Recent Posts

19 Jul 2010

பால் அக்டோபாஸ் இப்பொழுது அப்போலோவில்!!!

மறுபடியும் பாலான்னு கடுப்பேற வேண்டாம்..

பால் நம் நாட்டுக்கு வந்து ஜோசியம் செய்யும் தொழிலை மேற்கொண்டால் என்ன ஆகும்?? ( பாலுக்கே பாலுறும் நிலைதான் வரும் )

ஒரு குட்டி ( ?!# ) கற்பனை..

மொதல்ல நம்ம தமிழ் நாட்டுக்கு வருது..விமான நிலையத்தில் ராணுவ படைசூழ பெரிய வரவேற்பளிக்க படுகிறது...பால் வாழ்க..எதிர்கால தமிழ்நாட்டின் நம்பிக்கை சின்னம் பால் வாழ்க...வருங்கால இந்திய பிரதமர் !!!!!!! பால் வாழ்க என்று கோஷங்கள்கேட்கிறது...இதுலே பாதி பாலுக்கு புரிந்துவிட்டது....இது தேறாது...ன்னுதான் !!

இபொழுது நேராக ஜோசியம் பார்க்கவேண்டிய இடத்திற்கு செல்கிறது..பின்ன அடுத்த இரண்டு மணி நேரத்தில் அது ஆஸ்திரேலிய செல்ல வேண்டுமே
காசென்றாவை சந்திக்க...எல்லாம் லவ்ச்தான்..அதென்ன நம்ம ஊரு அரசியல் வாத்தியா.... போட்டி போடுகின்றவர்களை சண்டைக்கு அழைத்து மேடையில் மொக்கை போட????????

பாவம் அது எதோ, ரெண்டு போட்டில சோற்றை போட்டு குறி சொல்ல சொல்லுவாங்கன்னு பாத்தா...
அதுக்கு மாரடைப்பு வந்து நேரா அப்போலோக்கு போகுது..பட் வை ???

நடந்தது  என்ன ??? 

அங்கேயாவது இரண்டு பொட்டிதான் இங்கே தன ரூம் புள்ள பொட்டி பொட்டிய இருக்கே !! பின்ன எல்லா கட்சிகளும் இருக்கணுமே ( வோட் பெட்டி பா..சம்திங் பெட்டி இல்லை.. அது என்ன நாமள மாதிரி மானம் கெட்ட பொழப்ப நடத்துது?? பாவம் சோறு கண்ட இடம் சொர்கம்னு அலையுது ) 

கொஞ்சம்  பின்னோக்கி செல்வோம்!!

அங்கே என்ன நடந்தது அக்டோபசுக்கு மாறைப்பு வரும் அளவிற்கு  ????????

அங்கே நம்ம கலைஞர் அய்யா தான் மொதோ போட்டியோட நிக்கராறு...
" தம்பி பால்... என் பொட்டிய நி தேர்ந்தெடுத்தால்...நீ அனிமல் ப்லாநெட் பார்பதர்கேன்றே 3D LED டிவி ஒன்றை சண் HD சேவையுடன் பரிசளிப்பேன்..
முதல்  ஆறுமாதம் இலவசமான சேவை அளிக்கப்படும்..அதுமட்டும் இல்லாமல்..செம்மொழியாம் தமிழ்ப்போல் உன் புகழ் நிலைத்துநிர்க்க
செம்பீராநியாம் பால் அக்டோபாஸ் என்ற பட்டத்தையும் உனக்களித்து பெருமை படுத்துவேன்..( அக்டோபாஸ் திரு திரு வென முழிக்கிறது )

