Recent Posts

28 Sep 2010

பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்மக்களே!!! பொழுதே போகலைன்னு டிவி பொட்டிய போட்டேன்
( கிழ போடலே  ஆண் செஞ்சேன் )  சன் டிவில நம்ம எல் கே
என்னடா விஷயமுன்னு பாத்தா....மழலையர் வாழ்த்து!!
அடக்கடவுளே..அவருக்கு இன்னிக்கி பிறந்த நாளாமே!!
பாருங்க....
தேடலில் கூகிள் ! ,
கவிதையில் ஷேக்ஸ்பியர் !,
மொக்கையில் வடிவேலு !  ,

நட்பில் கர்ணன் !
பாசக்காரா அண்ணன் !
அஞ்சா நெஞ்சன் !
சொல்லின் செம்மல் !
பிரச்சார பீரங்கி !
பேஸ்புக் நாயகன் !


நம்ம எல் கே எனப்படும் கார்த்தி அவர்கள் இன்று தனது பிறந்தநாளை
கொண்டாடுகிறார்,,அவரை அனைவரும் வாழ்த்தி , அவர் நீண்ட நாள் இன்புற்று  வாழ இறைவனை வேண்டுமாறு பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன்..


              HAPPY BIRTHDAY BROTHER


இப்படிக்கு பாசக்கார தங்கை ,

22 Sep 2010

கடிகாலம்!!

என்ன மக்களே ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க போலிருக்கே!!

ம்ம ஒரு மாறுதலுக்கு எழுதாம இருக்க போறேன்..( ஹாய் ஜாலி !! ) யார் அங்கே?ஆசைய பாரு..அஸ்கு புஸ்கு...எழுத தான் மாட்டேன்..பதிவெழுத மாட்டேனா சொன்னேன்??
15 Sep 2010

இப்போவே கண்ணக்கட்டுதே !!

ஒரு பிரபல திரையரங்கின் வாசலில்..
" டேய் ! நான் தான் அப்போவே சொன்னேன்ல? இதெல்லாம் சரிவராதுன்னு..கேட்டாத்தானே? போன மாசமே இன்டர்நெட்ல புக் பண்ணலாம்ன்னு சொன்னேன். பாரு அங்க கூட்டத்த.." என்று ஹரி முறைக்க..

ஆனது ஆகிடுச்சு இப்போ ஏன் மண்டையை உடைச்சுக்கனும் என்று சொல்வது போல் ஒரு லுக் விட்டான் கௌத்தம் ..அதற்கு ஜாய் " சரி இருங்க நான் போய் டிக்கெட் கிடைக்குதான்னு பாக்கிறேன்.."


அமைதி இழந்தவனாய் ஹரி "ஹேய் ப்ளாக்ல இருநூறு கேட்டாலும் பரவால்லடா எப்படியாவது மூணு டிக்கெட் தேத்திடு..அந்த ஏரியா பசங்க பாக்குறதுக்கு முன்னால நாம பாத்தாகனும் சொல்லிட்டேன் ஆமா .."
"நம்ம திருவண்ணாமலை போனோம்ல அங்கே கிரிவலத்துக்கு கூட இப்படி ஒரு கும்ப்ல பாக்கலடா...தலைவர் படம் ஆரம்பமே சூப்பரா இருக்குடா..."
" அங்கே பாரு!  நம்ம ஜாய் யாரையோ புடிச்சுட்டான் போல இருக்கு... " கௌத்தம் கண்கள் வெறித்து ஆச்சர்யத்துடன் கத்தினான்.

எகிறி எகிறி குதித்துக்கொண்டு ஜாய் "ஹேய் கிடைச்சிருச்சுடா மாப்ளே...ஒரு டிக்கெட்டுக்கு முன்னூறு கேட்டான் .....இருநூத்தம்பதுக்கு முடிச்சுட்டேண்டா"
இனி  அந்த பசங்க நமக்கு முன்னாடி சீன போட்டு நம்மள கடுப்படிக்க முடியாதே...என்று படு குஷியாய் குதித்தான்.

சரிவாடா போய் பாக்காலம் இன்னும் அஞ்சு நிமிஷத்துல தொடங்கிரும்...ஹரி எச்சரிக்க மூவரும் அந்த கும்பலில் நசுங்கி நார் நாராய் ஒரு வழியாய் திரையரங்கின் உள்ளே நுழைந்தார்கள்.

கையில் ஆரத்தி , கற்பூரம் என்று மக்கள் தயாராக இருந்தார்கள்.
படத்தின் பெயர் வந்ததுதான் தாமதம்...விசில் பறக்க..ரசிகர்கள் கத்த...ஒருப்பக்ம் ஸ்க்ரீன் கிட்ட பூமழை பொழிய.அப்படி ஒரு கூச்சலை மூவரில் யாருமே எதிர்பார்க்க வில்லை..

முடிவுவரை ஒரு வசனமோ இசையோ காதில் விழவே இல்லை !!

