Recent Posts

6 Oct 2010

கொலு கொலுவா முந்திர்க்கா !

எச்சரிக்கை : பதிவு கொஞ்சம் சின்னதா போச்சுது..முடிஞ்சா ஒரு ப்ளாஸ்க்ல காபி தண்ணி போட்டு வச்சுக்கிட்டு கூடவே சமோசா , போண்டான்னு வச்சுக்கிட்டு படிக்க ஆரம்பிங்க..முக்கியமா ஒரு பாட்டில் குளுகோஸ் முக்கியம். என் கடமை சொல்லி புட்டேன். முக்கியமா ஆம்புலேன்ஸ் நம்பர் வச்சுகோங்க !!


முஸ்கி : இந்த பதிவு முழுக்க முழுக்க சிரிக்க மட்டுமே! யார் மனதையும் புண்படுத்த இல்லை..சிரிப்பு வந்தா சிரிங்க ! வரலைன்ன ?? கமென்ட்ல புலம்பிட்டு போங்க!



------------------------------------------------------------------------------------------------------



இந்திய இல்லை உலக பதிவுலக வரலாற்றிலேயே முதல் முறையாக நம்ம பதிவுலக நண்பர்கள் எல்லாருமா சேர்த்து கொலுவுக்கு போகபோறோம் அதுவும் நம்ம சினிமா ஸ்டார்ஸ் வீட்டுக்கு..( இப்படியெல்லாம் காட்டு கத்தா கத்தி பிரச்சாரம் பண்ணினாதான் வராங்க என்ன செய்ய )

நம்ம கும்பலோ பெருசு பஸ் விட்டாலே போறாது ஆனா பாருங்க

பட்ஜெட் இடிக்கும் காரணத்தினால் ஒரே அம்பாசிடரில் இடித்துக்கொண்டு போகவேண்டி உள்ளதால் அனைவரும் பொறுமையுடன் அமரும் படி கேட்டு கொள்கிறேன்...! போலாமா? ஜூட் !


முதலில் நம்ம வண்டி AIRD ( ஆர்டிபிசியால் இன்டலிஜென்ஸ் ரிசெர்ச் அண்ட் டே வேலோப்மென்ட் ) வாசலை சென்று அடைகிறது. காலைவச்சு ஒரு நிமிஷம் ஆகல அதுக்குள்ள அங்கேந்து ஏதோ மெசினும் கையுமா ஒரு ரோபோட் வந்து " இன்விடேஷன் கார்டை இங்க ஸ்வைப் செய்யுங்க ! "



என்று பயமுறுத்த நம்ம அறிவியல் சிங்கம் கணேஷ் இறங்கி போய் கார்டை ஸ்வைப் செய்ய..' அக்செஸ் க்ராண்டேட் " கேட் திறக்கிறது ! இரண்டு பக்கமும் பெண் ரோபோக்கள் அழககழகா தாவணி போட்டுக்கிட்டு சூப்பரா நிக்க... குஷயாய் உள்ளே செல்கிறோம்.


நம்ம எல்கே " தலைவர் படி படியா கொலு வைப்பார்னு பாத்தா என்னடா இது எதோ மியூசியம் மாதிரி இருக்கு ? "



வரவேற்பறையில் பிரமாண்டமான ரோபோட் ரஜினி " வெல்கம் போல்க்ஸ் ! கொலுவுக்கு வந்தோமா சுண்டல தின்னோமான்னு போய்கிட்டே இருக்கணும்!

அதவுட்டு எதனா பாட்டு கீட்டு பாடினா அவ்ளோதான் உங்கள டிஸ்மாண்டில் பண்ணிடுவேன். டாட் !" என்று ஆசையாய் !? வரவேற்கிறது..


சரி வா பொறுமையா பார்ப்போம் என அனைவரும் செல்ல ஒரு நிமிஷம் டைனோசார் போல் காட்சியளிக்கும் பொம்மை அடுத்த ஐந்து நிமிடத்தில் ராட்சத பாம்பை மாறுகிறது..அடுத்த ஐந்து நிமிடத்தில் அதுவே ஒரு பெரியா சிங்கம் ! என்ன கொடுமைடா இது எப்படி இப்படிலாம் தோணுதேன்னு ஆர்வக்கோளாரில் நம்ம

பிங்கி ஒரு பெண்ணை கேட்க ! " ஹா ஹா ஹா அது பொம்மை இல்லை

" ஏலேக்ட்ரோ மாக்னேட்டால்" இணைந்து உருவம் மாறும் ரோபோக்கள்

கிட்டத்தட்ட ஒரு ஐநூறு குட்டி ரோபோக்கள் ! " அன்று கூறி மறைகிறது!! அட அது வர்ச்சுவல் பெண் உருவம் ! "


இங்க எது உண்மை எது ரோபோ எதுஎன்ன வென்றே புரியல..அதுக்குள்ள அங்குள்ள இன்டர்காமில் " சுண்டல் குடுக்குறாங்க. டீம் க்கு ஒரு ஆள் வந்து சுண்டலை பெற்று கொள்ளவும் "


" முதோ வெட்டு " என்று அருண் பாய் ! அடுத்து அடுத்து பலரும் பாய , சுண்டளுடன் பெட்டியுடன் வரும் அருண் முகத்தில் சோகம்! " என்ன தோழா என்னாச்சு? " என்று ஆறுதலாய் நம்ம டெர்ரர் கேட்க கையில் இருக்கும் பெட்டியை கொடுக்கிறார். டெர்ரர் டெர்ரராக முழிக்கிறார்.