இப்போது நம் தலைவி நிக்கறாங்க...அந்த மைனாரிட்டி **** அரசால் அப்படி "என்ன பெருசாக தந்து விட முடியும் ?? டிவியா ச்சே நான் உணகேன்றே தண்ணீருக்கடியில் பிரைவேட் சினிமா தியேட்டர் கட்டிதரேன்..நீ  ஜாலியா என்ன வேணுமோ பார்த்துக்கோ..அதை தவிர ஜாக்பாட் நிகழ்ச்சியையே தொகுத்து வழங்கலாம்..இத்தையும் சேர்த்து பெங்களுருவிலோ மைசூரிலோ ஒரு தோட்டம் கட்டிதறேன்..அது போரவில்லை என்றால் இந்தய தேசிய மிருகம் நீ என்று அறிவிக்க செய்வேன்.."( இது அந்த புலிக்கு தெரியுமா?? பாவம் அது பொழப்புல மண்ணள்ளி போடணுமா???)அக்டோபசுக்கு தலை சுற்றுகிறது...( நமக்கும் தான் )

நமது  விர சிங்கம் விஜயகாந்த்..." உலகத்துல மொத்த பெருங்கடல்கள் இந்து , சமுத்திரங்கள் நூற்றிஎட்டு ( யார் பொய் எண்ணி பாக்க போறா) அதுல மொத்த கடல் இனங்கள்.....".நு ஒரு பெரிய புள்ளி விவரத்த சொல்லிமுடிக்கறதுக்குள்ள
பாவம் நம் பால் எட்டுக்கால் பாய்ச்சலாய் அடுத்த கட்சிக்கு போகிறது..

இப்படியே ஒருஒரு கட்சிய போகுது..இதுல நம்ம விஜயும் , ரஜினியும் இருக்கிறார்கள்..அனால் கட்சி துடங்குவதா வேண்டாமா என்று தெரியாமல் விழித்துக்கொண்டிருப்பதால் பாலிடமே கேட்டு விடலாம் என்று நிற்கிறார்கள்..

இப்படி பெரிய கும்பலை பார்த்து மிரண்டு போன பால்..மாரடைப்பு வந்து விழாமல் என்ன செய்யும்..?? அது என்ன தமிழ்நாட்டு மக்களா எல்லா வற்றையும் பொறுத்துக்கொண்டு..ஒரு ஒரு தேர்தலிலும் வாக்களித்து தனக்கு தானே ஆப்படித்து கொள்ள...???

நிகழ்காலம் : இடம் அப்போலோ :

பால் பாவமாக தண்ணீர் தொட்டி ஒன்றில் ஒருபுறம் டிரிப்ஸ் ஏற..கண்ணை முடிகொண்டிருக்க..அங்கே யாரும் இல்லை என்பதை உறுதி செய்துகொண்டு கண்திரகிறது..உஸ்ஸ் அப்படா ஒரு வழியா தப்பிசுடேன்..நு எண்ணி பெருமூச்சு விடுகிறது..

நடக்க  போகிறது என்ன :அது விட்டால் போதுமென்று தாய்நாட்டிற்கு சென்றுவிடும்..நாமோ அதே மொக்கை தேர்தல்..மொக்க வாக்குறுதிகள் என்று அலைந்து கொண்டிருப்போம்..கவலை மறக்க எந்திரின் . சந்திரன்னு எத்தான பாத்துட்டு துக்கம் கேட்டு அலைய்வோம்..


பாடம் : அக்டோபசுக்கு இருக்கும் புத்தியில் பாதி நமகிருந்தால் கூட தமிழ்நாடும் நாமும் உருப்படுவோம்..

உண்மை  : நம்மா தலைவருகளுக்கு மட்டும் தான் மாரடைப்பு வந்ததுப்போல் நடிக்க வருமா?? அக்டோபசுக்கும் தெரியும்...

டிஸ்கி  : நான் யார மனதையும் புண்படுத்தநினைக்க வில்லை.நீங்க பாட்டுக்கு என் விட்டுக்கு சுமோ அனுபிடதிங்க...அப்புறம் மொக்கை போட்டு சுமோ பஞ்சர் ஆகிவிடும்..உங்கள் ரௌடிகள் நடந்து விடு செல்ல வேண்டிருக்க்ம்..நானும் பாலுக்கு துணையாய் ???? அப்போலோ செல்ல நேரிடும் ..தேவையா??????சமாதனம போயிடலாம்..

