Recent Posts

15 Aug 2010

வினோத மனிதர்கள் !!

ஹலோ நண்பர்களே ! என்ன ஒரு ஆறு நாளா ஒரே குஷியா இருந்துர்க்கிங்க போலருக்கே...ம்ம்ம் சென்ற வாரம் எனக்கு கொஞ்சம்..இல்லை ரொம்பவே சோதனையா போச்சு.அதான் இந்த பக்கமே வரமுடியல....

எதோ  ஜோசியர் சொன்னாராம்..

." சார் உங்களுக்கு நேரம் சரி இல்லை...கொஞ்சநாளுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்..அவ்ளோதான் "

" அப்போ அதுக்கப்புறம் டைம் நல்லா இருக்கா ?? "

" இல்லே சார்...இப்போ கொஞ்ச நாளுக்கு கஷ்டமா இருக்கும் அதுக்கப்புறம் அதே பழகிடும் !! "

இப்படிதான்  போகுது வாழ்கை சரியா போயிடும் போயிடுமுன்னு பாத்தா எரிக்குட்டே போகுதே தவிர சரியாகுற மாதிரி தெரியல...
 விடுங்க என்ன செய்ய முடியும் ஆல் டைம்!!!

கடந்த இரண்டு மூன்று நாட்களில் நான் சந்தித்த வினோத மனிதர்களை பற்றி
இப்போ சொல்லபோறேன்...

முதலில் லோக்கல் கடையில்.. 

அம்மணிஅமெரிக்கா பார்ட்டி போல..கடையில் நுழைந்த  சில நொடிகளில் " வாட் ஷாப் இஸ் திஸ் ??? திஸ் இஸ் நாட் தேர் ...தட் இஸ் நாட் தேர் " என்று பீட்டர் விட...

பொறுமை இழந்த கணவன்..." ஹே...என்ன இதனை சீன் போடுற ...ஒரு மாசம் அமெரிக்கா டூர் போயிட்டு வந்ததுக்கு இதனை சீன் ஆகதும்மா பேசாம சிகரமா பில் போட வா இல்லாட்டி நான் வீட்டுக்கு போய்டுவேன் ! " என்று பாயமுடுத்த முனும்னுத்து கொண்டே பின்னாலேயே சென்றார் அந்த பீட்டர் அம்மா !!!

ஹோடேலில் : 

வீடு ஆஸ்பத்திரி என்று அலஞ்சு அலஞ்சு ரொம்ப முடியலன்னு ஹோடேல்லுக்கு போனா....

நான் ஒக்காந்த டேபிள்க்கு எதிர் டேபிளில் ஒரு நடுத்தர வயது ஆண் ஒருவர்
" சூடா  இட்லி வடை கொண்டுவா " என்றார்...சில நிமிடங்கள் கழித்து சர்வர்
அவர் கேட்டதை கொண்டுவந்து வைக்க அதை தொட்ட அந்த மனிதர்
" எனப்பா இது ?? சூடாதானே கேட்டேன்..." என்று அலுத்துக்கொண்டார்..

" சார் பாருங்க சார் இட்லி லேந்து ஆவி பறக்குது..இதுக்கு மேல சூட வேணும்னா அடுப்புத்தான் இருக்கு " என்றார்.( சூப்ர் )

" எனப்பா இட்லில ஆவி பறக்குது காபில ஆவி பறக்குதுன்னு சொல்லி கடசில என்ன ஆவியாக்க வழி பாக்குறே " என்று சொல்லி சிரித்து விட்டார்...என்ன சொல்லுவதேன்று தெரியாமல் சர்வர் எஸ் !!!

 மற்றொரு ஹோடேலில் : 

இடப்பற்றா குறை காரத்தினால் வேறொரு கணவன் மனைவிஅமர்திருந்த இடத்தில் இரண்டு இடம் காலியாக இருக்க அங்கு போய் நானும் அவரும் அமர்ந்தோம்....சாப்பிட்டு முடித்த மனைவியின் தட்டை பார்த்து கணவர்
" என்ன வேணுமோ அதை மட்டும் கேட்டு வாங்கி சாப்புடணும் வேண்டாதத வாங்கி இப்படி மீத்த கூடாதும்மா " என்றார் பாவமாக...

" என்ன வேணும்னு முன்னாடியே தெரிசுக்குற புத்தி இருந்தா நீங்க பொண்ணு பக்க வந்த அன்னிக்கே வேண்டாமுன்னு சொல்லிருப்பேன்..பட்டா தானே தெரியுது " என்றார் மிகவும் சாதரனாமாக ...

பாவம் அந்த மனுஷன் முகம் போன போக்க பக்க எங்களுக்கே பாவமா போச்சு...

சென்னை சின்ன மலை டிராபிக் நெரிசலில் : 

நன்க இருந்த ஆட்டோக்கு பக்கத்துல ஒரு ஜோடிபைக்கில்...

