Recent Posts

9 Aug 2010

என் சா(சோ)தனைகள் பாகம் 2

ஹாய் நண்பர்களே ! நலமா ?? ( நலமா? அப்படின்னா என்னன்னு எங்களுக்கு மறந்தேபோச்சு ! எல்லாம் உன்னாலத்தான் ) ம்ம்ம்
என் சா(சோ)தனைகள் பாகம் ஒன்றுக்கு நீங்கள் கொடுத்த அமோக !?# வரவேற்பும் ஆதரவும் என்னை வெகுவாக பாதித்த காரணத்தினால்…( காரணத்தினால் ???) இதோ என் சா(சோ)தனைகள் பாகம் 2 !!!! ( ஐயோ! தேவுடா என் எங்க மேல இத்தனை நல்ல எண்ணம்?)
ஹலோ எங்கே ஓடறீங்க ??? ஒக்காருங்க படிச்சுட்டு அப்புறமா தலைய பிச்சுக்கிட்டு ஒடுங்க அப்போதான் என் பதிவிற்கு வெற்றி !!
ஒன் டூ த்ரீ சொன்ன ஒடுங்கன்னு நம்ம டெர்ரர் கெளப்பி விட்டுட்டார் சோ…வாய மூடிக்கிட்டு போஸ்ட் க்கு போய்டலாம் ( எப்படிலாம் சின்ன புள்ளைய பாயமுடுத்தி வச்சுருக்காய்கப்பா )
அப்போ நான் விஸ்காம் இரண்டாம் ஆண்டு படிச்சுட்டு இருந்தேன் ( நெஜம்மா படிச்சேன் நம்புங்க ) சைடுல கம்ப்யூட்டர் கோர்ஸ் படிச்சுட்டு இருந்தேன்..அங்கே  *** என் தோழி…அவளும் வேறொரு கல்லூரியில் விஸ்காம் படித்துக்கொண்டு இருந்தாள்…
இரண்டாம் ஆண்டு விஸ்காமில் photography ஒரு பாடம்…அது ஜனவரி மாசம் ரெகார்ட் சப்மிட் செய்ய வேன்டும் என்பதால் அன்று சென்னை மாநகரம் பூராவும் சுற்றி புகைப்படம் எடுக்க காலை ஒன்பது மணிக்கு புறப்பட்டோம்…முதலில் Film வாங்கி லோட் செய்தோம்…
முதல் இடம் : Enviromental pollution காக கூவம் ஆற்றை புகைப்படம் எடுக்க நம்ம காசி திரை அரங்கின் பக்கம் உள்ள கூவ நதிக்கரைக்கு போனோம்…அசலே நாற்றம் குடலை புடுங்க நாங்க எதோ பெரிய Discovery channel புகைப்படக்காரர் என்ற நினைப்போடு கூவத்தில் இறங்காத கொறையா கிட்ட கிட்ட போயி புகைப்படம் எடுத்தோம்!!
அங்கே இருந்த ஒரு பெருசு..” என்னம்மா பொண்ணுங்களா டிவி லேந்து வந்துருக்கீங்களா ?? என்னையும் ஒரு போட்டோ புடிங்க “  என்று சொல்லி கூவத்தில் இறங்கி போஸ் போஸாய் கொடுத்தார்…ஒருவழியாக அங்கே சீன் போட்டு ..
நம்ம கிண்டி இண்டஸ்ட்ரியல் ஏரியாவுக்கு சென்றோம் அங்கே மாஞ்சு மாஞ்சு புகைப்படம் எடுத்து..கடைசியா “ ஹே அந்த கேட் பாரேன் நல்ல இருக்கு டிசைன் வா ஒரு கிளிக் பண்லாம் “  என்று சம ஸ்டைலா போய் காமெராவை எடுத்ததுதான் தாமதம் அங்கேந்து ஒரு செக்யூரிட்டி ஓடி வந்து ஒரே கத்து “  இருங்க இருங்க யாரு நீங்க??  இது என்ன இடம் தெரியுமா??? ***** ஓட இடம் இங்க போட்டோலாம் எடுத்தா வீடுபோய் சேரமாட்டீங்க ஓடு “ என்று கத்திய கத்தில் அந்த இடத்தில் இருந்து ஸ்கூட்டியில் பறந்து நேராக பெசன்ட்நகர் சென்றோம்…அங்கே உள்ள குப்பத்தின் உள்ளே சென்று குழந்தைகளை எல்லாம் கூட்டி வந்து கிரிகெட் ஆடு கபடி ஆடு அப்படி இப்படி என்று வறுத்தெடுத்து சில புகைப்படங்களை எடுத்தோம்..
