Recent Posts

25 Aug 2010

ஓரம் போ ஓரம் போ


நான் சென்னை சாலைகளில் வண்டி ஓட்டி ரொம்ப நாள் ஆகிப்போச்சு. 
கிட்டத்தட்ட ஒரு 4 வருஷம்னு வச்சுக்கலாம்... ( ய் நாலு வருஷமா சாலை விபத்துக்கள் அதான் குறைஞ்சு  போச்சுன்னு  சொல்றீங்களோ?? )அதுக்குன்னு ரொம்ப மோசமா எல்லாம் வண்டி ஓட்ட மாட்டேன்..( சொல்லிக்க வேண்டியதுதான் ) 

இன்னைக்கு ஒரு வேலையா ( நம்பிட்டோம் ) என் மாமாவோட வண்டி எடுத்துக்கிட்டு கொஞ்சம் ஊர் சுத்தினேன் ...

அப்படியே மனசுக்குள் கொசுவத்தி சுத்திச்சு...எல்லாரும் எப்படி வண்டி கத்துப்பாங்களோ தெரியாது...நன் கத்துக்கிட்டது ஒரே ஒரு ராத்திரியில் தான்....அப்போ நான் பத்தாம் வகுப்பு படிச்சுட்டு இருந்தேன். என் அப்பாவின் நண்பர் ஒருவர் வண்டி ஓட்ட சொல்லித்தரேன்னு வண்டியை ஸ்டார்ட் செய்து கொடுத்தார், நேரா வண்டி மேல உட்க்கார கூடாது...கொஞ்சமா accelerate பண்ணு ஆனா பிரேக் பிடி, கூடவே ஓடு..என்றார்.
 
நானும் ஒரு ஆறுதரம் தெருமுனை வரை வண்டிகூடவே ஓடி பின்பு உட்கார்ந்து  ஒரு 2  ரவுண்டு ஓட்டினேன்..

ஒருவரால் ஒரே இரவில் ஒருவருக்கு வண்டி ஓட்ட கத்துக்கொடுக்க முடியுமான்னு தெரியல..ஆனா அவர் சொல்லித்தந்தார்..அவர் இப்போ எங்கே இருக்காரோ..ஆனா என்னைப்போல் ஒரு தமாஷான ஆளுக்கு வண்டி சொல்லித்தந்து புண்ணியம் கட்டிகொண்டார்.

இந்த கூத்து நடந்து ஒருமாதம் கூட ஆகவில்லை. இதுல என் தோழியையும் ஏற்றிக்கொண்டு நாங்க ஒரு பட்டாளம் பீச் போக முடிவு செய்தோம்! 

அம்மாவிடம் படிக்க போறேன் மா என்று பொய் சொல்லி விட்டு கிளம்பினேன்.  என் பின்னால்(தைரியமாக உட்கார ஒரு தோழி முன்வந்தார் ( பாவம் ). கிளம்பினோம்..எல்லாம் ஒழுங்காத்தான் போய்கிட்டிருந்துச்சு....நம்ம அடையார் மத்ய கைலாஷ்கிட்ட ( போறது நம்ம பெசன்ட் நகர் பீச் )  போய்கிட்டு இருந்தோம்..

எங்கேந்துதான் வந்தாரோன்னு தெரியல..ஒரு டிராபிக் போலீஸ் வந்து நடுல நின்னுட்டார்....கையை நீட்டிய படியே..( அடக்கடவுளே என் கிட்ட எல் எல் ஆர் கூட இல்லாத விஷயம் யாராவது சொல்லியிருப்பான்களோ ?? இன்சூரன்ஸ் ஆர் சி புக் போன்றவைகள் என்னவென்றே எனக்கு தெரியாது..ஆகமொத்தம் வண்டிக்கு தேவையான ஆவணங்கள் என்னிடம் எதுவுமே இல்ல ) அது மழை பெய்து ஓய்ந்த நேரம் ..ரோடெலாம் ஈரமாக இருந்தது..
 
க்ரீச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்...என்று பலத்த ஆரவாரத்தோட வண்டிய நிறுத்த ...
உடனே வண்டி லேசாகிப்போனது..என்ன வென்றே புரியாமல் நான் விழிக்க...
பின்னாலிருந்து அம்மா என்று ஒரு குரல்..அனைவரும் பதட்டத்தோடு ஏதேதோ கத்த...என்னவென்று திரும்பினா....அவ்வ்வ்வவ்வ்வ்வவ் 

என் தோழி கீழே விழுந்துருக்கா...நான் போட்ட பிரேக் அப்படி...எழுந்து வந்து ஒரே குட்டு நடு மண்டைல...திட்டிக்கொண்டே பின்னால் அமர்ந்து கொண்டாள்.

