Recent Posts

31 Aug 2010

லில்லி விஜயம்

நம்ம பட்டிக்காட்டான் பட்டினத்தில் வலைபதிவு புகழ் ஜெய்.. 
 "பட்டிகாட்டானும் கீரிப்பிள்ளையும் ...'' என்று ஒரு சூப்பர்
பதிவு போட்டார்...

அப்போ நானும் நெனச்சுகிட்டேன்..என்ன ஒரு பிராணியும்
நம்ம வீட்டுக்கு வரமாட்டேங்குதேன்னு...நேத்து...ஒரே
பேயி மழை ...ம்ம் இப்படி சொல்லனும்னு ஆசைதான்...

நம்ம சென்னை மழை பெஞ்சுது...( அதென்ன சென்னை மழை...
ஊட்டி மழைன்னு ??) அதுவா ஊரெல்லாம் பெய்யும் மழை
வெள்ளமா மாறும்...நம்ம சென்னைல பெய்யற மழை
கானல் நீர் மாதிரி..பெய்யற மாதிரி பெய்யும்...அசையா வெளிய
போனா நின்னுடும்...

அப்படி அடித்துகொண்டிருந்த சென்னை மழையில்...ஒரு குட்டி
பூனை மழையில் நனைந்து ...வீட்டு சிட்அவுட்  ல வந்து ஒதுங்கியது..

சும்மா விடுவோமா....இங்கே வேலை செய்ற பொன்னும் , ஏன் பொண்ணு
சுவர்நாவும் சேர்ந்து அந்த குட்டி பூனையா...வீட்டுக்குள்ள கூடினு வந்து..
.அதுக்கு கீழ படுக்க ஒரு குட்டி பெட்ஷீட் போட்டு..குடிக்க பால் வச்சு.
.ஆ.......ன்னு பாத்துக்கிட்டு இருந்தாங்க...

அதுவோ...ம்ஹும் இதுக்குலாம் மசியல , அதுபாட்டுக்கு டிவி பின்னாடி ...சோபா பின்னாடி கம்ப்யூட்டர் பின்னாடின்னு ஓடுது...எனக்கு வேற ஒரே பயம்...அது ஏன் கம்ப்யூட்டர் கிட்ட போச்சு தெர்யுமா....அங்கே தான் மவுஸ் இருக்கே...ஹா ஹா ஹா (முடியல...வலிக்குது...அழுதுடுவேன்..போரும் )

ராத்திரி பூரா  தூங்கவே முடியல...அந்த பூனை ஒரே கத்தி ஊரக்கூட்டிடுச்சு...பசிக்கு அழுதா..இல்ல அம்மா வேணும்னு அழுதா..இல்ல வேற ஏதான ஒடம்பு சரி இல்லையான்னு ஒன்னும் புரியல...

இதுல அந்த பூனைக்கு லில்லி என்று பேர் கூட வைத்து விட்டார்கள்..எங்க வீட்டு
புத்திசாலிகள்..அதன் அந்த ரெண்டு குட்டி பொண்ணுங்க...

இப்படியே போனா எதோ மிருக வதை செய்றோம்னு யாறன வந்துருவாங்களோன்னு
ஒரே பயம்...ஆமா கூட்டினு வந்து பால வச்சு..பெட் போட்டு தூங்கும்மன்னா...அது எங்கயோ தூசி தும்பு மேல லாம் பொரண்டு வந்து டேபிள் அடில நாளிதழ்கள் மேல வந்து தூங்கிருச்சு...

ஒரு வழியா அந்த பூனையோட அம்மா போனாய் இப்போ தான் வந்துச்சு குட்டிய தேடிகிட்டு..தாயும் சேயும் நலம்..
25 Aug 2010

ஓரம் போ ஓரம் போ 2

என்ன இப்போ என்னை பற்றி உங்களுக்கு தெரிஞ்சுருக்குமே...
ம்ம் நான் அப்போ அடித்த லூட்டிகளுக்கு அளவே இல்லை..

அன்னிக்கி கிழே விழுந்த  தோழிதான் நாங்கள் பள்ளி முடிக்கும் வரை
என் பின்னால் வண்டியில் வந்தாள் ( என்ன ஒரு நட்பு ...)

நமக்கு டபில்சே தகராறு இதுல ட்ரிபிள்ஸ் அடிக்க ட்ரை பண்ணி
அடிச்ச கூத்து இருக்கே !! ( அதுவேறையா?? அடக்கடவுளே இந்த
பொண்ணு தொல்லை தாங்கமுடியலையே ! )

அன்னிக்கு என் இரண்டு தோழிகள் வீட்டுக்கு வந்திருந்தார்கள்..
எங்கேயோ வெளியே ஊர்சுர்ரலாம்னு முடிவு பண்ணி " ஆட்டோ ல
போலாம்டா " என்று சொன்னேன்..அதற்கு என் தோழி " ஹே ச்சே உன் கிட்ட
தான் வண்டி இருக்குல..வா நாம மூணுபேருமே ட்ரிபிள்ஸ் போகலாம்னு
சொன்னா ( அவ சொன்ன உனுகேங்க போச்சு அறிவு ? )

சரி டா போலாம்னு வீரமா வண்டிய எடுத்துகிட்டு வெளியே வந்தேன்.
ஸ்டார்ட் செய்து சிக்னல் காட்ட அவர்களும் அமர்ந்தார்கள்...என்னமோ
மனதுக்கு சரி படவில்லை..நீயே  ஓட்டு வா என்று என் தோழியிடம் வண்டியை கொடுத்தேன்..accelerate பண்ணது மட்டும் தான் ஞாபகம் இருக்கு..

கண்ணை  திறந்து பார்த்தா........

நான் எங்க வீட்டு வாசல்லதான் இருக்கேன்..

எங்க அம்மா போட்ட கோலத்த அப்படி உத்து வாழ்க்கைல பார்த்ததே இல்ல ...

என்ன விசேஷம்னா கோலத்தின் சில என் தாடையில்!! கோலம் konjam
சிகப்பாக மாறி இருந்தது..சரி செம்மண் போட்டுருபாங்கன்னு நெனச்சேன்..

சற்று திரும்பிய் பார்த்தல் வீட்டுக்கு முன் இருந்த சைக்கிள் கடையில் உள்ள
புஞ்சுர் ஓட்டும் இடத்தில் அந்த தண்ணி தொட்டியின் அருகில் ஒரு தோழி..
மெதுவாக எழுந்து கொண்டு இருந்தாள். ஐயோ அவ என்ன செய்றா அங்கே என்று என்னை நானே கேட்டுக்கொண்டு !! ( அவளே கேட்டா தான் உதை விழுமே !!)

சரி நான் ஒருத்தி அவள் ஒருத்தி மற்றவள் எங்கே??? ( நல்ல கேள்வி ! )
கொஞ்ச தூரத்தில் தெரிந்த ஒரு உருவம்..என் ஸ்கூட்டியின் அடியில்
என்னமோ சைடு ஸ்டாண்டை பழுது பார்த்து கொண்டு இருந்தாள்...

அங்கேதான் பொய் பாக்கணுமா..நடு ரோடுல? ...அடி..பாவம் அவ அந்த வண்டி கூடவே போயிருக்கா போல..அங்கே போய் கவிழ்ந்து வண்டி அவ மேல விழுந்து பாவம் எழுந்திருக்க முடியாம முழிக்கிறா...

ஓஹ் என்ன நடந்திருக்கு ??? ...பிளாஷ்பாக்......( பார்த்தவர்கள் சொன்னது..அதான் எதிர் கடையில் இருந்த சைக்கிள் கடையில்
இருக்கும் குட்டி பய்யன்..மற்றும் பலர் )

மூவரும் வண்டியில் ஒக்கார்ந்து..ஓகே என்று சிக்னல்  வருவதற்குள் .ஆர்வக்கோளாரில் ஓவராக accelerate  செய்துவிட்டாள் போல..நான் நடுவில் இருந்தேன் என் பினால் ஒருவள்..

என் பின்னால் இருந்தவள் பறந்து சைக்கிள் கடையில் பொய் விழ நான்
என் வீட்டு வாசலில் இருக்கும் கோலத்தின் மேல் விழுந்திருக்கேன...
வண்டியை ஓட்டியவளோ..வண்டி கூடவே கொஞ்ச தூதரம் போய் அங்கே விழ வண்டி அவள் மேல் விழுந்திருக்கு...

என் கன்னத்தில் ஒட்டியது அம்மா போட்ட செம்மண் கோலம் இல்ல ...
என் கன்னத்தில் அடிப்பட்டு ரத்தம்  கோல  மாவுடன் சேர்ந்து அப்படி ஆகிவிட்டது..

ஒரு வழியாக..மானம் போனது போய்டுச்சு..ஏன் அழனும் என்று சாதாரணமாக மூவரும் எழுந்து நல்ல பிள்ளையாட்டும் வண்டியை வீட்டிலே வைத்து விட்டு..ஆட்டோ பிடித்து ஊர்சுற்ற சென்றோம் ( குப்புற விழுந்து கன்னத்துல
செம்மண் ஓட்டினாலும்..எடுத்த காரியத்தை கைவிடாத தன்மான சிங்கமுல்ல நாங்க !! )

இன்னும் இருக்கு வரேன்ஓரம் போ ஓரம் போ


நான் சென்னை சாலைகளில் வண்டி ஓட்டி ரொம்ப நாள் ஆகிப்போச்சு. 
கிட்டத்தட்ட ஒரு 4 வருஷம்னு வச்சுக்கலாம்... ( ய் நாலு வருஷமா சாலை விபத்துக்கள் அதான் குறைஞ்சு  போச்சுன்னு  சொல்றீங்களோ?? )அதுக்குன்னு ரொம்ப மோசமா எல்லாம் வண்டி ஓட்ட மாட்டேன்..( சொல்லிக்க வேண்டியதுதான் ) 

இன்னைக்கு ஒரு வேலையா ( நம்பிட்டோம் ) என் மாமாவோட வண்டி எடுத்துக்கிட்டு கொஞ்சம் ஊர் சுத்தினேன் ...

