Recent Posts

5 Aug 2010

நானும் நாப்பது கொள்ளையர்களும்


தங்கமணி அக்கா ஒரு அருமையான தொடர் பதிர்விர்க்கு என்னைஅழைத்திருக்கிறார்..என்னன்னு கேட்கறீங்களா..
நான் ஒரு கொள்ளை கும்பல் கிட்ட சிக்கிகிட்டேன் ( பாவம் அந்த கொள்ளை கும்பல் !! ) என் கிட்ட செல் போன் , ஆயுதம் எதுவும் இல்லை , நான்  இருக்கற எடத்துல எந்த தகவல் தொடர்பு சாதனமும் இல்ல ( ஐயோ அப்போ என் வலைபதிவு ? ). கண்ணுக்கு எட்டின தூரம் வரை சுத்தியும் வெறும் காடு. காட்டோட எல்லை முழுக்க மின்சாரவேலி ( நாசமா போச்சு !! ). என்ன  ஒரு இருட்டு ரூம்ல அடிச்சு வெச்சு இருக்காங்க...
எப்படி தப்பிச்சு வருவேன் ( வருவேனா ?? ) பாப்போம்...
ஸ்டார்ட் கேமரா..
என்னக்கு  நானே பேசி கொள்கிறேன்..( டுபுக்கு தனியா இருக்கும் போது யார் குட பேசறது ??? ) அடக்கடவுளே இந்த கொள்ளையர்களுக்கு பெயருக்காவது மூளை வச்சுருக்க கூடாதா ??? போயும் போயும் என்னையா கடத்தணும்விதி யார விட்டது? பெரிய பார்ட்டியா யாரான தூக்கிருந்தா பரவால்ல..பயபுள்ளைங்க புதுசு போல அதன் என்ன போய் கடத்தி வச்சுகிட்டு 
தேவு காத்து கிட்டு இருக்காய்ங்க..ஒரு பய வரபோறது இல்லை.. இவனுங்களுக்கு வேன் காசு கூட மிஞ்சாது...ஹா ஹா ( வீரப்பா மாதிரி சிரிக்கிறேன் ) 
டக் டக் என்று காலடி சத்தம் கேட்கிறது.....மெதுவா..கதவ தொறந்து ஒருத்தன் உள்ள வரான் கையில எதோ பொட்டலம்...
அவன் : “ இந்தா சாப்டு....வாய மூடிகிட்டு கெட...பதிவெழுதி மக்களை  துன்புருத்தினேல ..அதான் இப்போ நல்ல மாட்டினியா இனி உலகம் சந்தோஷமா இருக்கும் ..”
நான் : “ என்ன அது கைல நான் சுத்த சைவம் தெரியுமா
அவன் : “ தெரியும் தாயி... தயிர் சாதமும் மாங்கா ஊறுகாயும் தான்...முஞ்சிய பாரு உனுக்கு இதுவே ஓவர்..”
 அவன் அந்த பொட்டலத்தை என்னிடம் தருகிறான்...
நான் :  “ நான் சாப்டமாட்டேன்..இதுல என்ன கலந்து இருக்கே...? ”
அவன் : “ ம்க்கும்....இது ஒண்ணுதான் கொறச்சல்...ஏற்கனவே உனுக்கு தீனி போட்டு இருந்த காசெல்லாம் கரைஞ்சு போச்சு..நாங்க போயி பிச்சை தான் எடுக்கணும்..இதுல விஷம் வாங்க ஏது காசு ??? 
நான் : “ மொதல்ல நீ தின்னு தின்னுட்டு நீ உயிரோட இருந்தா நான் சாப்பிடறேன்.... ( அதான் ரூமு இருட்டா இருக்குல்லே..சோ மூணு நாளுக்கு முன்னாலஅவன் குடுத்த சாப்பாட்ட அவனுக்கு குடுக்க ..அந்த லூசும்அதை தின்னுட்டு கிழே விழறான்.. அவனுக்கு ஜலதோஷம் அதான் நாற்றம் தெரியல...அவ்வ்வ்வ்வ் )
மெதுவா வெளியில போயி பாத்தா அங்கே அந்த  கொள்ளையர்கள் மீட்டிங் போட்டு பேசிக்கொண்டு இருக்கிறார்கள்...
ஒருவன் : “ தலைவா..அந்த பொண்ண கடத்திட்டு வந்து ஒரு வாரமா ஆகுது நூறு போன் போட்டாச்சு..அவ வீட்டுலே ஒரு பாசிடிவ் ரெச்போன்சும் இல்லை. 
அடுத்தவன் : “ ஆமா தலைவா நானும் போன் போட்டு பாத்தேன்..அவ தங்கச்சி எடுத்தா...உன் அக்காவ நாங்கதான் கடத்தி  வச்சுருக்கோம் , மரியாதையா ஒரு கோடி குடு , இல்லை உங்க அக்கா..ன்னு முடிக்கல அதுக்குள்ள அய்யா நீங்கத்தானா அது ?? நல்ல காரியம் செஞ்சீங்க நாங்க  இப்போத்தான் சந்தோஷமா இருக்கோம்..அதுல மண்ணள்ளி போட்டுடாதீங்க..ன்னு சொல்லிப்புட்டு கட் பண்ணிபுட்டா..( அடி நல்லவளே இரு இரு வந்து வச்சுக்கறேன் ! ) 
அடுத்தவன்  : அது பரவா இல்லை..அவ தொல்லை தங்கல..தனியா போர் அடிக்குது துணைக்கு அவ மாமி சந்தியா வையும் கடத்துன்னு சொல்லுறா..( ஐயோ சொல்லிட்டானே....மாமி கேட்டா இனி சூப்பர் முருங்கைஇலை தோசை கிடைக்காதே...தோசை போச்சே..சண்டாளா...) 
அடுத்தவன் : இன்னும் ஒரு படி மேலே போயி " பதிவுலக நண்பர்கள் அனைவரையும் கடத்து ஜம்முன்னு பொழுது போகும்...ஒட்டு மொத்த தமிழ்நாடும் உங்க மேல ஆர்வமா ஆயிடும் ! டிவி ல கூட சொல்லு வாங்க !..அப்படி இப்படின்னு சொல்லறா..”    ( அட நாசமா போறவனே..போட்டு குடுத்துட்டியா...ஐயோ வர நாலு பெரும் இனி வரமாட்டாங்க..பின்னூட்டம் போச்சே.....தவள வாயா..) 

