்களுக்கு வேறு வழி இல்லை அல்லவா..

Gayathri said...

@ துளசி கோபால்: " குழந்தையா இல்லை காசான்னு இருந்த நிலையில் குழந்தைதான் முக்கியமுன்னு கிடைச்ச வேலையை உதறித்தள்ளியவள் நான்."

Hats ஒff..

ரொம்பவே மகிழ்சியா இருக்கு தோழி..அந்த சட்டம் எல்லா ஊர் களிலும் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

உங்கள் கருத்திற்க்கு நன்றி தோழி..

Gayathri said...

@ பிரசண்னா : நீங்கள் சொல்வது உன்மைதான் அப்படி இருப்பவர்கள் குழந்தையய் பார்த்துக்கொள்ளும் பெண் மீது மிக மிக கவனமாக இருத்தல் வேன்டும்..

கருத்திர்க்கு மிக்க நன்றி சகோதிரரே.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

அருமையான பதிவு தோழி..
எனது கருத்தும் இது தான்..

குழந்தைகளுக்கு தாயின் அரவணைப்பு தேவைப் படும் பருவம் குழந்தை பருவம்.. அது மட்டும் இல்லை, ஒரு குழந்தைக்கு தாயை விட, கோடி ரூபாய் குடுத்தாலும், யாராலும் அந்த அன்பை தர முடியாது..

நானும் இங்கே வேலை செய்து கொண்டு தான் இருந்தேன்... என் குழந்தைக்காக... வேலையை விட்டு விட்டேன்.. எனக்கு என் குழந்தையின் வளர்ச்சி தான் முக்கியம்..

நீங்க சொன்ன விஷயங்கள் கேட்டு, மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது..

புரிய வேண்டியவங்களுக்கு புரிஞ்சா சரி தான்..
உங்கள் எழுத்து தொடர வாழ்த்துக்கள் தோழி..

Gayathri said...

@ ஆனந்தி : "நானும் இங்கே வேலை செய்து கொண்டு தான் இருந்தேன்... என் குழந்தைக்காக... வேலையை விட்டு விட்டேன்.. எனக்கு என் குழந்தையின் வளர்ச்சி தான் முக்கியம்..
"
க்ரேட்..நீங்கள் சொல்வது சரிதான் தாயின் அன்புக்கு விலையே இல்லை

கருத்திற்கு மிக்க நன்றி தோழி.

Jackiesekar said...

நல்லா எழுதி இருக்கிங்க காயத்திரி...இப்போதைய பரபரப்பான வாழ்க்கைக்கு தேவையான பதிவுதான்...நல்ல கருத்து சொன்னமைக்கு நன்றி...

துளிசி டீச்சர் சொன்னது போல் எது முக்கியம் என்ற கேள்விக்கு பதில் பெற்றோர்தான் சொல்ல வேண்டும்...

Gayathri said...

@ ஜாக்கி சேகர் : உங்கள் கருத்ற்க்கு மிக்க நன்றி சகோதிரரே. குழந்தைகள்.நிம்மதியாய் இருக்க வேண்டும் இதுவே எனது ஆசை.

அமுதா கிருஷ்ணா said...

நானும் குழந்தைகளுக்காக வேலைக்கு போகாத, என் படிப்பினை என் குழந்தைகளுக்கு பயன்படுத்திய ஒரு அம்மா..அதிக ஆசை,இப்படி குழந்தைகளை பாடாய் படுத்துகிறார்கள்.

துளசி கோபால் said...

http://nz.news.yahoo.com/a/-/world/7584427/killer-mum-spun-kid-in-washing-machine/

காயத்ரி,

பை சான்ஸா இந்த விஷயம் கிடைச்சது. இப்படியும் ஒரு தாயா???


:(((((((((((((

பாலா said...

உண்மையான விஷியம்... ஏனோ மனிதர்களை விட பணத்திற்கு மதிப்பு கூடிவிட்டது.
//கணவன் நன்றாக சம்பாதிக்கும் பொழுது..சொந்தக்காலில் நிற்க வேண்டும் ..எதற்கும் கணவனை எதிர்பார்க்க கூடாது..தான் செய்யும் செலவினை கணவன் தட்டி கேட்க கூடாது
என்ற மன நிலை தற்பொழுது சில பெண்களிடம் அதிகரித்துக் கொண்டு வருகிறது.//
முற்றிலும் உண்மை.

பணம் பணம் என்று ஓடும்போது, யாருக்காக ஓடுகிறோமோ அது அவர்களுக்கு பின்னால் பயன்படாமல் போகிறது. இன்று நாம் கவனிக்காவிட்டாலும் நாளை நம் பணம் காப்பாற்றும் என்ற எண்ணமே இதன் விதை. பாசத்துடன் கவனிக்க ஆள் இன்றி ஒரு தலைமுறையே தறிகெடும் அபாயம் உள்ளது.

இளைஞர்களுக்கு உரக்க சொல்ல வேண்டிய செய்தி. ஆண், பெண் இருவரின் மனதிலும் ஒரு மாற்றம் வந்தால் தான் இதற்கு ஒரு விடிவு வரும்.

இதற்காக இப்போது கோபப்படுபவர்கள், ஒரு நாள் வருத்தப்படுவார்கள்.
நல்ல பதிவு.

(There is some file automatically downloading when opening the blog. please check)

☀நான் ஆதவன்☀ said...

எழுத்துபிழைகளே தேடினாலும் கிடைக்காத அளவுக்கு சிறப்பாக பயிற்சி பெற்றமைக்கு வாழ்த்துகள். பெரிய விசயம் இது.

