Recent Posts

31 Aug 2010

லில்லி விஜயம்

நம்ம பட்டிக்காட்டான் பட்டினத்தில் வலைபதிவு புகழ் ஜெய்.. 
 "பட்டிகாட்டானும் கீரிப்பிள்ளையும் ...'' என்று ஒரு சூப்பர்
பதிவு போட்டார்...

அப்போ நானும் நெனச்சுகிட்டேன்..என்ன ஒரு பிராணியும்
நம்ம வீட்டுக்கு வரமாட்டேங்குதேன்னு...நேத்து...ஒரே
பேயி மழை ...ம்ம் இப்படி சொல்லனும்னு ஆசைதான்...

நம்ம சென்னை மழை பெஞ்சுது...( அதென்ன சென்னை மழை...
ஊட்டி மழைன்னு ??) அதுவா ஊரெல்லாம் பெய்யும் மழை
வெள்ளமா மாறும்...நம்ம சென்னைல பெய்யற மழை
கானல் நீர் மாதிரி..பெய்யற மாதிரி பெய்யும்...அசையா வெளிய
போனா நின்னுடும்...

அப்படி அடித்துகொண்டிருந்த சென்னை மழையில்...ஒரு குட்டி
பூனை மழையில் நனைந்து ...வீட்டு சிட்அவுட்  ல வந்து ஒதுங்கியது..

சும்மா விடுவோமா....இங்கே வேலை செய்ற பொன்னும் , ஏன் பொண்ணு
சுவர்நாவும் சேர்ந்து அந்த குட்டி பூனையா...வீட்டுக்குள்ள கூடினு வந்து..
.அதுக்கு கீழ படுக்க ஒரு குட்டி பெட்ஷீட் போட்டு..குடிக்க பால் வச்சு.
.ஆ.......ன்னு பாத்துக்கிட்டு இருந்தாங்க...

அதுவோ...ம்ஹும் இதுக்குலாம் மசியல , அதுபாட்டுக்கு டிவி பின்னாடி ...சோபா பின்னாடி கம்ப்யூட்டர் பின்னாடின்னு ஓடுது...எனக்கு வேற ஒரே பயம்...அது ஏன் கம்ப்யூட்டர் கிட்ட போச்சு தெர்யுமா....அங்கே தான் மவுஸ் இருக்கே...ஹா ஹா ஹா (முடியல...வலிக்குது...அழுதுடுவேன்..போரும் )

ராத்திரி பூரா  தூங்கவே முடியல...அந்த பூனை ஒரே கத்தி ஊரக்கூட்டிடுச்சு...பசிக்கு அழுதா..இல்ல அம்மா வேணும்னு அழுதா..இல்ல வேற ஏதான ஒடம்பு சரி இல்லையான்னு ஒன்னும் புரியல...

இதுல அந்த பூனைக்கு லில்லி என்று பேர் கூட வைத்து விட்டார்கள்..எங்க வீட்டு
புத்திசாலிகள்..அதன் அந்த ரெண்டு குட்டி பொண்ணுங்க...

இப்படியே போனா எதோ மிருக வதை செய்றோம்னு யாறன வந்துருவாங்களோன்னு
ஒரே பயம்...ஆமா கூட்டினு வந்து பால வச்சு..பெட் போட்டு தூங்கும்மன்னா...அது எங்கயோ தூசி தும்பு மேல லாம் பொரண்டு வந்து டேபிள் அடில நாளிதழ்கள் மேல வந்து தூங்கிருச்சு...

ஒரு வழியா அந்த பூனையோட அம்மா போனாய் இப்போ தான் வந்துச்சு குட்டிய தேடிகிட்டு..தாயும் சேயும் நலம்..
34 கருத்துக்கள்:

சௌந்தர் said...

குட்டி பூனை அழகு

சௌந்தர் said...

ராத்திரி பூரா தூங்கவே முடியல...அந்த பூனை ஒரே கத்தி ஊரக்கூட்டிடுச்சு..///

உங்க பதிவை படிச்சு காண்பிக்க வேண்டியது தானே...

Madhavan said...

nice fotos.