ஒருவழியா எல்லாம் முடிந்து வெல்ல வந்ததும்..அப்பாடா சூப்பர் டா கண்டிப்பா..அடுத்த வருஷம் தலைவர் படம்வரும்வரை இது ஓடப்போகுது பாரேன் என்று பேசிக்கொண்டே  வீடிருக்கும் வீதி சென்றடைந்தார்கள்.
"ஹேய் புடிங்கடா அவன..இன்னிக்கி அவங்கள விடறதாஇல்லை...போய் ஸ்கூல் பீஸ் கட்டிட்டு வாங்கடான்னா...தியேட்டர்க்கா போறீங்க...உங்கள.." என்று ஹரி அம்மா அடிக்க வர...

அதுக்குள்ள ஜானியின் அம்மாவோ " இதுக்குத்தான்..அம்மா அம்மா இன்னிக்கி கடைசி நாள் மா பீஸ் கட்டலன்னா பரீட்சை எழுத விடமாட்டாங்கம்மான்னு நடிச்சு காச புடிங்கிக்கிட்டு போனியா....போடா அப்படியே போயிடு வீட்டுக்கு வந்தே கொன்னுடுவேன் ஆமா...! "

" ஏண்டா கழிஷடை ! ஒரு நாளாவது நேரத்துக்கு ஸ்கூலுக்கு போயிருக்கியா?? 
ஒரு ஸ்லோகம் சொல்லிருக்கியா..இல்லை ஒரு பரிஷையிலாவது பெயில் ஆகாம இருந்துருக்கியா...அந்த பாழாப்போன சினிமாக்கு மட்டும் மோதல் நாள் மோதல் ஷோ போகனுமா??? பிரம்மஹத்தி!! இரு உங்கப்பாவரட்டும் "  என்று கோவமாக கௌத்தம்அம்மா கதவை சாத்திக்கொண்டு போனார்.

அன்றிரவு எல்லார்வீட்லயும் ஒரே தீபாவளிதான்!!

காலையில் பள்ளியில்...மூவரும் பெருமையாய் நேற்று பார்த்த சினிமா டிக்கெட்டை அனைவரிடமும் காட்டி சீன் போட்டனர்...அங்கிருந்து ஒரு குரல்
" அட முட்டாள்களா..இத நாங்க இன்னைக்கி ஓசிலையே டிவி ல
பாக்கபோறோமே..இதுக்க ஆளுக்கு இருநூத்தம்பாது ரூவா கொடுத்தீங்க...ஐயோ ஐயோ "
" ஆமாண்டா இன்னைக்கி டிவி ல டிரெய்லர் வெளியிட்டாங்கடா..அத போய் தியேட்டர்லதான் பாக்கனுமா லூசுபசங்களா " என்று மற்றொரு குரல்.
முதல் முறையாக மூவரும் அவர் அவர் புத்தகத்தின் பின்னால் ஒழிந்தார்கள்!!


டிஸ்கி : இது சத்தியமா நம்ம எந்திரன் டிரெய்லர் பாக்க டிக்கெட் வாங்கி திரையரங்குக்கு போன அந்த மூணு பேர் பத்தினது அல்ல !

துணுக்கு : எந்திரன் டிரெய்லர் டிக்கெட் வெறும் எழுபது தானாம்...அப்போ சினிமா?????

"கண்ணா இது வெறும் டிரெய்லர் தான் ....மெயின் பிக்சர் இனிமே தான்.பாத்தா அசந்திருவே !! "
.

14 Sep 2010

சீஸ் ப்ரோகோலி சமோசா

சீஸ் ப்ரோகோலி சமோசா :

தேவையானவை  :

ப்ரோகோலி - 200 கிராம்
காளிப்லவர் - 200 கிராம் 
Mozzarella சீஸ்  - 100 கிராம்
புதினா - 2 டீஸ்பூன்

pastry ஷீட்ஸ் - 20
மிளகாய் பொடி - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் பொடி - 1 /2  டி ஸ்பூன்
தனியா பொடி - 1 டேபிள் ஸ்பூன்
மைதா மாவு  - 3 டேபிள் ஸ்பூன்

உப்பு தேவையான அளவு
ஆலிவ் எண்ணெய்   -  1 டீஸ்பூன் 
எண்ணெய் பொரிக்க
தண்ணீர் - 4 டேபிள் ஸ்பூன்
செய்முறை :

  1. ப்ரோகோலியையும் காளிப்லவரையும் சின்ன சின்னதா வெட்டி கொள்ளவும். 
  2. சீஸை  துருவி கொள்ளவும் 
  3. ஒரு கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு நறுக்கி வைத்துள்ள ப்ரோகோளியய்யும் காளிப்லவரையும் போட்டு உப்பு தூவி வதக்கவும்
  4. பாதி வதங்கியவுடன் மிளகாய் பொடி , தனயா பொடி , மஞ்சள் பொடி எல்லாத்தையும் போட்டு காய்கள் நன்கு வேகும் வரை வதக்கவும்.
  5. அடுப்பை அனைத்து விட்டு துருவிய சீஸை இந்த காய் கலவையுடன் சேர்த்து கலந்து தனியே எடுத்து வைக்கவும் 
  6. வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
  7. மைதா மாவில் தண்ணீர் சேர்த்து பசைபோல் செய்து கொள்ளவும் 
  8. pastrysheet ஒன்றை எடுத்து முக்கோணமாக மடித்து ஒரு ஸ்பூன் காய் கலவையை வைத்து சமோசா [போல் செய்து கடைசியாக மூடும் பொழுது இந்த மைதா மாவு பசையை சிறிது தடவி மூடி தனியே வைக்கவும் 
  9. இப்படியே எல்லா ஷீட் களையும் செய்து
  10. எண்ணெயில் பொரித்தெடுக்கவும் 
 How to fold pastry sheet to make samosa :


image courtesy : http://www.cuzza.com

12 Sep 2010

சபாஷ் சரியான போட்டி !!