பதிவைப் பற்றி.....

துளசி டீச்சர் கருத்து தான் எனது கருத்தும். நானும் ஷார்ஜன்றனால இந்த விசயம் பார்த்திருக்கிறேன். பல மலையாளிகள் கல்யாணம் ஆகி ஒரு மாசக்குழந்தையை ஊரில் விட்டு இங்கு பணிபுரிகிறார்கள். ஒரு பக்கம் அவர்களை பார்க்க பாவமா இருந்தாலும் ஏன் இப்படி வாழ வேண்டும் என எரிச்சலும் மேலோங்கிறது

☀நான் ஆதவன்☀ said...

உங்கள் ஆதங்கம் நியாயமாக இருந்தாலும் உங்க தளத்தின் தலைப்போடு ஒத்துப்போகமறுக்கிறது :) (Just for Laugh)

முடிஞ்சா தலைப்பை மாற்றுங்க. இல்லைன்னா டென்சன் ஆகாம பழைய மாதிரி காமெடி பதிவா போடுங்க :)

Jey said...

:(

pinkyrose said...

தோழி...!

கை குடுங்க...

வார்தைகள் இதுக்கு பரிசாகாது...

Gayathri said...

@ ☀நான் ஆதவன்☀ : எழுத்துப்பிழய்களே இல்லைன்னு கேள்விப்பட்டு நிரயவே சந்தோஷபட்டேன்.
ம்ம் கஷ்டமகத்தான் இருக்கிரது என்ன செய்வது எல்லம் நமாய் தேடிகொள்வதுதானே..

ரைட் தான்.நேற்று கொஞ்சம் உனர்ச்சிவசப்பட்டு தாங்கமுடியாம தான் இந்த பதிவை எழுதினேன்.மத்த படி நம்ம ரூட் எப்போவுமே காமேடி தான்..

Gayathri said...

@ jey : :) நன்றி சகோதிரரே..

Gayathri said...

@ பின்கீ ரோஸ் : நன்றி தோழி..நீங்களும் மற்ற நன்பர்களும் வந்து படித்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறிற்களே இதை விடவும் என்ன பரிசு வேண்டும்..வருகைக்கும் நட்புகும் நன்றி..சரி ரிசல்ட் என்ன ஆச்சு.??:)

துளசி கோபால் said...

எழுத்துப்பிழைகள்???????/

காயத்ரி, ஆதவனுக்குச் சொன்ன பதிலில் 'ஃபார்முக்கு' வந்துட்டீங்க போல:-))))

Gayathri said...

@ துளசி கோபால் : ஹய் நல்லது இத்தனை பேரும் சொல்லும் பொழுது நம்பாம இருக்க முடியல ஆனாலும் கண்டிப்பாய் என் தமிழ் புலமை அவ்வப்பொழுது தலை காட்டும் என்று நினைக்கிறன்..நன்றி

Anonymous said...

இதை ஒரு பெண்ணாக நிங்கள் சொல்லி இருப்பது தான் சிறப்பம்சம்.துபையில் பேருந்துக்காக காத்து இருக்கும் போது,ஒரு பணிப்பெண் தமிழ் குழந்தையை நடத்திய விதம் பரிதாபக்குரியது.அதுவும் அந்த பணிப்பெண்ணுக்கு தமிழ் வேற தெரியாது.குழந்தையை ஆங்கிலத்தில் தான் அதட்டினார்.நிங்கள் சொல்லும் சம்பவங்கள் ஜீரணிக்க முடியவில்லை

Gayathri said...

@ mkrpost : என்னகொடுமையோ! பெற்றோர்களே பிள்ளைகளை இந்த நிலைக்கு ஆளாக்கும் பொழுது நாம் என்ன செய்யமுடியும்?
உங்கள் கருத்திர்க்கு நன்றி சகோதிரரே..

☀நான் ஆதவன்☀ said...

@துளசி டீச்சர்

:)))))

அப்பாவி தங்கமணி said...

நல்லா சொன்னிங்க காயத்ரி... நிர்பந்தம் இல்லாதப்போ கொழந்தை கொஞ்சம் பெருசாகர வரியாச்சும் வீட்டில் இருப்பது தான் நல்லது...

Gayathri said...

@☀நான் ஆதவன்☀ ஹ ha

Gayathri said...

@அப்பாவி தங்கமணி உங்கள் ஆதரவிற்கு நன்றி தோழி..

Priya said...

ஹாய் காயத்ரி, மிக அவசியமான பதிவு. என் எண்ணங்களை உங்கள் வார்த்தைகளில் பார்த்து சந்தோஷப்பட்டேன். உலகமெங்கும் இதே போல நிறைய கொடுமைகள் நடந்துக்கொண்டுதான் இருக்கிறது. நீங்கள் சொன்னது போல குழந்தைகள் ஒரு வரம்... சில பெண்கள் அதை சரியாக உணரவில்லை என்பது என் கருத்து. நான் குழந்தை பெற்ற பின்னால் வேலையை விட்டுவிட்டு நிச்சயம் அருகில் இருந்து கவணித்துக்கொள்ளவே விரும்புகிறேன்.

priya.r said...

சமூகத்தின் மேல் உண்மையான அக்கறை கொண்ட நல்ல சமூக சிந்தனை உள்ள நல்ல பதிவு .

இந்த மாதிரி சமூகத்தில் உள்ள குறைபாடுகளை சுட்டி காட்டும்பொழுது ,தவறை புரிந்து
வாழ்க்கை முறையை சில பேராவது மாற்றி கொண்டால் அதுவே இக்கட்டுரைக்கான வெற்றி தான் தோழி