அடுத்தவன் : “ இது எல்லாத்த விடவும் கொடுமை என்ன தெரியுமா...வரப்போகிற ஹாரி  பாட்டர் படத்துக்கு முதல் நாள் முதல் ஷோ டிக்கெட் வாங்கி கொடு..இல்லனா பட்டு பாடுவேன்னு அடம்புடிச்சு பாடி ரகள பண்ணி புட்டா..
அத கேட்ட நம்ம பயலுங்க பன்னிரெண்டு பேரு காதுல மூக்குல வாயில ரத்தம் கக்கி இப்போ ஆஸ்பத்திரில உயிருக்கு போராடிக்கிட்டு இருக்காய்ங்க..அல்ரியடி பத்து பேரு செத்து போயிட்டானுக்க. ( ஹை டென் டௌன்..12 சத்தியிமா பிழைக்காது..உள்ள ஒருத்தன் இந்நேரத்துக்கு போய் சேர்த்திருப்பான் ! ஆகமொத்தம் ( a+b)2 = ( 2 ab + 2 idly + sambhar + chutney ) ச்சே   ஐயோ..உனக்குத்தான் கணக்கு வரதே இதுல இந்த டிரிக்நாமேண்டோரி ச்சே அல்ஜீப்ரா தேவையா ?? ..பாதிபேர் காலி அவ்ளோதான் )  
 அடுத்தவன் : “ ஆமா இப்படித்தான்.....”
தலைவன்  : போதும் நிறுத்துங்க ( அதானே பச்ச புள்ளைய பத்தி ஆளாளுக்கு வத்தி வச்சா எப்படி அதான் எனக்கு ஒரு சப்போர்ட் இருக்குல்ல !! ) நானே நொந்து போயிருக்கேன்..அந்த பொண்ணு ஏசி வேணும் லேப்டாப் வேணும்,....8 mbps இன்டர்நெட் வேணும்.... , பிச்சா வேணும்... , அது வேணும் இதுவேனும்முன்னு , கேட்டு தொல்லை பண்றா..நான் அந்த பக்கம் போறதா இல்லை ( அது !!!! அந்த பயம் இருக்கட்டும் ராச்கோல் !! பிச்சுப்புடுவேன் பிச்சு ! ) 
நீங்க யாரா போயி அவளை வீட்டுல விட்டுட்டு திரும்பிய் பார்க்காம வந்துருங்க...ப்ளீஸ் ( ஐயோ பாவாம் ) இல்லை அந்த ரூம் கதவ திறந்து வைங்க..”

