Recent Posts

28 Jul 2010

கொடுமை கொடுமைன்னு கோயிலுக்கு போனா...

என்ன சுத்தி என்ன நடக்குதுன்னே தெரிய மாட்டேங்குது...வர வர மண்டை காஞ்சுண்டே போகுது...( தலைல வடாம் தாய வைக்கலாம் போல இருக்கு !! அதுக்குன்னு மாவதுகிண்டு வரவேணாம்!)
ஒரு நாள் தப்பி தவறி சிரிச்சுட்ட பொறுமே..யாருக்கோ போருக்க மாட்டேன்குது அடுத்தநாளே ரவுண்டு கட்டி டென்ஷன் ஆகிடுவாங்க...யாரு ?? எல்லாம் கிரகம் தான் வேற யாரு...( நவ கிரஹத்த சொனேன் )

என்னிக்கும் இல்லாம மாமனார் கிட்ட கதை கேட்டு ஒரு பதிவு போட்டா...
அடுத்த நாளே அவருக்கு குளுர் ஜுரம்...பாகத்து ஆஸ்பத்திரில சேர்த்து ஒரே
டென்ஷன்...அங்கேயான ஏதேனும் ஒழுங்க நடக்குதா?? பாவம் ட்ரிப் எத்தறேன்ன்னு அவர் கையில ஒரு நாலு அஞ்சு வாட்டி குத்திநாங்க ...பாவம் அதுக்கே அவர் துடிச்சு போயிட்டார்..போறதுன்னு ரத்த பரிசோதனை ன்னு
சொல்லி அதுவேற தனியா முனு நாலு குத்து...எல்லாம் கத்துக்குட்டி நர்ஸ்கள் புண்யம் கட்டி கொண்டதுதான்...இப்படி வயதானவர்களை பார்த்துக்கொள்ள வாவது அனுபவம் உள்ள நர்ஸ் களை வைக்கலாமே.. உசி குத்தி ரத்தம் ஒரு இடத்துல வருது அத கவனிக்காம அடுத்த இடத்துல குத்த முற்படரங்க...( வர கோவத்துக்கு ) வந்த கோவத்தை கட்டுபடுத்திகொண்டு " மொதல்ல அங்க ஒரு பேண்ட்எய்ட் போடுங்கம்மான்னு பொறுமையா சொல்ல வேண்டிருக்கு...
படிபடிய பாவம் அவர் இனிக்கி ஒரு வழிய வீட்டுக்கு வர வரை அங்கே ஒரே டென்ஷன்..

 *******************************************************************************

சரி  ஆச்பத்ரில தான் இப்படின்ன விட்டுலயுமா...இந்த பள்ளி பல்லி இரண்டுமே எனக்கு அலர்ஜி , பள்ளில என்னடான்னா வராத கணக்க வா வா நா எப்படி வரும்??? அல்ஜிப்ரா , டிரிக்னாமென்ற்றி ன்னு என்னனமோ சொல்லி பயமுடுத்தியே கணக்கு மார்குல மண்ணள்ளிப் போட்டாங்க..பேப்பர் வந்தாலே டென்ஷன்..அதே போல் தான் இந்த பல்லி...பாவம் பாட்டுக்கு எங்கேயோ போகுது..ஆனா அத பாத்தா எனக்கு அண்டமும் கலங்குது !!! வசக்கதவ தொரக்கலாமுன்னு பாத்தா கதவு மேல பல்லி...அய்யா சாமி நகருன்னு பயந்து பயந்து அத கெஞ்சி குத்தடி வாசல்ல கால் மணிநேரம் தவம்கிடந்த அப்புறமா சார்வாள் நகர்ந்தார்...அப்பாடான்னு தயங்கி தயங்கி ஆஸ்பத்திரில இருக்குற மாமியாருக்கும் மாமனாருக்கும் காபி போட , சமையல் ரூமுக்கு போனா.....................பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய பல்லி..அய்யோன்னு அலறி அடிசுண்டு ,
ஓடி ஹாலுக்கு வந்தா கடவுளே ஜன்னல்ல ஒரு பல்லி...சரின்னு பால் எடுக்க அடுத்த ரூமுக்கு போனா ....பிரிட்ஜ் பக்கதுல இருக்குற பூஜை அலமாரிக்கு தாவுது ஒரு கிழப் பல்லி.....தேவுடா உன் படத்துக்கு பின்னாலயும்மா...( ஏன் ??? நான்தான் கேடச்சேனா??? என்ன சுத்தி என் எப்பவும் ஒரு பல்லிக் கூட்டம் ???? கார்பன் பூச்சினாலும் பரவ இல்லை துக்கி போற்றுவேன் இந்த பள்ளிய என்ன செய்ய..பாத்தாலே நூறு டிகிரி ஜுரம் வந்து படுதுடுவேன்..) இன்னிக்கி என்னடான்னாகாலைல வீட்ட பெருக்கின வேலைசெய்யும் அம்மா
" செல்லோ..இங்க பாரு"ன்னு அசைய கூப்புட நானும் என்னனு பாத்தா ஒரு குட்டி பல்லி செத்து கிடக்கு... ஐயோ !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


