Recent Posts

26 Jul 2010

காலம் மாறிப்போச்சு !

அந்த காலத்தில் இப்பொழுது உள்ளார் போல் மாமியார் மருமகள் சண்டை போல் இல்லாமல் வேறுமாதிரி தமாஷாக இருக்குமாம்…என் மாமனார் அவர்கள் சொன்ன கதைகளில் உதாரணத்திற்கு இரண்டு இங்கே….
மாமியாரின் லூட்டி :
ஒரு நாள் மருமகள் தோசைகளை வார்த்து விட்டு சாப்ட அமரும் பொழுது “ ஏண்டி மா  எத்தனை தோசை வார்த்தே பன்னிரண்டு வார்தாப்புல இருக்கே..அவன் ரெண்டு சப்டான் நான் ரெண்டு சப்டேன்..அப்போ உனக்கு “ என்றார்..மருமகள் திகைத்து போனாள்..இது தினமும் தொடர…மாமியரிடமே ஒருநாள் கேட்டுவிட்டாள்..அதெப்படி         “ நீங்க சமயலறைக்கு வராமலே  எத்தனை தோசை வார்கறேன்னு சொல்றேள் “ ( அவ்வ்வ் சூப்பர் கொக்கி ) என்று கேட்க..
அதுவா சொய்ங் ரெண்டுக்கு தோசை ஒன்னு என்று சொன்னார்களாம்.. ( அதென்ன சொய்ங்???? அதாங்க தோசை வார்கரப்போ சவுண்ட் வருமே சொய்ங்ன்னு !!! அடக் கடவுளே ) ஒரு தோசையை வார்க்கும் பொழுது  ஒரு சொய்ங்..அதை திருப்பிப் போடும் பொழுது ரெண்டாவது சொய்ங் ஆக மொத்தம் ரெண்டு சொய்ங் = ஒரே தோசை…( ஆத்தாடி இப்படி போகுதா கதை ??  )அன்று முதல் அவள் தோசையை ஒரு பக்கம் மட்டும் சுட்டு நிறைய தோசையை சாப்பிட்டாளாம்..( ம்ம வயறு கலக்கினால் என்ன நிறைய தின்னா போதுமுன்னு நினைச்சுருக்கா ) இப்படி போகிறது கதை….
மருமகள் அடிக்கும் லூட்டி :
பாவம் மாமியாரை மட்டும் என் குத்தம் சொல்ல வேன்டும்..( அதானே மாமியாருக்கு ஒரு சப்போர்ட் வேண்டாமா??? ) மருமகள் செய்வதையும் பார்ப்போமே..மாமியாரை நாடு வீட்டில் ஒட்காரவைத்து வயறு முட்ட முட்ட சாப்பிடவைப்பாளாம்…( என்ன ஒரு நல்ல எண்ணம் !! ) மகன் அவளிடம் இரவுக்கு என்ன சாப்பிட வேன்டும் என்று அம்மாவை கேள் என்று சொன்னால் மாமியாரை சமையல் அறைக்கு  அழைத்துசென்று..காதில் மெதுவாய் “ அம்மா கண்ணனுக்கு மை வச்சுக்கறேளா…நெற்றிக்கு போட்டு வைக்கவா என்று எதாவது கேட்பாளாம்.. ( !!?? ) அவரும் “ ஒன்னும் வேண்டாம் “ என்று உரக்க சொல்வாராம்…இதை வாசலில் நின்றுகொண்டு கேட்கும் மகன் அம்மாக்கு ராத்திரிக்கு ஒன்னும் வேனாம்முன்னு நெனச்சு போய்டுவானாம்..( அடக்கடவுளே இப்படி போகுதா கதை ! )  
இப்படி இருக்கு மருமகளின் லூட்டி…. இது அந்த காலம்….இப்பொழுது…..நாளை சொல்றேன்…..  ( பின்ன அவர் சொன்னத வச்சு ஒரு பதிவ தேத்திடேன்..நாளை கதை நாளை யோசிக்கலாம்..) 
டிஸ்கி : இது உங்க சொந்த கதையா என்று கேட்க வேண்டாம்…
ஒன்று இப்பொழுது டிவி அலறும் வீடுகளில் இந்த சொய்ங் டெக்னிக் உதவாது…இரவுக்கு என்ன வேன்டும் என்று கேட்டு ஏமாற்ற மருமகளாலும் முடியாது..அவள் சமையலுக்கு நிம்மதியாய் ஹோடேலில் சாப்பிடலாமே !! 
சோ லாஜிக் இல்லாமல் சிரித்து விட்டு உங்க கருத்துக்களை எழுதிட்டு போங்க…

27 கருத்துக்கள்:

நசரேயன் said...