ஒருவன் : “ பாஸ் அந்த ரூமுக்கு தப்பாள் இல்லை 
( ஆஹா ஒரு வாரம் பூட்டாத அறையிலா இருந்தேன்?? நல்லவனே )

தலைவன் ( சற்று கடுப்பாய் ) : “ அந்த மின்சார வேலில இருந்து 
மினசாரத்த துண்டிச்சுருங்க.. தான எங்கயாவது போயிடட்டும் 

மற்றொருவன் : “ தலைவா... அது சும்மாத்தான் கெடக்கு..சென்னைலேயே  பவர் இல்லையாம்..இதுல கட்டுலையா இருக்கபோவுது...” ( ஒரு வார்த்தை சொன்னாலும் ஷோக்கா சொன்னே )
தலைவன் ( இன்னும் கடுப்பாகி ): “ சரி சரி அங்கே நம்ம வண்டி ஒன்ன  சாவியோட நிறுத்திவை போய் தொலையட்டும் ( நீ ரொம்ப நல்லவன்டா !! )  
அடுத்தவன் : “ ஆனா தலைவா...நாம இருக்கறது எ வி எம் ஸ்டுடியோல... (!!!!!!!!) கட்டுக்கு போனா பெட்ரோல் காசு செலவாகுமுன்னு... காலியா இருந்த காட்டு செட்டுக்கு யாரும் வரதில்லேன்னு தெரிஞ்சு .....அன்னிக்கி ராத்திரி இங்கே வண்டிய திருப்பிட்டேன்..” ( அட சிக்கன சிகாமணி )
தலைவன் மாரடைப்பு வந்து இறந்து போகிறான்...மற்றவர்கள் பய்தியமாகிறார்கள்.( பின்ன என்ன ஆகும் ?? )
 என்ன இருக்கு தப்பிக்க பெருசா...அதன் சிம்பிள்ளா போச்சே...கொஞ்சம் நடக்க
கண்ணில் ஒரு கதவு தென்படுகிறது..வெளியே வந்து சந்தோஷமா வீட்டுக்கு போரேன்...வர்ட்டா...டாட்டா...
என்ன தங்கமணி அக்கா சரியா ????39 கருத்துக்கள்:

Jey said...

அப்ப உங்கல கடத்துன நாப்பதும் காலியா?.

சிரிச்சி முடியல......
ஹஹஹா

Unknown said...

MUDALA ENTA APPAVI THANGAMANIYA KADATHANUM...

NISAMAEY KADATHA PLAN POTUKITU ERUKOM..

APPURAM ORU SILA PERU ERUKKANGA..LIST VERAIVIL VILI AGUM..

UNGA PADIVU PADICHU UNGALIUM KADATHALAMNU ERUNTHOM..

BUT CHINA PILA PAVAMNU VITUVITOM..

சிரிச்சி முடியல......

nice romba tamil cinema vida adikam tamil blogpadikirenganu niniken..adikadi appavi pakkam pogathenga
chonna kekanum..ketathaney..

nandri

Gayathri said...