அப்படியே மனசுக்குள் கொசுவத்தி சுத்திச்சு...எல்லாரும் எப்படி வண்டி கத்துப்பாங்களோ தெரியாது...நன் கத்துக்கிட்டது ஒரே ஒரு ராத்திரியில் தான்....அப்போ நான் பத்தாம் வகுப்பு படிச்சுட்டு இருந்தேன். என் அப்பாவின் நண்பர் ஒருவர் வண்டி ஓட்ட சொல்லித்தரேன்னு வண்டியை ஸ்டார்ட் செய்து கொடுத்தார், நேரா வண்டி மேல உட்க்கார கூடாது...கொஞ்சமா accelerate பண்ணு ஆனா பிரேக் பிடி, கூடவே ஓடு..என்றார்.
 
நானும் ஒரு ஆறுதரம் தெருமுனை வரை வண்டிகூடவே ஓடி பின்பு உட்கார்ந்து  ஒரு 2  ரவுண்டு ஓட்டினேன்..

ஒருவரால் ஒரே இரவில் ஒருவருக்கு வண்டி ஓட்ட கத்துக்கொடுக்க முடியுமான்னு தெரியல..ஆனா அவர் சொல்லித்தந்தார்..அவர் இப்போ எங்கே இருக்காரோ..ஆனா என்னைப்போல் ஒரு தமாஷான ஆளுக்கு வண்டி சொல்லித்தந்து புண்ணியம் கட்டிகொண்டார்.

இந்த கூத்து நடந்து ஒருமாதம் கூட ஆகவில்லை. இதுல என் தோழியையும் ஏற்றிக்கொண்டு நாங்க ஒரு பட்டாளம் பீச் போக முடிவு செய்தோம்! 

அம்மாவிடம் படிக்க போறேன் மா என்று பொய் சொல்லி விட்டு கிளம்பினேன்.  என் பின்னால்(தைரியமாக உட்கார ஒரு தோழி முன்வந்தார் ( பாவம் ). கிளம்பினோம்..எல்லாம் ஒழுங்காத்தான் போய்கிட்டிருந்துச்சு....நம்ம அடையார் மத்ய கைலாஷ்கிட்ட ( போறது நம்ம பெசன்ட் நகர் பீச் )  போய்கிட்டு இருந்தோம்..

எங்கேந்துதான் வந்தாரோன்னு தெரியல..ஒரு டிராபிக் போலீஸ் வந்து நடுல நின்னுட்டார்....கையை நீட்டிய படியே..( அடக்கடவுளே என் கிட்ட எல் எல் ஆர் கூட இல்லாத விஷயம் யாராவது சொல்லியிருப்பான்களோ ?? இன்சூரன்ஸ் ஆர் சி புக் போன்றவைகள் என்னவென்றே எனக்கு தெரியாது..ஆகமொத்தம் வண்டிக்கு தேவையான ஆவணங்கள் என்னிடம் எதுவுமே இல்ல ) அது மழை பெய்து ஓய்ந்த நேரம் ..ரோடெலாம் ஈரமாக இருந்தது..
 
க்ரீச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்...என்று பலத்த ஆரவாரத்தோட வண்டிய நிறுத்த ...
உடனே வண்டி லேசாகிப்போனது..என்ன வென்றே புரியாமல் நான் விழிக்க...
பின்னாலிருந்து அம்மா என்று ஒரு குரல்..அனைவரும் பதட்டத்தோடு ஏதேதோ கத்த...என்னவென்று திரும்பினா....அவ்வ்வ்வவ்வ்வ்வவ் 

என் தோழி கீழே விழுந்துருக்கா...நான் போட்ட பிரேக் அப்படி...எழுந்து வந்து ஒரே குட்டு நடு மண்டைல...திட்டிக்கொண்டே பின்னால் அமர்ந்து கொண்டாள்.

இதை சற்றும் எதிர்பாராத அந்த போலீஸ் காரர் " என்னம்மா இப்படி பிரேக் போடறே..பரவால்லன்னு போயிருக்கலாம் இல்ல பொறுமையா நிறுத்திருக்கலாம் ...ஏன் இப்படி? ஏதாவது ஆனா யார் பாடல் பதில் சொல்றதுன்னு " 
அவ்ளோ பொறுமையாக சொல்லி விட்டு போனார். ..

 பீச் போனதும் அந்த தோழி என்னை விரட்டி விரட்டி அடித்தது  தனி கதை...

மீதி நிகழ்வுகளை அடுத்த பதிவில் போடறேன் ( ஐயோ இன்னும் ஒன்னா ??? ) 


20 Aug 2010

நண்பர்களே !! இதப்படிங்க

ஹலோ நண்பர்களே ......

காலைல பிபிசி பாத்தீங்களா?? பாக்கலையா??
இன்னிக்கி சூடான செய்தி என்னத்தெரியுமா??
ரொம்ப நாளா எழுத கணினி பக்கமே வராம இருந்த ஏன் அம்மா
ஒருவழியா மனசு மாறி ஒரு வலைபதிவு தொடங்கிருக்காங்க...

நிறைய  கவிதை கதைன்னு எழுதுவாங்க...ஆனா அது யாரையும் போய்
சேர்வதில்லை...அவங்களோட திறமை வெளிப்படனும்..நிறையே பேர் அவங்க
படிப்புக்கள படிச்சு அவங்க எழுத்துக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கனும்னு
எனக்கு ரொம்பவே ஆசை...

நம்மை பெற்றவர்களுக்கு நாம அவ்ளோவா ஒன்னும் பெருசா செவதில்லை
அவங்களும் எதிர்பார்பதில்லை...

இதுவரை ஏன் அம்மாக்காக நான் எதுமே செஞ்சது இல்ல...அட்லீஸ்ட் அவங்களோட திறமைகளை... அவங்க வெளிப்படுத்த  இந்த வலைபதிவு வழியாவது அறிமுக படுத்தலாமேன்னு ஒரு வலைபதிவு துவங்கி கொடுத்திருக்கேன்...

ஏன் மோசமான அரகோர தமிழுக்கு ஆதரவு கொடுங்கும் நீங்க அவங்களோட
அழகான படைப்புக்களுக்கு ஆதரவு தர உங்க அனைவரை வேண்டி கேட்டு கொகிறேன்...

அவங்க வலைபதிவு இதான் ...

http://kavidhaithendral.blogspot.கம

ரொம்ப நன்றிங்க ......


19 Aug 2010

நண்பர் வசந்த் சொன்ன கதை


நண்பர் வசந்த் அவர்கள்..எனது தொடர் பதிவு அழைப்பை ஏற்று அருமையான கதை ஒன்றை எனக்கு மெயில் செய்திருந்தார்...

அவர் இந்த கதையை மிகவும் அழகாகவும் நகைச்சுவையாகவும் எழுதி அசத்தி உள்ளார்... அந்த கதை கிழே ... மக்களே  கண்டிப்பாக  இந்த கதையை படித்து உங்க கருத்தை எழுதுங்க....தவறாம அவர் வலைபதிவுக்கும் சென்று உங்கள் பாராட்டுகளை அவருக்கு தெரிவியுங்கள்....

அவரின் வலைபதிவின் முகவரி : http://uravukaaran.blogspot.com/


              காண்டாமிருகமும் பேபி சோப்பும்
ஒரு காட்டுல  ஒரு காண்டாமிருகம்..அதுக்கு ரொம்ப நாளா பேபி சோப்பு போட்டு குளிக்கனுமுன்னு ஆசையாம்..ஆனால்  காட்டுல கடையே இல்லையாம்..அங்கே ஒரு மங்கி வந்துச்சாம். அந்த மங்கி பேரு சொங்கியாம்.

காண்டாமிருகம் பேரு என்னா தெரியுமா பாப்பா? காண்டாமிருகம் பேரு ரெயின்போ ரேம்போ. அந்த ரெயின்போ ரேம்போ சொங்கியை பாத்து

ஏய் சொங்கி! சொங்கி மங்கி இங்க வால என்னால செய்ற, மரத்துக்கு மரம் தாவிக்கிட்டு? கொஞ்சம் கிட்ட வாயேன். உன் கிட்ட ஒரு விஷயம் சொல்லனும்

ஏய் பெரிசு என்ன விஷயம்

அது நம்ப வடிவேல போல கிண்டல் புடிச்ச மங்கி.

ஏய் சொங்கி தம்பி! எனக்கு ஒரு அசை. அதை உன் கிட்ட சொன்னா, நீ நிறைவேத்தி வைப்பியான்னு? கேட்டிச்சாம் நம்ம ரென்யிபோ ரேம்போ.

இத பார்றா, நம்ம பெருசுக்கு கூட என்னமோ ஆசையா மில்ல. என்ன ஆசை பெருசு. சொல்லு! முடிஞ்சா செய்றேன்னு சொல்லிச்சாம்.

ஒண்ணுமில்ல தம்பி, எனக்கு ரொம்ப நாளா ஒரு ஆசை. பேபி சோப்பு போட்டு குளிக்கனும்னு. பேபி சோப்பு வாங்கலாம்னா, இங்க காட்டில ஒரு கடை கூட இல்ல. நீ தான் அப்பப்ப ஊருக்குள்ள போற இல்ல. அது தான் உங்கிட்ட வாங்கி வர சொல்லலாமுன்னு

ஏய் பெருசு! ஏன் உனக்கு இந்த வேண்டாத ஆசையெல்லாம். அது சரி இந்த ஆசை உனக்கு ஏன் வந்திச்சுன்னு கேட்டது

அதுவா சொங்கி தம்பி! நான் டீவில பார்த்தேன். பேபி சோப்பு போட்டு குளிக்கும் போது கண்ணில சோப்பு பட்டா கூட, அது எரிச்சல் இல்லாம இருக்கும்னு சொன்னாங்க. அன்னில இருந்து தான் இந்த ஆசை.

