நண்பர் வசந்த் அவர்கள்..எனது தொடர் பதிவு அழைப்பை ஏற்று அருமையான கதை ஒன்றை எனக்கு மெயில் செய்திருந்தார்...
அவர் இந்த கதையை மிகவும் அழகாகவும் நகைச்சுவையாகவும் எழுதி அசத்தி உள்ளார்... அந்த கதை கிழே ... மக்களே கண்டிப்பாக இந்த கதையை படித்து உங்க கருத்தை எழுதுங்க....தவறாம அவர் வலைபதிவுக்கும் சென்று உங்கள் பாராட்டுகளை அவருக்கு தெரிவியுங்கள்....
“காண்டாமிருகமும் பேபி சோப்பும்”
ஒரு காட்டுல ஒரு காண்டாமிருகம்..அதுக்கு ரொம்ப நாளா பேபி சோப்பு போட்டு குளிக்கனுமுன்னு ஆசையாம்..ஆனால் காட்டுல கடையே இல்லையாம்..அங்கே ஒரு மங்கி வந்துச்சாம். அந்த மங்கி பேரு சொங்கியாம்.
காண்டாமிருகம் பேரு என்னா தெரியுமா பாப்பா? காண்டாமிருகம் பேரு ரெயின்போ ரேம்போ. அந்த ரெயின்போ ரேம்போ சொங்கியை பாத்து
“ஏய் சொங்கி! சொங்கி மங்கி இங்க வால” என்னால செய்ற, மரத்துக்கு மரம் தாவிக்கிட்டு? கொஞ்சம் கிட்ட வாயேன். உன் கிட்ட ஒரு விஷயம் சொல்லனும்”
“ஏய் பெரிசு என்ன விஷயம்”
அது நம்ப வடிவேல போல கிண்டல் புடிச்ச மங்கி.
“ஏய் சொங்கி தம்பி! எனக்கு ஒரு அசை. அதை உன் கிட்ட சொன்னா, நீ நிறைவேத்தி வைப்பியான்னு?” கேட்டிச்சாம் நம்ம ரென்யிபோ ரேம்போ.
“இத பார்றா, நம்ம பெருசுக்கு கூட என்னமோ ஆசையா மில்ல. என்ன ஆசை பெருசு. சொல்லு! முடிஞ்சா செய்றேன்னு” சொல்லிச்சாம்.
“ஒண்ணுமில்ல தம்பி, எனக்கு ரொம்ப நாளா ஒரு ஆசை. பேபி சோப்பு போட்டு குளிக்கனும்னு. பேபி சோப்பு வாங்கலாம்னா, இங்க காட்டில ஒரு கடை கூட இல்ல. நீ தான் அப்பப்ப ஊருக்குள்ள போற இல்ல. அது தான் உங்கிட்ட வாங்கி வர சொல்லலாமுன்னு”
“ஏய் பெருசு! ஏன் உனக்கு இந்த வேண்டாத ஆசையெல்லாம். அது சரி இந்த ஆசை உனக்கு ஏன் வந்திச்சுன்னு” கேட்டது
“அதுவா சொங்கி தம்பி! நான் டீவில பார்த்தேன். பேபி சோப்பு போட்டு குளிக்கும் போது கண்ணில சோப்பு பட்டா கூட, அது எரிச்சல் இல்லாம இருக்கும்னு சொன்னாங்க. அன்னில இருந்து தான் இந்த ஆசை.”
“சரி சரி! அடுத்த முறை நான் ஊருக்குள்ள போகும் போது வாங்கி வர்றேன். அதுக்கு காசு வேணுமில்ல. காசு இருந்தா கொடு, வாங்கி வர்றேன்னு” சொல்லிச்சாம் சொங்கி
“காசு இருந்தா, நானே போய் வாங்கியிருப்பேன் இல்ல சொங்கி. நீதான் யாருக்கும் தெரியாம பொருள எடுக்கறதில கில்லாடி ஆச்சே. அது தான் உன் கிட்ட சொல்றேன்னு” ரெயின்போ ரேம்போ சொல்லிச்சாம்.