//இது உங்க சொந்த கதையா என்று கேட்க வேண்டாம்//

நீங்க சொல்லவே வேண்டாம், எங்களுக்கு தெரியும்

Jey said...

ம்ம்ம். அம்மனிக பிரச்சினைகள்ல தலையிடுறதில்லீங்கோ...., நோ கமெண்ட்ஸ்.

Chitra said...

இத்தனை அமைதியாகவா, அந்த காலத்துல லூட்டி அடிச்சாங்க?..... ரொம்ப நல்லவங்க போல..... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா...

அருண் பிரசாத் said...

ஒரு தோசைல இவ்வளவு நடக்குதா? அடுத்து இட்லி, பூரி, பொங்கல்னு அடுத்தடுத்து பதிவு போடுங்க. சாப்பிட சாரி படிக்க நாங்க ரெடி

Anonymous said...

"இது உங்க சொந்த கதையா என்று கேட்க வேண்டாம்…"
அதெல்லாம் தப்பு ,அந்த தப்பெல்லாம் நான் பண்ண மாட்டேன் ..

அப்புறம் இப்போ நடக்கற மாமியார் மருமகள் அடிக்கற லூடியே பத்தி எப்போ எழுத போறே ??

Sundharadhrusti said...

who's story is this??? waiting for your story.

☀நான் ஆதவன்☀ said...

:))))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

nice

சி.பி.செந்தில்குமார் said...

நல்ல காமெடி நாட்டுப்புறக்கதை படிச்ச திருப்தி

பாலா said...

தோசையின் ஓசையில் இவுளோ matter இருக்கா??? :)) நல்ல கலாய்...

Shri ப்ரியை said...

ஆஹா... இனி எல்லா வீடுகளிலும் ஒற்றைப்பக்க தோசை தான்....

மங்குனி அமைச்சர் said...

இன்னைக்கு என்னப்பா எங்க போனாலும் ஒரே தோசையா இருக்கு ???
மேடம் பதிவு நல்லா இருக்கு . கொஞ்சம் அலைந பண்ணி , கேப் விட்டு போடுங்க , படிக்க குழப்புது

சௌந்தர் said...

இது உங்க சொந்த கதையா என்று கேட்க வேண்டாம்//

ஏம்ப்பா யாரும் இது இவங்க சொந்தகதையா கேட்காதீங்க...

Gayathri said...

@நசரேயன் சத்தியமா இது சொந்த கதை இல்லை ..நன்றி

Gayathri said...

@Jey அப்பா எஸ் ஆ...ஹ ஹ

Gayathri said...

@Chitra யாரு கண்டா...இருக்கலாம்..

Gayathri said...

@அருண் பிரசாத் ஹா ஹா ம்ம் கதைகளை தேடி போடறேன்...நன்றி

Gayathri said...

@sandhya கூடிய விரைவில் எழுதறேன்..

Gayathri said...

@sukanya my FIL told this story..

Gayathri said...

@☀நான் ஆதவன்☀ nandri

Gayathri said...

@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) thanks

Gayathri said...

@சி.பி.செந்தில்குமார் நன்றி...

Gayathri said...

@Bala எனக்கே இப்போதான் தெரியும்

Gayathri said...

@Shri ப்ரியை ஹா ஹா தமஷுதான்

Gayathri said...

@மங்குனி அமைசர் இனி வரும் பதிவுகளில் சரிசெய்துவிடுகிறேன்..நன்றி

Gayathri said...

@சௌந்தர் சப்போர்ட்க்கு நன்றி...

அப்பாவி தங்கமணி said...

ஹ ஹ அஹ...சூப்பர் flashback ... ஆஹா இப்படி எல்லாம் இருக்கோ... சூப்பர்... ரசித்தேன்...