அந்த  பொண்ணு " டேய் ! இப்படியே நிறைய டிராபிக் இருக்குற எடமா பத்து தினமும் வரலாமாம் பாரு எத்தனை நேரம் என்னால உன் கூடவே இருக்க முடியுது,  இத விட்டு சுத்தி சுத்தி டிராபிக் இல்லாத ரூட் லேயே தினமும்கூட்டிட்டு போறியே ! " என்று அலுத்து கொள்ள...

அவன்  "  ஆமா அப்படி போனாவாது உன்ன சீக்கிரமா வீட்டுல விட்டு வேற வேலைய பாக்க போவேன்...இப்படி சதா உன்கூடவே இருக்கனும்முன்னு போன வருதாம் பூரா சுத்தி...இப்போ பாரு..உனுக்கு ஒரு அரியர் இல்லை அனா எனக்கு அரியர தவிர ஒண்ணுமே இல்லையே...இந்த வருஷமாவது நான் தேற வேனாமாடி செல்லம்.." என்று கொஞ்சலாக எஸ் ஆக!! அந்தே பெண் முறைத்துக்கொண்டே எங்கேயோ பார்க்க ஆரம்பித்து விட்டாள்
(  அவன் அவன் கஷ்டம் அவன் அவனுக்கு பாவம் )

என்னமோ  அப்போ அப்போ நம்ம மக்கள் நம் கவலையை சிறிது நேரமாவது மறக்க வழி செய்கிறார்கள்...

33 கருத்துக்கள்:

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஹா.. ஹா.. சூப்பர்..

ஹோட்டல் கணவன் மனைவியும், சிக்னல் ஜோடியும் செம கலக்கல்....

Balaji saravana said...

ஹா ஹா ஹா..
கடைசி இரண்டும் அருமையான நகைச்சுவை...
ஆமா அது என்ன வினோத மனிதர்கள்? புரியலையே!

Gayathri said...

@வெறும்பய நன்றி...நானும் மிகவும் ரசித்தேன்..நன்றி

Gayathri said...

@Balaji saravana எப்படிலாம் விநோதமா யோசிக்கிரன்ங்க அதான் வினோத மனிதர்கள்....நன்றி

Unknown said...

ஹா.. ஹா.. சூப்பர்..

HEY NANTHAN FIRSTU...

ENIMEY UNGA PADIVA VASIKIRAVANGALKU TIME SARI ELLAINU ARTHAM...

Unknown said...

என்ன வேணும்னு முன்னாடியே தெரிசுக்குற புத்தி இருந்தா நீங்க பொண்ணு பக்க வந்த அன்னிக்கே வேண்டாமுன்னு சொல்லிருப்பேன்--:)))

Unknown said...

உன்கூடவே இருக்கனும்முன்னு போன வருதாம் பூரா சுத்தி...இப்போ பாரு..உனுக்கு ஒரு அரியர் இல்லை அனா எனக்கு அரியர தவிர ஒண்ணுமே இல்லையே--ariyar appdina enna akka??

Unknown said...

ஒரே குஷியா இருந்துர்க்கிங்க போலருக்கே...ம்ம்ம் ---enga athan neenga padiva potu engalai ellam aruthukitu erukengaley..

annalum unga humar super..

"appram cholla marnthuviten
appavi thangamani akka down down"
appavi thangamani akka down down"
appavi thangamani akka down down"

tata
varata
neenga chonathupolavey comments potuviten..
markama chocate anupidanum enda blog pakkam vanthu ok...

ellati...onum ellai marupadium vanthu comments poduven..

Sundharadhrusti said...

Patti yetho unga sontha kathai mathiri irukku!! anyway Patti, Awaiting for a new concept!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//வேலைய பாக்க போவேன்...இப்படி சதா உன்கூடவே இருக்கனும்முன்னு போன வருதாம் பூரா சுத்தி...இப்போ பாரு..உனுக்கு ஒரு அரியர் இல்லை அனா எனக்கு அரியர தவிர ஒண்ணுமே இல்லையே...இந்த//

heheee

Jey said...

ஓ இப்ப கடைகடையா...ஹோட்டல் ஹோட்டலா சுத்திட்டு இருக்கீங்கன்னு சொல்லுங்க...

☀நான் ஆதவன்☀ said...

:))

மூனாவது விசயம் உங்களுக்கு நடந்த மாதிரி இருக்கே? :))

ஹாஸ்பிடல், சோதனை கவலைன்னெல்லாம் சொல்றீங்க. எல்லாம் சரியாகி சந்தோஷமா ஊருக்கு வருவீங்க :)

Anonymous said...

காயத்ரி உனகிருந்த டென்ஷன் லே கொஞ்சம் சிரிக்க முடிஞ்சதே ..ஹா ஹா ..ஹோட்டல் ஜோடி ரொம்பவே சூப்பர் ..

அருண் பிரசாத் said...

எல்லாமே கலக்கல் காமெடி!

