Recent Posts

11 Sep 2010

பிள்ளையார் கேட்ட கேள்வி !

ஊரெல்லாம் ஒரு கொண்டாட்டமாம்..பிள்ளையார் சதுர்த்தி ஆச்சே..
காலைல எழுந்து..மனை எடுத்து..சுத்தமாக துடைத்து.அழகாய் கோலம்போட்டு

மார்கெட்டுக்கு போய்..நான் தான் போய் களிமண்ணுல பிள்ளையாரே செய்ய
போறேன் என்பதுபோல் ஒரு சீன போட்டுபுட்டு மார்கெட்டுக்கு போய்..

ஜம்முன்னு கூட்டமா பிரெண்ட்ஸ் கூட சேர்த்து நிற்கும் நம்ம ஆணி பில்லா
உமாச்சிய ( பிள்ளயாரத்தான் அப்படி செல்லமா சொல்வேன்..இப்போ இல்லை
கொழந்தையா இருக்கறச்சே )  கண் வச்சு ஜம்முன்னு மனைல ஒக்காரவச்சு..
பாத்து பாத்து குடை வாங்கி ( பிள்ளையார கரைச்ச உடனே குடை நமக்கு வருமே..அதான் அப்படி பாத்து பாத்து வாங்குவேன்..

கூடவே அருகம்புல் , எருக்க மாலை , தோரனமுன்னு நம்ம பிள்ளையாரபெறுமாய வீட்டுக்கு கூட்டிகிட்டு வருவேன்..அதுதான் என்
பிள்ளையார் சதுர்த்தி கடமை !! பல வருடங்களாக..

இப்போ இங்க ஷார்ஜா ல எங்கே போய் நான் பிள்ளையார வாங்க அவருக்குகுடைய எங்க வாங்க?? அருகம் புல்லோ நமக்கு
அதிர்ஷ்டம் இருந்தாள் மட்டுமே சரக்கு இருக்கும் இல்லை என்று
சாதரணமாக சொல்லிவிடுவார்கள் நம்ம சென்னை கடையில..
மண் பிள்ளையாரும் இல்லாம குடையும் இல்லாம அருகம்புல் , இருக்கம் மாலையும் இல்லாம..பிள்ளையார் சதுர்த்தியே கலை இழந்து காணப்படுகிறதுஇப்பொழுது..

சரி பாவம் கொழுக்கட்டையாவது செய்து வைப்போம் என்று நான்
களமிறங்க...தண்ணீர் வயத்து அவசர அவசரமாக மாவை கொட்ட...
அடடா  கொட்டினப்புரம் தான் தெரியுது அது மைதா மாவு...
சரி பரவல்லன்னு வேற தண்ணி வச்சு அரிசி மாவ கொட்டி கிளறி ,
பூரனமும் பண்ணி கொழுக்கட்டை பிடிச்சா..

மாவுக்கும் பூரனத்துக்கும் என்ன சண்டையோ...பூரணத்தை மூட மாவு ஏனோ
சம்மதிக்கவில்லை !! என்னென்னமோ செய்ஞ்சு பார்க்குறேன்..ம்ம்ஹும்
ஒன்னும் சரி வரல..சரின்னி வந்த வடிவத்துல எல்லாம் கொழுக்கட்டை பிடிச்சு
இட்லி தட்டுல வச்சு அடுப்புல ஏத்தி...


அப்பாடா..ஆச்சுன்னு போய் அடுப்புலேந்து கொழுக்கட்டைய எடுத்தா.....
இப்படியும் ஒரு சண்டையா மாவுக்கும் பூரனதுக்கும்???? தனித்தனியே முறைத்துக்கொண்டு நிற்கிறது!!!

இதுல என்ன பெரிய காமேடினா நான் பிச்ச கொழுக்கட்டை இப்பொழுது
எதோ அறிசிமாவும் பூரனமும் சேர்த்து செய்த களிபோல் காட்சி தர..
அவரிடம் " எல்லாம் கண் திருஷ்டிதான் - பின்ன போன முறை கொழுக்கட்டை
ஒரு விரிசல் கூட வாரமா வந்தது என்று தோழிகளிடம் சூப்பர் சீன் போட்டேன் ல அதன் விளைவுதான் இது !!! தேவை எனக்கு நல்லா வேணும." என்று நான் போலம்ப..அவரோ " பரவால்லமா..வாய்வரைதான் முழுசா வரும்..எப்படியும் விண்டு விண்டு தான் சப்டபோறோம்..கவலைபடாதே .கடவுளுக்கு அன்போட நாம் கொடுப்பதை அவர் ஏற்று கொள்வார் ! " என்று சாமாதானம் கூற..
 