நம்ம வலைபதிவு உலகம் மட்டும் இல்லாம இந்த பூலோகம் , மேல்லோகம் , பாதாளலோகம், லெப்ட் லோகம் , ரைட் லோகம், இண்டு லோகம் இடுக்கு லோகம்னு..
எங்கே போனாலும் தீராதது நம்ம தங்க்ஸ் ரங்கஸ் காமெடி மட்டும் மாறவே மாறாது!!

சில விஷயங்கள் பெண்களால் மட்டுமே செய்ய முடியும்...சில விஷயங்கள் ஆண்களால்
மட்டுமே செய்ய முடியும்..
லேடீஸ் ஒன்லி : 

1 ) ஷாப்பிங் செய்ய பெண்களுக்கும் ரொம்ப பிடிக்கும்..தேவை என்ற ஒன்று 
முக்கியமே அல்ல..( தள்ளுபடி விற்பனை என்ற பலகயய்விட முக்கியமா உங்க 
தேவை கோவை எல்லாம் ?? )

2 ) பெண்களுக்கு அழுவது மிகவும் பித்த ஒன்று , பக்கத்தில் யாரேனும் அழுவதை 
கேட்க்க இருந்தால் மட்டும் ! ( தனியா அழுதா அழுகைக்கு என்ன மரியாதை ?? ) 

3 ) கண்ணா பின்னான்னு கேள்வி கேப்போம்! அதுவும் ரங்கஸ் பதில் சொல்ல முடியாமல் முழிக்கும் படியான கேள்விகளாய் பார்த்து ! ( அப்போ தானே எதோ தப்பு 
செய்ததுபோல் ஒரு என்னத்தை தாங்க்ஸ் மனசுக்குள்ள உருவாக்க முடியும் ) 

4 ) கரப்பான் , பல்லி , எட்டுக்காலி என்று எது வந்தாலும் வீர தீர பராக்க்கிரம மனது 
உடைய பெண்ணா இருந்தாலும்...பூச்சி அடிக்க அல்லது ஓட்ட ஆண் தான் வேணும் ( அப்போதானே ஐயோ அம்மா பூச்சி என்று துள்ளி குதித்து சீன் போட முடியும் ! ) 

5 ) எங்கே போனாலும் குறைந்தது ஒரு மூணு பெண்களாவது கூடித்தான் போவார்கள்..தனியே போவதென்பது பெண்களால் முடியாத ஒன்று ( கும்ப்ள போனாத்தானே கூடி நின்னு அரட்டை அடிக்க முடியும் !! ) 

6 ) நாலு நாள் விடுமுரைன்னா என்ன ஒரு வாரம் விடுமுரைன்னா என்ன ? குறைந்தது ஒரு இருபது இருபத்தி ஐந்து துநிகலாவது வேணும் அப்பொழுதுதான் தினமும் இருக்கும் மூடுக்கு ஏற்றாற்போல் உடை அணிய முடியும் ! ( எப்புடி ) 

7 ) அலங்காரம் - கண்டிப்பாக தேவை - ஷாப்பிங் செல்ல , தோட்டத்தில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற , குப்பைகொட்ட , சீரியல் பாக்க , ........


8) குளியல் அறையில் கண்டிப்பாக மூன்று ஷாம்பூ நான்கு கண்டிஷனர் , ஐந்து சோப்பு 
என்று இருக்கும்,,இதனால் எப்பொழுதும் குளியலறை சென்ட்டு கடைப்போல் இருக்கும் 
( ஆயிரத்தெட்டு வாசனைகளில் எது எவை என்று பிரித்து பார்க்கவா முடியும் ) 

9 ) பெண்களுக்கு சீரியாகள் திரைப்படங்கள் எல்லாம் மிக மிக பிடிக்கும், தான் வாழ்கையை அந்த சீரியலில் வரும் பெண்ணோடு ஒப்பிட்டு தன்னை திடபடுத்தி கொள்ள ( எல்லாம் --- நான் தனி ஆள் இல்ல - என்ற மனநிலைக்கு தன்னை பக்குவ படுத்திக்கொள்ளத்தான் ! ) 

10 ) பெண்கள் அனைவருக்கும் குறைந்தது ஐந்து கிலோ வாவது இடை கோரக்க வேண்டும் என்ற என்ன கண்டிப்பாக இருக்கு.. ( தமன்னா மாதிரி ஒல்லியா இருந்தாலும் மனசுக்குள்ள தன்னை பிந்துகோஷ் போலவே கற்பனை செய்துகொண்டு நோன்துபோவார்கள் ) 
சரி சரி தோழிகளே அடிக்க கல்லேடுக்காதீங்க ! ...அதே மாதிரி சகோதரர்களே ரொம்ப சந்தோஷம் வேண்டாம்...