********************************************************************************
இதை தவிர அன்றாட டென்ஷன் இருக்கே...காலைல எட்டு மணிக்கு மேல தண்ணி வராதாம்..தண்ணி கஷ்டமுன்னு டைம் வச்சு தண்ணி உட்ரங்க...
சரின்னு ஒருவழியா எல்லா வேலையும் முடிச்சு காய் வாங்க கடைக்கு போனா நல்ல காயெல்லாம் காலியாகி வத்தலும் சொத்தலுமாதான் காய் கெடைக்குது ( இதுனால மருமகளுக்கு காய் வாங்க தெரியலன்னு ஏன் பேரு டோட்டல் டாமேஜ் ! ) ஒரு வழியா வந்து சமைச்சு குழந்தைய சாப்ட வைகர்துக்குள்ள.....அப்பாடான்னு குட்டி துக்கம் போடவந்தா கரண்ட் போய்டுத்து...ஐயோ...அப்படியே சாயங்காலம் ஆகி வெளில சும்மா போனா ரோடு ல மாடு ஆடு நாய் பூனை ன்னு ஒரு பக்கமும்..அட்டோ அட்டுன்னு ஆட்டி கொண்டு போகும் ஆட்டோவும்..... ஒருபக்கமாய் சாய்ந்துகொண்டு  எப்போ படுத்துடுமொன்னு பாயமுடுதும் மாநகர பேரூந்தும்...தள்ளடிகொண்டு நடந்து செல்லும் முதியோர்களும்...இருட்டில் யார் பார்க்க போகிறார் என்று கற்பனையில் அங்கங்கே தெருமுனையில் ஜோடி ஜோடியாய் நிற்கும் இளவட்டங்களும்..வேலையில் இருந்து வீடு திரும்பும் டென்ஷனில் முண்டி அடித்து கொண்டு பறக்கும் பைக்களும் கார்களும் மறு பக்கமும் ....இருக்கும் குட்டி சாலையை ஆக்கிரமித்து கொள்ள நான் எங்க நடக்கறது ??? இதுலயுமா டென்ஷன் ??? ஒருவழியா வீடு வந்து சேந்து சமயல முடிச்சு சாப்டு துங்கபோனா.....
இந்த கொசு இருக்கே...( இதுக்கு ஒரு தனி பதிவு போடபோறேன் )..தூங்க விடுமா?? அப்படியே கனவாவது நிம்மதியா வருதா??? அதுலயும் கணக்கு பரிட்ஷய்க்கு இங்கிலீஷ் படிச்சுட்டு போயி முழிக்கறது ( நடக்கறது தானே ! ) ,
மாடி  மேல ஏறி கிழ எறங்க தெரியாம முழிகறது , யாரோ துரதறது , பல்லி பள்ளிய ரூம்புரா இருக்கறது , ன்னு டென்ஷன் ஏத்தி விட்டு துக்கத்த கேடுகர கனவாவே வருது..

*******************************************************************************
போரும்டா சாமி இப்படி போட்டு வருதேடுகறியே !!! ஏன் ஏன் நான் மட்டும் ஏன்..எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது ???? யாரான சொல்லுங்க !*********************************************************************************
46 கருத்துக்கள்:

ப்ரியமுடன் வசந்த் said...

too இல்ல three much ...spelling mistake...முடியல..

Chitra said...

ஏன் ஏன் நான் மட்டும் ஏன்..எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது ???? யாரான சொல்லுங்க !