மொத்தமாக அள்ளி போட்டு ஒரு மாதிரி வடிவில் கொண்டு சென்று
பிள்ளையாருக்கு நெய்வேத்யம் செய்தேன்...


என்னை பார்த்து பிள்ளையார் ஒரே கேள்விதான் கேட்பதுபோல் தோன்றியது
" நானா உன்ன கொழுக்கட்டை கேட்டேன்??? கொழுகட்டைன்னு
சொல்லிட்டு இப்படி களிகிண்டி தரியே மா !! "


என்ன சொல்ல அவரிடம்?? கொழுக்கட்டை பிடிக்க போய் களியாய்
போன கதை!!


கொவிச்சுகாதே கடவுளே..இந்த வாரமே நல்ல கொழுக்கட்டை செஞ்சுதறேன்
என்று சொல்லி வேண்டிக்கொண்டேன்..!!!31 கருத்துக்கள்:

GSV said...

ME THE FIRST !!! ஆனா களி வேண்டாம் :) இப்படி தானே நினைச்சிங்க ...

கொவிச்சுகாதே கடவுளே..இந்த வாரமே நல்ல கொழுக்கட்டை செஞ்சு தர சொல்லுறேன் என்று சொல்லி வேண்டிக்கொண்டேன்..!!!

kavisiva said...

பாவம் பிள்ளையார்! ஏற்கெனவே யாருக்கும் தொல்லை கொடுக்காம சிவனேன்னு இருக்கற அவரைப் புடிச்சு பத்து நாள் பூஜை செய்து கடைசியில ஆத்துலயோ குளத்துலயோ கொண்டு போய் கரைச்சுடறாங்க. இருக்கற பத்து நாளாவது நல்ல சாப்பாடு சாப்பிடலாம்னு நினைச்சா... களி கிண்டி கொடுத்து அவரை ஏமாத்திட்டீங்களே :(

பிலேட்டட் பர்த்டே விஷ்ஷஸ் பிள்ளையார் :)

என்னது நானு யாரா? said...

காயத்திரி! இங்கே சென்னைக்கு வந்தீங்க இல்ல? அப்போ நல்லபடியா கொழுக்கொட்டை செய்றது எப்ப்டின்னு பெரியவங்க கிட்ட கத்திட்டு போயிருக்கலாமே.

பிள்ளையாரு, உங்க வீட்டுகாரரு, மத்த ஃப்ரெண்ட்ஸ் எல்லோரும் பாராட்டி இருப்பாங்க இல்ல. ஆனா எப்படியோ ஒரு பதிவு எழுத விஷயம் கிடைச்சுதே, அது சந்தோஷமான விஷயம் தானே

Balaji saravana said...

ஹா ஹா :)
சரி அந்த களி சாரி கொழுக்கட்டை எப்படி இருந்துதுன்னு சொல்லவே இல்ல ;)
அட்லீஸ்ட் ஒரு போட்டோ எடுத்து போட்டிருக்கலாம் :)

Ananthi said...

///என்னை பார்த்து பிள்ளையார் ஒரே கேள்விதான் கேட்பதுபோல் தோன்றியது
" நானா உன்ன கொழுக்கட்டை கேட்டேன்??? கொழுகட்டைன்னு
சொல்லிட்டு இப்படி களிகிண்டி தரியே மா !! "
//

ஹா ஹா..
என்னங்க.. காயத்ரி.. ??

சில சமயம் எனக்கும் இப்படி ஆகியிருக்கு...
அதிலும்.. சில நேரம்... கல்லு மாதிரி கூட ஆகியிருக்கு.. நம்ம புள்ளையார் தானே,
அட்ஜஸ்ட் பண்ணிக்குவர்.. டோன்ட் ஒரி... :-))))
நல்ல்லா இருக்குங்க.. பதிவு..
விநாயர் சதுர்த்தி வாழ்த்துக்கள்..!!

siva said...

kolukkati konjam parce anupungo akka..

siva said...

yen parcel pana chonen theiruma,en friend oruthan enkita sanda potukitey erukan,avan mandiya odikathan keten..

mothathila padivu super..

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[அவரோ "பரவால்லமா..வாய்வரைதான் முழுசா வரும்.. எப்படியும் விண்டு விண்டு தான் சப்டபோறோம்..கவலைபடாதே .கடவுளுக்கு அன்போட நாம் கொடுப்பதை அவர் ஏற்று கொள்வார் ! " என்று சாமாதானம் கூற..]]]

எவ்ளோவ் பெரிய தியாகி..! இனிமேல் யாரும் எங்க இனத்துச் சகோதரர்கள் சகிப்புத்தன்மை இல்லாதவர்கள்ன்னு குற்றம் சொல்லக் கூடாது.. சொல்லிப்புட்டேன்..!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

களிமண்ணு உங்க தலைல இருந்து எடுத்ததா?

ganesh said...