@Jey
அமா கூண்டோட கைலாசம்..ஹா ஹா வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ப்ரோ

Gayathri said...

@siva

ஆஹா அப்பாவியவே கடத்த ப்ளான் போகுதா...ஹாய் என்னையுமா சூப்பர்...சரி கடத்த போறவங்களுக்கு ஆயுள் காப்பீடு எடுத்துடுங்க..வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ப்ரோ

எல் கே said...

g3 unmayiyil kalayil ennai sirika vaitha punniyathai vangitteenga... feel relaxed... thanks for the post

Unknown said...

தங்கமணி அக்கா--down down..

Gayathri said...

@LK
நீங்கள் சிறிது ரிலாக்ஸ் ஆய்ருக்கீங்க என்பதை அறிந்து நானும் ரொம்ப சந்தோஷம் அடைந்தேன் நன்றி ப்ரோ

Gayathri said...

@siva
why why ???

அருண் பிரசாத் said...

ஹ ஹ ஹா... கலக்கிட்டீங்க காயத்ரி (”கா”னாவுக்கு... ”கா”னா)

அவங்க எங்க இருக்காங்க, உங்களை திருப்பி அனுப்பாம இருந்தா 1 கோடி தர்றதா டீலிங் பேசனும்

Anonymous said...

காயத்ரி ...கலக்கிடிங்க சூப்பர் ...ரொம்ப தமாஷா எழுதினியே சிரிச்சு சிரிச்சு வயது வலி வந்திடுது ,,,முருங்கை தோசை தானே நீ வீட்டுக்கு வந்த உடன் பண்ணி தரேன் ..

Thenammai Lakshmanan said...

பதிவெழுதி மக்களை துன்புருத்தினேல ..அதான் இப்போ நல்ல மாட்டினியா இனி உலகம் சந்தோஷமா இருக்கும் ..”//

ஒரு திரில் சினிமா பார்த்த எஃபெக்ட் கண்மணி...:)))

வெங்கட் said...

சும்மா சொல்லக்கூடாது...
செம கலக்கல்...

கவலையே படாதீங்க
ஒருவேளை அப்படி யாராவது
உங்களை கடத்திட்டு போனா...
சும்மா விட்டுடுவோமா...

பதிவுலக நண்பர்கள் எல்லாம்
சேர்ந்து வீதி வீதியா போய்
வசூல் பண்ணி..,

வர்ற காசை வெச்சி
எல்லோருக்கும் Treat வெச்சி
ஜமாய்ச்சிட மாட்டோம்..!!

Madhavan Srinivasagopalan said...

seems that Venkat is a member of 'GKS'

G3, nice post.. gud comedy piece.

Venkat's comment is also fine

கருடன் said...

மிகவும் கருத்து ஆழம் மிக்க கதை. சாண்டில்யன், கல்கி, ஜானகிராமன், இவர்கள் வருசையில் நீங்கள் கூடிய விரைவில் வருவிர்கள். திரு. வெங்கட் & திரு. அருண் பிரசாத் அவர்கள் மிகவும் அழகாக தங்கள் கருத்தை தெரிவித்து இருகிறார்கள்... சகோ.. வேண்டாம் இதோட நிறுத்திக்கலாம்... நாற்பது கொள்ளையர்களை கொல்ல சொன்ன... நீங்க 400 பதிவர்கள் 4000 வாசகர்களை கொல்ல முயற்சி பன்னுகிறிர்கள்...

சுசி said...

குடுத்து வச்சவங்க.. கதையில தான்னாலும் போய் சேர்ந்திட்டாங்க..

கணேஷ் said...

தலைப்புக்கு ஏற்றாற்போல் சரியாக இருக்கின்றது பதிவு....சிரிக்க வைத்து இருக்கின்றிர்கள்...sgzmjr (உங்களுக்கு தெரியும் என்பதால்)))))

அப்பாவி தங்கமணி said...

// பாவம் அந்த கொள்ளை கும்பல் !!//
ஹா ஹா ஹா... இந்த attitude நல்லா இருக்கே...