☀நான் ஆதவன்☀ said...

க்யூட் பூனை :)

வெறும்பய said...

குட்டி பூனை அழகு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஒ உங்க வீட்டு பூனை கூட இங்கிலீஷ் பேப்பர் லதான் தூங்குமோ. என்ன ஒரு விளம்பரம். பீட்டர் family ?

Jey said...

பூனை அழகு...:)

Jey said...

//நம்ம பட்டிக்காட்டான் பட்டினத்தில் வலைபதிவு புகழ் ஜெய்.//

உலகப் புகழ் பெற்ற பிரபல பதிவர்னு போட்ருந்தா நல்லா இருந்திருக்குமே....:)

அருண் பிரசாத் said...

//அம்மா போனாய் இப்போ தான் வந்துச்சு குட்டிய தேடிகிட்டு..தாயும் சேயும் நலம்..//

எங்கம்மா போனாய்....

@ ரமெஷ்
//ஒ உங்க வீட்டு பூனை கூட இங்கிலீஷ் பேப்பர் லதான் தூங்குமோ. என்ன ஒரு விளம்பரம். பீட்டர் family ?//
ஆமாங்க, இல்லைனா அது மவுஸை தேடி போகுமா? எங்க வீட்டு பூனை எலியையும் பாலையும் தேடித்தான் போகும்

ganesh said...

பூனை,நாய் என்றால் எனக்கு உயிர்...நான் வீட்டில் இருந்த காலத்தில் குறைந்தது மூன்று பூனைகள் இருக்கும்....நண்பர்களோடு அதிகம் சேரும் பழக்கம் இல்லை என்பதால் அந்த பூனைகளோடுதான் என் நேரம் கழியும்...இந்த பூனையை பார்த்ததும் பழைய நினைவுகள் வருகின்றன....

இன்னொரு விஷயம்..எங்கள் அம்மா சொல்வார்கள்..உனக்கு சோறு போடுவதே தெண்டம்.....அதில இந்த பூனைகள் வேறு என்றுதான் ((சும்மா))திட்டுவார்கள்..அவைகள் அவர்களை தொந்தரவு செய்யும்போதெல்லாம் இந்தமாதிரி திட்டுவிலும்..எல்லாம் சுகமான நினைவுகள்....இப்போதும் பூனைகள் இருக்கின்றன...ஆனால் நான் விடுமுறைக்கு போனால் அவைகள் என்னோடு சேர்வதில்லை...

(அய்யோ இதுவே ஒரு பதிவு மாதிரி வந்திரிச்சே)))))

என்னது நானு யாரா? said...

//எனக்கு வேற ஒரே பயம்...அது ஏன் கம்ப்யூட்டர் கிட்ட போச்சு தெர்யுமா....அங்கே தான் மவுஸ் இருக்கே...ஹா ஹா ஹா (முடியல...வலிக்குது...அழுதுடுவேன்..போரும் )//

சூப்பர் காமெடி! அம்மாடியோ என்ன மாதிரி எழுதி கலக்கறீங்க!


நண்பர்களே! மருந்தில்லா இயற்கை மருத்துவத்தை பற்றி எழுதி கொண்டிருக்கின்றேன்.

என் வலைபக்கம் http://uravukaaran.blogspot.com

நீங்கள் படித்து பயன் அடைய பல தகவல்கள் இருக்கின்றன. ஆங்கில மருத்துவ கொடும்பிடியில் இருந்து விடுதலை அடைவோம்! வாருங்கள் நண்பர்களே!

காயத்திரி! நீங்களும் வாங்க! ஒரு முறை வந்தீங்க! அப்புறம் ஆளையே காணோம்! வருவீங்க இல்ல?

Chitra said...

:-) Good!!!

ஸ்ரீராம். said...

குட்டிப் பூனை அழகு. பெற அனிமல்ஸ் மன அமைதிக்கு நல்லது என்பார்கள்.

Ananthi said...

//நம்ம சென்னை மழை பெஞ்சுது...( அதென்ன சென்னை மழை...
ஊட்டி மழைன்னு ??)//

அதானே.. நல்லா கேளுங்க..??
அனுபவம் சூப்பர்..
எப்படியோ தாயும் சேயும் நலம்..
சுபம்....!!! ஹாப்பி :-)))

GSV said...

