Recent Posts

17 Jul 2010

ரீல் விடும் ரீல்கள்...

சினிமாக்கள் வர வர எனக்கும் சந்தேக்கங்கள் அதிகரித்துக்கொண்டே போகிறதே தவிர குறைந்த பாடில்லை…
அதெப்படி நம்ம..  ஹீரோ நல்லவரோ கேட்டவரோ அவரைப் பற்றி தெரியாத மக்களே யாரும் இருக்கறது இல்ல ???
நம்ம ஹீரோக்கள் எவ்வளோ பணக்கரராய் இருந்தாலும்…. பாவம் கொட்டாம் பட்டி ட்ரவுசர தவிர வேற ஒன்னும் போட கிடைக்க மாட்டேங்குது..அதான் அழகான வேட்டி கட்டிகரங்க அப்படியும் ஏன் இந்த கோலம்???  ( ராஜ்கிரண் , ராமராஜன், சத்யராஜ்..லிஸ்ட் போகுது அதுபாட்டுக்கு )
அவன் அவன் காட்டுகத்தா கத்தியே பக்கத்துல இருக்கறவங்களுக்கு ஒன்னும் கேட்கிறது இல்ல….ஆனா ஊர்கொடில இருக்கற ஹீரோ படுவது மட்டும் எங்கயோ இருக்கற ஹீரோயினுக்கு கேட்டு ஓடி வருவாங்க ( சின்ன தம்பி கிளைமாக்ஸ் பாருங்க புரியும் )…ஹீரோக்கு மட்டும் இந்த அதீத குரல் வலிமை இல்லை  ஹிரோயனுக்கும் அந்த அற்புத சக்தி உண்டு..ரயில்வே ஸ்டேஷன்ல ஸ்பிகேர்ல அலற அலற அறிவிப்பு போய்கொண்டு இருந்தாலே யார் கதுலாயு கேட்ட பாடில்ல..ஆனா அம்மா அங்கேந்து தம்தூண்டு சத்தத்துல பாடினா ஹீரோக்கு மட்டும் கரீட்டா கேட்கும்ல….(ஆனந்த பூங்காற்றே பட கிளைமாக்ஸ் அதிசயம் இது ! )
எம் சி எ படிக்கற பொண்ணுக்கு டவுட் வரும் அத ஹீரோ கிட்ட கேட்டதும் அவர் ஒடனே…. தன் லாப்டாப் ல கால்குலேட்டர் ல ஏதான தட்டுவார்..”வாவ் இந்த ப்ரோக்ராம் என்னக்கு எவ்ளோ புரியாம இருந்துச்சு தெரியுமா யு ஆர கிரேட்..” தாட் பூட்ன்னு புகழ்ந்து தள்ளும்..கால்குலேட்டர  பெருசா காட்டி தட்டினா நாங்க வாய பொளந்து பாப்போம்னு என்ன ஒரு நம்பிக்கை பா…. நம்பிக்கை இல்லையா?? வருஷமெல்லாம் வசந்தம் படம் பாருங்க..( இதெல்லாம் கேட்க ஆளில்ல ம்ம்ம் இருக்கட்டும்..)
குஷியாவோ சோகமாகவோ ஆட ஆரம்பிக்கும் நம்ம ஹீரோ கூட சேர்ந்து ஆட வரும் அனைத்து மக்களுக்கும் அவர் ஆடப் போகும் ஸ்டெப் எப்படியும் தெரியும்..அப்படி ஒரு ஒற்றுமை இருக்கும்..(கனவு சீனுக்கு கூட ஒத்திகைப் பார்த்துக்கொண்டு தான் வருவாங்க போல..ஆடத்தான்!!! அய்யய்ய)
பணிகொட்டும் மலைச்சாரலில் நடணமாடும் ஹீரோக்கள் லெதர் ஜாக்கெட் லெதர் பேன்ட் என்று இருக்க, ஹீரோயின் மட்டும் பாவம் அரைகுறையாய் ஆடிக்கொண்டு இருப்பார்…(அதான் இருக்கிறதெல்லாம் ஹீரோ போட்டுகொண்டு இருக்கிறே!!! பாவம் துநிபஞ்ச்செம் போல…)
கல்லூரிகள், பள்ளிக்கூடங்கள் என்று எங்கு பார்த்தாலு, அரைகுறை ஆடைத்தான்..என்ன கர்மமோ