இதை சற்றும் எதிர்பாராத அந்த போலீஸ் காரர் " என்னம்மா இப்படி பிரேக் போடறே..பரவால்லன்னு போயிருக்கலாம் இல்ல பொறுமையா நிறுத்திருக்கலாம் ...ஏன் இப்படி? ஏதாவது ஆனா யார் பாடல் பதில் சொல்றதுன்னு " 
அவ்ளோ பொறுமையாக சொல்லி விட்டு போனார். ..

 பீச் போனதும் அந்த தோழி என்னை விரட்டி விரட்டி அடித்தது  தனி கதை...

மீதி நிகழ்வுகளை அடுத்த பதிவில் போடறேன் ( ஐயோ இன்னும் ஒன்னா ??? ) 


41 கருத்துக்கள்:

Anonymous said...

Antha videola park panrathu neenga thana? ungala than thedinu irunthen... itho varen...

Gayathri said...

@Raja Sha பார்க் பண்றது நான் இல்ல...அந்த கேட் ல கார இடிக்கிற பெண்ணுன்னு வேணா வச்சுக்கலாம்...

வாங்க வாங்க அடிகடி வந்து கமெண்ட் போடுங்க

அருண் பிரசாத் said...

ஹா ஹா ஹா. காமெடில கலக்க ஆரம்பிச்சிடீங்க.

பசங்க அப்படி பிரேக் போட்டு இருந்தா, போலீஸ்காரர் 2 பேருக்கும் இன்னும் 4 போட்டு இருப்பார்.

Gayathri said...

@அருண் பிரசாத் ஹா ஹா பாவம் பொழச்சுபோகட்டும் என்று விட்டுட்டார் போல ..நன்றி ப்ரோ..

sukanya said...

A Nice One! I really enjoyed! Superb. Continue this kind of stuff.

அப்பாதுரை said...

amusing

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மீண்டு(ம்) வந்ததுக்கு வாழ்த்துக்கள். வீடியோ செம காமெடி போங்கள்...

Anonymous said...

"பின்னாலிருந்து அம்மா என்று ஒரு குரல்..அனைவரும் பதட்டத்தோடு ஏதேதோ கத்த...என்னவென்று திரும்பினா....அவ்வ்வ்வவ்வ்வ்வவ்
என் தோழி கீழே விழுந்துருக்கா..."

pavam andha தோழி.

செம காமெடி pa.

TERROR-PANDIYAN(VAS) said...

//அப்படியே மனசுக்குள் கொசுவத்தி சுத்திச்சு...//

மனசுக்குள் கொசு இருக்கா?

TERROR-PANDIYAN(VAS) said...

//எழுந்து வந்து ஒரே குட்டு நடு மண்டைல...//

i like this...

TERROR-PANDIYAN(VAS) said...

@arun
//பசங்க அப்படி பிரேக் போட்டு இருந்தா, போலீஸ்காரர் 2 பேருக்கும் இன்னும் 4 போட்டு இருப்பார்.//

நீ அனுபவஸ்தான் மச்சி.. உண்மை கரைக்டா சொல்ற.

TERROR-PANDIYAN(VAS) said...

@ரமேஷ்
//மீண்டு(ம்) வந்ததுக்கு வாழ்த்துக்கள். வீடியோ செம காமெடி போங்கள்..//

ரமேசு இப்போ வர சொல்றியா இல்ல போக சொல்றியா?

Gayathri said...

@sukanya தேங்க்ஸ் எ லாட்

Gayathri said...

@அப்பாதுரை தேங்க்ஸ்

Gayathri said...

@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) ஹா ஹா நன்றி ப்ரோ

Gayathri said...

@Anonymous ஆமா ரொம்ப பாவம்தான்...நன்றி

Gayathri said...

@TERROR-PANDIYAN(VAS) ஆஹா இப்படிலாம் யோசிப்பின்கன்னு தெரியாம போச்சே...
கொசு மட்டும் இல்ல ஒரு அழகான டினோஸாரும் இருக்கு..அதுக்கு என்னத்த சுத்தறது ??

Gayathri said...

@TERROR-PANDIYAN(VAS) வேணாம் வலிக்குது

Chitra said...

நல்ல வேளை, நான் சென்னையில் இல்லை.....ஹா,ஹா,ஹா,ஹா....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//ரமேசு இப்போ வர சொல்றியா இல்ல போக சொல்றியா?//

@ டெரர்
உனக்கு மட்டும் ஏன் இப்படி கேனத்தனமா தோணுது?

வெங்கட் said...

என் மனக்கண்ணுல அப்படியே
" காதல் " படத்துல வர்ற சீன் ஓடுது..

அதுல சந்தியாவும்,
அவங்க Friend சரண்யாவை
இப்படி தான் தள்ளி விடுவாங்க..

அப்ப சரண்யா..,
" பிசாசு.. என்னை பிடிச்சி
தள்ளிட்டான்னு " டயலாக்
பேசுவாங்க.