கடைசியாய் அங்கே உள்ள உடைந்த பாலத்தில் கேமெராவுடன் சென்றோம்..பாவம் அங்கே ஒரு காதல் ?!# ஜோடி ஒன்று ***** எங்களை பார்த்து அவர்களும் நாங்கள் எதோ பத்திரிக்கை நிருபர்கள் என்று எண்ணி ஏமாந்து எ;அறி அடித்துக்கொண்டு ஓடினார்கள்…என்ன பெருமையோ தாங்க முடியாமல் அங்கேயே ஒக்காந்து கடல் அலை என்று கிளிக் கிளிக் கிளிக்… அங்கேயும் ஒரு குரல் “ யார் யாரம்மா நீங்க, வயசுப் பொண்ணுங்க இப்படி தனியா ஆள் நடமாட்டம் இல்லாத எடத்துக்குல்லாம் வந்துட்டு அப்புறமா எங்க உயிரை எடுங்க அவன் பத்தான் இவான் கையை புடிச்சான்னு போங்கம்மா “ என்று ஒரு காவலாளி மிரட்ட….அங்கேந்து ஓடு…
கடைசியாய் சென்னை வெய்யிலில் ஒருவழியாக வருப்பட்டு போட்டோ ஸ்டுடியோவுக்கு சென்று ஸ்டைலா “ எச்சுச்மீ…என்னகு நாளைக்குள இதுல இருக்கறது எல்லாம் ஒரு கான்டாக்ட் பிரிண்ட் போட்டு குடுங்க என்று சவுண்ட் விட்டோம் “  மொத்தல்ல பிலிம்ம குடும்மா என்று அலுத்துக்கொண்டார்…
தோழியும் அவள் காமேரவிளிருந்து பிலிமை எடுத்து கொடுத்தார்..நான் என் காமெராவை தொரந்தேனா….!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
அதிர்ச்சி..பிலிமை நான் ஒழுங்காக லோட் செய்யவில்லை…!!!!
அப்போ நான் எடுத்த எதுமே விழலையா ??? ஐயோ ஒரு நிமிடம் இதயம் நின்னே போனது !! அவளோ எனக்காக மிகவும் வருந்தினாள்..ஆனா அந்த கடைகாரர் சிரித்துவிட்டார்!! ( தேவையா தேவையா ?? கிளாஸ்ல தூங்காதே தூங்கதென்ன கேட்டியா இப்போ பாரு ஒரு பிலிம் லோட் பண்ண தெரியல என்ன விஸ்காம் படிச்சு என்ன கிழிக்க போறே என்று என்னை நானே நொந்துகொண்டேன் !! )
என்னை தேற்றுவதற்காக …வாடி நாம நைட் போட்டோ எடுப்போம் ஒரு பன்னிரண்டு மணிக்கு கேளம்பாலாம் என்று சொன்னா…நைட் பன்னிரண்டுக்கு??? அவ அப்பா அம்மா ஊர்ல இல்லை இது ஒரு சாக்கு “ போட்டேன் போன் வீட்டுக்கு…*** வீட்டுல யாரும் இல்லை துணைக்கு அங்கே தங்கவா”  ன்னு கேட்டு அப்படி இப்படி கெஞ்சி ஓகே வாங்கினேன் !
சரியா ராத்திரி ஒரு பதினோரேமுக்காலுக்கு அங்கேந்து கேளம்பிய் நேரா அவ அண்ணன் வீட்டுக்கு போயி அவ அண்ணனை துணைக்கு கூப்பிட்டோம்…அவனோ பாவம் தூங்கிகிட்டு இருந்தா போல பேயாடும் தூங்கிகிட்டே வந்து கார்ல ஒக்காந்து தூங்க ஆரம்பிச்சுட்டான்…
நேரா நுங்கம்பாக்கம் அண்ணாசாலை அருகில் உள்ள flyover ல ஏறி கார ஓரமா நிறுத்திட்டு கேமரா ஓட எறங்கி கிளிக் கிளிக் கிளிக்
“ ஹலோ !!! “ என்று ஒரு பெரிய கனத்த கொவமான குரல்..திரும்பினா நம்ம அமெரிக்கன் கவுன்சில் ( அதான் நீளமா கியு நிக்குமே விசா வாங்க ) அதே தான்…செக்யூரிட்டி!!!!! நாசமபோச்சு என்ன இன்னிக்கி ஒரே செக்யூரிட்டி ??? ஹலோ வாட் ஆர் யு டூயிங் ??? ஹு ஆர் யு ? ஆர் யு பிரோம் பிரஸ் ??? ஆர் யு மெம்பர் ஒப் ஏணி டெர்ரர்ரிஸ்ட் குரூப் ( டெர்ரர்ரிஸ்ட் ??? ஐயோ இதுக்கு பிரஸ்சே பரவால்ல ) என்று அதட்ட அப்பார்வயாய் முகத்தை வைத்துக்கொண்டு ?! வி ஆர் ச்டுடேன்ஸ் என்று ஐடி கார்டை காட்டினோம்..அப்போதான் சாந்தமானார்….ஏதான கவுன்சில் பக்கம் ச்னாப் எடுத்தீங்களா?? கேமரா பிலிம் குடுத்துட்டு போங்க என்றார் ( ஐயோ இந்த பிலிமும் போச்சா??? ) இல்ல சார்…மோர்…என்று கால்ல விழத குறையா கெஞ்சி பிலிம் தராமல் எஸ்கேப் !! ( நெஜமாவே நாங்க கவுன்சில போட்டோ எடுக்கல நம்புங்க )