என்னதான் நடக்குதுன்னு எட்டி பார்த்தா...... எதோ உலோக பெட்டி மேல ஒரு குட்டி கீபோர்ட் ! "அதுல ஒழுங்கா பாஸ்வோர்ட் போட்டாத்தான் போட்டி தொறந்து சுண்டல் வெளியே வருமாம்! நாசமா போச்சு ! எப்போ திறந்து எப்போ சாப்பிட்டு ?? பேசாம அதை தூக்கி உள்ள வைங்க நாம கார்ல திறந்துக்கலாம் " என்று மாதவன் நேரமாவதை சுட்டி காட்டி சமயோஜிதமாய் ஐடியா கூற..

அனைவரும் அங்கிருந்து வெளியே வந்தனர்.

இதற்கிடையில் சாலையெங்கும் பெரிய பெரிய தொல்லை காட்சி. " பன் பிக்சர்ஸ் குலாநிதி மாறன வழங்கும் " நவராத்திரி " மாபெரும் கொலு படி கட்டும் விழா காணத்தவறாதீர்கள் ! " என்று ஐந்து நிமிடத்துக்கு ஒரு முறை நம்மை வதைக்கிறது.


மெதுவாய் நம்ம டி ஆர் வீட்டுக்குள் நுழைய " நாமே எங்க இருக்கோம்?? ஹை எகிப்தா ? எவ்ளோநாளா நானும் ஆசை படறேன் இன்னிக்காவது வந்தோம் " என்று காயத்ரி குதிக்க ( நானேதான் ! ) " ஆத்தா இது எகிப்தில்ல நம்ம

டீ ஆர் சார் வீடு கொலுவுக்கு செட்டு போட்டுருக்குறார் , இருந்தாலும் இது ஓவரு! " என்று ஒரு குரல் மிரட்ட... மிரட்டுவது நம்ம டெரர்..மெதுவா ஒரு ஒரு தரா உள்ள போனா.......அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்


கொலுபடியே காணும்!! பெரிய செட் ஒன்னு இருக்கு அவ்ளோதான் அதுல பெருசா நம்ம சந்தரலேகா பட கிளைமாக்ஸ் காட்சி பாட்டுல வருமே அந்த மாதிரி ஒரு பெரிய ட்ரம் அதுமேல நம்ம டி ஆர்! " இருந்தாலும் இது கொஞ்சம் டூ மச். இப்படியா அலம்பல் பண்றது? " தங்கமணி அக்கவால் அங்க நிக்க முடியல! " என் இட்லியே இதுக்கு தேவலை!! " என்று மனதுக்குள் அலுத்துக்கொண்டார்.


ஆச்சர்யத்துடன் , வரும் சிரிப்பையும் அடக்கி கொண்டு நம்ம ஜெய்லானி சந்தேகமாய் " சார் என்ன இது பொம்மையே வைக்காம நீங்களே இப்படி உட்கார்ந்து இருக்குறீஇங்க? ஒண்ணுமே புரியலையே? "



"அடுக்கு மொழிக்கு டீயாறு !

அடுக்கடுக்கா கொலுவைக்க வேற ஆள பாரு !



அஜித்து ஓட்டுவாறு காரு !

நான் ஒக்காந்த கொலுவ வந்து நீ பாரு !



கொலுவச்சா கொடுப்பாங்க சுண்டல் !

என்ன பார்த்து பண்ணாதே கிண்டல் !



Sorry for the interruption !

this is only my introduction !

decoction of the constipation of the action and direction


ஹேய் டண்டனக்கா , டனக்கு டக்கா! "


அவர் பாடி முடிக்கும் முன் அங்கிருந்த நம் பதிவுலமே கண்கலங்கி மனம் உடைந்து சுண்டளுக்காக காத்திருக்காமல் காரினுள் பாய , கார் அசுர வேகத்தில் அங்கிருந்து ஓடுகிறது...


" இப்போவே கண்ணா கட்டுதே !!" என்னப்பா இது எதோ கொலு சுண்டலுன்னு ஆச காட்டி இப்படி பாடா படுத்துறீங்க! " என்று சௌந்தர் நொந்து கொள்ள ! " இருங்க நாம அந்த எந்திரன் வீட்ல குடுத்த சுண்டல கொஞ்சம் சாப்புடலாம் அதுக்குள்ள அடுத்த வீடு வந்துரும் சரியா !" என்று தேவா ஐடியா தர..அனைவரும் ஒப்புக்கொண்டனர்


ஆளாளுக்கு ஒரு ஒரு பச்ச்வோர்ட் ட்ரை பண்ண ஒன்னும் வேலைகாகரமாதிரி இல்லை ! கடைசியா பிங்கி சனா என்று டைப் செய்ய பெட்டி திறக்கிறது..அனைவரும் ஆவலுடன் பெட்டியை எட்டிப்பார்த்தனர்.


