Recent Posts

25 Aug 2010

ஓரம் போ ஓரம் போ 2

என்ன இப்போ என்னை பற்றி உங்களுக்கு தெரிஞ்சுருக்குமே...
ம்ம் நான் அப்போ அடித்த லூட்டிகளுக்கு அளவே இல்லை..

அன்னிக்கி கிழே விழுந்த  தோழிதான் நாங்கள் பள்ளி முடிக்கும் வரை
என் பின்னால் வண்டியில் வந்தாள் ( என்ன ஒரு நட்பு ...)

நமக்கு டபில்சே தகராறு இதுல ட்ரிபிள்ஸ் அடிக்க ட்ரை பண்ணி
அடிச்ச கூத்து இருக்கே !! ( அதுவேறையா?? அடக்கடவுளே இந்த
பொண்ணு தொல்லை தாங்கமுடியலையே ! )

அன்னிக்கு என் இரண்டு தோழிகள் வீட்டுக்கு வந்திருந்தார்கள்..
எங்கேயோ வெளியே ஊர்சுர்ரலாம்னு முடிவு பண்ணி " ஆட்டோ ல
போலாம்டா " என்று சொன்னேன்..அதற்கு என் தோழி " ஹே ச்சே உன் கிட்ட
தான் வண்டி இருக்குல..வா நாம மூணுபேருமே ட்ரிபிள்ஸ் போகலாம்னு
சொன்னா ( அவ சொன்ன உனுகேங்க போச்சு அறிவு ? )

சரி டா போலாம்னு வீரமா வண்டிய எடுத்துகிட்டு வெளியே வந்தேன்.
ஸ்டார்ட் செய்து சிக்னல் காட்ட அவர்களும் அமர்ந்தார்கள்...என்னமோ
மனதுக்கு சரி படவில்லை..நீயே  ஓட்டு வா என்று என் தோழியிடம் வண்டியை கொடுத்தேன்..accelerate பண்ணது மட்டும் தான் ஞாபகம் இருக்கு..

கண்ணை  திறந்து பார்த்தா........

நான் எங்க வீட்டு வாசல்லதான் இருக்கேன்..

எங்க அம்மா போட்ட கோலத்த அப்படி உத்து வாழ்க்கைல பார்த்ததே இல்ல ...

என்ன விசேஷம்னா கோலத்தின் சில என் தாடையில்!! கோலம் konjam
சிகப்பாக மாறி இருந்தது..சரி செம்மண் போட்டுருபாங்கன்னு நெனச்சேன்..

சற்று திரும்பிய் பார்த்தல் வீட்டுக்கு முன் இருந்த சைக்கிள் கடையில் உள்ள
புஞ்சுர் ஓட்டும் இடத்தில் அந்த தண்ணி தொட்டியின் அருகில் ஒரு தோழி..
மெதுவாக எழுந்து கொண்டு இருந்தாள். ஐயோ அவ என்ன செய்றா அங்கே என்று என்னை நானே கேட்டுக்கொண்டு !! ( அவளே கேட்டா தான் உதை விழுமே !!)

சரி நான் ஒருத்தி அவள் ஒருத்தி மற்றவள் எங்கே??? ( நல்ல கேள்வி ! )
கொஞ்ச தூரத்தில் தெரிந்த ஒரு உருவம்..என் ஸ்கூட்டியின் அடியில்
என்னமோ சைடு ஸ்டாண்டை பழுது பார்த்து கொண்டு இருந்தாள்...

அங்கேதான் பொய் பாக்கணுமா..நடு ரோடுல? ...அடி..பாவம் அவ அந்த வண்டி கூடவே போயிருக்கா போல..அங்கே போய் கவிழ்ந்து வண்டி அவ மேல விழுந்து பாவம் எழுந்திருக்க முடியாம முழிக்கிறா...

ஓஹ் என்ன நடந்திருக்கு ??? ...பிளாஷ்பாக்......( பார்த்தவர்கள் சொன்னது..அதான் எதிர் கடையில் இருந்த சைக்கிள் கடையில்
இருக்கும் குட்டி பய்யன்..மற்றும் பலர் )

மூவரும் வண்டியில் ஒக்கார்ந்து..ஓகே என்று சிக்னல்  வருவதற்குள் .ஆர்வக்கோளாரில் ஓவராக accelerate  செய்துவிட்டாள் போல..நான் நடுவில் இருந்தேன் என் பினால் ஒருவள்..

என் பின்னால் இருந்தவள் பறந்து சைக்கிள் கடையில் பொய் விழ நான்
என் வீட்டு வாசலில் இருக்கும் கோலத்தின் மேல் விழுந்திருக்கேன...
வண்டியை ஓட்டியவளோ..வண்டி கூடவே கொஞ்ச தூதரம் போய் அங்கே விழ வண்டி அவள் மேல் விழுந்திருக்கு...

என் கன்னத்தில் ஒட்டியது அம்மா போட்ட செம்மண் கோலம் இல்ல ...
என் கன்னத்தில் அடிப்பட்டு ரத்தம்  கோல  மாவுடன் சேர்ந்து அப்படி ஆகிவிட்டது..

ஒரு வழியாக..மானம் போனது போய்டுச்சு..ஏன் அழனும் என்று சாதாரணமாக மூவரும் எழுந்து நல்ல பிள்ளையாட்டும் வண்டியை வீட்டிலே வைத்து விட்டு..ஆட்டோ பிடித்து ஊர்சுற்ற சென்றோம் ( குப்புற விழுந்து கன்னத்துல
செம்மண் ஓட்டினாலும்..எடுத்த காரியத்தை கைவிடாத தன்மான சிங்கமுல்ல நாங்க !! )

இன்னும் இருக்கு வரேன்26 கருத்துக்கள்:

Anonymous said...