ஜென்ஸ் ஒன்லி : 

1 )  ஷப்பிங்கா...அலறி அடித்துக்கொண்டு ஓடுவார்கள்..அதனால்தான் இபோழுதெல்லாம்..கடைகளில் ஆண்களின் பிரிவு மாடியில் அதுவும் சின்னதாக 
கட்டபட்டிருக்கும் ! நாளுமாடி கட்டினாலும் நாலுநிமிஷம் போதுமே ஒரு சட்டை வாங்க 
துணி அழகுக்கு அல்ல தேவைக்கு எட்ன்பாது இவர்களின் வாதம் ( உனுக்கு மட்டும் பாது பாது வாங்குறியே எனக்கு ஒரே மாதிரி சட்டை தானா ? என்று அலறுவார்கள்.  .அனைத்தையும் வாங்கியது அவர்கள் தான் என்று மறந்து ! )

2 ) இவர்கள் மிகவும் சென்சிடிவ் ஆனவர்கள்!! ' வத்தி குச்சிய கொளுத்தி அது ஒருங்கா எரியலன்னாலும்..தீப்பெட்டி கம்பெனிக்கே சீல் வைக்கும் அளவிற்கு கோவம் வரும் !

3) செண்டிமெண்ட்  சுண்டைக்காய் எலாம் இவர்களுக்கு இல்லை அனால் கிரிக்கெட்டில் 
சச்சின் தோற்றுபோனால் ஆஹா நேத்து அந்த சட்டை போட்டுருந்தேன் அப்போ சதம் அடித்தான் இப்போ இந்த மஞ்ச சட்டைக்கும் சச்சினுக்கும் சரி இல்லையே என்று..மேட்ச் முடியும் வரை ஒரே சட்டையில் கிரிகெட் பார்க்க அமருவார்கள் 

4 ) கரப்பான் , பல்லி , சீரியல் ,  ஷாப்பிங் ,  மாமியார் , பாஸ் என்று பல அலர்ஜிகள் இவர்களுக்கு உண்டு..ஆனா பாருங்க எதையும் வெளியில் காட்டிக்காம சிங்கமாட்டும் 
கம்ப்ஹீரம நிப்பாங்க ! 

5 ) ஒரு வாரம் அல்லது பத்துநாள் விடுமுறை என்றால் கூட நாலு ஷர்ட் ரெண்டு பேன்ட் மட்டுமே எடுத்து செல்வார்கள் அதிலும் ரெண்டு சட்டை ஒரு பேன்ட் தொடாமல் அப்படியே வரும் ! 

6 ) கண்டிப்பா ஒரு அஞ்சு நிமிஷத்துல உனக்கு போன் பண்றேன் மா ! என்று கூறி செல்வார்கள்..ஆனா வீடு வந்து சேரும் வரை போன் வராது...அவங்க மறக்கலாம் இல்ல! , உங்க தொலைபேசி என்னை தொலைக்கவும் இல்லை ! தோனல சோ கூபட்ல அவ்ளோதான் ! 

7 ) அலங்காரம் தேவை இல்லை..." ஐயோ !! அவனும் என்னைமாதிரியே கருப்பு கோட் சூட் போட்டுருக்கானே ! "  என்று ஒரு ஆணாவது அலறி நீங்கள் பார்திருபீர்களா ??? 

8 ) சோப்பு ?? ஷாம்பூ ?? இருந்துச்சா என்ன..நான் கவனிக்கலைம்மா...என்று கூறிக்கொண்டே செல்வார்கள் குளித்து முடித்து விட்டு...( நாங்கலாம் நேச்சுரலா இருக்கோம் ! ) 

9) வழியை தொலைத்து நாலு கிலோ மீட்டர் எச்ட்ரா போனாலும் பரவல்ல..வழிய கேக்கவோ , மேப்ப பார்க்கவோ மாட்டார்கள்..முட்டாளுக்கு ஒரே வழி , அறிவாளிக்கு ஆயிரம் வழி ! எப்புடி ?? என்பார்கள் 

10 ) பெண்களை விட ஆண்களுக்கே குழந்தை குனி அதிகம்...மனைவி குழந்தையையே 
கவித்துகொண்டிருந்தால் " ம்ஹும்ம் என்று சத்தமிட்டு " நானும் இருக்கேன் கொஞ்சம் கவினி " என்பது போல் ஏதேனும் செய்வார்கள் !

இதை படித்த சகோதிரர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பெண்கள் பகுதியில் உள்ள எதையும் மறுக்கவோ ஆண்கள் பகுதியில் உள்ள வற்றை ஏற்கவோ மாட்டார்கள் !!
இது பெண்களுக்கும் பொருந்தும் !!

டிஸ்கி : கண்மணிகளா இதெல்லாம் நான் ஈமெயில் ல வந்தவையை ஏன் தமிழ்ல மாற்றி , கொஞ்சம் கட்டிங் ஓட்டிங் லாம் பண்ணித்தான் போட்டுருக்கேன்..

யார்மனசையும் புண்படுத்தவோ , கீறவோ , கிள்ளவோ , அடிக்கவோ , திட்டவோ , ஒதைக்கவோ , குத்தவோ , சீவவோ , நசுக்கவோ நினைக்கவில்லை !!! சொல்லிபுட்டேன்!!

ஆமா ! சிரிசுபுட்டு சிந்திக்காம போங்க மக்களே !!
11 Sep 2010

பிள்ளையார் கேட்ட கேள்வி !