சரி சரி! அடுத்த முறை நான் ஊருக்குள்ள போகும் போது வாங்கி வர்றேன். அதுக்கு காசு வேணுமில்ல. காசு இருந்தா கொடு, வாங்கி வர்றேன்னு சொல்லிச்சாம் சொங்கி

காசு இருந்தா, நானே போய் வாங்கியிருப்பேன் இல்ல சொங்கி. நீதான் யாருக்கும் தெரியாம பொருள எடுக்கறதில கில்லாடி ஆச்சே. அது தான் உன் கிட்ட சொல்றேன்னு ரெயின்போ ரேம்போ சொல்லிச்சாம்.

சரி, நான் எப்படியாவது வாங்கி வர்றேன்னு சொல்லி ஊருக்குள்ள போச்சாம் நம்ப சொங்கி மங்கி.

போய் பார்த்தா கடை தெருவுல இருக்கிற கடைல எல்லாம், எல்லா பொருளும் அழகா Shelfல அடுக்கி வைச்சி இருக்காங்க. அதுவும் கடைக்கு உள்ள.

அடடே! இப்ப என்னா செய்றது? வெளியில இருக்கிற மாதிரி இருந்தா எடுத்திட்டு வந்திடலாம். எல்லாம் உள்ளே இல்ல இருக்கு. எடுக்க முடியாதே. காசு கொடுத்து தான், வாங்கனும் போல இருக்கேன்னு யோசனை பண்ணிச்சாம்.

சரி! நம்ப கிட்ட இருக்கிற வித்தையை வெச்சு காசு சம்பாதிப்போம்னு சொல்லி, அங்கே இருக்கிற டீ கடைக்கு போச்சாம், நம்ப சொங்கி மங்கி.

போய் வித்தை எல்லாம் ஜோரா காட்டிச்சாம். பல்டி அடிச்சு காட்டிச்சாம், எல்லோருக்கும் சலாம் வைத்து காட்டிச்சாம். எல்லோருக்கும் Shake Hand கூட கொடுத்திச்சாம்.

அதை பாத்த ஜனங்க ரொம்ப சந்தோஷபட்டு, நம்ப சொங்கி மங்கிக்கு பிஸ்கேட்டு, பழம், பன் எல்லாம் கொடுத்தாங்கலாம். எல்லாத்தையும் சந்தோஷமா சாபிட்டிச்சாம். அப்போ சுவர்ணா பாப்பா போல ஒரு குட்டி பொண்ணு நம்ப சொங்கி மங்கிக்கு ஒரு ரூபா காயின் ஒண்ணு கொடுத்திச்சாம்.

அதையும் சந்தோஷமா வாங்கிகிட்டு மளிகை கடைக்கு வந்திச்சாம்.

இப்போ தைரியமா கடையில இருக்கிறவங்கள பாத்து அண்ணாச்சு எனக்கு ஒரு பவுடர் டப்பா, பல் தேய்க டூத் பிரஷ், டுத் பேஸ்ட், ஒரு துணி துவைக்கிற சோப்பு எல்லாம் கொடுங்கன்னு சொல்லிச்சாம்.

அந்த அண்ணாச்சியும் நம்ப சொங்கி மங்கி கேட்டத எல்லாம் கொடுத்தாரு. அப்புறம், இதுக்கெல்லாம் நூறு ரூபா அச்சு, காசு கொடுன்னு கேட்டாரு

அதுக்கு அந்த மங்கி தன் கையில இருந்த ஒரு ருபாய கொடுத்தது.

யேய் குரங்கு! நீ வாங்கி இருக்கிற சாமானுக்கு நூறு ரூபா வேணும். நீ என்ன, ஒரு ரூபாய் கொடுக்கிறன்னு கோபமா கேட்டாரு.

அதுக்கு நம்ப சொங்கி மங்கி ரஜினி ஸ்டைல்ல நான் ஒரு ருபாய் கொடுத்தா நூறு ரூபா கொடுத்த மாதிரி. வர்டான்னு சொல்லி ஒரே ஓட்டமா காட்டு பக்கம் ஓடி போச்சு.

அந்த சொங்கி மங்கி, மத்த சாமானெல்லாம் தன் கிட்ட வெச்சி கிட்டு அந்த துணி துவைக்கிற சோப்ப, அந்த ரெயின்போ ரேம்போகிட்ட கொடுத்தாம்.

அந்த காண்டாமிருகம் அதை ஆசையா வாங்கி, குளிக்கறதுக்காக ஒரே ஓட்டமா குளத்த நோக்கி ஓடிச்சாம்.

அந்த துணி துவைக்கிற சோப்பு போட்டு நல்லா குளிச்சதாம். குளத்தில இருந்து வெளில வரும்போதே ஒரே நமச்சல் தாங்க முடியலயாம். அதுக்கு கை கூட இல்ல இல்ல. எப்படி சொரிஞ்சுக்கும் சொல்லு. பாவமில்ல.  

மரத்துல போய் தேச்சுன்னு இருந்திச்சாம். உடம்பெல்லாம் ரத்தம் வந்திச்சாம்.

காண்டாமிருகம் காண்டாயிடிச்சாம். அந்த சொங்கி மங்கியை விட கூடாதுன்னு பஞ்சாயத்த கூட்டிச்சாம். சிங்க ராஜா தான் அங்க நாட்டாமை.

தீர்ப்ப மாத்தி சொல்லு நாட்டாமைன்னு யாரும் கத்த முடியாது. ஒரே போடு போட்டுடும் நம்ப சிங்க ராஜா. Full Power அதன் கிட்ட இருக்கு

ஏன் இப்படி செஞ்சேன்னு அந்த குரங்க பாத்து கோபமா கேட்டதாம் நம்ப நாட்டாமை.

எல்லோரும் என்னை மன்னிச்சிடுங்கோ. என் விளையாட்டு புத்தியால இப்படி தப்பு நடந்து போச்சு. காண்டாமிருகம் அண்ணன் உடம்பு பூராவும் ரத்த காயமா இருக்கு. அத பார்க்கும் போது எனக்கு அழுகையா வருதுன்னு உண்மையாலுமே வருத்தபட்டு ஓன்னு அழுதிச்சாம் நம்ப சொங்கி மங்கி

அதுக்கு நாட்டாமை, இப்படி எல்லாம் சொல்லி தப்பிச்சுக்க முடியாது. முன்ன என்னாடான்னா ஒரு முறை யானை அண்ணன் வாலுல பட்டாச கட்டி கொளுத்தி உட்ட. அவரு அவ்வளவு பெரிய உடம்ப வைச்சுகிட்டு அலறலோட ஓடினது, இந்த காடே ஏதோ பூகம்பம் வந்த மாதிரி அதிரிச்சு. இப்போ ரெயின்போ அண்ணன் உடம்ப காயம் ஆக்கிட்ட. உனக்கு தண்டனை உண்டு.

போடு தோப்புகரணம்! 100 தோப்புகரணம் போடுன்னு தீர்ப்பு சொன்னாரு நம்ப நாட்டாமை.

சொங்கி மங்கியும் பாவமா முகத்தை வைச்சுகிட்டு ஒரு தரம் தோப்பு கரணம் போட்டதாம்.

அடுத்த நொடி நான் ஒரு தரம் தோப்பு கரணம் போட்டா 100 தரம் போட்ட மாதிரின்னு ரஜினி ஸ்டைல்ல சொல்லி ஒரே ஓட்டமா மரத்து மேல தாவி ஓடிப்போச்சாம்.

எல்லா Animalsக்கும் சிரிப்பு தாங்கலயாம். கோபமா கூடிய பஞ்சாயத்து சந்தோஷ அலறலா மாறி போச்சு. எல்லா Animalsம் சிரிச்சுன்னே மஞ்சல் அரைச்சு காண்டாமிருகம் அண்ணன் காயங்களுக்கு மருந்து போட்டதுங்களாம்.


___________________________________________________________________________________

எப்படி கதை சூப்பரா இருக்குல்ல... கண்டிப்பா உங்க கமெண்ட்ஸ் போடுங்க ...


பின்குறிப்பு : அன்புள்ள தோழர் வசந்த் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்....

18 Aug 2010

ஈ கொண்டுவந்த நல்ல சேதி !!


அன்புள்ள நண்பர்களே , 

எஸ் ஐ ஏம் சபரிங் பிரோம் பிவேர்...ச்சே பழக்க தோஷம் , 
நண்பர்களே ....இன்னிக்கி நம்ம தமிலிஷ் இணைய தளத்திலிருந்து 
ஒரு  கொசு ச்சே ஈ கடுதாசி வந்துச்சு ...அதாங்க ஈ மெயில் !! 

படிச்சுட்டு நம்பவே  முடியல !! அப்படி என்ன எழுதிருந்துதுன்னு 
கேக்கறீங்களா ? அதான் நீங்க அனைவரும் பெரியமனசு பண்ணி , 
என்னையும் ஒரு பதிவாளரா நெனச்சு என் வலைபதிவையும் ,
அங்கீகரித்து வோட்டு போட்டு தேத்தினதுனால ..... 

நம்ம  " வினோத மனிதர்கள் " என்ற பதிவை அவர்களது  HOME PAGE
ல போற்றுக்காங்கோ !!!! 

நண்பர்களே எப்படி நன்றி சொல்லுவதேன்றே தெரியல !! நெஜமாவே 
ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு...மிக்க  நன்றி நண்பர்களே....
உங்கள்  பலரின் பல பதிவுகள் இப்படி பலமுறை வந்திருக்கும் 
ஆனால்  என்னை போன்ற கத்துக்குட்டி பதிவருக்கு இது மிக பெரிய விஷயம்.....