பெரிய பல்பு ! சுண்டல் இல்லை நிறைய நட்டும் போல்டுமா இருக்கு!! ( பின்ன எந்திரன் வீட்ல என்ன தேங்கா மாங்கா பட்டாணி சுண்டலா கிடைக்கும்???? )

இதை பார்த்த எல் கே அண்ணாவுக்கு கவிதை பொங்க



" பொம்மை
பார்க்க வந்தோம்
பொம்மையே
பரிசிலாய் வந்தால்
மனமது கூத்தாடும் - ஆனால்
பரிசிலும் இல்லாமல்
பசியாற வகையும் இல்லாமல்
இதை கொடுத்ததேன்? "

( நெஜமாவே இது எல் கே அண்ணா எழுதின கவிதை )

:- நன்றி அண்ணா



அனைவரும் ஜோரா கைதட்டம் போது ஒரு குரல் அலறியது. அதே தொல்லை காட்சி. " உலக தொலைகாட்சியில் முதல் முறையாக குலாநிதிமாறன் பெருமையுடன் வழங்கும் "நவராத்திரி " கொலு பார்க் கட்டும் விழா மலேசியாவிலிருந்து நேரடி ஒளிபரப்பு ! திரை உலகமே திரண்டு வந்து வாழ்த்தும் உன்னத நிகழ்ச்சி.

காணத்தவறாதீர்கள்! " என்ன கொடுமைடா இதுகேல்லாமா விளம்பரம்!



அடுத்து இயக்குனர் ஷங்கர் வீடு வந்தது. இப்படியும் எளிமையான வீடா அசந்தே போனோம்..உள்ள போனாதான் தெரிது. எங்கயோ வெளிநாட்டு மாளிகையில் வந்தது போல் இருக்கிறது..செட்டு ச்சே டிசைன் போட்டது தோட்டா தரணியாமே? இப்போவே கண்ணா கட்டுதே.

" வாங்க.. வாங்க.. இது என் நான்கு வருட கனவு இப்பொழுதுதான் நினைவாயிருக்கு.." என்று பெருமை பேச " எங்கய்யா கொலுவ காணும் படியையும் காணும்! " என்று ஆர்வமாய் தம்பி சிவா கேட்க " என்ன இப்படி கேட்டுடீங்க?? மோதல் படிய இத்தாலில வச்சுருக்கேன்! இரண்டாவது படிய பிரேசில்ல வச்சுருக்கேன் , மூணாவது படிய துபாய் புர்ஜ் கலிபா பில்டிங் கடைசி மாடில வச்சுருக்கேன் , நாலாவது படிய ஆஸ்திரேலியா ல வச்சுருக்கேன், அஞ்சாவது படிய இப்போ நிலாவுல இப்போதான் வச்சேன்...."

"ஆறாவது படிய.." என் தலையில வை என்று அசரீரி ஒலிக்க.. " சார் கப் சிப் " அப்போ நாங்க என்ன செய்றது? என்று ஆவலாய் அனானிமஸ் குரல் ஒலிக்க " காத்திருங்கள் விரைவில் தெரிவிப்பேன் என்று சொல்லி சார் எஸ் !



இவரோட பிரமாண்ட அலம்பளுக்கு அளவில்லையா?? நிலாவுல வைக்கிறாராம் நிலாவுல! கடவுளே....என்று நொந்து நூடுல்ஸ் ஆகி நடயைக்கட்டினர் பதிவர்கள்.



" ஏன்ப்பா டிரைவர் அடுத்து எங்க போறோம்?? நல்ல இடமா கூட்டிகிட்டு போப்பா ப்ளீஸ் " என்று ரமேஷ் ( சத்தியமா இவரு நல்லவரு ) கோவத்தை கட்டு படுத்தி கொண்டு கேட்டார். . "கண்டிப்பா நல்ல காமெடியான இடம் தான். "என்று டிரைவர் பதிலளித்தார்.



கார் போய் நின்றது அட நம்ம விஜகாந்த் வீடு. வீடே சும்மா கம்பீரமா இருக்கு. ஆசை ஆசையாய் உள்ளே செல்கிறோம் " வாங்க வாங்க உட்காருங்க எப்படி போகுது பதிவெல்லாம்?? " என்று ஆசையாய் விசாரிக்கிறார்..


"என்ன நீங்க இத்தன படி வச்சிருக்கீங்க?? ஒரு முப்பது நாற்பது படி இருக்கும் போலிருக்கே ! " என்று ஆர்வமாய் அருண் கேட்டார்.


" இந்தியாவுல இந்த கொலுவ கொண்டாடுரவங்க மொத்தம் அறுபது கொடுயே நாலு லட்சம் பேர். அதுல கொலு வச்சு கொண்டாடுறவங்க முப்பது கோடியே மூணு லட்சம் பேரு, அதுல மூணு படி வைக்கிறவங்க இருபது கோடியே நாற்பது லட்சத்தி எட்டாயிரம் பேரு, இது பார்க் கட்டி ஆறேழு படிவைக்கிறவங்க பத்து லட்சத்தி அறுபத்தி ஐந்து பேர், இப்படி முப்பது கொலு வைக்குறது நான் மட்டும் தான்!..."



பாதிவுலகமே தலை கிர்ர் கிர்ர் என்று சுத்த கண்கள் இருட்ட திக்கு முக்காடி போகுது.



"இப்படி பேசிட்டே போனா என்ன அர்த்தம் ? நீயே சொல்லு கார்த்தி இதுலாம் சரி இல்ல! எங்கபோய் முடியுமோ! நான் போறேன் போய் ஒரு மில்க் ஷேக் சாப்டு வரேன் அப்போதான் கூல் ஆகும்..ச்சே ச்சே டென்ஷன் ! " என்று சந்தியா மாமி கிடைத்தா கேப்பில் வீட்டுக்கு பறந்து விட்டார் !