பால் மாதிரி பால் மாறாம உங்க கருத்துகள பொட்டில போடுங்க..
இங்க ஒரு பொட்டிதான் இருக்கு !!!!!

20 கருத்துக்கள்:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அடுத்தஇறந்து மணி நேரத்தில் அது ஆஸ்திரேலிய செல்ல வேண்டுமே
///

spelling mistake sister

Gayathri said...

@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)நன்றி மாற்றிவிட்டேன்..

அருண் பிரசாத் said...

அய்யா, எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும். இது சீரியஸ் பதிவா, மொக்கை பதிவா, காமெடி பதிவா?

சௌந்தர் said...

இப்படி மொக்கை போட்ட எங்க தலைவி வாழ்க வாழ்க

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

வாவ்.. காயத்ரி.. செம கலாட்டா தான் போங்க..

இதுல ஒரு ஸ்கிரிப்ட் விட்டு போச்சே...
நம்ம TR தான், பால் கிட்ட பேசறார்...

"" கண்ணா பாலு
நா சொன்னத கேட்டா
உனக்கு full மீலு..
இல்ல உனக்கு ஊத்துவேன் பாலு...!! ""

ஓவர் மொக்கையா இருக்கோ?? வரேன்ப்பா..! :D :D

பாலா said...

தலைப்பை சரி செய்யவும்.. " து" மிஸ்ஸாகிறது...
நல்ல ப்ளாட்... ஹஹ... ROFL...
விடுமுறை நல்லா போகுது போல... மகிழ்ச்சி... :))))

pinkyrose said...

அருண் சார கலாய்ச்சவங்க எப்டி எழுதி இருக்கீங்கன்னு பாக்க வந்தா தோழி போங்க எங்கியோ போய்ட்டீங்க...

அருண் பிரசாத் said...

//அருண் சார கலாய்ச்சவங்க எப்டி எழுதி இருக்கீங்கன்னு பாக்க வந்தா தோழி போங்க எங்கியோ போய்ட்டீங்க...//

எங்கயும் இல்லை ஆக்டோபஸ் கூட ஆஸ்திரேலியாவரைக்கும் போய் இருக்காங்க.

2 வது கமெண்ட்ல இருந்து ரிப்பிளை காணோம்

வால்பையன் said...

:-)

அருண் பிரசாத் said...

காயத்தி சகோதரி எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும். இல்லையேல் காணவில்லை என ஒரு பயோடெட்டா போட வேண்டி வரும் என அன்புடன் தெரிவித்து “கொல்”கிறோம்

Gayathri said...

@ அருண் பிரசாத் : am here am here engayum kanama pogala amaidhi amaidhi

Gayathri said...

@அருண் பிரசாத்எனக்கே தெரியல என்ன பதிவுன்னு...

Gayathri said...

@சௌந்தர் நன்றி நன்றி...அது சரி எப்போலேந்து நன் தலைவி ஆனேன்???

Gayathri said...

@Ananthi வாவ் உங்க கவிதை சூப்பர்...நன்றி தோழி....

Gayathri said...

@pinkyroseஹாய் நன்றி...ஐயோ நான் யாரையும் கலைக்கவில்லை தோழி..சும்மா வெளாட்டுக்கு..

Gayathri said...

@Bala
நன்றி சகோதிரரே...சரி செய்துவிட்டேன்..நன்றி

Gayathri said...

@அருண் பிரசாத் ஆஸ்திரேலியா லாம் போகவில்லை...கரண்டு காணமல் போன காரநித்தினால் ஆன்லைன் வர முடியல...

Gayathri said...

@வால்பையன் :-)

அப்பாவி தங்கமணி said...

ஹா ஹா அஹ...சூப்பர் கற்பனை... பால் கிட்ட நீங்க ஜோசியம் கேக்க போலியா மேடம்?

ஸ்ரீராம். said...

:))