சில பல விஷயங்களினால் மனம் உடைந்து போயிருந்த எனக்கு 
நீங்கள் அனைவரும் கொடுக்கும் ஆதரவினை நினைக்கும் பொழுது 
எனக்கு அழுகையே வருகிறது !! 

இதோ அந்த ஈ கொண்டுவந்த கடுதாசி ......
Congrats!

 Your story titled 'வினோத மனிதர்கள் !!' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 18th August 2010 09:07:02 PM GMTHere is the link to the story: http://ta.indli.com/story/322310

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team 

நம்ப முடியல்ல ?? என்னாலயும் முடியல ......

மிக்க நன்றி Thanks a lot dear friends !! thanks a lot for all your support ....என்றும்  நன்றியுடன்  ,
காயத்ரி

15 Aug 2010

வினோத மனிதர்கள் !!

ஹலோ நண்பர்களே ! என்ன ஒரு ஆறு நாளா ஒரே குஷியா இருந்துர்க்கிங்க போலருக்கே...ம்ம்ம் சென்ற வாரம் எனக்கு கொஞ்சம்..இல்லை ரொம்பவே சோதனையா போச்சு.அதான் இந்த பக்கமே வரமுடியல....

எதோ  ஜோசியர் சொன்னாராம்..

." சார் உங்களுக்கு நேரம் சரி இல்லை...கொஞ்சநாளுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்..அவ்ளோதான் "

" அப்போ அதுக்கப்புறம் டைம் நல்லா இருக்கா ?? "

" இல்லே சார்...இப்போ கொஞ்ச நாளுக்கு கஷ்டமா இருக்கும் அதுக்கப்புறம் அதே பழகிடும் !! "

இப்படிதான்  போகுது வாழ்கை சரியா போயிடும் போயிடுமுன்னு பாத்தா எரிக்குட்டே போகுதே தவிர சரியாகுற மாதிரி தெரியல...
 விடுங்க என்ன செய்ய முடியும் ஆல் டைம்!!!

கடந்த இரண்டு மூன்று நாட்களில் நான் சந்தித்த வினோத மனிதர்களை பற்றி
இப்போ சொல்லபோறேன்...

முதலில் லோக்கல் கடையில்.. 

அம்மணிஅமெரிக்கா பார்ட்டி போல..கடையில் நுழைந்த  சில நொடிகளில் " வாட் ஷாப் இஸ் திஸ் ??? திஸ் இஸ் நாட் தேர் ...தட் இஸ் நாட் தேர் " என்று பீட்டர் விட...

பொறுமை இழந்த கணவன்..." ஹே...என்ன இதனை சீன் போடுற ...ஒரு மாசம் அமெரிக்கா டூர் போயிட்டு வந்ததுக்கு இதனை சீன் ஆகதும்மா பேசாம சிகரமா பில் போட வா இல்லாட்டி நான் வீட்டுக்கு போய்டுவேன் ! " என்று பாயமுடுத்த முனும்னுத்து கொண்டே பின்னாலேயே சென்றார் அந்த பீட்டர் அம்மா !!!

ஹோடேலில் : 

வீடு ஆஸ்பத்திரி என்று அலஞ்சு அலஞ்சு ரொம்ப முடியலன்னு ஹோடேல்லுக்கு போனா....

நான் ஒக்காந்த டேபிள்க்கு எதிர் டேபிளில் ஒரு நடுத்தர வயது ஆண் ஒருவர்
" சூடா  இட்லி வடை கொண்டுவா " என்றார்...சில நிமிடங்கள் கழித்து சர்வர்
அவர் கேட்டதை கொண்டுவந்து வைக்க அதை தொட்ட அந்த மனிதர்
" எனப்பா இது ?? சூடாதானே கேட்டேன்..." என்று அலுத்துக்கொண்டார்..

" சார் பாருங்க சார் இட்லி லேந்து ஆவி பறக்குது..இதுக்கு மேல சூட வேணும்னா அடுப்புத்தான் இருக்கு " என்றார்.( சூப்ர் )

" எனப்பா இட்லில ஆவி பறக்குது காபில ஆவி பறக்குதுன்னு சொல்லி கடசில என்ன ஆவியாக்க வழி பாக்குறே " என்று சொல்லி சிரித்து விட்டார்...என்ன சொல்லுவதேன்று தெரியாமல் சர்வர் எஸ் !!!

 மற்றொரு ஹோடேலில் : 

இடப்பற்றா குறை காரத்தினால் வேறொரு கணவன் மனைவிஅமர்திருந்த இடத்தில் இரண்டு இடம் காலியாக இருக்க அங்கு போய் நானும் அவரும் அமர்ந்தோம்....சாப்பிட்டு முடித்த மனைவியின் தட்டை பார்த்து கணவர்
" என்ன வேணுமோ அதை மட்டும் கேட்டு வாங்கி சாப்புடணும் வேண்டாதத வாங்கி இப்படி மீத்த கூடாதும்மா " என்றார் பாவமாக...

" என்ன வேணும்னு முன்னாடியே தெரிசுக்குற புத்தி இருந்தா நீங்க பொண்ணு பக்க வந்த அன்னிக்கே வேண்டாமுன்னு சொல்லிருப்பேன்..பட்டா தானே தெரியுது " என்றார் மிகவும் சாதரனாமாக ...

பாவம் அந்த மனுஷன் முகம் போன போக்க பக்க எங்களுக்கே பாவமா போச்சு...

சென்னை சின்ன மலை டிராபிக் நெரிசலில் : 

நன்க இருந்த ஆட்டோக்கு பக்கத்துல ஒரு ஜோடிபைக்கில்...

அந்த  பொண்ணு " டேய் ! இப்படியே நிறைய டிராபிக் இருக்குற எடமா பத்து தினமும் வரலாமாம் பாரு எத்தனை நேரம் என்னால உன் கூடவே இருக்க முடியுது,  இத விட்டு சுத்தி சுத்தி டிராபிக் இல்லாத ரூட் லேயே தினமும்கூட்டிட்டு போறியே ! " என்று அலுத்து கொள்ள...

அவன்  "  ஆமா அப்படி போனாவாது உன்ன சீக்கிரமா வீட்டுல விட்டு வேற வேலைய பாக்க போவேன்...இப்படி சதா உன்கூடவே இருக்கனும்முன்னு போன வருதாம் பூரா சுத்தி...இப்போ பாரு..உனுக்கு ஒரு அரியர் இல்லை அனா எனக்கு அரியர தவிர ஒண்ணுமே இல்லையே...இந்த வருஷமாவது நான் தேற வேனாமாடி செல்லம்.." என்று கொஞ்சலாக எஸ் ஆக!! அந்தே பெண் முறைத்துக்கொண்டே எங்கேயோ பார்க்க ஆரம்பித்து விட்டாள்
(  அவன் அவன் கஷ்டம் அவன் அவனுக்கு பாவம் )

என்னமோ  அப்போ அப்போ நம்ம மக்கள் நம் கவலையை சிறிது நேரமாவது மறக்க வழி செய்கிறார்கள்...