சண்டை காட்ஷினா கடவுளே அந்த காமெடிக்கு அளவே இல்லப்பா…ஒரு ஹீரோ, சுத்தி… பார்க்கவே பயங்கரமான  பத்து பன்னிரெண்டு ரவுடிகள் ,  அடிக்க அபிநேயம்மெல்லாம் பிடித்துக்கொண்டு ஆயத்தம் ஆவார்கள்..ஆனா அடிக்க மட்டும் ஒரு ஒருத்தரா பொறுமையாத் தான் வந்து அடிவாங்கிக்கிட்டு போவங்க..
அதுலயும் நம்ம ஹீரோ அப்படி கையால ஸ்டைலா ஆட்டோவ ஒரு குத்து விட்டா காத்துல பறந்துபோய் விழும்..
வில்லன் தப்பிக்க நினைக்கிற கார ஹீரோ தன் கையால காரோட பின்பாகத்த கட்டியா புடிச்சுகிட்டா போரும்…அவன் என்னதான் ஆக்சிலேட்டர்ர போட்டு அழுத்து அழுத்துன்னு அழுத்தினாலும் காரு நகராதுல்ல…
இதை தவிர ஓடும் காரை ஓடிப்போய் பிடிப்பது..ஒடும் ரயிலின் மேல் கொஞ்சமும் சருக்காமல் ஓடுவது ஆடுவது..பறக்கற விமானத்த அசாத்தியமா தரை இறக்குவதுன்னு..அட போங்கய்யா மனசட்ஷி இல்லாம ரீல் விட்ராய்ங்க..
அட நம்ம ஊருலதான் இந்த கூத்து கூத்து நா….ஹாலிவுட்  மட்டும் இளச்சதா என்ன?? அங்கே சுதர ரீல் கொஞ்ச நஞ்சமா ????…
டைனோசரையே அடச்சுவைக்கற அளவுக்கு தொழில் நுட்பதுல முன்னேறி இருக்கும்..ஆராய்ச்சிக் கூடத்தோட கம்ப்பியுட்டர் மட்டும் ஒரு பத்து வயசுப் பொண்ணு ஆப்பரேட் செய்யும் அளவுக்கு அத்தனை சுலபமா இருக்குமாம்.” திஸ் இஸ் யுனிக்ஸ் ஐ நோ இட்” ன்னு சொல்லிடு கொஞ்ச நிமிஷத்துல ஆராய்ச்சிக் கூடத்தையே ஒரு ஆட்டு ஆட்டிடுமாம்.. (என்னங்கய்யா கூத்து இது???? எலி ஸ்கூலுக்கு போச்சுன்னு சொன்னா இளிச்ச வாயன் வாயப் பிளந்தானாம்…..ஹை எப்படி ஏன் சொந்த புது மொழி ?? காதுல ரத்தம் வருதா?? “) ரொம்ப யோசிக்க வேணாம் ஜுராசிக் பார்க் படம்தான் அது…ஆனைக்கும் அடி சறுக்கும்..ஜேம்ஸ் கேமரூனுக்கும் அப்போ அப்போ சருக்கும்ல…
அமெரிக்க ல இருக்குற பெரிய பெரிய பெண்டகன் , உளவுத்துறை ஆகிய இடங்கள்ல இருக்கற கம்ப்யூட்டர்ர கூட நம்ம ஆளு ரெண்டு மூணு முயற்ச்சில பாஸ்வேர்ட்ட கண்டுபிடிச்சு உள்ள பூந்துருவார்ல ஆமா..( லிஸ்ட் கணக்கில் அடங்கா..)
ஹீரோவ பார்த்து சுமார் பத்து இருவது வில்லனின் ஆட்கள் சுட்டாலும் இவர்மேல் ஒரு குண்டு கூட பாயாது ஆனா இவர் அப்போ அப்போ எட்டிப்பாத்து சுட்ட ஒருத்தன் கூட தப்பிக்க மாட்டான்..ஹீரோ ஒரு சாதாரண ஆளாக இருந்தாலும் குறிதவறாமல் சுட்வார்ல..( வில்லன்களை ஹீரோக்கள் கிட்ட டியூஷனுக்கு அனுப்பலாம்…)
பேய்ப்படம், திகில் படங்கள் என்றால்…அமானுஷ சத்தம் ஏதேனும் கேட்கும் பொழுது பெண்கள் தான் அரைகுறை ஆடை உடன் சென்று என்ன வென்று பார்க்க வேண்டும்..ஆண்கள் தப்பித்தவறிக் கூட போக மாட்டார்கள்…