இத்தனை நடந்தும் அவள் அண்ணன் தூக்கம் கலையவில்லை…அப்படியே நம்ம கடற்கரை மய்லாபூருன்னு சுத்தி இரவில் நகரம் எப்படி இருக்குன்னு கிளிக் …
எல்லாம் முடிஞ்சு புகைப்பட விவா…அந்த வாத்தியார் தான் external  அவர் ஒரு டெர்ரர்..நாமதான் ப்ரின்சி கிட்டயே பாயப்படுறது இல்லை இது என்ன பிரமாதமுன்னு ஸ்டைலா உள்ள போனேன்…சிட் டௌன் ஷோ மீ யுவர் ரெகார்ட் என்று கனத்த குரலில் மிரட்ட ..ரெகார்ட குடுத்தேன்..அவர் உடனே ஒரு கமேரவ எடுத்து என் கையில் குடுத்து எல்லாத்தையும் கிழற்றி திரும்ப மாட்டு என்றார் ( நாசமா போச்சு…கருவாடனது நானா ?? மீனா ?? என்று தெரியாத அளவிற்கு சென்னைய சுத்தி சுத்தி போட்டோ எடுத்தா இந்தாளு என்னடான்னா இப்படி ஆணி புடுங்க வச்சுடாறேன்னு பீலிங்கா போச்சு…ஒருவழியா தட்டு தடுமாறி முழு கேமெரா வக்கி அவர் கையில குடுத்தா…யு மெ கோ நொவ் என்றார்..தூக்கிவாரி போட்டது..வாட்?? no questions from my record ?? “ என்று ஆர்வக்கோளாறில் கேட்டு விட்டேன்…அவர் சிரித்துக்கொண்டே…இல்லம்மா என் நண்பன் ஸ்டுடியோ வச்சுருக்காண்..அவன் கிட்ட உன்ன மாதிரி ஒரு பொண்ணு போயிருக்கு பிரிண்ட் போட பாத்தா அந்த பொண்ணு பிளிம்மக்கூட ஒழுங்கா லோட் பண்ணலயாம்…எதோ விஸ்காம் மாணவி என்று சொன்னார் …எப்படியும் நீங்க ஒன்னு சொந்தமா போட்டோ எடுப்பீங்க இல்லை யார்டயாவது காசு குடுத்து ரெகார்ட ..இந்த ரெகார்ட் பார்த்து நான் மதிப்பெண் குடுக்கறதா இல்லை..அதான் எல்லாரையும் கமேரவ பத்தியாவது தெரிஞ்சா போரும்னு இப்படி செய்ய சொல்றேன் “ என்றார்
நான் …………வெளியே வந்த எனக்கு அவர் சொன்னது என்னைத்தான இல்லை என்னைப்போல் ஜீவிகள் இருக்கிறார்களா என்று புரியாமல் அழுவதா சிரிப்பதா என்று தெரியாமல் திருட்டு முழி முழித்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்…அன்று பூரா தூங்கவே இல்லை…
ஆனா ஒன்னு சொல்லிக்கறேன் “  நான் அவள் இல்லை!!  “
கருத்து :
கேமெரா வாங்கினா பிலிம் போட வேண்டாத கமேராவா வாங்குங்க !
தனிய பொண்ணுங்க ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு போகாதீங்க..
தேவை இல்லாமல் external கிட்ட கேள்வி கேக்காதீங்க…அவரே கேக்கல அப்புறம் என்ன ??
நான் அவள் இல்லை என்று சொன்னால் நம்புங்க …
உச்ச்ச்ச்ச்ஸ் ரொம்ப எழுதிட்டேன்…இப்போ நீங்க எழுதுங்க கருத்துக்களை , திட்டுக்களை , பாராட்டுக்களை etc etc 