லில்லி விஜயம் நல்ல இருக்கு....அப்பறம் ஒரு சின்ன வேண்டுகோள் இனிமேல் எழுதுற பதிவுக்கு "label" வைத்து எழுதிநிங்கான பில்ட்டர் பண்ணி படிக்க எளிதா இருக்கும். என்னால இதை "இதை படிங்க மொதல்ல " படிக்க முடியல்ல.

ஜெய்லானி said...

@@@சௌந்தர் --//

ராத்திரி பூரா தூங்கவே முடியல...அந்த பூனை ஒரே கத்தி ஊரக்கூட்டிடுச்சு..///

உங்க பதிவை படிச்சு காண்பிக்க வேண்டியது தானே...//

ரிப்பிட்டேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏய்ய்ய்ய்

Balaji saravana said...

:))

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

நல்லாயிருக்குங்க............ஹ....ஹா......

R.Gopi said...

ஹலோ....

மியாவ் குட்டி படு சூப்பர்.... அழகோ அழகு....

நல்ல இடத்தில் தான் தஞ்சம் அடைந்திருக்கிறது....

vinu said...

என்னது நானு யாரா? on 31 August 2010 07:06 said... [Reply]
//எனக்கு வேற ஒரே பயம்...அது ஏன் கம்ப்யூட்டர் கிட்ட போச்சு தெர்யுமா....அங்கே தான் மவுஸ் இருக்கே...ஹா ஹா ஹா (முடியல...வலிக்குது...அழுதுடுவேன்..போரும் )//

சூப்பர் காமெடி! அம்மாடியோ என்ன மாதிரி எழுதி கலக்கறீங்க!


ithulla eathaavathu ullkuththu irrukkaaaaaaaaaaa

அப்பாவி தங்கமணி said...

சூப்பர் cat ஸ்டோரி... லில்லி அழகு பேரு தான் போங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

உங்களுக்கு விருது கொடுத்திருக்கேன் . வந்து பாருங்க....

http://sirippupolice.blogspot.com/2010/09/blog-post.html

Mohamed Faaique said...

cute....

Anonymous said...

அழகு பூனை ...உன்னே பார்த்து தான் அது பயந்து அழுதிருக்கும் ன்னு நினைக்கிறேன் ஹி ஹி (சும்மா தமாஷு )

அன்பரசன் said...

பூனை போட்டோ கூடவே ஹிந்து பேப்பர் விளம்பரமும்...
பிரமாதம்

Bala said...

ரெம்ப க்யுட்டன பூனை .... :DDD

Gayathri said...

பின்னூட்டங்கள் இட்ட அனைவருக்கும் மிக்க நன்றி...
சென்னை லேந்து இப்போதான் ஷார்ஜா வாபஸ் வந்தேன்...அதனால்தான் தனி தனியே நன்றி சொல்ல முடியல..மன்னிக்கவும்..

அண்ணாமலை..!! said...

பூனையும், உங்கள் விவரிப்புகளும் அழகு!

vinu said...

meendum varuga

vinu said...

cannon cyber shot 8.0 megapixel
S5-IS

vinu said...

sorry it wasn't "cyper shot" it is "power shot"

pinkyrose said...

இந்த பதிவ படிச்சுட்டு சுவர்ணா பூனை பேப்பர் படிச்ச கதை கேக்கப்போறா
அதனால எல்லா பதிவர்களும் குறிப்பா அருண் சார் கீபோர்ட் எடுத்து வச்சுட்டு காத்திருக்கவும்

அருண் பிரசாத் said...

அய்யோ.... மறுபடி கதையா? ஏற்கனவே சுவர்ணா கேட்ட கதைய சொல்ல முடியாம முழிச்சிட்டு இருக்கேன்... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......

pinkyrose said...

டெரர்க்கு ஹேப்பி பர்த்டே சொல்ல தெரியுதுல்ல ஸோ
அப்றம் என்ன ? சும்மா ஆரம்பிங்க சார்