இன்னிக்கி இது போரும்..பாகம் இரண்டு அப்பாலிக்கா போடறேன்..
மறக்காமல்உங்க கருத்துகள எழுதுங்க…

31 கருத்துக்கள்:

NS Manikandan said...

நான் தான் முதல் ஹையா...

ரீல் விடும் ரீல்கள் நன்றாக இருந்தது.

"அதுலயும் நம்ம ஹீரோ அப்படி கையால ஸ்டைலா ஆட்டோவ ஒரு குத்து விட்டா காத்துல பறந்துபோய் விழும்."
ஆட்டோ மட்டுமா பறக்குது...

ஹீரோவ பார்த்து சுமார் பத்து இருவது வில்லனின் ஆட்கள் சுட்டாலும் இவர்மேல் ஒரு குண்டு கூட பாயாது
அவர் புல்லட் ப்ரூப் டிரஸ் போடு இருப்பாரோ

பேய்ப்படம், திகில் படங்கள் என்றால்…அமானுஷ சத்தம் ஏதேனும் கேட்கும் பொழுது பெண்கள் தான் அரைகுறை ஆடை உடன் சென்று என்ன வென்று பார்க்க வேண்டும்..ஆண்கள் தப்பித்தவறிக் கூட போக மாட்டார்கள்…
ஆண்கள் ஜெனரல் ஆ பயந்த சுபாவம் மா...ஆனா கமிச்சிகறது இல்லே...(ரங்கமனிகள் மணிக்கவும்..)

வலைபதிவின் புதிய தோற்றம் மிக அருமை.

சி.பி.செந்தில்குமார் said...

நல்ல காமெடியான பதிவு.சென்னை பாஷையில் கலக்கறீங்க.ஸ்பெல்லிங் மிஸ்டேக்கை மட்டும் கரெக்ட் பண்ணீட்டா எங்கேயோ (!)போய்டுவீங்க

Gayathri said...

@nsmanikandan ஆமா எல்லாம்தான் பறக்குது..
இருக்கலாம் யார் கண்டா..நன்றி...
அடிக்கடி வந்து படித்து கருத்துக்கள எழுதுங்க...

Gayathri said...

@சிபி.செந்தில்குமார் ஆஹா.... இருக்கிற மாதிரி தெரியவில்லையே..எங்கேன்னு சொன்னா சரி செய்யறேன்..நன்றி..

kousalya raj said...

காயத்ரியா இது ? சென்னை டமில்.... கலக்குறீங்க? நடத்துங்க....நடத்துங்க... nice template

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

என்ன ஒரு வில்லத்தனம். உங்களையெல்லாம் விஜய் படம் பாக்க வச்சு டார்ச்சர் கொடுக்கணும்..

Jey said...

அம்மனி, ஏன் இந்த குமுறல், ரொம்ப பதிக்கபட்டீகளே!!!.
ம்ஹும், கலக்க ஆரம்பிச்சிடீக.

Jey said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) on 17 July 2010 21:42 said... [Reply]
என்ன ஒரு வில்லத்தனம். உங்களையெல்லாம் விஜய் படம் பாக்க வச்சு டார்ச்சர் கொடுக்கணும்..//

அம்மனி , இவருகிட்ட சாக்கிரதயா, இருங்க, விட்டா, சரத்குமாரு படத்தயும், சேர்த்து பாக்க வச்சிருவாரு...

Madhavan Srinivasagopalan said...

சினிமாவும் பழமொழியும் ஒன்னு.. ' அனுபவிக்கனும், ஆனால் கேள்விலாம் கேக்கப்படாது!'

அப்பாவி தங்கமணி said...

ஐயயோ... என்னங்க நீங்க.. சினிமா பாக்க மட்டும் தான்.. இப்படி phd எல்லாம் நோ நோ.. லாஜிக் இல்லா magic சம்திங்னு பாட்டே இருக்கே.... ஹா ஹா ஹா.... கலக்கறீங்க

அப்பாவி தங்கமணி said...
This comment has been removed by the author.
Prasanna said...

Good question..

இதத்தான் தமிழ்படம் படத்துல போட்டு கிழிச்சாங்க.. அதுக்கப்புறம் அந்த படத்தில் இருந்தே காட்சிகளை உருவி படம் எடுத்ததா கேள்வி :)

தக்குடு said...

:))) pada padanu saravedi maathiri peesareel paa!!..:)

Gayathri said...

@Kousalya சும்மா முயற்ச்சி பண்ணிபார்த்தேன்...நன்றி தோழி..

Gayathri said...

@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)வில்லத்தனமா???? நான் விஜய்படத்தக்கூட பத்துருவேன்.நீங்க விஜயகாந்த் படம் பாக்க வசதி எப்படி..
ஹ ஹ நன்றி..

Gayathri said...

@Jey
எச்சரிக்கைக்கு நன்றி...ஹ ஹ..பாராட்டுக்களுக்கு நன்றி

Gayathri said...

@Madhavanஅப்படிதான் சார் பொறுத்து பொறுத்து தாங்கமுடியாமல் கொட்டி தள்ளிவிட்டேன்...நன்றி

Gayathri said...

@அப்பாவி தங்கமணி இதை பற்றிதானே படிச்சேன்..படிக்கும்பொழுது என்னமோ சொல்லிதந்துவிட்டு இப்போ இப்படிலாம் படங்களை பார்க்கும் பொழு போருக்க முடியவில்லை..
மொதல்ல அவங்கள நிறுத்த சொல் நான் நிருதறேன்னு கமல் சொன்ன மாதிரி தான் நானும் இருக்கணும் போல இருக்கு..
நன்றி தோழி..