ஊரெல்லாம் ஒரு கொண்டாட்டமாம்..பிள்ளையார் சதுர்த்தி ஆச்சே..
காலைல எழுந்து..மனை எடுத்து..சுத்தமாக துடைத்து.அழகாய் கோலம்போட்டு

மார்கெட்டுக்கு போய்..நான் தான் போய் களிமண்ணுல பிள்ளையாரே செய்ய
போறேன் என்பதுபோல் ஒரு சீன போட்டுபுட்டு மார்கெட்டுக்கு போய்..

ஜம்முன்னு கூட்டமா பிரெண்ட்ஸ் கூட சேர்த்து நிற்கும் நம்ம ஆணி பில்லா
உமாச்சிய ( பிள்ளயாரத்தான் அப்படி செல்லமா சொல்வேன்..இப்போ இல்லை
கொழந்தையா இருக்கறச்சே )  கண் வச்சு ஜம்முன்னு மனைல ஒக்காரவச்சு..
பாத்து பாத்து குடை வாங்கி ( பிள்ளையார கரைச்ச உடனே குடை நமக்கு வருமே..அதான் அப்படி பாத்து பாத்து வாங்குவேன்..

கூடவே அருகம்புல் , எருக்க மாலை , தோரனமுன்னு நம்ம பிள்ளையாரபெறுமாய வீட்டுக்கு கூட்டிகிட்டு வருவேன்..அதுதான் என்
பிள்ளையார் சதுர்த்தி கடமை !! பல வருடங்களாக..

இப்போ இங்க ஷார்ஜா ல எங்கே போய் நான் பிள்ளையார வாங்க அவருக்குகுடைய எங்க வாங்க?? அருகம் புல்லோ நமக்கு
அதிர்ஷ்டம் இருந்தாள் மட்டுமே சரக்கு இருக்கும் இல்லை என்று
சாதரணமாக சொல்லிவிடுவார்கள் நம்ம சென்னை கடையில..
மண் பிள்ளையாரும் இல்லாம குடையும் இல்லாம அருகம்புல் , இருக்கம் மாலையும் இல்லாம..பிள்ளையார் சதுர்த்தியே கலை இழந்து காணப்படுகிறதுஇப்பொழுது..

சரி பாவம் கொழுக்கட்டையாவது செய்து வைப்போம் என்று நான்
களமிறங்க...தண்ணீர் வயத்து அவசர அவசரமாக மாவை கொட்ட...
அடடா  கொட்டினப்புரம் தான் தெரியுது அது மைதா மாவு...
சரி பரவல்லன்னு வேற தண்ணி வச்சு அரிசி மாவ கொட்டி கிளறி ,
பூரனமும் பண்ணி கொழுக்கட்டை பிடிச்சா..

மாவுக்கும் பூரனத்துக்கும் என்ன சண்டையோ...பூரணத்தை மூட மாவு ஏனோ
சம்மதிக்கவில்லை !! என்னென்னமோ செய்ஞ்சு பார்க்குறேன்..ம்ம்ஹும்
ஒன்னும் சரி வரல..சரின்னி வந்த வடிவத்துல எல்லாம் கொழுக்கட்டை பிடிச்சு
இட்லி தட்டுல வச்சு அடுப்புல ஏத்தி...


அப்பாடா..ஆச்சுன்னு போய் அடுப்புலேந்து கொழுக்கட்டைய எடுத்தா.....
இப்படியும் ஒரு சண்டையா மாவுக்கும் பூரனதுக்கும்???? தனித்தனியே முறைத்துக்கொண்டு நிற்கிறது!!!

இதுல என்ன பெரிய காமேடினா நான் பிச்ச கொழுக்கட்டை இப்பொழுது
எதோ அறிசிமாவும் பூரனமும் சேர்த்து செய்த களிபோல் காட்சி தர..
அவரிடம் " எல்லாம் கண் திருஷ்டிதான் - பின்ன போன முறை கொழுக்கட்டை
ஒரு விரிசல் கூட வாரமா வந்தது என்று தோழிகளிடம் சூப்பர் சீன் போட்டேன் ல அதன் விளைவுதான் இது !!! தேவை எனக்கு நல்லா வேணும." என்று நான் போலம்ப..அவரோ " பரவால்லமா..வாய்வரைதான் முழுசா வரும்..எப்படியும் விண்டு விண்டு தான் சப்டபோறோம்..கவலைபடாதே .கடவுளுக்கு அன்போட நாம் கொடுப்பதை அவர் ஏற்று கொள்வார் ! " என்று சாமாதானம் கூற..
 
மொத்தமாக அள்ளி போட்டு ஒரு மாதிரி வடிவில் கொண்டு சென்று
பிள்ளையாருக்கு நெய்வேத்யம் செய்தேன்...


என்னை பார்த்து பிள்ளையார் ஒரே கேள்விதான் கேட்பதுபோல் தோன்றியது
" நானா உன்ன கொழுக்கட்டை கேட்டேன்??? கொழுகட்டைன்னு
சொல்லிட்டு இப்படி களிகிண்டி தரியே மா !! "


என்ன சொல்ல அவரிடம்?? கொழுக்கட்டை பிடிக்க போய் களியாய்
போன கதை!!