" அதுலயும் வேர் கடலை சுண்டல் செய்ரவங்க.." என்று அவர் தொடர

" பீம்பிளிக்கி பீலாபி!! மாமா பிஸ்கோத்து ! " என்று ஜெய் , எல் கே , தேவா , மங்குனி , பட்டாபட்டி , சௌந்தர் , அப்பாவி தங்கமணி , பிங்கி, சிவா , ரமேஷ் " எல்லாரும் கூட்டமாய் கத்த



நம்ம விஜயகாந்த் கொவாமாக துப்பாக்கி எடுக்குறார். " நாங்கல்லாம் தாய்லாந்து புலிக்கே தண்ணி காடுரவங்க உங்க துப்பாக்கிக்கு எல்லாம் பயப்படமாட்டோம்.. " என்று நம்ம ஆதவன் கம்ப்ஹீரமா முன்னே செல்ல..

தமிழ் ல எனக்கு பிடிக்காத ஒரு வார்த்த " புலி " ! பீர் கூட மோராகும் ஆனா நாய் நரியாகுமா?? " என்று ஏதேதோ பொலம்ப ஆரம்பிக்க அடுத்த கணமே அனைவரும் மாயம் !


உஸ்ஸ் அப்பா இப்போவே பாதி உயிர் போயிடுச்சு என்னய்யா இது இப்படி ஆளாளுக்கு போட்டு டார்ச்சர் பன்றாங்களே! என்று அனைவரும் கண்ணில் ரத்தம் வடிய நொந்து கொண்டிருந்தனர்


சாலையோர தொல்லை கட்சியில் " சன் பிக்சர்ஸ் குலாநிதி மாறன் பெருமையுடன் வழங்கும் "நவராத்திரி " துபாயில் நடந்த ,முதல் கொலு பொம்மை வைக்கும் கோலாகல நிகழ்ச்சி உங்கள் பன் டிவியில் காணத்தவராதீ....." டமாஆஆஆஆஆஆஆஆஆல் " அசுர வேகத்தில் பதிவுலகமே ஆத்திரமாய் அந்த தொல்லை பெட்டியை உடைத்து விட்டு நேரா கீழ்பாக்கில் ஒரு வார்டையே புக் செய்து அட்மிட் ஆனது.


அனைவரும் முணுமுணுக்கும் அந்த ஒரே வார்த்தை!!!


" ஆணியே புடுங்க வேணாம் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! "

80 கருத்துக்கள்:

LK said...

இப்பதான் சாப்டுட்டு வந்தேன். வந்த என்னை இப்படி சிரிக்க வச்சிட்ட.. என் கவிதையும் போட்டதுக்கு நன்றி

அருண் பிரசாத் said...

இரண்டாவது வெட்டு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

படிச்சிட்டு ரெண்டு நாள் கழிச்சு வரேன்...

Gayathri said...

@LK

நன்றி உங்கள் கருத்துக்கும் , பதிவிற்காக நீங்க எழுதி கொடுத்த கவிதைக்கும் ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி

Gayathri said...

@அருண் பிரசாத் சரி வெட்டி முடிச்சுட்டு பதிவேப்படின்னு சொலுங்க

Gayathri said...

@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் பதிவு பெருசுதான் அதுக்காக இப்படியா ஆஹா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஷ் யாப்பா. கொஞ்சம் படிச்சிட்டேன். சாப்புட்டு வந்து மீதி படிக்கிறேன். எவ்ளோ சின்ன பதிவு...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

@ டெரர்

மச்சி காயத்ரி பதிவு போட்டிருக்காங்க. படிக்கிறதுக்கு கொஞ்ச நாள் ஆகும். படிச்சிட்டு வரேன். எங்க ஆபீஸ்ல ஒரு வாரம் லீவ் சொல்லிடேன்..

அருண் பிரசாத் said...

அப்ப கடைசி வரைக்கும் சுண்டல் கிடைக்கலையா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Gayathri said...

@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)

ஹிஹி மெதுவா படிங்க

Gayathri said...

@அருண் பிரசாத் :( ஆமா அதன் வருத்தமா இருக்கு

அருண் பிரசாத் said...

@ LK
//" பொம்மை
பார்க்க வந்தோம்
பொம்மையே
பரிசிலாய் வந்தால்
மனமது கூத்தாடும் - ஆனால்
பரிசிலும் இல்லாமல்
பசியாற வகையும் இல்லாமல்
இதை கொடுத்ததேன்? "//
இன்னோரு முறை கவிதை எழுதுவீங்க நீங்க!

LK said...

//இன்னோரு முறை கவிதை எழுதுவீங்க நீங்க//

ஏன் எழுதாமா என்ன

kavisiva said...

சூப்பர் காயத்ரி! நல்ல்சிரிக்க வைக்கறீங்க. சரி எல்லாரும் கீழ்பாக்கத்துல இருந்து டிஸ்சார்ஜ் ஆயிட்டீங்க போல இருக்கே :)

ganesh said...

அப்படின்னா இந்த பதிவை முழுசா படிச்சிட்டு நல்லா இருக்கிறது நான் மட்டும்தானா?)))))

நல்ல சி(ற)ரிப்பான பதிவு அக்கா..நிறையா யோசிச்சி இருக்கீங்க போல...

எஸ்.கே said...

நல்ல கற்பனை வளம்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!

geethasmbsvm6 said...