44 கருத்துக்கள்:

ஸ்ரீராம். said...

படிக்க சுவாரஸ்யமாக இருந்தது. அந்த நேரம் உங்களுக்கு டென்ஷன் பாதி பயம் பாதி என்று இருந்திருக்கும்..!

Gayathri said...

@ஸ்ரீராம். nadri sriram....thanks

Gayathri said...

@ஸ்ரீராம். ஆமாம் கண்டிப்பா அப்படித்தான் இருந்துது...இப்போ நெனச்சா சிரிப்பா வருது

வெங்கட் said...

ஹி., ஹி., ஹி..!!

இதே மாதிரி தான்
நானும், என் நண்பனும்
Bangalore Tour போயிட்டு
சுத்தி., சுத்தி போட்டோ
எடுத்தோம்...

ஊருக்கு வந்ததுக்கு அப்புறம் தான்
தெரிஞ்சது Film ஒழுங்கா
Load பண்ணாத விஷயமே..!!

இதுல Beauty என்னான்னா...
நாங்க ஆளுக்கு ஒரு Camera
கொண்டு போயிருந்தோம்..
ரெண்டுமே அப்படிதான்....

ஏன்னா ரெண்டுலயுமே
Film Load பண்ணினது
அடியேன் தான்...!!

Gayathri said...

@வெங்கட் அடடா...கொடுமை...அப்போ நீங்களும் நம்ம செத்துதான..வாங்க வாங்க...
நன்றி..

தேவன் மாயம் said...

அப்பாவியை இரவில் எழுப்பி...............ஓவர் பிலிம்!!!

Gayathri said...

@தேவன் மாயம் aamaa appo athulaam oru thrill ippo avlo dheiriyamlaam illa..nandri

Madhavan said...

Digital camera.. No film, no problem.. he... he.... still one may not have loaded the battery or memory card.. or both.. Same Blood.. Same effect..

priya.r said...

உங்கள் சிரமங்களையும் நகைச்சுவையாக சொன்ன விதம் நன்றாக இருந்தது .
காயத்திரியின் கலக்கல் தொடரட்டும்.

☀நான் ஆதவன்☀ said...

சூப்பர் :))))) படிக்க விறுவிறுப்பா இருந்துங்க

Gayathri said...

@Madhavan yes thats possible...நன்றி

Gayathri said...

@priya.r பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி தோழி...

Jey said...

வர வர நகைச்சுவை அதிகமாகி, லொல்லு வேர கூடி போச்சி..., கலக்குங்க அம்மனி:)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நல்லா இருக்கு. பாராவா பிரிச்சு எழுதுங்க ப்ளீஸ்..

Gayathri said...

@Jey
ஹீ ஹீ நன்றி...மிக்க நன்றி...தானா லொள்ளு செந்துர்ச்சு தெரியாம நடந்துடுச்சு...

Gayathri said...

@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சரி கண்டிப்பா இனி ஒழுங்கா பிரிச்சு எழுதறேன்...நன்றி ப்ரோ

kavisiva said...