9 Aug 2010

என் சா(சோ)தனைகள் பாகம் 2

ஹாய் நண்பர்களே ! நலமா ?? ( நலமா? அப்படின்னா என்னன்னு எங்களுக்கு மறந்தேபோச்சு ! எல்லாம் உன்னாலத்தான் ) ம்ம்ம்
என் சா(சோ)தனைகள் பாகம் ஒன்றுக்கு நீங்கள் கொடுத்த அமோக !?# வரவேற்பும் ஆதரவும் என்னை வெகுவாக பாதித்த காரணத்தினால்…( காரணத்தினால் ???) இதோ என் சா(சோ)தனைகள் பாகம் 2 !!!! ( ஐயோ! தேவுடா என் எங்க மேல இத்தனை நல்ல எண்ணம்?)
ஹலோ எங்கே ஓடறீங்க ??? ஒக்காருங்க படிச்சுட்டு அப்புறமா தலைய பிச்சுக்கிட்டு ஒடுங்க அப்போதான் என் பதிவிற்கு வெற்றி !!
ஒன் டூ த்ரீ சொன்ன ஒடுங்கன்னு நம்ம டெர்ரர் கெளப்பி விட்டுட்டார் சோ…வாய மூடிக்கிட்டு போஸ்ட் க்கு போய்டலாம் ( எப்படிலாம் சின்ன புள்ளைய பாயமுடுத்தி வச்சுருக்காய்கப்பா )
அப்போ நான் விஸ்காம் இரண்டாம் ஆண்டு படிச்சுட்டு இருந்தேன் ( நெஜம்மா படிச்சேன் நம்புங்க ) சைடுல கம்ப்யூட்டர் கோர்ஸ் படிச்சுட்டு இருந்தேன்..அங்கே  *** என் தோழி…அவளும் வேறொரு கல்லூரியில் விஸ்காம் படித்துக்கொண்டு இருந்தாள்…
இரண்டாம் ஆண்டு விஸ்காமில் photography ஒரு பாடம்…அது ஜனவரி மாசம் ரெகார்ட் சப்மிட் செய்ய வேன்டும் என்பதால் அன்று சென்னை மாநகரம் பூராவும் சுற்றி புகைப்படம் எடுக்க காலை ஒன்பது மணிக்கு புறப்பட்டோம்…முதலில் Film வாங்கி லோட் செய்தோம்…
முதல் இடம் : Enviromental pollution காக கூவம் ஆற்றை புகைப்படம் எடுக்க நம்ம காசி திரை அரங்கின் பக்கம் உள்ள கூவ நதிக்கரைக்கு போனோம்…அசலே நாற்றம் குடலை புடுங்க நாங்க எதோ பெரிய Discovery channel புகைப்படக்காரர் என்ற நினைப்போடு கூவத்தில் இறங்காத கொறையா கிட்ட கிட்ட போயி புகைப்படம் எடுத்தோம்!!
அங்கே இருந்த ஒரு பெருசு..” என்னம்மா பொண்ணுங்களா டிவி லேந்து வந்துருக்கீங்களா ?? என்னையும் ஒரு போட்டோ புடிங்க “  என்று சொல்லி கூவத்தில் இறங்கி போஸ் போஸாய் கொடுத்தார்…ஒருவழியாக அங்கே சீன் போட்டு ..
நம்ம கிண்டி இண்டஸ்ட்ரியல் ஏரியாவுக்கு சென்றோம் அங்கே மாஞ்சு மாஞ்சு புகைப்படம் எடுத்து..கடைசியா “ ஹே அந்த கேட் பாரேன் நல்ல இருக்கு டிசைன் வா ஒரு கிளிக் பண்லாம் “  என்று சம ஸ்டைலா போய் காமெராவை எடுத்ததுதான் தாமதம் அங்கேந்து ஒரு செக்யூரிட்டி ஓடி வந்து ஒரே கத்து “  இருங்க இருங்க யாரு நீங்க??  இது என்ன இடம் தெரியுமா??? ***** ஓட இடம் இங்க போட்டோலாம் எடுத்தா வீடுபோய் சேரமாட்டீங்க ஓடு “ என்று கத்திய கத்தில் அந்த இடத்தில் இருந்து ஸ்கூட்டியில் பறந்து நேராக பெசன்ட்நகர் சென்றோம்…அங்கே உள்ள குப்பத்தின் உள்ளே சென்று குழந்தைகளை எல்லாம் கூட்டி வந்து கிரிகெட் ஆடு கபடி ஆடு அப்படி இப்படி என்று வறுத்தெடுத்து சில புகைப்படங்களை எடுத்தோம்..
கடைசியாய் அங்கே உள்ள உடைந்த பாலத்தில் கேமெராவுடன் சென்றோம்..பாவம் அங்கே ஒரு காதல் ?!# ஜோடி ஒன்று ***** எங்களை பார்த்து அவர்களும் நாங்கள் எதோ பத்திரிக்கை நிருபர்கள் என்று எண்ணி ஏமாந்து எ;அறி அடித்துக்கொண்டு ஓடினார்கள்…என்ன பெருமையோ தாங்க முடியாமல் அங்கேயே ஒக்காந்து கடல் அலை என்று கிளிக் கிளிக் கிளிக்… அங்கேயும் ஒரு குரல் “ யார் யாரம்மா நீங்க, வயசுப் பொண்ணுங்க இப்படி தனியா ஆள் நடமாட்டம் இல்லாத எடத்துக்குல்லாம் வந்துட்டு அப்புறமா எங்க உயிரை எடுங்க அவன் பத்தான் இவான் கையை புடிச்சான்னு போங்கம்மா “ என்று ஒரு காவலாளி மிரட்ட….அங்கேந்து ஓடு…
கடைசியாய் சென்னை வெய்யிலில் ஒருவழியாக வருப்பட்டு போட்டோ ஸ்டுடியோவுக்கு சென்று ஸ்டைலா “ எச்சுச்மீ…என்னகு நாளைக்குள இதுல இருக்கறது எல்லாம் ஒரு கான்டாக்ட் பிரிண்ட் போட்டு குடுங்க என்று சவுண்ட் விட்டோம் “  மொத்தல்ல பிலிம்ம குடும்மா என்று அலுத்துக்கொண்டார்…
தோழியும் அவள் காமேரவிளிருந்து பிலிமை எடுத்து கொடுத்தார்..நான் என் காமெராவை தொரந்தேனா….!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
அதிர்ச்சி..பிலிமை நான் ஒழுங்காக லோட் செய்யவில்லை…!!!!
அப்போ நான் எடுத்த எதுமே விழலையா ??? ஐயோ ஒரு நிமிடம் இதயம் நின்னே போனது !! அவளோ எனக்காக மிகவும் வருந்தினாள்..ஆனா அந்த கடைகாரர் சிரித்துவிட்டார்!! ( தேவையா தேவையா ?? கிளாஸ்ல தூங்காதே தூங்கதென்ன கேட்டியா இப்போ பாரு ஒரு பிலிம் லோட் பண்ண தெரியல என்ன விஸ்காம் படிச்சு என்ன கிழிக்க போறே என்று என்னை நானே நொந்துகொண்டேன் !! )
என்னை தேற்றுவதற்காக …வாடி நாம நைட் போட்டோ எடுப்போம் ஒரு பன்னிரண்டு மணிக்கு கேளம்பாலாம் என்று சொன்னா…நைட் பன்னிரண்டுக்கு??? அவ அப்பா அம்மா ஊர்ல இல்லை இது ஒரு சாக்கு “ போட்டேன் போன் வீட்டுக்கு…*** வீட்டுல யாரும் இல்லை துணைக்கு அங்கே தங்கவா”  ன்னு கேட்டு அப்படி இப்படி கெஞ்சி ஓகே வாங்கினேன் !
சரியா ராத்திரி ஒரு பதினோரேமுக்காலுக்கு அங்கேந்து கேளம்பிய் நேரா அவ அண்ணன் வீட்டுக்கு போயி அவ அண்ணனை துணைக்கு கூப்பிட்டோம்…அவனோ பாவம் தூங்கிகிட்டு இருந்தா போல பேயாடும் தூங்கிகிட்டே வந்து கார்ல ஒக்காந்து தூங்க ஆரம்பிச்சுட்டான்…
நேரா நுங்கம்பாக்கம் அண்ணாசாலை அருகில் உள்ள flyover ல ஏறி கார ஓரமா நிறுத்திட்டு கேமரா ஓட எறங்கி கிளிக் கிளிக் கிளிக்
“ ஹலோ !!! “ என்று ஒரு பெரிய கனத்த கொவமான குரல்..திரும்பினா நம்ம அமெரிக்கன் கவுன்சில் ( அதான் நீளமா கியு நிக்குமே விசா வாங்க ) அதே தான்…செக்யூரிட்டி!!!!! நாசமபோச்சு என்ன இன்னிக்கி ஒரே செக்யூரிட்டி ??? ஹலோ வாட் ஆர் யு டூயிங் ??? ஹு ஆர் யு ? ஆர் யு பிரோம் பிரஸ் ??? ஆர் யு மெம்பர் ஒப் ஏணி டெர்ரர்ரிஸ்ட் குரூப் ( டெர்ரர்ரிஸ்ட் ??? ஐயோ இதுக்கு பிரஸ்சே பரவால்ல ) என்று அதட்ட அப்பார்வயாய் முகத்தை வைத்துக்கொண்டு ?! வி ஆர் ச்டுடேன்ஸ் என்று ஐடி கார்டை காட்டினோம்..அப்போதான் சாந்தமானார்….ஏதான கவுன்சில் பக்கம் ச்னாப் எடுத்தீங்களா?? கேமரா பிலிம் குடுத்துட்டு போங்க என்றார் ( ஐயோ இந்த பிலிமும் போச்சா??? ) இல்ல சார்…மோர்…என்று கால்ல விழத குறையா கெஞ்சி பிலிம் தராமல் எஸ்கேப் !! ( நெஜமாவே நாங்க கவுன்சில போட்டோ எடுக்கல நம்புங்க )
இத்தனை நடந்தும் அவள் அண்ணன் தூக்கம் கலையவில்லை…அப்படியே நம்ம கடற்கரை மய்லாபூருன்னு சுத்தி இரவில் நகரம் எப்படி இருக்குன்னு கிளிக் …
எல்லாம் முடிஞ்சு புகைப்பட விவா…அந்த வாத்தியார் தான் external  அவர் ஒரு டெர்ரர்..நாமதான் ப்ரின்சி கிட்டயே பாயப்படுறது இல்லை இது என்ன பிரமாதமுன்னு ஸ்டைலா உள்ள போனேன்…சிட் டௌன் ஷோ மீ யுவர் ரெகார்ட் என்று கனத்த குரலில் மிரட்ட ..ரெகார்ட குடுத்தேன்..அவர் உடனே ஒரு கமேரவ எடுத்து என் கையில் குடுத்து எல்லாத்தையும் கிழற்றி திரும்ப மாட்டு என்றார் ( நாசமா போச்சு…கருவாடனது நானா ?? மீனா ?? என்று தெரியாத அளவிற்கு சென்னைய சுத்தி சுத்தி போட்டோ எடுத்தா இந்தாளு என்னடான்னா இப்படி ஆணி புடுங்க வச்சுடாறேன்னு பீலிங்கா போச்சு…ஒருவழியா தட்டு தடுமாறி முழு கேமெரா வக்கி அவர் கையில குடுத்தா…யு மெ கோ நொவ் என்றார்..தூக்கிவாரி போட்டது..வாட்?? no questions from my record ?? “ என்று ஆர்வக்கோளாறில் கேட்டு விட்டேன்…அவர் சிரித்துக்கொண்டே…இல்லம்மா என் நண்பன் ஸ்டுடியோ வச்சுருக்காண்..அவன் கிட்ட உன்ன மாதிரி ஒரு பொண்ணு போயிருக்கு பிரிண்ட் போட பாத்தா அந்த பொண்ணு பிளிம்மக்கூட ஒழுங்கா லோட் பண்ணலயாம்…எதோ விஸ்காம் மாணவி என்று சொன்னார் …எப்படியும் நீங்க ஒன்னு சொந்தமா போட்டோ எடுப்பீங்க இல்லை யார்டயாவது காசு குடுத்து ரெகார்ட ..இந்த ரெகார்ட் பார்த்து நான் மதிப்பெண் குடுக்கறதா இல்லை..அதான் எல்லாரையும் கமேரவ பத்தியாவது தெரிஞ்சா போரும்னு இப்படி செய்ய சொல்றேன் “ என்றார்
நான் …………வெளியே வந்த எனக்கு அவர் சொன்னது என்னைத்தான இல்லை என்னைப்போல் ஜீவிகள் இருக்கிறார்களா என்று புரியாமல் அழுவதா சிரிப்பதா என்று தெரியாமல் திருட்டு முழி முழித்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்…அன்று பூரா தூங்கவே இல்லை…
ஆனா ஒன்னு சொல்லிக்கறேன் “  நான் அவள் இல்லை!!  “
கருத்து :
கேமெரா வாங்கினா பிலிம் போட வேண்டாத கமேராவா வாங்குங்க !
தனிய பொண்ணுங்க ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு போகாதீங்க..
தேவை இல்லாமல் external கிட்ட கேள்வி கேக்காதீங்க…அவரே கேக்கல அப்புறம் என்ன ??
நான் அவள் இல்லை என்று சொன்னால் நம்புங்க …
உச்ச்ச்ச்ச்ஸ் ரொம்ப எழுதிட்டேன்…இப்போ நீங்க எழுதுங்க கருத்துக்களை , திட்டுக்களை , பாராட்டுக்களை etc etc 