Ooru sutha than poneengala illa hospitalku poneengala? Neenga mattum illa, unga kooda irukkaravangalum yeppidi ungala maathiriye irukkaanga?

Gayathri said...

@Raja Sha ச்சே எப்படி கண்டு பிடிச்சீங்க?? ஹோச்பிடளுக்கு போயிட்டு ஊர்சுற்ற போனோம்..ஹா ஹா என்ன செய்ய என் நண்பர்களும் என்னை போல் தான்..நன்றி

Balaji saravana said...

//குப்புற விழுந்து கன்னத்துல செம்மண் ஓட்டினாலும்..எடுத்த காரியத்தை கைவிடாத தன்மான சிங்கமுல்ல நாங்க//
ஹா ஹா ஹா! சிங்கத்துக்கு லாலிபாப் பார்சல்!
எழுத்து நடை நல்லா வந்துகிட்டிருக்கு தோழி!
வாழ்த்துக்கள்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அம்மா போட்ட கோலம் நல்லா டேஸ்டா இருந்ததா?

Gayathri said...

@Balaji saravana ஆஹா எனக்கு அதெல்லாம் வேணாம்...ஒரு பாக்ஸ் பிச்சா சொல்லுங்க...நன்றி

Gayathri said...

@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கோலம் நல்ல சுவை..அதைவிட அவங்க விட்ட டோஸ்

Sundharadhrusti said...

I like it . improved a lot. keep going!

பவள சங்கரி said...

நல்ல காமெடியான அனுபவங்க...... வாழ்த்துக்கள்.

Gayathri said...

@sukanya தேங்க்ஸ்...

Leo Suresh said...

அமீரகத்தில ஒரு குசும்பனையே தாங்கமுடியல நீங்க பெரிய குசும்பியா இருக்கீங்களே காயத்ரி
லியோ சுரேஷ்

அருண் பிரசாத் said...

//எங்க அம்மா போட்ட கோலத்த அப்படி உத்து வாழ்க்கைல பார்த்ததே இல்ல //

நல்ல எழுத ஆரம்பிச்சிட்டீங்க. கலக்குங்க.

Gayathri said...

@அருண் பிரசாத் nandri bro..

kousalya raj said...

very nice friend... well written....:))

என்னது நானு யாரா? said...

///( குப்புற விழுந்து கன்னத்துல
செம்மண் ஓட்டினாலும்..எடுத்த காரியத்தை கைவிடாத தன்மான சிங்கமுல்ல நாங்க !! )///

நீங்கெல்லாம் பொம்பள சிங்கம் இல்ல! அருமையா எழுதறீங்க காயத்திரி! அந்த் காண்டாமிருகம் கதையை உங்க குழந்தைக்கு சொன்னீங்களா இல்லையா? அவ என்ன சொன்னா? சொல்லவே இல்லையே நீங்க?

நேரம் கிடைக்கும் போது நம்ப வலைபக்கம் வந்து போங்க!

பாலா said...

sema formla irukeenga pola... ini madras rotla remba carefulla thaan poganum pola :D

சசிகுமார் said...

அருமை உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

suba said...

hey really unaku than vadi ota thariyathu unn friend una vida superrrrrrrrrrrrrrr
but really nice to ready gayathri

சௌந்தர் said...

மானம் போனது போய்டுச்சு..ஏன் அழனும்///

நாங்க எல்லாம் யாரு இதுக்கு போய் அழுவோமா விடு விடு விடு....அப்படினு போயிட்டே இருப்பாங்க காயத்திரி!

Jey said...

ரைட்டு...., சேட்டைய இன்னும் எழுதுங்க...

NS Manikandan said...

"குப்புற விழுந்து கன்னத்துல
செம்மண் ஓட்டினாலும்..எடுத்த காரியத்தை கைவிடாத தன்மான சிங்கமுல்ல நாங்க !!"


செம்மண்la tincher pota chillu nu irukumnu sollurangale adhu unmaya...

singam pola singla polamla 3ribls lam... thevaiya
செம்மண்

nigazchiyai vida yeduthu sonna vidham mega arumai.

Chitra said...

குப்புற விழுந்து கன்னத்துல
செம்மண் ஓட்டினாலும்..எடுத்த காரியத்தை கைவிடாத தன்மான சிங்கமுல்ல நாங்க !!


......வாழ்க! வாழ்க! வாழ்க!

பாரதசாரி said...

நல்ல எழுத்தோட்டம் வாழ்த்துக்கள்;-)

priya.r said...

உங்கள் பதின்ம வயதில் நிறைய சுவாரசியமான
விஷயங்கள் இருந்து இருக்கு போல இருக்கே காயத்ரி :)

ஸ்ரீராம். said...

சாதனைப் பெண் தான் போல...!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

http://sirippupolice.blogspot.com/2010/08/blog-post_29.html

come here

அப்பாவி தங்கமணி said...

ஹா ஹா ஹா... ஓவர் வாலா இருந்த இருப்பீங்க போல இருக்கு... ஸ்வர்ண குட்டி கிட்ட இதெல்லாம் சொல்லி தரணும்... நீங்க உங்க அம்மாவை டார்ச்சர் பண்ணியது போல் கொஞ்சமாச்சும் பண்ண சொல்லணும்... இதான் என்னோட இன்னிக்கி ஆசை... ஹா ஹா ஹா