காயத்ரி நல்லா நகைச்சுவையோட எழுதியிருக்கீங்க. வாழ்க்கையில் ரொம்பவே ஓடி ஓடி உழைச்சிருக்கீங்க போல :).

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//கேமெரா வாங்கினா பிலிம் போட வேண்டாத கமேராவா வாங்குங்க ! ///

உங்களை மாதிரி அறிவு ஜீவிகளுக்காகவே டிஜிட்டல் கேமரா கண்டு பிடிச்சாங்க..

Balaji saravana said...

நல்லா இருக்கு காயத்ரி..
//கேமெரா வாங்கினா பிலிம் போட வேண்டாத கமேராவா வாங்குங்க !
தனிய பொண்ணுங்க ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு போகாதீங்க..
தேவை இல்லாமல் external கிட்ட கேள்வி கேக்காதீங்க…அவரே கேக்கல அப்புறம் என்ன ??
நான் அவள் இல்லை என்று சொன்னால் நம்புங்க …//
அந்த கடைசி மட்டும் நம்பவே முடியலையே ஹி ஹி ஹி :)

ganesh said...

இதுவும் உங்களின் ஒரு சோ(சா)தனை தான் )))))

மற்றவர்களை சிரிக்க வைப்பதுவும் ஒரு (சோ)சாதனைதான்...

(இப்போது நான் செய்வது...ஒரு கையால் கண்ணில் வடியும் ரத்த கண்ணீரை துடைத்து கொண்டே..POST COMMENT என்ற BUTTON ஐ மற்றொரு கையால் கிளிக் செய்கிறேன்)))))

வெறும்பய said...

படிக்க மிகவும் சுவாரசியமாக இருந்தது..

ஆனால் எழுத்துக்கள் ஒரே நெருக்கமாக இருக்கிறது...

சில சமயம் படித்த வரிகளையே திரும்பவும் படிக்க நேரிடுகிறது...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

http://sirippupolice.blogspot.com/2010/08/blog-post_6895.html

இங்க வாங்க உங்களை பத்தி சொல்லிருக்கேன்...

அருண் பிரசாத் said...

ரொம்ப லேட்டா வந்துட்டேன். ஓட்டு போடுறதுல மறுபடி பிரப்ளம், தமிழ் இண்ட்லி பட்டன், சேருங்க english Indli button முதல்ல இருந்து ஆரம்பிக்குது

Ram said...

Nalla s(o)athanaithan.. Google readerla padikirathala pinnutam poda mudiyala... Thodarnthu ungakitta neraya ethirparkiren

Anonymous said...

காசி தியேட்டர் பக்கம் கூவமா?
என்னம்மா கதை விடுறே?
அது அடையாறு னு தெரியாதா?

Gayathri said...

@kavisiva ஹா ஹா உண்ணும ஓடிக்கிட்டே இருக்கேன் தோழி,,,இப்போ ஆஸ்பத்திரிக்கும் வீட்டுக்கும்..மாமனார் உடல் நலமில்லாமல் இருக்கிறார்...

Gayathri said...

@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) அப்போ கூட மாதவன் சார் சொன்னார் போல் ஆகலாமே...

Gayathri said...

@Balaji saravana அடக்கடவுளே..நம்புங்கப்பா...நன்றி

Gayathri said...

@ganesh ஆஹா அவ்ளோ அழ உட்டேனா??? இனி கொஞ்ச நாளுக்கு குட்டி குட்டி போஸ்டா போடறேன்...நன்றி

Gayathri said...

@வெறும்பய மன்னிக்கவும் சரி செய்து விடுகிறேன் இனி...நன்றி

Gayathri said...

@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) என் இப்படி...நான் தமிழ் சொல்லித்தந்து பணம் தரேனா?? என்கே யாரான தமிழ் சொல்லித்தரனும்...என் மேல உங்களுக்கு இருக்கும் நம்பிக்கைக்கு நன்றி...

Gayathri said...

@அருண் பிரசாத் ஐயோ எனக்கு தெரியல தேடிப்பார்த்தேன்...ஆங்கில வோட் பட்டன் தான் வருது...கூடிய விரைவில் சரி சாய்கிறேன்....

Gayathri said...

@Ram
மிக்க நன்றி...பரவாயில்லை கஷ்டப்பட்டு இவ்ளோ எழுதிருக்கேள் மிக்க நன்றி

Gayathri said...