8 Aug 2010

மீ அண்ட் தொகு

ம்ம தலைப்ப பார்த்தா எதோ பெரிய்ய சினிமா படப்பெயராட்டும் இருக்கு..அந்த லூசுத்தனமான intro சாங் எல்லாம் இங்கே கிடையாது..( ஆமா அது ஒண்ணுதான் கொறைச்சல் வேளக்கென்ன…)
இது ரொம்ப நல்ல இறுக்கே வரிசையா தொடர்பதிவா எழுதிட்டே போனா நல்லாத்தான் இருக்கு..ஐடியாக்கு யோசிக்க வேண்டாமுல்ல..( ஆமா அப்படியே தொடர் பதிவுக்கு கூப்பிட்டா மட்டும் என்ன பெருசா நடக்க போகுது..காதுல வர ரத்தம் வரத்தான் போகுது !! )
வார்னிங் : பெரிய்ய்ய்ய்ய்ய்ய பதிவு கைல காபி தண்ணி ஏதான வச்சுக்கிட்டு அப்புறமா படிக்க ஆரம்பிங்க
சரி சரி பாவம் சந்தியா மாமி அசையா எழுத சொல்லிருக்காங்க
இடம் : பல்பு டிவி ஸ்டுடியோ ( பின்ன பிபிசி லேந்தா கூப்பிடுவாங்க ??? )
தொகுப்பாளர் : பெயர் என்னவா இருந்த எனா ஆள் ஜம்முன்னு இருக்கருல்ல ஹா ஹா ( எவனாச்சும் இருந்தாதானே சொல்ல முடியும் இல்லான இப்படித்தான் சமாளிக்கன்னும்.. கண்டுக்கப்பிடாது..)
அண்ட் மீ தி மொக்கை காயத்ரி…
ஒன் டூ த்ரீ கோ..
தொகுப்பாளர் : வணக்கம் நேயர்களே…இந்த வார மொக்கை பதிவர் நிகழ்ச்சிக்கு உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..நமது பல்பு டிவியில முதல் முறையாக , என் அகில உலக தொல்லை ச்சே தொலைகாட்சியிலேயே முதல் முறையாக..( அங்கேந்து கேமராமேன் செய்கி காட்டுகிறார்..” யோவ் பொறுமையா..இந்த பொண்ணுக்கு இதுலாம் ஓவர்..அந்த பேஜ் அடுத்த வார மொக்க பதிவருக்கான இன்ட்ரோ..” )
என் மின்ட் வாய்ஸ்: அடப்பாவிகளா அப்போ எனக்கில்லையா…ஒருவேளை இன்னும் கம்பீரமா ஏதேனும் இருக்குமோ  ??
தொகுப்பாளர் : வணக்கும் நேயர்களே…இந்த வார மொக்க பதிவர் நிகழ்ச்சிக்கு வர வேண்டிய பதிவாளர் மலேரியா வந்து மல்லாக்க படுத்து கிடப்பதால்…இப்பொழுது நாம் மொக்கை பதிவர் காயத்ரி அவர்களை சந்திப்போம் ( ஹோடெல்ல சரக்கு காலியானா உப்புமா போடறது இல்லையா அதுமாரிதான்..)
தொடருகிறார்….
இனி தொகுப்பாளர் தொகு என்று அழைக்க படுவார்..
வணக்கம் காயத்ரி
மீ : ஹாய் வணக்கம்
தொகு :   எப்படி இருக்கீங்க ( நீங்க நல்லாத்தான் இருகீங்க நாங்க தான் உங்க பதிவ படிச்சுபுட்டு பைத்தியமா திரியறோம் )
மீ : நல்ல இருக்கேன்..நன்றி
தொகு : நிகழ்ச்சிக்கு போவோமா..எல்லாம் வழக்கமான கேள்விதான்..
முதல் கேள்வி.. வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
மீ : காயத்ரி
தொகு : அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?
மீ : ஆமாம் என் உண்மையான பெயரும் அதான் ( உண்மையான பெயரை வச்சே யாருக்கும் என்ன தெரியல இதுல புனை பெயர் வச்சா…) பதிவில் அந்த பெயர என் வச்சென்னா எனக்கு பொய் சொல்ல பிடிக்காது ( அடிங்கு….அப்போ நேத்து ஹோடெல்ல நான் டைடிங்ல இருக்கேன்னு சீன் காட்டிப்புட்டு ஒரு ஜூஸ் குடிச்சுப்புட்டு… வீட்டுல போயி நடு ராத்திரி பிரிட்ஜ் லேந்து கைல கடச்சதேல்லாம் உள்ள தள்ளினியே படுபாவி )
3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.
மீ : ஒஹ் அது ஒரு ஆக்சிடென்ட்….நான் ஒரு பெரியா ஹார்ட் சர்ஜன் ஆகணு முன்னு….( சுருதி குறைகிறது…ஏன்னா தொகு முறைக்குது !! ) நெனைச்சேன்..ஆனா விஸ்காம் படிச்சு..கடசில இப்படி ஒரு பதிவாளர் ஆகிவிட்டேன்..
ஏன்னா நான் பேசறத கேக்க யாருமே இல்லாத ஒரு ஊருக்கு போயி செட்டில் ஆகிவிட்டோன் ( இந்தியா இப்போத்தான் நிம்மதியா இருக்கு ) எப்படியான நான் உளறுவத யாரான கேட்கனுமுன்னு ஒரு வெறியோட வந்தேன்…இன்னும் வெறியோட இருக்கேன்..( ஐயோ!! என்னடா இது பதிவர கூப்ட சொன்னா வெறி சொரின்னு பாயமுடுத்துதே இந்த பொண்ணு..பெண்ணா பேயா??)  
தொகு :  உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?
ம்ம எல்லாம் இறைவன் செயல் , இறைவனுக்கு அடுத்த படியா என் பதிவுலக நண்பர்கள் செயல் ( ஆமா பொழச்சு போகட்டும் பொண்ணு என்று பாவப்பட்டு…பரிதாபப்பட்டு…வெக்கப்பட்டு.. வேதனைப்பட்டு….. துயரப்பட்டு…துக்கப்பட்டு ..எதோ பின்னூட்டம் போடுராய்ங்க!!)
நானா ஒண்ணுமே செய்யல தான எதோ வண்டி ஓடுது ( அடிப்பாவி..அண்டப்புழுகி ஆகாசப்புழுகி…உன் பதிவ எல்லாரும் படிக்கணும் என்பாதுக்காக பதிவு பதிவா போயி பின்னூட்டம் போட்டு என் பதிவுக்கு வா வான்னு கூபிட்டே…)
நான் இன்னும் பிரபலம் ஆகவில்லை…ஆகினா சொல்றேன்…
தொகு :  வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?
மீ :  இந்த வலைப்பதிவே என் சொந்த கதை தானே..அதுல என்ன சொந்த விஷயம் இரவல் விஷயம்ன்னு ??? எனக்கு என் சொந்த மனசுல தொனுவதை சொந்த கையால..சொந்த லேப்டாப்ல டைப் பண்ணி போடறேன் ( அப்போ மத்தவங்க எல்லாம் என்ன ஆள் வச்சா டைப் செய்து போடறாங்க ரொம்பத்தான்..)
விளைவு என்ன ?? நல்ல விளைவுத்தான்…இப்பொழுது கூட என் பர்ஸ்சை தொலைச்சுட்டு ( PAN card , atm card , health card and cash all missing )  சுட சுட ஒரு பதிவு போட்டு உதவி கேட்டேன்…கேட்டேன் நொடிகளிலேயே..நண்பர்கள் ஜெய்லானி , அருன்ப்ரசாத் மற்றும் ஜெய் அவர்கள் உதவிக்கு வந்து என் குழப்பத்தை தீர்த்து வைத்தனர்.. இவங்களுக்கும் மற்றும் எனக்கு பின்னூட்டம் போடும் அனைத்து நல்ல உள்ளங்களுக்காக…
ஆகையால் என் சொந்த விஷயங்களை பகிர்ந்து கொள்வதால்
எனக்கு நன்மையே தவிர இதுவரை கொலை மிரட்டல் வரவில்ல..ஆனால் இப்பொழுதுதான் நாற்ப்பது கொல்லையர்களிடமிர்ந்து தப்பித்து வந்தேன்..( அந்த கதை தனிக்கதை )
தொகு :  நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?
மீ :  நான் அச்சுவலா ரொம்ப பிஸி ( தொகுப்பாளர் கையில் கட்டை எடுப்பது போல் லுக் விடுகிறார் ) ம்ம இப்போ தற்சமயம் யாருக்கும் என்னுடன் நேரம் செலவிட முடியாமல் போவதால் பொழுதை கழிக்கவும் , தனிமை உணர்வை குறைக்கவும் தான் பதிவெழுதுகிறேன்.
நிறைய சம்பாதிதிருக்கிறேன்…நண்பர்கள்….அக்கா அண்ணா என்று சொந்தங்கள்…கியுட் தோழிகள் என்று நிறைய சம்பாதித்து இருக்கிறேன்..
மற்றபடி எதுவும் இல்லை வேணும்னா என் பேங்க் அக்கௌன்ட் நம்பர் தரேன் எப்படி வசதி ?? கணக்கு காட்ட இல்லை மாமூல் வாங்க !! ஹா ஹா…( ஆளவிடு !! )