Anonymous said...

செம்ம கலக்கல் காயத்ரி உன் வண்டி ஓடின அனுபவம் ..வீடியோ பார்த்து ஒரே சிரிப்பு தான் ..அடுத்த பதிவுக்கு ஆவலோட காத்து கொண்டிருப்பேன் .

ganesh said...

சரி விடுங்க..உண்மையை சொல்லுங்க இப்பவாது உங்ககிட்டே license இருக்கா இல்லையா?)))))

TERROR-PANDIYAN(VAS) said...

@ரமேஷ்
//உனக்கு மட்டும் ஏன் இப்படி கேனத்தனமா தோணுது?//

ரொம்ப புகழாத ரமேசு.. எனக்கு வெக்க வெக்கம வருது...

ப்ரியமுடன் வசந்த் said...

வீடியோல கார் ஓட்டறது பாதிபேர் பொண்ணுகளா இருக்காங்களே! எது எப்படியோ இப்பவாச்சும் லைசென்ஸ் எடுத்துட்டீங்களா இல்லையா?

ஸ்ரீராம். said...

நல்ல சுவையான அனுபவம்...
உண்மையைச் சொல்லுங்க...!! யாரோ எடிட் பண்ணி கொடுத்திருக்காங்கதானே... ஒரு தப்பைக் கூட காணோம்....பாராட்டுக்கள்.

Balaji saravana said...

செம காமெடி வீடியோ!
நீங்க வண்டி ஓட்டுனதுக்கே இப்டினா கார் ஓட்டினா என்ன ஆகும். :)

Gayathri said...

@Chitra haa ஹா naan usa vandhaa solren..be ready

Gayathri said...

@வெங்கட் ஆஹா எப்படிலாம் லிங்க் பண்றீங்க...சூப்பர்..நன்றி

Gayathri said...

@sandhya கண்டிப்பா கூடிய விரைவில் அடித்த பதிவு போடறேன்..நன்றி மாமி

Gayathri said...

@ganesh அந்த சோக கதைய ஏன் கேக்குறிங்க?? என் கிட்ட லைசென்ஸ் வந்துச்சு வண்டிய வித்துடாங்க !!!

Gayathri said...

@ப்ரியமுடன் வசந்த் லைசென்ஸ் இருக்கு அனா வண்டி இல்லையே ப்ரோ

Gayathri said...

@ஸ்ரீராம். haa ஹா nandri

☀நான் ஆதவன்☀ said...

:))))) இந்த ஊர்ல போலீஸ்காரன் இந்த மாதிரி விடமாட்டான். அதுமட்டும் ஞாபகம் வச்சுக்கங்க ஆமா :)

Gayathri said...

@Balaji saravana ம்ம் அந்த கதை தனி கதை , நான் கார் ஓடின அனுபவம் கூடிய விரைவில் வரும் ..நன்றி

suba said...

hey ver nice gayathri ethu unmaya ela chuam blog kaga elluthiniya thavari kuda surnava kutitu poidatha

Gayathri said...

@☀நான் ஆதவன்☀ அதான் ப்ரோ நான் அங்கே வண்டி ஒட்டல...நன்றி...

Gayathri said...

@suba
நான் சொனது அதனையும் உண்மை...கற்பனை ஏதும் இல்லை..ஹிஹி அதான் இதுவரை ட்ரை பன்னால சுவர்ண வச்சு..நன்றி

Ananthi said...

///என் தோழி கீழே விழுந்துருக்கா...நான் போட்ட பிரேக் அப்படி...எழுந்து வந்து ஒரே குட்டு நடு மண்டைல...திட்டிக்கொண்டே பின்னால் அமர்ந்து கொண்டாள்.///

அச்சச்சோ.. ஹா ஹா.. சாரி சாரி.. நினச்சு பாத்து ஒரே சிரிப்பா வருதுப்பா... :-))))

///பீச் போனதும் அந்த தோழி என்னை விரட்டி விரட்டி அடித்தது தனி கதை...////

ஹா ஹா ஹா.. காயத்ரி...
சரி விடுங்க.. விடுங்க..
நம்ம திறமை யாருக்கும் புரிய மாட்டேங்குது. :-)))

Ananthi said...

காயத்ரி. உங்கள நம்பி, பின்னால உக்காந்து வரலாம்னு நினச்சனே..
இப்போ எப்படி.. வரலாமா? கூடாதா?

alandur alaguraja said...

well if it had happened now it would have been recorded in Cctv's kept in besantnagar -- !! ,, so apo vizunthu vizunthu velayadanum na ungaloda varalam pola and moreover ungaloda car parking video ' parthein rasithen ' ana amani neenga panna vendiyathelam mathavanga panitangamaaa panitaaaaanga