//சோ மூணு நாளுக்கு முன்னாலஅவன் குடுத்த சாப்பாட்ட அவனுக்கு குடுக்க ..அந்த லூசும்அதை தின்னுட்டு கிழே விழறான்..//
ஆஹா... இந்த பொண்ணு கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதயாதான் இருக்கணும் போல...

உங்க தங்கச்சி டயலாக் சூப்பர்... அவ்ளோ அடாவடியா நீங்க வீட்டுல..

//துணைக்கு அவ மாமி சந்தியா வையும் கடத்துன்னு சொல்லுறா//
ஹையோ ஹையோ... எப்படிம்மா இப்படி எல்லாம்... முடியல காயத்ரி முடியல... (சந்த்யா உங்க மாமியா? This is a news to me...wow...)

//பதிவுலக நண்பர்கள் அனைவரையும் கடத்து //
அடப்பாவமே... தொடர் பதிவு எழுத சொன்னது ஒரு குற்றமா... எங்களை ஏங்க புடிச்சு குடுக்கறீங்க... ஹா ஹா ஹா

ஹா ஹா ஹா... அல்ஜீப்ரா கண்டுபிடிச்சவன் மட்டும் உங்க equation பாத்தான்... இன்னொரு பலி நிச்சியம்... சூப்பர்

//பச்ச புள்ளைய பத்தி ஆளாளுக்கு வத்தி வச்சா//
அதாரு பச்ச புள்ள... ஏன் இந்த கொலை வெறி?

//நான் அந்த பக்கம் போறதா இல்லை//
ஆஹா... திருப்பதிக்கே லட்டா... சூப்பர் ...

//ஆஹா ஒரு வாரம் பூட்டாத அறையிலா இருந்தேன்//
இந்த ஒரு வரில புரிஞ்சு போச்சு நீங்க மாத்ஸ்ல மட்டும் வீக் இல்லைன்னு.. ஹா ஹா ஹா

மின்சாரமும் புஸ்ஆ? அடகொடுமையே...

//மற்றவர்கள் பய்தியமாகிறார்கள்//
பின்ன கடத்தினது யார...

//என்ன தங்கமணி அக்கா சரியா ???? //
எக்கா சாமி... தப்பி தவறி யாருக்காச்சும் உங்கள கடத்தற ஐடியா இருந்தா கூட இதை படிச்சதும் ஜூட் தான்... நானும் இப்போ ஜூட்

ஜோக்ஸ் அபார்ட்... ஹா ஹா ஹா... ரெண்டு நாளா கொஞ்சம் மூட் அவுட்... உங்க போஸ்ட் படிச்சு சிரிச்சு சிரிச்சு ஒகே ஆய்ட்டேன்... தேங்க்ஸ்... சும்மா சொல்ல கூடாது... பிச்சு ஓதரிடீங்க காயத்ரி..செம கலக்கல் கற்பனை... ஹா ஹா ஹா ஹா ஹா... இன்னும் சிரிச்சு முடியல நான்... என்னோட அழைப்பை ஏற்று தொடர் பதிவு எழுதினதுக்கு ரெம்ப ரெம்ப நன்றி...

அப்பாவி தங்கமணி said...

//siva on 5 August 2010 20:20 said... [Reply] தங்கமணி அக்கா--down down..//

அடப்பாவி Siva...காயத்ரி பண்ண கொடுமைக்கு என்னைய டௌன் டௌன் ஆ? என்ன கொடும காயத்ரி இது?

Gayathri said...

@அருண் பிரசாத்அவங்க எங்க இருக்காங்க?? அதன் பாதி பேர் போயி செந்த்டாங்க..மிடி கீழ்பாக்கில்..ஒரு கோடியா ??? குடுத்தா நானே போய்டுவேன்...ஹா ஹா நன்றி ப்ரோ...

Gayathri said...

@sandhya ஹை மிக்க சந்தோஷம்...சிரித்ததர்க்கும்..தோசைக்கும்...நன்றி மாமி...

Gayathri said...