அந்த ஒரே அம்பாசடர்லே போறது இருக்கே! அது ஒண்ணும் ஒளஒளக்காட்டிக்கு இல்லைங்க, நாங்க போயிருக்கோம், குஜராத் ஜாம்நகரிலே ஒவ்வொரு கொலுவுக்கும், இதுவானும் அம்பாஆஆசடர், நாங்க போனது ஆட்டோவுங்க. ஒரு ஆட்டோவிலே எத்தனைனு எண்ண முடியாதுங்க. ஆனால் ஜாலியோ ஜாலி! ம்ம்ம்ம்ம்ம் அது ஒரு வாழ்க்கை! இங்கே சுண்டல் தரேன்னு சொன்னாலே ஓடறாங்களே! இத்தனைக்கும் ஏடிஎம் மாதிரி எல்லாம் பண்ணறதில்லை, நல்லாத் தான் பண்ணுவேன்! :)))))))

geethasmbsvm6 said...

அது சரி ஒரு பதிவுக்கு ரேட் என்ன??/ முழுநேரமா??? பகுதி நேரமா?? எவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்ளோவ்வ்வ்வ்வ்வ் பெரிய பதிவுங்க??

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//" பொம்மை
பார்க்க வந்தோம்
பொம்மையே
பரிசிலாய் வந்தால்
மனமது கூத்தாடும் - ஆனால்
பரிசிலும் இல்லாமல்
பசியாற வகையும் இல்லாமல்
இதை கொடுத்ததேன்? "//

இந்த செய்யுள் வாழ்த்து ஒன்னாங்கிளாஸ் பாட புத்தகத்துல உள்ளதுதான?

Gayathri said...

@kavisiva அவ்வ்வ்வ் ஆகிட்டோம்..சிரிசீன்களா...வாவ் ரொம்ப சந்தோஷம் , நன்றி

Gayathri said...

@ganesh ரொம்ப நன்றி ப்ரோ

Gayathri said...

@எஸ்.கே மிக்க நன்றி

LK said...

//ஏடிஎம் மாதிரி எல்லாம் பண்ணறதில்லை, நல்லாத் தான் பண்ணுவேன்! :))))//

hihih

☀நான் ஆதவன்☀ said...

:)))))))))

நல்லாயிருக்குங்க சகோ :)

என்னைய வேற ஆட்டத்துல சேர்த்திருக்கீங்க. :)

அருண் பிரசாத் said...

//நேரா கீழ்பாக்கில் ஒரு வார்டையே புக் செய்து அட்மிட் ஆனது.//
ஒரு வார்டாஆஆஆஆஆஆ

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Madhavan said...

ஆரம்பத்துல.. நா(மாதவன் -- நா தான?) அம்பாசிடர்ல அடைச்சிகிட்டு வர வேணாம்னு நெனச்சேன்..
அப்புறம்தான் தெரியுது என்ன உள்ள தூக்கி அடிச்சு சிறை வேச்சிட்டீங்கன்னு..
இருந்தாலும்.. நடுவுல என்னை விட்டுட்டு போயிட்டீங்கலோனு தோணுது.. ..


--- நல்ல தமாஷ் பதிவு.. வாழ்த்துக்கள்..

Gayathri said...

@geethamaami மிக்க நன்றி மாமி..உங்க ஆட்டோ அனுபவத்த பகிர்ந்து கொண்டத்தர்க்கு மிக்க நன்றி

ஹிஹி பார்ட் டைம் பதிவாதான் ஆரம்பிச்சேன் இப்போ முழு நேரமும் இதுலே போகுது..ரேட் லாம் ஒன்னும் இல்லை படிக்குரவங்க சிரிச்சா ரொம்ப சந்தோஷம்..எல்லாரும் சிரிச்சு சந்தோஷப்பட்டா அதுவே எனக்கு பெரிய ஊக்கம்..

நன்றி

Gayathri said...

@☀நான் ஆதவன்☀ ரொம்ப நன்றி ப்ரோ சிரிசீன்களா?? அது போரும்.

ஆமா உங்க தாலந்து புலி சௌக்கியமா??

Gayathri said...

@அருண் பிரசாத் நம்ம குடும்பம் பெரிய குடும்பாமஆச்சே

Gayathri said...

@Madhavan ஆஹா இல்லை சார் உங்கள எங்கயும் விடல நேர எங்க கூடவே தான் வந்தீங்க...
பெரியவங்கள ரொம்ப களாய்க்க கொடதேன்னுதான் , சகோதிரர்களை மட்டும் கலாய்த்தேன்..
தப்பா எடுத்துக்காதீங்க

Madhavan said...

//பெரியவங்கள // என்னது.. நானா ?

வேணா.. நா அழுதுடுவேன்....
ரெண்டயிரத்துக்கு(AD) முன்னால பொறந்ததுனால.. என்னைய 'போன நூற்றாண்டுல பொறந்தவனு நேனைச்சுட்டீங்கள சிஸ்டர்?'

Balaji saravana said...

செம சூப்பர் காயத்ரி.. கடைசிவரைக்கும் சுண்டல் கிடைக்கலையே! ;)
//"ஆறாவது படிய.." என் தலையில வை என்று அசரீரி ஒலிக்க..//
ஹா ஹா.. கலக்கல் :)

TERROR-PANDIYAN(VAS) said...

சகோ நீங்க ரத்த ஆறு பாத்து இருக்கிங்களா?? இன்னைக்கு மாலை ஷார்ஜால ஓடும்...