@Anonymous ஹா ஹா பாஸ்...அங்கே இருக்குறது அந்த கூவத்துடைய கிளை நதி....( அது மிக மிக அசுத்தமாக உள்ளது ஆதான் கூவம் என்று நினைத்தேன்...)

vinu said...

மாநகரம் பூராவும் சுற்றி புகைப்படம் எடுக்க காலை ஒன்பது மணிக்கு புறப்பட்டோம்…முதலில் Film வாங்கி லோட் செய்தோம்…
முதல் இடம் : Enviromental pollution காக கூவம் ஆற்றை புகைப்படம் எடுக்க நம்ம காசி திரை அரங்கின் பக்கம் உள்ள கூவ நதிக்கரைக்கு போனோம்…அசலே நாற்றம் குடலை புடுங்க நாங்க எதோ பெரிய Discovery channel புகைப்படக்காரர் என்ற நினைப்போடு கூவத்தில் இறங்காத கொறையா கிட்ட கிட்ட போயி புகைப்படம் எடுத்தோம்

i am sorry intha line padikkirappavea neenga kudutha build upla klimax identify aayuduchhu better luck next time, unga kitta innum konjam niraiya eathirpaarkirom and bottom of the postla irruntha "Stress redution Kit" really wonderfull idea.

wowy

Gayathri said...

@vinu
ஆஹா இதன் சொந்த காசுல சஊண்யம் வச்சுகுரதா ??? நல்லது...ஹா ஹா நன்றி

Anonymous said...

காயத்ரி நல்லா இருக்கு உன் போட்டோ எடுக்க போன விசேஷங்கள் ..

வாத்தியார் சொன்னா பொண்ணு நீ தானே ?நீ பட்ட அவஸ்தே எல்லாம் தமாஷா சொன்னியே இது சூப்பர்
கமெண்ட் லேட் ஆ எழுதினதுக்கு சாரி

Gayathri said...

@sandhya அடக்கடவுளே எதுக்கு நமக்குள்ள இதெல்லாம்...அலறியடி உங்கள சுவர்ணா ரொம்ப படுத்தறா அதுனாலத்தானே நீங்க பிஸி..ஐ கேன் அண்டர்ஸ்டாண்ட்...நன்றி....

☀நான் ஆதவன்☀ said...

நீங்க சார்ஜால இருக்கீங்களா? இந்த வெள்ளிகிழமை சார்ஜால பதிவர் சந்திப்பு & இஃப்தார் நடக்க இருக்கிறது. கலந்து கொள்ள விருப்பமென்றால மெயில் பண்ணுங்க சகோ. aadhavanssk@gmail.com

siva said...

HM....

innum ungakita erunthu supper mokkaiya ethir parkiren..

"gadavuley enniya kappathu"

TERROR-PANDIYAN(VAS) said...

ஓட்டு போட்டேன். ஏற்கனவே பல பேரு கும்மி இருக்காங்க... (அடி பலமோ?) அதனால நான் ஒன்னும் சொல்லல.. பொழச்சி போங்க...

மங்குனி அமைசர் said...

நான் அவள் இல்லை ///
நம்பிட்டோம் ,
நம்பிட்டோம் ,
நம்பிட்டோம் .

அப்புறம் இத கேமரா கேமரான்னு நிறைய வாட்டி சொல்லி இருக்கீங்க அப்படின்னா என்னா ?

அப்பாவி தங்கமணி said...

ஹா அஹ அஹ.... யாருங்க உங்களுக்கு டிகிரி குடுத்த புண்ணியவான்... கேமராவ கழட்டி மாட்டினீங்களா.. இதை நாங்க நம்பணும்?என்ன கொடும காயத்ரி இது? ஹா ஹா ஹா

ரகுநாதன் said...

உண்மையச் சொல்லுங்க...காமெராவ கழட்டுனீங்களா...இல்லை காமெரா பவுச் கழட்டி மாட்டுனீங்களா.... :)


//கேமெரா வாங்கினா பிலிம் போட வேண்டாத கமேராவா வாங்குங்க ! //
எந்தக்காலத்துல இருக்கீங்க...செல்போன்ல படம் பட்டய கிளப்புது... சும்மா பிலிம் காட்டாதீங்கப்பா...ஹிஹிஹி...