தொகு :  நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?
மீ :  இருங்க என் மேனேஜர்ர கேட்டு சொல்றேன்….செல்போன் எடுத்து கையில் வரும் நும்பேரை சுழற்றுகிறேன்..( dial செய்த என்னை சரி பார்க்கவும்…Please check the number you have dialed !! … அடடா பல்பா போச்சே !!! …. ) கட்டிக்க மட்டோமுல்ல..) ஹீ ஹீ அவர் பிஸியாம்…ஐ
தின்க் ஒரே ஒரு வளய்பதிவுதன்னு….ஆப் தி ரெகார்ட் வச்சுக்கோங்க…என்று ரகசியமாக சொல்லிவிட்டு…
( சத்தமாக…)அது ஒரு 99 இருக்கும்…கூடிய விரைவில் நூறாவது வளய்பதிவை தொடங்கிடுவேன்…கமல் சார கூப்பிட்டு  திறப்பு விழா நடத்தலாமுன்னு நேத்து அவருடன் இன்டர்நெட்டில் சாட் செய்து கேட்டேன் ( இது கமல் சாருக்கு தெரியுமா??? )…கூடிய விரைவில் அறிவிப்பேன்..( யார் டா அங்கே கட்ட சைக்கிள செயின் எல்லாத்தையும் ரெடி பண்ணுங்க டா…அந்த அருவாவ தட்டி வை..என்று தொகு எஸ் எம் எஸ் செய்வது பொண்ணுக்கு தெரியாது ) 
தொகு :  மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு இது கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?
மீ : கோபமா அப்படின்னா ?? ஒஹ் யு மீன் angry ??  ம்ம்ம் சில சமயம் வரும்..தேவை இல்லாமல் சண்டை போடுவது..தகாத வரத்தை பின்னூட்டங்கள் போடுவது..பிறர் மனது புண்படும் வகையில் எழுதுவது போன்ற காரியம் செய்பவர்களை கண்டால் மட்டும் கோவம் வரும்..( நீ எல்லார் நேரத்தையும் வீனடிக்கவே எழுதிரியே உன்ன என்ன செய்றது ??? )
பொறாமை..ம்ம்ம்ம் அனைவரும் சொல்லும் அதே பதில் தான் அனைவரின் எழுத்துக்களின் மீதும் ஒரு ஈர்ப்பு உள்ளது..எப்படித்தான் இப்படிலாம் யோசிக்கராய்ந்க்களோ தெரியல..நிறைய பின்னூட்டங்கள் பெரும் பதிவு எழுதுபவர்கள்..( உனுக்கு ஒன்னு வந்தாலே அது சாதனை ) குறிப்பாக நகைச்சுவையாக எழுதும் அனைவரின் மீதும் ஒரு பொறாமை இருக்கத்தான் செய்கிறது…what to do ?? am just an ordinary girl..
தொகு : உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..
மீ : முதல் முதலில் பின்னோட்டம் போட்டது என்று சொன்ன அது என் மாமி சந்தியா அவர்கள் தான்…வணக்கம் என்று என்னை அறிமுக படுத்தி கொண்ட பதிவுக்கு இதுதான் அது
sandhya on 24 June 2010 06:07 said... [Reply]
வாங்க வாங்க எவ்ளோ நாளா காத்திடிருந்தேன் ...தமிழ் லே தான் எழுதணம்..கொங்கனி பெண்ணானா நானே எழுதறேன் அப்புறம் பச்சை தமிழச்சி நீங்க எழுதாமல் வேறே யாரு எழுதுவாங்க?? “
தமிழ் தெரியுதோ இல்லையோ இதுக்கப்புரமும் நான் தமிழ்ல எழுதாட்ட நல்ல இருக்காதுன்னு தான் இந்த தமிழ் பதிவுல இறங்கினேன்..
என்னை ஊக்க படுத்திய நண்பர்கள்  கார்த்தி ( LK) , தக்குடுபாண்டி , ஜெய் , புன்னகை தேசம் , சித்ரா , அப்பாவி தங்கமணி , சீனா ,  அருண் பிரசாத் ,  பிங்கி ரோஸ் , காலநேசன் ,  கௌசல்யா , ஆதவன் , ஸ்ரீராம் , ஜெய்லானி , பட்டாபட்டி , மங்குனி அமைச்சர் , பாலா , சௌந்தர் , மாதவன் , ரமேஷ் ரொம்ப நல்லவன் , ஆனந்தி ,வெங்கட், பிரசன்னா , கவிதா ஆர் கோபி , டேர்றோர் பாண்டியன் , சிவா , பிரியா , சுகன்யா , சுசி , கணேஷ் , வினு..யார் பெயரான விட்டு போயிருந்தா மன்னிக்கவும். சொல்லுங்கள் சேர்த்து விடுகிறேன்..( அப்பாடா ஒரு ஜூஸ் ப்ளீஸ் ) 
டிஸ்கி :  இதுல விளையாட விரும்பவில்லை ஸோ... இந்த பதில் மட்டும் சீரியஸ் !!
தொகு : கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...
மீ :  நான் பொறந்தது அமெரிக்கவுல ( !!!! அதேப்போ நடந்துது?? ) பேசினது ஐநா சபாயில ,  நடந்தது Formula One race track la (  அடுக்குமா கொஞ்சமான லாஜிக் இருக்கா ?? ) , படிச்சது harvard universityla ( என்னால முடியல காதுல ரத்தமும் கண்ல தன்னியுமா வாயா பொளந்துக்கிட்டு தொகு பாக்குது பாவமா ! ) நேத்து கூட என் தோழி பிறந்தநாள் பார்டிக்காக லண்டன் போயிட்டு…..( தொகு தொல்லை தாங்க முடியாம நாற்காலிய விட்டு எழுந்துக்க பார்கிறார்…)
ஐயோ இருங்க எங்கே போறேங்க ஐ வாஸ் ஜஸ்ட் கிட்டிங்…நான் பொறந்து வளந்து நடந்து ஓடி ஆடி…விஸ்காம் படிச்சு புன்னாக்கானது எல்லாம் சென்னைல தான்..இப்போ ஷார்ஜால ஷேக்க்கு பிசினெஸ் கவுன்சிலரா இருக்கேன்..நேத்து கூட ஒபாமாவுக்கு உப்புமா செய்ய சொல்லித்தந்தேன்!! ( ஐயோ அவரைக்கூட விட்டு வைக்கலியா நியி?? )…வீட்டுக்கு nutritionistaவும் அப்போ அப்போ அக்கௌன்டன்ட்டாவும் , சில சமயம் painteraவும் , photographerஆவும் , இப்போ வலைபதிவு பதிவாலராவும் இருக்கேன்…முக்கிய வேலை என்றா freelance graphics and Web designing…இப்போதிக்கு என் பாஸ் என் பொண்ணு சுவர்ணா தான்…

7 Aug 2010

எங்கே போச்சு ??

எனக்கொரு உண்மை தெருன்ஜாகனும் ?? என் பர்ஸ்ஸ கானனோம் !!! எங்கே போச்சு .???.உள்ள பான் கார்ட் , இருக்கு!! என்ன செய்யணும்...ஒண்ணுமே புரியல..டென்ஷன்நாவும் ,  பயமாவும் இருக்கு..நண்பர்களே உதவுங்கள்...நான் என்ன செய்ய வேன்டும்..எப்படி புது PAN card அப்பிளை செய்வது???
பிளேஸ் ஹெல்ப் மீ Am afraid and tensed... 
நன்றி நண்பர்களே...என் பர்ஸ் காணவில்லை...ஆனால் எல்லா கார்டும் கிடைத்து விட்டது..கடவுள்தான் காப்பாத்தினார்...இருக்கிற ரெண டென்ஷன் நீங்கள் அனைவரும் அறிந்ததே...எனக்காக வேண்டிக்கொண்ட நண்பர்களே...பின்னூட்டம் இட்ட தோழி தோழர்களே நன்றி...அனால் அதில்  இருந்த பணமும் பர்சும் மாயம்...கஷ்ட காலத்திலும் நல்ல காலம்...நன்றி
5 Aug 2010