Anonymous said...

இன்றைய டாப் பிரபல வலைபதிவுகளை WWW.SINHACITY.COM இல் காணுங்கள்

Gayathri said...

@Madhavan ஆஹா மன்னிச்சுடுங்க சரி இனி சார் லேந்து ப்ரோ க்கு ப்ரோமொட் அய்டீங்க..சரி தானே ப்ரோ

Gayathri said...

@Balaji saravanaமிக்க நன்றி..எனக்கும் ரொம்ப பிடிசுருந்துது அந்த வரி நன்றி ப்ரோ

Gayathri said...

@TERROR-PANDIYAN(VAS) நீங்க ஷார்ஜா லய இருக்கீங்க? சொல்லவே இல்லையே ப்ரோ

Madhavan said...

//சரி தானே ப்ரோ//

This looks fine.

Anonymous said...

இன்றைய டாப் பிரபல வலைபதிவுகளை WWW.SINHACITY.COM இல் காணாதிர்கள்... இது எல்லாம் ஒரு பொழப்பா நான் பண்ணிகிட்டு இருக்கேன்....

TERROR-PANDIYAN(VAS) said...

@Gayathri

//நீங்க ஷார்ஜா லய இருக்கீங்க? சொல்லவே இல்லையே ப்ரோ//

எதுக்கு?? வீடு தேடி வந்து மொக்க போட்டு கொல்லவா?? நான் ஊர காலி பண்ணிட்டு பாலைவனத்துக்கு போரேன்...

TERROR-PANDIYAN(VAS) said...

@Gayathri

//கடைசியா பிங்கி சனா என்று டைப் செய்ய//

யாரு?? பிங்கி?? அந்த புள்ளைக்கு அது ப்ளாக் அட்ரஸ்ஸெ தெரியாது... ஒழுங்கா ஸ்கூல் போக சொல்லுமா...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சரி சரி நம்ம கலாநிதி அண்ணே எவ்வளவு கொடுத்தாரு?

மங்குனி அமைசர் said...

பதிவு கொஞ்சம் சின்னதா போச்சுது..முடிஞ்சா ஒரு ப்ளாஸ்க்ல காபி தண்ணி போட்டு வச்சுக்கிட்டு கூடவே சமோசா , போண்டான்னு வச்சுக்கிட்டு படிக்க ஆரம்பிங்க..////

எச்சூச்மி மேடம் எல்லாம் ரெடியா வச்சுகிட்டேன் மேடம் , ரெடி ஸ்டார் ..................
இம்.............. பதிவ போடுங்க

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///மங்குனி அமைசர் said...
பதிவு கொஞ்சம் சின்னதா போச்சுது..முடிஞ்சா ஒரு ப்ளாஸ்க்ல காபி தண்ணி போட்டு வச்சுக்கிட்டு கூடவே சமோசா , போண்டான்னு வச்சுக்கிட்டு படிக்க ஆரம்பிங்க..////

எச்சூச்மி மேடம் எல்லாம் ரெடியா வச்சுகிட்டேன் மேடம் , ரெடி ஸ்டார் ..................///

இம்.............. பதிவ போடுங்க
அப்போ மேலே உள்ளது பதிவு இல்லியா?

மங்குனி அமைசர் said...

இந்த டிரிப்பை நான் வன்மையாக கண்டிக்கிறேன் , தனித்தலைவர் பசுநேசன் , புரட்ச்சினாயகன் ராமராஜன் கொலுவுக்கு போகவில்லை

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///மங்குனி அமைசர் said...
இந்த டிரிப்பை நான் வன்மையாக கண்டிக்கிறேன் , தனித்தலைவர் பசுநேசன் , புரட்ச்சினாயகன் ராமராஜன் கொலுவுக்கு போகவில்லை///


எங்க டாகுடரு தம்பி கொலுவிக்கும்தான் போகல! இது அநியாயம்! அக்கிரமம்!

இதைக் கண்டித்து அனைத்திந்தைய டாகுடர் விஜய் ரசிகர் மண்றம் சார்பில் நாளை சுண்டல் உண்ணும் போராட்டம் நடைபெறும் என்று எச்சரிக்கிறேன்!

Gayathri said...

@TERROR-PANDIYAN(VAS) பாவம் அந்த பொண்ண ஏன் இப்படி இருங்க அவா கிட்ட சொல்றேன் ! சரி நீங்க ஷார்ஜா தான அப்போ...சுப்பர்

Gayathri said...

@பன்னிக்குட்டி ராம்சாமி திரும்பா திரும்பா எந்திரன் டிரெய்லர் காட்டி தலைவலி குடுத்துட்டார்...

விஜய் ராமராஜன் எல்லாரும் லிஸ்ட் ல இருந்தாங்க ஆனா பாருங்க பதிவ எப்படியான சின்னாதாவே மைண்டேய்ன் செய்யவேண்டி இருந்ததால ஒமிட் பண்ணிட்டேன்..மன்னிக்கவும்..

சந்தேகம் : அதென்ன சுண்டல் தின்னு போராட்டம்??
என்னவெல்லாம் கண்டுபிடிக்குராய்ங்கையா

Gayathri said...

@மங்குனி அமைசர் பதிவ...போடலையா?? அய்யா ஏதான கொவமுன்னா பேசி தீத்துக்கலாம் இப்படி கமெண்ட் போட்டியிலே வதந்திய கேளப்பதீங்கோ!!