வரவர உங்களுக்கு நக்கல் அதிக மாகிட்டே வருது

வாழ்த்துக்கள்

கணேஷ் said...

எனக்கு தெரிந்து இதில் எதுவுமே உணமையாய் நடந்தது இல்லைதானே....ஆனால் நகைச்சுவை நன்றாக இருக்கின்றது..

Gayathri said...

@siva
மிக மிக நன்றி...என்ன செய்வது உங்கள் அனைவரையும் இப்படி போட்டு வதைக்கா விட்டால் என்னால் எப்படி நிமதியாக இருக்க முடியும்

Gayathri said...

@sukanya இதென்ன பட்டி தொட்டி ன்னு ??? நன்றி...என் இப்படி ஆய்டே

Gayathri said...

@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) நன்றி

Gayathri said...

@Jey கடை கடையா இல்லை...ஆஸ்பத்திரி ஆஸ்பத்ரியா சுத்றேன்...ஆல் டைம்

Gayathri said...

@☀நான் ஆதவன்☀ என் இப்படி ? எல்லாமே இந்த ஒரு வாரத்துல நான் பார்த்த சம்பவங்கள் தான் ...நன்றி

Gayathri said...

@sandhya என்ன செய்றது...கொஞ்சம் நிறையவே டென்ஷன் இருக்கு...அதான் எனக்குன்னு இப்படிலாம் மக்களை கடவுள் அனுப்புரர் போலிருக்கு நன்றி மாமி

Gayathri said...

@அருண் பிரசாத் மிக்க நன்றி ப்ரோ...ஹிஹி

Gayathri said...

@ganesh என்ன கொடுமை இது...எல்லாமே கதை அல்ல நிஜம்!! இன்னும் புனைவு எழுதும் அளவிற்கு மனது ரிலாக்ஸ் ஆகவில்லை..

எல் கே said...

//ன்னமோ அப்போ அப்போ நம்ம மக்கள் நம் கவலையை சிறிது நேரமாவது //

உண்மைதான்

Madhavan Srinivasagopalan said...

looks like Ju.Vee's 'Dialogue'..

nice..

அப்பாவி தங்கமணி said...

அடபாவி இதே டாபிக்ல நான் ஒண்ணு எழுதி வெச்சு இருக்கேனே... உங்களுக்கு எப்படி தெரியும்... சரி
சரி... கிரேட் women think alike சொல்லிக்குவோம்.... டீல்? (நான் எழுதினது கொஞ்சம் வேற மாதிரினாலும்.....)

பீட்டர் அம்மா - சூப்பர்

ஹோட்டல் கஸ்டமர் - நம்ம ப்ளாக் லிங்க் குடுங்க... அப்புறம் கேக்க மாட்டார் ஆவி இட்லி எல்லாம்

ஹா ஹா ஹா ... அட அட சோக கதை எல்லா வீட்டுலயும் இருக்கும் போல... அன்னிக்கி என்ன
சண்டையோ அவங்க வீட்டுல

அரியர் கேஸ்... ஐயோ பாவம்

மொத்ததுல கலக்கல் பதிவு

Chitra said...

" என்ன வேணுமோ அதை மட்டும் கேட்டு வாங்கி சாப்புடணும் வேண்டாதத வாங்கி இப்படி மீத்த கூடாதும்மா " என்றார் பாவமாக...

" என்ன வேணும்னு முன்னாடியே தெரிசுக்குற புத்தி இருந்தா நீங்க பொண்ணு பக்க வந்த அன்னிக்கே வேண்டாமுன்னு சொல்லிருப்பேன்..பட்டா தானே தெரியுது " என்றார் மிகவும் சாதரனாமாக ............ட...... "சொர்ணா அக்கா", இப்படி கணவர் மனதில குத்திட்டாங்களே!
நல்ல தொகுப்பு!

கருடன் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)

//வேலைய பாக்க போவேன்...இப்படி சதா உன்கூடவே இருக்கனும்முன்னு போன வருதாம் பூரா சுத்தி...இப்போ பாரு..உனுக்கு ஒரு அரியர் இல்லை அனா எனக்கு அரியர தவிர ஒண்ணுமே இல்லையே..//

ரமேஷ் உன் லைப் & நம்ப அருண் பிரசாத் லைப் ல ஒரே மாதிரி நடந்தது இருக்கு...

(ஒரே கல்லுல 2 மாங்கா)

priya.r said...

:)

Unknown said...

நகைச்சுவை அனைத்தும் அருமை..ஆனால் ஏன் இத்தனை ஸ்பெல்லிங் மிஸ்டேக்..அதை கொஞ்ச சரி பண்ணுங்களேன்...

Unknown said...

மிஸ்டேக்..no no

suba said...

very nice jokes neryava cirican

GSV said...

இவங்க முனுபெரும் ரொம்ப நல்லவங்கப்பா...உண்மைய பேசிட்டாங்க விட்டுருங்க.... இரண்டாவது அருமை.