@தேனம்மை லெக்ஷ்மணன் ஹைய்யா அப்படியா??? அப்போ சரி அடுத்த திகில் படம் ரெடி..நம்ம அருண் அவர்கள் ஒரு கோடியோட தயாரா இருக்கிறார்...
பூஜை போட்டுடலாம் படத்துக்கு...நன்றி

Gayathri said...

@வெங்கட் அட இவ்ளோ நல்லவனா நீங்க ??? குடுத்த பில்ட்அப்ல நானே ஒரு நிமிடம் அச்சிரியத்து போனேன்..பாத்தா ட்ரீட்டா?? மடியல வலிக்குது அழுதுடுவேன்..ஹாஹா நன்றி

Gayathri said...

@Madhavan தேங்க்ஸ்..அதென்ன GKS ??

Gayathri said...

@TERROR-PANDIYAN(VAS) அடக்கடவுளே என் இந்த கொலை வெறி....ஹீஹீ...நல்லது கூடிய விரைவில் ஒரு நல்ல ( ??? ) பதிவு போடறேன்..நன்றி ப்ரோ

Gayathri said...

@சுசி ஆமா எத்தனை பேருக்கு கிடைக்கும்??? ஹா ஹா நானும் அப்படியே நிம்மதியா துக்கதுலையே போய் சேரனும் இதான் ஒரே ஆசை..நன்றி

Gayathri said...

@ganesh வருகைக்கு நன்றி..ஹா ஹா மிக்க நன்றி...தேங்க்ஸ் வேண்டாமே..மீண்டும் வாருங்கள்..

Gayathri said...

@அப்பாவி தங்கமணி மொதல்ல உங்களுக்கு ஒரு பெரிய நன்றி..நீங்க இப்படி ஒரு லீட் கொடுக்கலைன்னா..நண்பர்களை சிரிக்க வைக்கும் வாய்ப்பை நான் இழந்து இருப்பேன்..

நேத்து மண்டைய போட்டு சீரியஸ்ஸா கொடஞ்சுகிட்டு இருந்தேன்..கடைசியில்சீரியஸ் பதிவு சரி வாரதுன்னு நான் பாட்டுக்கு எதோ அடிச்சு விட்டேன்...

நன்றி அக்கா...அமாம் சந்தியா மாமி என் சொந்த மாமி தான்..என் தாய் மாமாவின் மனைவி..ஆனா ஒரு அம்மா தன பெண்ணை பார்த்து கொள்ளுவதுப்போல் என்னையும் என் தங்கையையும் பார்த்து கொள்கிறார்கள்..ஷி இஸ் கிரேட்..

நன்றி அக்கா மிக்க நன்றி..

Gayathri said...

@அப்பாவி தங்கமணி பாவம் மன்னிச்சிடுங்க.ஹா ஹா

Gayathri said...

@Madhavan oh gayathriya kalaipor sangam a super

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

முடியலை. நான் அழுதுடுவேன்...

priya.r said...

You are a creative thinker pa.
Thanks for you both (You and Bhuvana!)

ஜெய்லானி said...

நினைச்சு பார்த்தா ஒரே அழுவச்சியா வருது....பாவம் அவனுங்க ...அவ்வ்வ்வ்

vinu said...

koonuttapa naan storya chonnean

Sundharadhrusti said...

A Good One. Expected more narration! Keep going. we need more thrilling starting lines seriously and end as comedy. give that grip! you will be a writer.

Gayathri said...

@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) அச்சச்சோ வேணாம்...

Gayathri said...

@priya.r மிக்க நன்றி தோழி...பாராட்டுகளுக்கு மிக்க நன்றி...

Gayathri said...

@ஜெய்லானி என்ன கொடுமை இது எல்லாரும் சிரிகனும்னு ஒரு பதிவேதினா எல்லாரும் அழறேளே

Gayathri said...

@vinu
புரியுது புரியுது நன்றி...

Gayathri said...

@sukanya Am constantly struggling to write something humorous but i always end up with something like this...will try to improve soon. thanks for your comments buddy...