....காரணம் சொல்றேன்... உடனே Rs . 1000 இணைத்து அனுப்பவும். பரிகாரம் செய்ய ஆலோசனைக்கு Rs . 5000 இணைத்து அனுப்பவும்..... deluxe package Rs .10000 மட்டுமே!

எல் கே said...

//இதுக்கு ஒரு தனி பதிவு போடபோறேன்//

athu vera irukka

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

அடடா.. காயத்ரி.. உங்கள இப்படி புலம்ப வச்ச பல்லிய என்ன பண்றதுங்க..??
எனக்கும் பல்லி என்றாலே அலர்ஜி... அதுவும்.. இந்த வால் இல்லாம அங்கங்கே...போறதா பார்த்தாலே...அவ்ளோ தான்..
சப்பாஹ்.. ரூம் விட்டு ரூம் போக.. பல்லி இருக்கான்னு செக் பண்ணி போகறதுக்குள்ள வெறுத்திரும்....
எல்லா தடவையும் இந்தியா வரும் போது... எனக்கு ஒரே எதிரி பல்லி தான்..

உங்க பதிவை ரசித்து படித்தேன்.. :-)

Anonymous said...

"போரும்டா சாமி இப்படி போட்டு வருதேடுகறியே !!! ஏன் ஏன் நான் மட்டும் ஏன்..எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது ???? யாரான சொல்லுங்க ! ".

இது இந்த பதிவு படிக்கறவங்க சொல்ல வேணிடிய டயலாக் தானே ??

உன் புலம்பல் கூட அழகா இருக்கு காயு ..

Gayathri said...

@ப்ரியமுடன் வசந்த்பக்கத்துல பல்லி ஓடி கொண்டிருந்ததால ப்ரோப் படிச்சு திருத்த முடியல..மன்னிக்கவும்

Gayathri said...

@Chitra ஆஹா இதுக்கு பல்லியே தேவலே
ஹா ஹா ஹா

Gayathri said...

@LK
வேணாமா??

Gayathri said...

@Ananthi ஹாய் அப்போ நீங்க நம்ம செட்டு...வாங்க தோழி...பள்ளிக்கு சாரி பல்லிக்கு பாயபடுவோர் சங்கம் ஆரம்பிக்கலாம்...

Gayathri said...

@sandhya அத்தனை மோசமாவ இருக்கு??? ஆஹா..என் பொலம்பலை ரசிக்க கூட ஆள் இருக்கே..நன்றி

தோழி said...

உங்க வீட்ல கிழபல்லி, குட்டிபல்லின்னு குடும்பமா சந்தோஷமா இருக்காங்க போல... எங்க வீட்ல ஒண்னே ஒண்னு தனியா சுத்தீட்டு இருக்கு... அனுப்பி வைக்கவா...

priya.r said...

சிரிப்பாகவும் இருக்கு ;உங்க நிலைமையை நினைக்கும் போது சற்று பரிதாபமா தான் இருக்கு ;
நீங்கள் பல்லி விரட்டிகளை பயன் படுத்தி பார்க்கலாமே !

அருண் பிரசாத் said...

இந்தியா எப்படி இருக்கு? நல்ல அனுபவம் குடுத்திருக்கு போல!

Gayathri said...

@தோழி ஆஹா இருக்கிற பல்லிக்கே எங்க ஓடறதுன்னு தெரியல...என் இப்படி

Gayathri said...

@priya.rபல்லி விரட்டிகளா ? எங்கே இருக்கும்

Gayathri said...

@அருண் பிரசாத் சென்னை நல்லாத்தான் இருக்கு..அப்போ அப்போ மழை பெய்யுது..சோ பார் பரவால்ல..

Sundharadhrusti said...

While reading this i remembered the "ikkaraikku akkarai pachai" article. This article has a nice way of describing....the details of street. nice idea to have a trained nurse for elderly!!

priya.r said...

//Gayathri on 29 July 2010 02:15 said... [Reply]
@priya.rபல்லி விரட்டிகளா ? எங்கே இருக்கும்//

நான் சமீபத்தில் நடந்த பொருட் காட்சியில் வாங்கினேன் .ரூபாய் 20 ,30 விலைகளில் கிடைக்கிறது.இரண்டு மாத உத்திரவாதம் என்றனர் .குறைந்தபட்சம் ஒரு மாதம் பலன் அளிக்கிறது!
எனது வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி சொல்லாத போதிலும் இதற்காவது நீங்கள் நன்றி சொல்வீர்கள் என்று நம்புகிறேன் !