நானும் நாப்பது கொள்ளையர்களும்


தங்கமணி அக்கா ஒரு அருமையான தொடர் பதிர்விர்க்கு என்னைஅழைத்திருக்கிறார்..என்னன்னு கேட்கறீங்களா..
நான் ஒரு கொள்ளை கும்பல் கிட்ட சிக்கிகிட்டேன் ( பாவம் அந்த கொள்ளை கும்பல் !! ) என் கிட்ட செல் போன் , ஆயுதம் எதுவும் இல்லை , நான்  இருக்கற எடத்துல எந்த தகவல் தொடர்பு சாதனமும் இல்ல ( ஐயோ அப்போ என் வலைபதிவு ? ). கண்ணுக்கு எட்டின தூரம் வரை சுத்தியும் வெறும் காடு. காட்டோட எல்லை முழுக்க மின்சாரவேலி ( நாசமா போச்சு !! ). என்ன  ஒரு இருட்டு ரூம்ல அடிச்சு வெச்சு இருக்காங்க...
எப்படி தப்பிச்சு வருவேன் ( வருவேனா ?? ) பாப்போம்...
ஸ்டார்ட் கேமரா..
என்னக்கு  நானே பேசி கொள்கிறேன்..( டுபுக்கு தனியா இருக்கும் போது யார் குட பேசறது ??? ) அடக்கடவுளே இந்த கொள்ளையர்களுக்கு பெயருக்காவது மூளை வச்சுருக்க கூடாதா ??? போயும் போயும் என்னையா கடத்தணும்விதி யார விட்டது? பெரிய பார்ட்டியா யாரான தூக்கிருந்தா பரவால்ல..பயபுள்ளைங்க புதுசு போல அதன் என்ன போய் கடத்தி வச்சுகிட்டு 
தேவு காத்து கிட்டு இருக்காய்ங்க..ஒரு பய வரபோறது இல்லை.. இவனுங்களுக்கு வேன் காசு கூட மிஞ்சாது...ஹா ஹா ( வீரப்பா மாதிரி சிரிக்கிறேன் ) 
டக் டக் என்று காலடி சத்தம் கேட்கிறது.....மெதுவா..கதவ தொறந்து ஒருத்தன் உள்ள வரான் கையில எதோ பொட்டலம்...
அவன் : “ இந்தா சாப்டு....வாய மூடிகிட்டு கெட...பதிவெழுதி மக்களை  துன்புருத்தினேல ..அதான் இப்போ நல்ல மாட்டினியா இனி உலகம் சந்தோஷமா இருக்கும் ..”
நான் : “ என்ன அது கைல நான் சுத்த சைவம் தெரியுமா
அவன் : “ தெரியும் தாயி... தயிர் சாதமும் மாங்கா ஊறுகாயும் தான்...முஞ்சிய பாரு உனுக்கு இதுவே ஓவர்..”
 அவன் அந்த பொட்டலத்தை என்னிடம் தருகிறான்...
நான் :  “ நான் சாப்டமாட்டேன்..இதுல என்ன கலந்து இருக்கே...? ”
அவன் : “ ம்க்கும்....இது ஒண்ணுதான் கொறச்சல்...ஏற்கனவே உனுக்கு தீனி போட்டு இருந்த காசெல்லாம் கரைஞ்சு போச்சு..நாங்க போயி பிச்சை தான் எடுக்கணும்..இதுல விஷம் வாங்க ஏது காசு ??? 
நான் : “ மொதல்ல நீ தின்னு தின்னுட்டு நீ உயிரோட இருந்தா நான் சாப்பிடறேன்.... ( அதான் ரூமு இருட்டா இருக்குல்லே..சோ மூணு நாளுக்கு முன்னாலஅவன் குடுத்த சாப்பாட்ட அவனுக்கு குடுக்க ..அந்த லூசும்அதை தின்னுட்டு கிழே விழறான்.. அவனுக்கு ஜலதோஷம் அதான் நாற்றம் தெரியல...அவ்வ்வ்வ்வ் )
மெதுவா வெளியில போயி பாத்தா அங்கே அந்த  கொள்ளையர்கள் மீட்டிங் போட்டு பேசிக்கொண்டு இருக்கிறார்கள்...
ஒருவன் : “ தலைவா..அந்த பொண்ண கடத்திட்டு வந்து ஒரு வாரமா ஆகுது நூறு போன் போட்டாச்சு..அவ வீட்டுலே ஒரு பாசிடிவ் ரெச்போன்சும் இல்லை. 
அடுத்தவன் : “ ஆமா தலைவா நானும் போன் போட்டு பாத்தேன்..அவ தங்கச்சி எடுத்தா...உன் அக்காவ நாங்கதான் கடத்தி  வச்சுருக்கோம் , மரியாதையா ஒரு கோடி குடு , இல்லை உங்க அக்கா..ன்னு முடிக்கல அதுக்குள்ள அய்யா நீங்கத்தானா அது ?? நல்ல காரியம் செஞ்சீங்க நாங்க  இப்போத்தான் சந்தோஷமா இருக்கோம்..அதுல மண்ணள்ளி போட்டுடாதீங்க..ன்னு சொல்லிப்புட்டு கட் பண்ணிபுட்டா..( அடி நல்லவளே இரு இரு வந்து வச்சுக்கறேன் ! ) 
அடுத்தவன்  : அது பரவா இல்லை..அவ தொல்லை தங்கல..தனியா போர் அடிக்குது துணைக்கு அவ மாமி சந்தியா வையும் கடத்துன்னு சொல்லுறா..( ஐயோ சொல்லிட்டானே....மாமி கேட்டா இனி சூப்பர் முருங்கைஇலை தோசை கிடைக்காதே...தோசை போச்சே..சண்டாளா...) 
அடுத்தவன் : இன்னும் ஒரு படி மேலே போயி " பதிவுலக நண்பர்கள் அனைவரையும் கடத்து ஜம்முன்னு பொழுது போகும்...ஒட்டு மொத்த தமிழ்நாடும் உங்க மேல ஆர்வமா ஆயிடும் ! டிவி ல கூட சொல்லு வாங்க !..அப்படி இப்படின்னு சொல்லறா..”    ( அட நாசமா போறவனே..போட்டு குடுத்துட்டியா...ஐயோ வர நாலு பெரும் இனி வரமாட்டாங்க..பின்னூட்டம் போச்சே.....தவள வாயா..) 

அடுத்தவன் : “ இது எல்லாத்த விடவும் கொடுமை என்ன தெரியுமா...வரப்போகிற ஹாரி  பாட்டர் படத்துக்கு முதல் நாள் முதல் ஷோ டிக்கெட் வாங்கி கொடு..இல்லனா பட்டு பாடுவேன்னு அடம்புடிச்சு பாடி ரகள பண்ணி புட்டா..
அத கேட்ட நம்ம பயலுங்க பன்னிரெண்டு பேரு காதுல மூக்குல வாயில ரத்தம் கக்கி இப்போ ஆஸ்பத்திரில உயிருக்கு போராடிக்கிட்டு இருக்காய்ங்க..அல்ரியடி பத்து பேரு செத்து போயிட்டானுக்க. ( ஹை டென் டௌன்..12 சத்தியிமா பிழைக்காது..உள்ள ஒருத்தன் இந்நேரத்துக்கு போய் சேர்த்திருப்பான் ! ஆகமொத்தம் ( a+b)2 = ( 2 ab + 2 idly + sambhar + chutney ) ச்சே   ஐயோ..உனக்குத்தான் கணக்கு வரதே இதுல இந்த டிரிக்நாமேண்டோரி ச்சே அல்ஜீப்ரா தேவையா ?? ..பாதிபேர் காலி அவ்ளோதான் )  
 அடுத்தவன் : “ ஆமா இப்படித்தான்.....”
தலைவன்  : போதும் நிறுத்துங்க ( அதானே பச்ச புள்ளைய பத்தி ஆளாளுக்கு வத்தி வச்சா எப்படி அதான் எனக்கு ஒரு சப்போர்ட் இருக்குல்ல !! ) நானே நொந்து போயிருக்கேன்..அந்த பொண்ணு ஏசி வேணும் லேப்டாப் வேணும்,....8 mbps இன்டர்நெட் வேணும்.... , பிச்சா வேணும்... , அது வேணும் இதுவேனும்முன்னு , கேட்டு தொல்லை பண்றா..நான் அந்த பக்கம் போறதா இல்லை ( அது !!!! அந்த பயம் இருக்கட்டும் ராச்கோல் !! பிச்சுப்புடுவேன் பிச்சு ! ) 
நீங்க யாரா போயி அவளை வீட்டுல விட்டுட்டு திரும்பிய் பார்க்காம வந்துருங்க...ப்ளீஸ் ( ஐயோ பாவாம் ) இல்லை அந்த ரூம் கதவ திறந்து வைங்க..”

ஒருவன் : “ பாஸ் அந்த ரூமுக்கு தப்பாள் இல்லை 
( ஆஹா ஒரு வாரம் பூட்டாத அறையிலா இருந்தேன்?? நல்லவனே )

தலைவன் ( சற்று கடுப்பாய் ) : “ அந்த மின்சார வேலில இருந்து 
மினசாரத்த துண்டிச்சுருங்க.. தான எங்கயாவது போயிடட்டும் 

மற்றொருவன் : “ தலைவா... அது சும்மாத்தான் கெடக்கு..சென்னைலேயே  பவர் இல்லையாம்..இதுல கட்டுலையா இருக்கபோவுது...” ( ஒரு வார்த்தை சொன்னாலும் ஷோக்கா சொன்னே )
தலைவன் ( இன்னும் கடுப்பாகி ): “ சரி சரி அங்கே நம்ம வண்டி ஒன்ன  சாவியோட நிறுத்திவை போய் தொலையட்டும் ( நீ ரொம்ப நல்லவன்டா !! )  
அடுத்தவன் : “ ஆனா தலைவா...நாம இருக்கறது எ வி எம் ஸ்டுடியோல... (!!!!!!!!) கட்டுக்கு போனா பெட்ரோல் காசு செலவாகுமுன்னு... காலியா இருந்த காட்டு செட்டுக்கு யாரும் வரதில்லேன்னு தெரிஞ்சு .....அன்னிக்கி ராத்திரி இங்கே வண்டிய திருப்பிட்டேன்..” ( அட சிக்கன சிகாமணி )
தலைவன் மாரடைப்பு வந்து இறந்து போகிறான்...மற்றவர்கள் பய்தியமாகிறார்கள்.( பின்ன என்ன ஆகும் ?? )
 என்ன இருக்கு தப்பிக்க பெருசா...அதன் சிம்பிள்ளா போச்சே...கொஞ்சம் நடக்க
கண்ணில் ஒரு கதவு தென்படுகிறது..வெளியே வந்து சந்தோஷமா வீட்டுக்கு போரேன்...வர்ட்டா...டாட்டா...
என்ன தங்கமணி அக்கா சரியா ????