கொவிச்சுகாதே கடவுளே..இந்த வாரமே நல்ல கொழுக்கட்டை செஞ்சுதறேன்
என்று சொல்லி வேண்டிக்கொண்டேன்..!!!10 Sep 2010

விநாயக சதுர்த்தி

                            அனைவருக்கும் விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.9 Sep 2010

ஈத் முபாரக்

அனைத்து இஸ்லாமிய நண்பர்களுக்கும் :

7 Sep 2010

ஆத்தா நான் ஷார்ஜா போறேன் ! 2

என்ன முதல் பகுதி படிச்சே இப்போ எல்லோருக்கும் வயறு புனாயிருக்குமுன்னு நினைக்கிறேன் ( நெனப்புத்தான்..காதுல ரத்தம் வந்து நாலு பேர் உண்ணும் ஐ சி யு ல இருக்காங்க...இரண்டு பேர் நிலை என்னேன்னே தெரியல...இதுல சார்லி சாப்ளின் தங்கச்சின்னு நெனப்பு )

இப்போ போஸ்டுக்கு போவோம்...பதிவுக்குன்னு சொன்னேன்...

உள்ள  போனேனா...நேரா நம்ம ***** செக் இன் கவுண்டர் (counter...kavunder இல்லை சொல்லிபுட்டேன் ஆமாம் ) தெரிய நேரா ஸ்கேன் செய்ய போனேன்
பெட்டிய தூக்கி அந்த பெல்ட் மேல வைக்கணும்...முன்னாடி இருக்கும் ஆளு அசால்ட் ஆறுமுகம் போல...ஜம்முன்னு எடுத்து வச்சார் ..நானோ பொட்டிய நகர்த்த கூட முடியாம விழிக்க.

சரி நமக்கு சனியன் சூட்கேஸ் ல வந்தா நான்என்ன செய்ய முடியும்?? மெதுவா பொட்டிய தூக்க முர்ப்படும்போழுது ஒரு குரல் " மேடம் நான் ஹெல்ப் பண்ணவா " ஏர்போர்ட் ஹெல்பர்...ஆஹா தானே வலிய வந்து மட்டுறாங்கன்னு ஓகே தேங்க்ஸ் என்று சொல்ல பாவம்..செக்கின் முடியும் வரை உதவ..எவ்ளோ சார்ஜ் என்று கேட்டா..இருநூறு என்றார்.ஆஹா என் கைல மொத்தமே அவ்ளோதான் இருந்துது!!! வச்சான் வேட்டு!!

பேசாமல் கொடுத்துவிட்டு...அப்பாவிடம் கொஞ்சம் லவுட்டி கொண்டு டாடா சொல்டு மேல போனா...ஆஹா....கரீட்டா நான் போறப்போ ஒரு செக்யூரிட்டி செக்கின் மிஷின் மக்கர்..ஆல் டைம்...ம்ம எல்லாம் முடிச்சு..போய் அப்பாடான்னு ஒக்காந்து ஒரு ஒரு தருக்கா போன் பண்ணி பேசிட்டு இருந்தேன்..

அப்போ ஒரு குரல்..." சுவர்ணா மணிகண்டன் ப்ளீஸ் கம் டு கேட் த்ரீ இம்மிடியாட்லி " இது என்னடா வம்பா போச்சு...ஒரு வேலை பேச்சு ஸ்வரசியதுல பிளேன விட்டேனா?? என்ன ஆச்சுன்னு ஓடினா..
" போர்டிங் பாஸ் ப்ளீஸ் " என்றார் ஒருவர்..மற்றொருவர் " சுவர்ணா..." என்று இழுக்க..." மை டாட்டர் " என்றவுடன் முகம் மாறியது..என்னடா இது
எதோ மணிரத்னம் படம் மாதிரி மாறி மாறி பேசி பேசி லுக் விட்ரங்கன்னு முழிக்க..

" சாரி மேடம் , ப்ளைட் இஸ் புல் ! ...... ( ஐயோ நாசமா போச்சே நான் தான் ஆன்லைன் செக்கின் பன்னேனே !! ) சோ வி ஹவே டு சேஞ் யுவர் டிக்கெட்..( நோ......................................) டு பிசினெஸ் கிளாஸ் ! ( !!!!!!!!!??????????????#########)
என்றார் பாவமாக..எதோ எனக்கு இடையூர் செய்தது போல் !! ( ஆஹா ஆண்டவா என்மேல் என்ன இப்படி ஒரு கருணை ???? ( பாவம் சுவர்நாவின்  பெயர்தான் வந்திருகிறது போல..கூட என்னை எதிர்பார்க்க வில்லை..)

எகிறி எகிறி மனதுக்குள் குதித்துக்கொண்டு பிளேன நோக்கி போனோம்...
மேடம் ப்ளீஸ் என்று கையில் இன்ருந்த பெட்டியையும் ஒருவர் வாங்கி baggage  ல போட்டுவிட்டார்..நடப்பது என்னவென்றே தெரியாமல்..குஷயாய் உள்ளே போனா..................

ஜமுன்னு பெரிய சீட்..நட்சத்திர ஹோட்டல் போல் வந்து வந்து கேட்டு கேட்டு
சேவை செய்றாங்க..சுவர்ணா தூங்கிட்டா...நானும் தூங்கலாமுன்னு சீட் எல்லாம் ரிக்லைன் செய்து கண்ணா மூடினா..