பசுநேசனையும் டாக்டரையும் மற்றும் பலரும் லிஸ்ட் ல இருக்காங்க வேற பதிவுல கூப்டுவேன் கவலைவேணாம்

மங்குனி அமைசர் said...

me tha 50

Gayathri said...

@மங்குனி அமைசர்http://stephanedeluca.com/webengine/images/smiley/smile.gif

Chitra said...

ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... நடத்துங்க... நடத்துங்க......

அன்புடன் பிரசன்னா said...

ஹா ஹா ஹா காயத்ரி உங்க கலக்கல் சஊபர இருக்கு, அதுவும் டி ராஜேந்தர் லொள்ளு என்னும் கலக்கல்.....
ஆமா பதிவை எங்க இருந்து எழுதினீங்க....? கீழ்பாக்?

அப்பாவி தங்கமணி said...

இநத கமெண்ட்ஸ் முழுக்க முழுக்க அழுக மட்டும்... பட் சிரிக்கணும்னு நெனச்சா நான் தடுக்கல

// இந்த பதிவு முழுக்க முழுக்க சிரிக்க மட்டுமே//
பின்ன நீ சிந்திக்க வேற பதிவு போடறதா நெனப்பா...

//இப்படியெல்லாம் காட்டு கத்தா கத்தி பிரச்சாரம் பண்ணினாதான் வராங்க என்ன செய்ய//
ஆஹா ரெம்ப தெளிவாத்தான் இருக்க அம்மணி நீ

//பெண் ரோபோக்கள் அழககழகா தாவணி போட்டுக்கிட்டு சூப்பரா நிக்க//
அட தாவனிக்கி வந்த கெட்ட காலம் பாரேன்

//தங்கமணி அக்கவால் அங்க நிக்க முடியல! " என் இட்லியே இதுக்கு தேவலை!!//
ஹும்... உன் போஸ்ட விடவா ஆத்தா... மீ எஸ்கேப்...

இயக்குனர் சங்கர் கொலு சூப்பர் கற்பனை... ஹா ஹா அஹ

//" ஆணியே புடுங்க வேணாம் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! "//
repeatttttttttttttttttttttttt ...escapeeeeeeeeeeeeeeeeeeeeeee

அப்பாவி தங்கமணி said...

//LK said...//ஏடிஎம் மாதிரி எல்லாம் பண்ணறதில்லை, நல்லாத் தான் பண்ணுவேன்! :))))//

hihih//

படுபாவி... சான்ஸ் கெடைச்சா போதுமே... எனக்கு ஒரு சான்ஸ் கிடைக்காமையா போகும்...

அப்பாவி தங்கமணி said...

//geethasmbsvm6 said... அந்த ஒரே அம்பாசடர்லே போறது இருக்கே! அது ஒண்ணும் ஒளஒளக்காட்டிக்கு இல்லைங்க, நாங்க போயிருக்கோம், குஜராத் ஜாம்நகரிலே ஒவ்வொரு கொலுவுக்கும், இதுவானும் அம்பாஆஆசடர், நாங்க போனது ஆட்டோவுங்க. ஒரு ஆட்டோவிலே எத்தனைனு எண்ண முடியாதுங்க. ஆனால் ஜாலியோ ஜாலி! ம்ம்ம்ம்ம்ம் அது ஒரு வாழ்க்கை! இங்கே சுண்டல் தரேன்னு சொன்னாலே ஓடறாங்களே! இத்தனைக்கும் ஏடிஎம் மாதிரி எல்லாம் பண்ணறதில்லை, நல்லாத் தான் பண்ணுவேன்! :)))))))//

மாமி நீங்களுமா... நீங்க என் கட்சி தானே

ஜிஜி said...

நகைச்சுவையான பதிவு..வாழ்த்துக்கள்

ஜிஜி said...
This comment has been removed by the author.
நண்பேன்டா....நண்பேன்டா. said...

விஜயின் வீட்டு கொலுவுக்கு போகாத உங்களை வன்மையாக கண்டிக்கிறோம்....
உங்களுக்கு எல்லாம் விஜய் நடிகதெரியதவர், ஆறு படம் தொடர்ச்சிய பிளாப்புன்னு நக்கலா இருக்குல்ல...
பாருங்க சார் ,,, டாக்குத்தர் இப்ப "தீயா" வேல செஞ்சிக்கிட்டு இருகாரு... விடா முயற்சி விஸ்வரூப வெற்றி...

இளையதளபதி டாக்குத்தர் விஜய் இரசிகர் சங்கம்

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

மனம் விட்டு சிரிக்க வைத்ததற்கு நன்றிங்க காயத்ரி.....

அப்பாவி தமிழன் பரணி said...

ஐயோ ஐயோ half பிராண்டி அடிச்சுட்டு அசால்ட்டா வண்டி ஓட்டுவேன், இப்போ உங்க பதிவை படிச்சுட்டு உக்கார்ந்த இடத்தில் தலை சுத்தி பிளாட் ஆகிட்டேன், முடியலை முடியலை ,

அப்புறம் எங்க தலைவர் விஜயகாந்தை யாராச்சும் தப்பாய் பதிவு போட்டிங்கன்னா லெப்ட் காலை சேவிதிலை வச்சு ரைட் காலால் சுழட்டி சுழட்டி அடிப்போம் ஆங் !!!