அ.முத்து பிரகாஷ் said...

மெதுவா மனசுக்குள்ள சிரிச்சுக்கிட்டே படிச்சேன் ... கஷ்டமாவும் இருந்துச்சு ...

Gayathri said...

@priya.r ஐயோ தோழி...மிக்க நன்றி..பள்ளி விரட்டினு கேட்டதும் ஆர்வக்கோளாறுல நன்றி சொல்ல மறந்துட்டேன்..என்ன செய்ய பல்லி படுத்தும் பாடு...நன்றி மிக்க நன்றி தோழி

Gayathri said...

@நியோநன்றி நீயோ..

Gayathri said...

@sukanya thanks...nejamave road la athanai interestinga ethanayo nadakuthu

Menaga Sathia said...

//ஏன் ஏன் நான் மட்டும் ஏன்..எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது ???? யாரான சொல்லுங்க !


....காரணம் சொல்றேன்... உடனே Rs . 1000 இணைத்து அனுப்பவும். பரிகாரம் செய்ய ஆலோசனைக்கு Rs . 5000 இணைத்து அனுப்பவும்..... deluxe package Rs .10000 மட்டுமே!// haa haa super....

Gayathri said...

@Mrs.Menagasathia ஆகா மொத்தம் என்ன போட்டு வாட்டுராயங்க...நன்றி

சௌந்தர் said...

ட்ரிப் எத்தறேன்ன்னு அவர் கையில ஒரு நாலு அஞ்சு வாட்டி குத்திநாங்க ...//

நான் மருத்துமனையில் இருந்த பொழுது இந்த மாதிரி அனுபவம் நடந்து இருக்கு அந்த ஊசி ரொம்ப பெரியதாக இருக்கும். இங்க நரம்பு இல்லை சொல்லி வேறு இடத்தில் குத்து வாங்க.

priya.r said...

//Gayathri on 29 July 2010 04:38 said... [Reply]
@priya.r ஐயோ தோழி...மிக்க நன்றி..பள்ளி விரட்டினு கேட்டதும் ஆர்வக்கோளாறுல நன்றி சொல்ல மறந்துட்டேன்..என்ன செய்ய பல்லி படுத்தும் பாடு...நன்றி மிக்க நன்றி தோழி//

ஹா ஹா சற்று தங்களை கிண்டல் செய்தேன் பா .
நீங்கள் முட்டை சாப்பிடும் பட்சத்தில் காலியான முட்டை ஓடுகளை நீங்கள் வைக்கும் இடத்தில் இருந்தும் பல்லிகள் விலகி ஓடி விடும் .இதுவும் அனுபவத்தில் தெரிந்து கொண்டது தோழி .
Thanks for sharing these things with you pa .

சுசி said...

இதே கேள்விய தான் நானும் கேட்டுட்டு இருக்கேங்க..

கருடன் said...

உங்கள் சோகத்தை கூட சுவையாக சொல்லி இருக்கிறிர்கள்... மிக்க நன்று...

கருடன் said...

பேசாம பல்லி வர இடத்துல எல்லாம் உங்க பதிவ ஒரு பிரதி எடுத்து வைங்களேன்... படிச்சிட்டு அதுவே செத்து போய்டும்..... பல்லி விரட்டி வாங்கர காசு மிச்சம். சிக்கனமான மருமகள் பேரும் கிடைக்கும்.

Shri ப்ரியை said...

ஒரு அப்பாவிக்கு இவ்வளவு கஷ்டமா(உங்கள தாங்க சொன்னன்).... பல்லிக்கு பயமா? அப்போ எங்க பக்கம் சேர்ந்துடுங்க....

Unknown said...

உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்களேன், அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகையில் அதிகம் பார்க்கப்பட்ட பதிவுக்கு jeejix பணம் குடுக்குதாம்.
ஆயிரக்கணக்கா என் ஆர் ஐ இருக்காங்கப்பா அந்த சைட்ல.
நீங்க அந்த சைட்ல பதிவு செய்தீங்கன்னா மறக்காம என்னோட ஈமெயில் (sweathasanjana அட் ஜிமெயில் )
ஐடிய அறிமுகபடுதினவங்க அப்படின்னு அவங்க ஈமெயில் ஐடிக்கு அனுப்புங்க. புண்ணியமா போகட்டும்
:)

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

இந்தனை டென்ஷன்லயும் விடாம பதிவு போட்ட காயத்ரி வாழ்க வாழ்க... அம்மணி...ஊருக்கு போயாச்சா... கலக்குங்க...