"ஆண்டி.......ஹாய் " ஒரு குரல் திரும்பிய் பாத்தா..ஒருபத்து வயது மதிக்க தக்க பய்யன்...( என்னது ஆண்டியா??? அடபாவி...என்ன கெட்டப்புல வந்தாலும் மானத்த வாங்க ஒரு கூட்டம் இருக்கும் போல !! ) வந்த கோவத்தை அடக்கி கொண்டு "  ஹாய் " என்றேன்   ...அவன் " Am unaccompanied minor , see my badge..i always travel in business class ( கொடுத்து வச்சவன் )  ...தாத பூட் தஞ்சாவூர் என்று மொக்கை போட ஆரம்பித்தான்.." ஓகே ஆண்டி நைஸ் மீட்டிங் யு " என்று அவன் சொல்ல
" thanks for flying with us........we have landed in dubai... ( ஆஹா தூக்கத்துல துண்டப்போட்டானே ) ஊரே வந்துருச்சு..அட என்ன கிலாச்னா என்ன மனுஷன் தூங்க முடியலையே...
அந்த பய்யன் எங்கேன்னு தேட ஆள் எஸ் !!! சரின்னு பெருமையா ( ஓசி பிசினெஸ் கிளசுன்னு யாருக்கு தெரியும் ? ) எல்லாருக்கும் முன்னாடி வெளியில் வந்து போட்டி எடுக்க பெல்டுக்கு போனா...

ஒரு முப்பது நிமிஷம்...ஜனங்க வராய்ங்க பொட்டிய எடுக்குராய்ங்க போராய்ங்க...என் பொட்டிய காணும்,,வந்துச்சு கடைசியா...ச்சே
(என்னதான் என்னைய தடவி மண்ணுல பொறந்தாலும் ஒட்டுரதுதான் ஓட்டும்.....)

வெளியே வந்தால் ஆவலா ?? காத்துகுட்டு இருந்த நம்மாளுகிட்ட " என்னங்க
எப்படி இருந்துது தெரியுமா பிசினெஸ் கிளாஸ் என்று சுத்தோ சுத்துன்னு கதை விட " மனிதர் ஒரு ரியாக்ஷனும் இல்லாமல் இருந்தார்...

" இனி போனா பிசினெஸ் கிளசுலதான் போகணும் "  என்றேன் ( அப்படி போடு அருவாள ) என்ன ? என்றார்..( சிவாஜி தோற்ருபோனார்! என்ன ஒரு முறை ! )

வாய தொரப்பேனா???கேப் சிப் என்று வீடு வந்து சேர்ந்தேன்..

அவரோ  சிரித்து விட்டு உள்ளே சென்றார் ..அந்த சிரிபிர்க்கு என்ன அர்த்தமோ..


ஆகையால் சகலமான வர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் ...நான் ஜாக்ரதையா ஊருவந்து சேர்துட்டேன்!! பயணம் இனிதே அமைய வாழ்த்திய நண்பர்களுக்கு நன்றி !! ( அப்பாடா இத முனாடியே சொல்லி தொலைக்க கூடாதா?? அதுக்கா இப்படி இரண்டு பதிவு.. தீட்டு டா அருவாள ! எடுடா அந்த சுமோவ ! )

ஆஹா மீ எஸ்கேப் !

ஆத்தா நான் ஷார்ஜா போறேன் !

" என்ன நாங்கன்னா அவ்ளோ எகத்தாளமா போச்சா?? பேயா சுத்துறது எவ்ளோ கஷ்டமான வேலை தெரியுமா?????? நாங்க தங்க தனி வீடு உண்டா??? தனி வண்டி........ அட்லீஸ்ட் தனி பஸ்??? ஒரு ஸ்பெஷல் ஹோட்டல்??? .ச்சே எப்போ பாத்தாலும் பயமுடுதுற மாதிரி கல்லறை இல்லன புளியமரம் மேக்ஸிமம் முருங்கை மரம் !!

நாங்களே கஷ்டப்பட்டு வாழறோம்!!!! இதுல நீ என்னடான்னா ஓஜா போர்டு அந்த போர்டு இந்த போர்ட்டுன்னு பேய கூப்றேன் ஜோசியம் பாக்கறேன் ன்னு பீட்டர உட்டுன்னு அலையிரியா????? அதும் இன்டர்நெட் ல....... உன்ன................ இரு என் அங்கிள் காட்டேரி கிட்ட சொல்றேன் !!! " என்று கத்திக்கொண்டே  பேய் ஒன்று என்னை துரத்த........


ஆஆஆஆஆஆ ..என்று அலறியபடி வேர்த்து விறுவிறுத்து கண்ணத் தொறந்தா...கனவு....அடக்கொடுமையே...இதுக்கா இப்படி??...எதோ கனவுல ஜானி டெப் வருவான்னு பாத்தா...பேய் வந்து தொரத்துதே...!!!

கண்ணெதிர கடிகாரம் சின்ன முள்ளு எட்டுலயும் , பெரிய முள்ள ஒன்பதுக்கு நகுத்தலாமா வேணாமா என்று குழம்பியபடி..எட்டிலிருந்து எட்டிப்பார்த்தது...
இதுல மெலிச ஒரு முள்ளு யோசிக்காம ஓடிக்கிட்டே இருந்தது...