“சரி, நான் எப்படியாவது வாங்கி வர்றேன்னு” சொல்லி ஊருக்குள்ள போச்சாம் நம்ப சொங்கி மங்கி.
போய் பார்த்தா கடை தெருவுல இருக்கிற கடைல எல்லாம், எல்லா பொருளும் அழகா Shelfல அடுக்கி வைச்சி இருக்காங்க. அதுவும் கடைக்கு உள்ள.
‘அடடே! இப்ப என்னா செய்றது? வெளியில இருக்கிற மாதிரி இருந்தா எடுத்திட்டு வந்திடலாம். எல்லாம் உள்ளே இல்ல இருக்கு. எடுக்க முடியாதே. காசு கொடுத்து தான், வாங்கனும் போல இருக்கேன்னு’ யோசனை பண்ணிச்சாம்.
‘சரி! நம்ப கிட்ட இருக்கிற வித்தையை வெச்சு காசு சம்பாதிப்போம்னு’ சொல்லி, அங்கே இருக்கிற டீ கடைக்கு போச்சாம், நம்ப சொங்கி மங்கி.
போய் வித்தை எல்லாம் ஜோரா காட்டிச்சாம். பல்டி அடிச்சு காட்டிச்சாம், எல்லோருக்கும் சலாம் வைத்து காட்டிச்சாம். எல்லோருக்கும் Shake Hand கூட கொடுத்திச்சாம்.
அதை பாத்த ஜனங்க ரொம்ப சந்தோஷபட்டு, நம்ப சொங்கி மங்கிக்கு பிஸ்கேட்டு, பழம், பன் எல்லாம் கொடுத்தாங்கலாம். எல்லாத்தையும் சந்தோஷமா சாபிட்டிச்சாம். அப்போ சுவர்ணா பாப்பா போல ஒரு குட்டி பொண்ணு நம்ப சொங்கி மங்கிக்கு ஒரு ரூபா காயின் ஒண்ணு கொடுத்திச்சாம்.
அதையும் சந்தோஷமா வாங்கிகிட்டு மளிகை கடைக்கு வந்திச்சாம்.
இப்போ தைரியமா கடையில இருக்கிறவங்கள பாத்து “அண்ணாச்சு எனக்கு ஒரு பவுடர் டப்பா, பல் தேய்க டூத் பிரஷ், டுத் பேஸ்ட், ஒரு துணி துவைக்கிற சோப்பு எல்லாம் கொடுங்கன்னு சொல்லிச்சாம்.
அந்த அண்ணாச்சியும் நம்ப சொங்கி மங்கி கேட்டத எல்லாம் கொடுத்தாரு. அப்புறம், “இதுக்கெல்லாம் நூறு ரூபா அச்சு, காசு கொடுன்னு” கேட்டாரு
அதுக்கு அந்த மங்கி தன் கையில இருந்த ஒரு ருபாய கொடுத்தது.
“யேய் குரங்கு! நீ வாங்கி இருக்கிற சாமானுக்கு நூறு ரூபா வேணும். நீ என்ன, ஒரு ரூபாய் கொடுக்கிறன்னு” கோபமா கேட்டாரு.
அதுக்கு நம்ப சொங்கி மங்கி ரஜினி ஸ்டைல்ல “நான் ஒரு ருபாய் கொடுத்தா நூறு ரூபா கொடுத்த மாதிரி”. “வர்டான்னு” சொல்லி ஒரே ஓட்டமா காட்டு பக்கம் ஓடி போச்சு.
அந்த சொங்கி மங்கி, மத்த சாமானெல்லாம் தன் கிட்ட வெச்சி கிட்டு அந்த துணி துவைக்கிற சோப்ப, அந்த ரெயின்போ ரேம்போகிட்ட கொடுத்தாம்.