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

பல்லி சுத்தும் பலன்னு ஒரு புக் இருக்காம்... அனுப்பி வெக்கறேன்... பாருங்க...ஹ ஹ ஹ

Sweatha Sanjana said...

பத்திரிக்கை துறை சாராத எத்தனையோ இளைஞர்களிடமும், அனுபவசாளிகளிடமும் ஒளிந்து கிடக்கும் சிந்தனைகைளையும்
வெளி உலகிற்கு கொண்டுவருவதே ஜீஜிக்ஸ்.காமின் (www.jeejix.com ) நோக்கம்.
உங்களின் பதிவு செய்யும் சமூக மாற்றங்களை சுவாசியுங்கள் !!

Gayathri said...

@Mrs.Menagasathiaவருகைக்கும் கருத்திற்கும் நன்றி

Gayathri said...

@சௌந்தர் இதே ஒரு வேலையா செய்ரய்ந்க போல

priya.r said...

ஏங்க காயத்ரி !
நீங்க பிசிபேளாபாத் செய்து முடித்ததற்கு பின்பு தான் உங்கள் பின்னூட்டங்களுக்கு பதில் அளிக்க போவதாக கேள்வி பட்டோம் !
உண்மையா இல்லை வதந்தீயா !
இந்த பல்லிகளும் கரப்புகளும் வராமல் இருக்க நிரந்தர தீர்வு இருந்தால், இதை படிப்பவர்கள்
சொல்லுங்கள் ;அனைவருக்கும் பயனாக இருக்கும்

Gayathri said...

@priya.r கடவுளே..பிசிபேளாபாத் லாம் இல்லப்பா...வீட்டுல வேலை செரியா இருக்கு அதான் டைம் ஆகுது..சாரி...
ஏதான பள்ளி பூச்சி விரட்டி டிப் கெடைச்சா போடறேன்...நன்றி பா

Gayathri said...

@சுசி
பதில் கெடச்சா சொலுங்கோ ..நன்றி

Gayathri said...

@TERROR-PANDIYAN(VAS) நன்றி..ஆஹா இதேனக்கு தோணாம போய்டுச்சே...நன்றி..பல்லிய துரத்ததான் வழிகேட்டேன்..நீங்க தீத்துகட்ட வழி சொல்றேன்களே..பல்லி பாவம்...

Gayathri said...

@Shri ப்ரியை தேங்க்ஸ் தோழி...மிக்க நன்றி..பள்ளி பத்தி அப்டேட் பண்றேன்

Gayathri said...

@sweatha நன்றி கண்டிப்பா ஏலருக்கும் சொல்றேன்..உங்களையும் ரெபர் செய்றேன்

Gayathri said...

@அப்பாவி தங்கமணி நன்றி...பள்ளி சுத்தும் பலனா? அடக்கடவுளே உணும் என்னனுலாம் புக் இருக்கோ

priya.r said...

ha ha Saripa.Thanks!

priya.r said...

அடடா ! சாரி எல்லாம் சொல்லிக்கிட்டு !
அப்புறம் எனக்கு ரெம்ப சிரிப்பு வந்துட போவுது !
சரி ! இதோட நாம பல்லி மேட்டர மறந்துடுவோமாம் !
அடுத்த பதிவு சீக்கிரம் போடணும் சரிங்களா
இருந்தாலும் காயத்ரி, பல்லிகள் நல சங்கத்தில் இருந்து
கவன ஈர்ப்பு தீர்மானம் போட்டு
உங்கள் மேல் கண்டனம் தெரிவித்த தாக சொல்லுவது
பற்றி உங்களின் கருத்து!
எதற்கும் நீங்கள் நமது சங்க "அப்பாவி தங்கமணியிடம்" பல்லிகள் விசயமாக ஒரு வார்த்தை காதில் போட்டு வைப்பது நல்லது என்று
எனக்கு தோன்றுகிறது!

R.Gopi said...

அட.......

சோகத்த கூட எப்படிங்க இவ்ளோ நகைச்சுவையா சொல்றீங்க....