இப்பதான் அக்கா உண்மை புரியுது...எங்கே இந்த கணேஷ் கொழுக்கட்டை கேட்ருவனோ..முன்னாடியே...கடவுள் கணேஷ் கேள்வி கேட்டாத இந்த மாதிரி...ஒரு பதிவை எழுதிட்டிங்க)))))

சரி.....பரவால்ல...பதிவாவது நல்லா இருக்கு)))))

வெறும்பய said...

போன முறை கொழுக்கட்டை
ஒரு விரிசல் கூட வாரமா வந்தது என்று தோழிகளிடம் சூப்பர் சீன் போட்டேன் ல அதன் விளைவுதான் இது !!!

//


நம்புற மாதிரி இல்லையே...

பிள்ளையார் எல்லா வீட்டிலையும் கொழுக்கட்டை சாப்பிடுவார்... ஒரு மாறுதலுக்கு உங்க வீட்டிலிருந்து கலி சாப்பிட்டதா இருக்கட்டுமே...

Madhavan said...

//என்னை பார்த்து பிள்ளையார் ஒரே கேள்விதான் கேட்பதுபோல் தோன்றியது
" நானா உன்ன கொழுக்கட்டை கேட்டேன்??? கொழுகட்டைன்னு
சொல்லிட்டு இப்படி களிகிண்டி தரியே மா !! "//

Sharjay climate not suitable for 'Kozhukkattai' ? (!!!)

☀நான் ஆதவன்☀ said...

:))) ஹேப்பி விநாயகர் சதுர்த்தி

Chitra said...

கொவிச்சுகாதே கடவுளே..இந்த வாரமே நல்ல கொழுக்கட்டை செஞ்சுதறேன்
என்று சொல்லி வேண்டிக்கொண்டேன்..!!!


.......எழுத்துப் பிழைகளும் கதையை சொதப்புதே.... இல்லை, அதுவும் காமெடியா? ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,.....

Gayathri said...

@GSV

ஹி ஹி நன்றி

Gayathri said...

@kavisiva என்ன செய்ய ஏதோ என்னால முடிஞ்சது

Gayathri said...

@என்னது நானு யாரா? ஆஹா இப்போ கொழுக்கட்டை செய்ய வரலை..வந்ததே இல்லை என்று சொல்லவே இல்லையே..ஆஹா நல்ல கேளப்புரன்கயா

Gayathri said...

@Balaji saravana சுவை அருமையா இருந்துச்சு...ஆஹா அடுத்த முறை போட்டோ போடறேன்

Gayathri said...

@Ananthi ஆஹா நம்ம செட்டா நன்றி தோழி எனக்கு இப்போ ஒரு தனி தெயரியம்

Gayathri said...

@siva

பார்சல் வருது அனுபிருக்கேன்...பூரிக்கட்டை

Gayathri said...

@உண்மைத் தமிழன்(15270788164745573644) உண்மைதான் ப்ரோ

Gayathri said...

@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) இல்லை அவ்ளோ குடுப்பினை என் தலைக்கு இல்லை

Gayathri said...

@ganesh ஆஹா இப்படிலாம் கூட செய்யலாமா...

Gayathri said...

@வெறும்பய நான் கொஞ்சம் different

Gayathri said...

@Madhavan sharjah climate problem illa...kitchen climate than problem

Gayathri said...

@☀நான் ஆதவன்☀ nandri bro

Gayathri said...

@Chitra ellaam thaana nadakuthu..avan seyal

GEETHA ACHAL said...

பிள்ளையார் சாப்பிடாரா...அருமையான நகைசுவையாக எழுதி இருக்கின்றிங்க...

Anonymous said...

பாவம் பிள்ளையார் பாவம் காயத்ரி ..

"கொவிச்சுகாதே கடவுளே..இந்த வாரமே நல்ல கொழுக்கட்டை செஞ்சுதறேன்
என்று சொல்லி வேண்டிக்கொண்டேன்..!!! "

நீ ஒன்னு செய் தினமும் கொஞ்சம் மாவு எடுத்து கொழுக்கட்டை பண்ணி பாரு அப்போ தான் அடுத்த வர்ஷம் விநாயகர் சதுர்த்திக்கு சரியா வரும் ..(சும்மா சொன்னே நோ பீலிங்க்ஸ் )

sukanya said...

so nice to read. i enjoyed. fotos plz...

veekey said...

கடைசிவரை கொழுக்கட்டை படம் போடாமலே மேட்டர் ஆ முடிச்சுடீங்க ஓகே என்றும் அன்புடன் வீகே thamildheshamchat.com NANDRI