அந்த காண்டாமிருகம் அதை ஆசையா வாங்கி, குளிக்கறதுக்காக ஒரே ஓட்டமா குளத்த நோக்கி ஓடிச்சாம்.
அந்த துணி துவைக்கிற சோப்பு போட்டு நல்லா குளிச்சதாம். குளத்தில இருந்து வெளில வரும்போதே ஒரே நமச்சல் தாங்க முடியலயாம். அதுக்கு கை கூட இல்ல இல்ல. எப்படி சொரிஞ்சுக்கும் சொல்லு. பாவமில்ல.
மரத்துல போய் தேச்சுன்னு இருந்திச்சாம். உடம்பெல்லாம் ரத்தம் வந்திச்சாம்.
காண்டாமிருகம் காண்டாயிடிச்சாம். அந்த சொங்கி மங்கியை விட கூடாதுன்னு பஞ்சாயத்த கூட்டிச்சாம். சிங்க ராஜா தான் அங்க நாட்டாமை.
“தீர்ப்ப மாத்தி சொல்லு நாட்டாமைன்னு” யாரும் கத்த முடியாது. ஒரே போடு போட்டுடும் நம்ப சிங்க ராஜா. Full Power அதன் கிட்ட இருக்கு
“ஏன் இப்படி செஞ்சேன்னு” அந்த குரங்க பாத்து கோபமா கேட்டதாம் நம்ப நாட்டாமை.
“எல்லோரும் என்னை மன்னிச்சிடுங்கோ. என் விளையாட்டு புத்தியால இப்படி தப்பு நடந்து போச்சு. காண்டாமிருகம் அண்ணன் உடம்பு பூராவும் ரத்த காயமா இருக்கு. அத பார்க்கும் போது எனக்கு அழுகையா வருதுன்னு” உண்மையாலுமே வருத்தபட்டு ஓன்னு அழுதிச்சாம் நம்ப சொங்கி மங்கி
அதுக்கு நாட்டாமை, “இப்படி எல்லாம் சொல்லி தப்பிச்சுக்க முடியாது. முன்ன என்னாடான்னா ஒரு முறை யானை அண்ணன் வாலுல பட்டாச கட்டி கொளுத்தி உட்ட. அவரு அவ்வளவு பெரிய உடம்ப வைச்சுகிட்டு அலறலோட ஓடினது, இந்த காடே ஏதோ பூகம்பம் வந்த மாதிரி அதிரிச்சு. இப்போ ரெயின்போ அண்ணன் உடம்ப காயம் ஆக்கிட்ட. உனக்கு தண்டனை உண்டு.
“போடு தோப்புகரணம்! 100 தோப்புகரணம் போடுன்னு” தீர்ப்பு சொன்னாரு நம்ப நாட்டாமை.
சொங்கி மங்கியும் பாவமா முகத்தை வைச்சுகிட்டு ஒரு தரம் தோப்பு கரணம் போட்டதாம்.
அடுத்த நொடி “நான் ஒரு தரம் தோப்பு கரணம் போட்டா 100 தரம் போட்ட மாதிரின்னு” ரஜினி ஸ்டைல்ல சொல்லி ஒரே ஓட்டமா மரத்து மேல தாவி ஓடிப்போச்சாம்.
எல்லா Animalsக்கும் சிரிப்பு தாங்கலயாம். கோபமா கூடிய பஞ்சாயத்து சந்தோஷ அலறலா மாறி போச்சு. எல்லா Animalsம் சிரிச்சுன்னே மஞ்சல் அரைச்சு காண்டாமிருகம் அண்ணன் காயங்களுக்கு மருந்து போட்டதுங்களாம்.
___________________________________________________________________________________
எப்படி கதை சூப்பரா இருக்குல்ல... கண்டிப்பா உங்க கமெண்ட்ஸ் போடுங்க ...
பின்குறிப்பு : அன்புள்ள தோழர் வசந்த் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்....