பக்கத்துல சுவர்ண கடிகாரத்துக்கு போட்டியா சுத்திக்கிட்டு இருந்துருக்கா போல..கொஞ்ச நேரம் அப்றமா செல் போன் ல அழைப்பு வருது...
"என்னம்மா?? பாக்கிங் எல்லாம் ஓவரா?? லாஸ்ட் மினிட் ல டென்ஷன் ஆகாதே சரியா நான் ஆபீஸ் கலம்பாறேன் "  என்று அவர் பாவம் ஞாபக படுத்த போன் செய்தார்..ஐயோ..அப்படி ஒருவிஷயம் மறந்தே போச்சே நான் எப்போ பாக்கிங் பண்ணி எப்போ கிளம்பி???

இன்னிக்கி சாயங்காலம் ஏழு மணிக்குள்ள ஏர்போர்ட்ல இருக்கணுமே!!!!
பிடி ஓட்டம்...கால் டாக்ஸிக்கு போன் போட்டு வரசொல்லி...எல்லார்கிட்டயும்
சொல்லிக்கொண்டு கேளம்பினேன் நன்கனல்லூருக்கு ( புகுந்தவீடு..எங்கே புகுந்தே ஏன் புகுந்தேன்னுலாம் கேக்க கூடாது...மாமியார் வீடு அட மணி வீடு இப்போ என் வீடும் கூட போறுமா குழப்பினது????? ) 

" ரெண்டு நாள் இருந்தாலே நீ பெட்டி கட்ட டைம் போறாது...இதுல ஒரு நாள் கூட முழுசா இல்லை..என்னப்பன்ன போறியோ போ ...நான் சாயங்காலம் ஒரு ஆறரை மணிக்கு வரேன் பிக்அப் பண்ண " என்று பாசமாக!!??## வழி அனுப்பினார் அப்பா...

தூங்கிகொண்டிருந்த  சுவர்நாவை எடுத்துகொண்டு கிளம்பினேன்...நங்கநல்லூரில் இருக்கும் வீட்டுக்கு சென்று ஒரு வழியா மூட்டை முடுச்சுக்களை ஏற்றி வீட்டுக்கு போனா.." என்னம்மா இது டைம் இல்லையே பாத்து பாத்ரமா பேக் பண்ணு என்று கூறிவிட்டு மாமியார்..செல்ல

ஆடுதிருடின கள்ளி போல் முழி முழின்னு முழிச்சுக்கிட்டு மெதுவா வேலைய தொடங்கினேன்...நல்லாத்தானே போய்கிட்டு இருந்துது.... இடம் இருக்குன்னு நெனச்சு லூசட்டும் ஷாப்பிங் பண்ணி இப்போ பாத்தா....ஒரு தனி போட்டியே வேணும் அப்போதான் நான் வந்கினதேல்லாம் உள்ளே போகும்!!

அடக்கடவுளே ஏன் இப்படி சோதிக்கிற..ஒரு வழியா நாலுமணிக்கு மூட்டை முடிச்சை கட்டி முடித்து...வெளியே சும்மா ரவுண்டு போயிட்டு வந்தா மணி ஆறு!!!!!!!

அலறி அடிசுண்டு ரெடி ஆகி முடிக்கறதுக்குள்ள அப்பா வந்துட்டார்..எல்லாரிடமும் விடைபெற்று கொண்டு ஏர்போர்ட் கேளம்பினேன்..." காதல் அணுக்கள் உடம்பில் எத்தனை " என்றுஎந்திரன் ரஜினி கேட்க....ஐயோ மொத்தம் எத்தனை பெட்டி ?? என்னவே இல்லையே...என்று மண்டை குழம்பா எர்போர்டும் வந்தது...

ஓடி போய் சுறு சுறுப்பா ஒரு ட்ராலியை கொண்டுவந்து பொட்டிய மேல வெச்சு தள்ளினா...அத்தனையும் சரிஞ்சு விழுந்தது...சூப்பர் ஆரம்பமே இவ்ளோ அமோகமா இருக்கே..இன்னும் போய் ஈரான்கரதுக்குள்ள என்னவெல்லாம்
சர்பரைஸ்  எனக்காக காத்துகிட்டு இருக்கோ !...

சரின்னி வேற ட்ராலிய எடுதுட்டுவந்து கொளுவச்சு நகர ஆரம்பிச்சா...அம்மா....நான் போட்டிமேல ஒக்காரனும் ஒக்காரவை மா என்று சுவர்ண அழ ஆரம்பித்து விட்டாள்..நாசமா போச்சு..இந்த மூட்டையை எப்படி தள்ளரதுன்னு முழிக்குரப்போ இவ வேற நேரம் காலம் தெரியாம அடம்பிடிக்க
அவளையும் தூக்கி ஒக்கார வச்சு தள்ளிட்டு போனேன்...

என்ன எதோ சர்கஸ் கோமாளி மாதிரி பார்க்கறாங்க எல்லோரும்.இதெல்லாம் இவ போட்டிகளா இல்லை லேடி கூலியன்னு நெனச்சுருப்பாங்க..போல...யார் என்ன நெனச்சா எனக்கென்ன என் தலைவலி எனக்கு..இதுலயும் ஒரு தமாசு இருக்கேன்னு பேசமா உள்ள போனேன்..


மீதி part 2


g3