Gayathri said...

@பிரசன்னாநாசமா போச்சு...எங்க போயி முடியபோகுதோ?? நன்றி

Gayathri said...

@தக்குடுபாண்டிஆஹா பாராட்டுக்களுக்கு நன்றி..

shortfilmindia.com said...

ஆண்கள் போய் அரைகுறை ஆடையுடன் பார்த்தால் எவன் போய் பட்ம் பார்ப்பான்

pinkyrose said...

ஹாய் தோழி! பாவம்ங்க உங்கள்ட்ட மாட்டுன ஹீரோ(jus for kiddingya :))))
அப்புறம் தோற்றம் ம்ம்ம் நல்லாருக்கு!

Anonymous said...

ரீல் விடும் ரீல்கள் சூப்பர் காயத்ரி ..கலக்கறேன்

R.Gopi said...

//"அதுலயும் நம்ம ஹீரோ அப்படி கையால ஸ்டைலா ஆட்டோவ ஒரு குத்து விட்டா காத்துல பறந்துபோய் விழும்."//

ஹலோ... ரொம்ப கம்மியா சொல்லி இருக்கீங்க...
இன்னும் நீங்க னிறைய விஜய், விஜயகாந்த் படம்லாம் சரியா பார்த்துட்டு சொல்லுங்க... அவனவன் அடிக்கற அடியில லிஃப்ட் எல்லாம் தூள் தூளாகுது... இன்னமும் ஆட்டோலயே நிக்கறீங்களே... அய்யோ...அய்யோ...

கலக்கறேள் காயத்ரி.... இன்னும் நிறைய காமெடி எழுதுங்கோ....

நேரம் கிடைக்கும் போது, இங்கேயும் வந்து பாருங்கோ...

www.jokkiri.blogspot.com

www.edakumadaku.blogspot.com

R.Gopi said...

//"அதுலயும் நம்ம ஹீரோ அப்படி கையால ஸ்டைலா ஆட்டோவ ஒரு குத்து விட்டா காத்துல பறந்துபோய் விழும்."//

ஹலோ... ரொம்ப கம்மியா சொல்லி இருக்கீங்க...
இன்னும் நீங்க னிறைய விஜய், விஜயகாந்த் படம்லாம் சரியா பார்த்துட்டு சொல்லுங்க... அவனவன் அடிக்கற அடியில லிஃப்ட் எல்லாம் தூள் தூளாகுது... இன்னமும் ஆட்டோலயே நிக்கறீங்களே... அய்யோ...அய்யோ...

கலக்கறேள் காயத்ரி.... இன்னும் நிறைய காமெடி எழுதுங்கோ....

நேரம் கிடைக்கும் போது, இங்கேயும் வந்து பாருங்கோ...

www.jokkiri.blogspot.com

www.edakumadaku.blogspot.com

Gayathri said...

@shortfilmindia.com ஹீ ஹீ ஹீ ...யாருமே அரைகுறையாய் வரவேண்டாம் என்றுதான் நன் விரும்புகிறேன்...நன்றி

Gayathri said...

@pinkyrose ஹி ஹி..உண்மையா சொன்ன நிறைய எழுதலா பதிவு பெருசா ஆய்டும்னு தான்...நன்றி தோழி..

Gayathri said...

@sandhya நன்றி மாமி..

Gayathri said...

@R.Gopi ஹி ஹி..ஆமாம் நிறையே மிஸ் பண்றேன் அதுலம் இதோட தொடர் பதிவுல எழுதறேன்...நன்றி சகோதரரே..

S.M.Raj said...

// ஆராய்ச்சிக் கூடத்தோட கம்ப்பியுட்டர் மட்டும் ஒரு பத்து வயசுப் பொண்ணு ஆப்பரேட் செய்யும் அளவுக்கு அத்தனை சுலபமா இருக்குமாம்.” திஸ் இஸ் யுனிக்ஸ் ஐ நோ இட்” ன்னு சொல்லிடு கொஞ்ச நிமிஷத்துல ஆராய்ச்சிக் கூடத்தையே ஒரு ஆட்டு ஆட்டிடுமாம்.. //

உனிக்ஸ் 1969 வந்தது.. எல்லா அமெரிக்க பள்ளிகூடத்திலும் படமா இருக்கு. அதே போல எல்லா ஆராச்சி கூடதுலேயும் இதைத்தான் use பண்ணுறாங்க .

பாலா said...

நல்லா பார்ம் ஆய்டீங்க போல... செம தொகுப்பு... இன்னும் நிறைய கத இருக்கு போல... சீக்கிரம் கொட்டுங்க... சிரிக்க வெய்ட்டிங்... :))