தமிழ்நாடு சந்தோசமாய் இருக்கற நாட்கள்னு பார்த்திங்கன்னா எங்க விஜய்காந்த, TR படங்கள் வெளிய வரும் பொழுதான்,


ஒன்னு யோசிச்சு பாருங்க சன் டிவி கலாநிதிமாறன் விளம்பரப்படம் எடுத்தா அதுக்கு எப்புடி விளம்பரம் குடுப்பாங்க

ப.செல்வக்குமார் said...

//.முக்கியமா ஒரு பாட்டில் குளுகோஸ் முக்கியம். என் கடமை சொல்லி புட்டேன். முக்கியமா ஆம்புலேன்ஸ் நம்பர் வச்சுகோங்க !!//

ரொம்ப நல்லவர்ங்க நீங்க ..!!

ப.செல்வக்குமார் said...

///இங்க எது உண்மை எது ரோபோ எதுஎன்ன வென்றே புரியல..அதுக்குள்ள அங்குள்ள இன்டர்காமில் " சுண்டல் குடுக்குறாங்க. டீம் க்கு ஒரு ஆள் வந்து சுண்டலை பெற்று கொள்ளவும் " //

எனக்கும் வாங்கி வையுங்க .!!

ப.செல்வக்குமார் said...

//கொலுவச்சா கொடுப்பாங்க சுண்டல் !

என்ன பார்த்து பண்ணாதே கிண்டல் !//

இந்த காயத்திரி பண்ணுறாங்களே உங்களை கிண்டல் ,
அவுங்களுக்கு முதல்ல கொடுங்க சுண்டல் ..!!

ப.செல்வக்குமார் said...

//குலாநிதிமாறன் பெருமையுடன் வழங்கும் "நவராத்திரி " கொலு பார்க் கட்டும் விழா மலேசியாவிலிருந்து நேரடி ஒளிபரப்பு ! திரை உலகமே திரண்டு வந்து வாழ்த்தும் உன்னத நிகழ்ச்சி.//

எப்ப பார்த்தாலும் அவரு ஏன் பெருமையுடன் வழங்குராறு ..?

ப.செல்வக்குமார் said...

///மோதல் படிய இத்தாலில வச்சுருக்கேன்! இரண்டாவது படிய பிரேசில்ல வச்சுருக்கேன் , மூணாவது படிய துபாய் புர்ஜ் கலிபா பில்டிங் கடைசி மாடில வச்சுருக்கேன் , நாலாவது படிய ஆஸ்திரேலியா ல வச்சுருக்கேன், அஞ்சாவது படிய இப்போ நிலாவுல இப்போதான் வச்சேன்...."//

இதையும் அங்க இங்கனு தான் வைப்பாரா ..?

ப.செல்வக்குமார் said...

//" ஆணியே புடுங்க வேணாம் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! "
//

எல்லோரும் பயந்து ஓடி வந்திட்டு , இப்படி சமாளிக்கறீங்க ..!!

ஸ்ரீராம். said...

எல்லோரும் கொலுவுக்கு சுண்டல்தான் கொடுப்பாங்க...நீங்க அல்வா கொடுத்துருக்கீங்க...

TERROR-PANDIYAN(VAS) said...

@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)

//மச்சி காயத்ரி பதிவு போட்டிருக்காங்க. படிக்கிறதுக்கு கொஞ்ச நாள் ஆகும். படிச்சிட்டு வரேன். எங்க ஆபீஸ்ல ஒரு வாரம் லீவ் சொல்லிடேன்..//

பரவாயில்லை மச்சி!! ஒரு வருஷம் ஆனாலும் நீ இருந்து படிச்சிட்டு வா. அதுக்குள்ள உங்க ஆபிஸ் கொஞ்சம் உருப்படட்டும்...

ஜெய்லானி said...

//ஆச்சர்யத்துடன் , வரும் சிரிப்பையும் அடக்கி கொண்டு நம்ம ஜெய்லானி சந்தேகமாய் " சார் என்ன இது பொம்மையே வைக்காம நீங்களே இப்படி உட்கார்ந்து இருக்குறீஇங்க? ஒண்ணுமே புரியலையே? "//

அதெப்படி சரியா கண்டு பிடிச்சீங்க என் சந்தேகத்தை ஹா..ஹா..

ஜெய்லானி said...

// Gayathri said...

@TERROR-PANDIYAN(VAS) நீங்க ஷார்ஜா லய இருக்கீங்க? சொல்லவே இல்லையே ப்ரோ //

டெர்ரர்ருக்கு பக்கத்து தெருவே தெரியலை ஹா..ஹா... உங்க ஏரியாவை கண்டுப்பிடிக்க ஒரு மாசம் ஆகும் ...!! ஹா..ஹா..

சௌந்தர் said...

TERROR-PANDIYAN(VAS)

சகோ நீங்க ரத்த ஆறு பாத்து இருக்கிங்களா?? இன்னைக்கு மாலை ஷார்ஜால ஓடும்..////
@@@TERROR-
எதாவது தவறான முடிவு எடுக்காதீங்க terror

siva said...

meeeee the first......
vadai eankkuthan..

siva said...

74

siva said...

7555555

dshuba said...

HAHAHA! Gayathri super!

Ananthi said...

செம ஜாலி-ஆ இருந்ததுப்பா... அதிலும் விஜயகாந்த் செம செம.. தூள்...
டி. ஆர்.. பின்னிட்டார் போங்க...

நல்லா இருக்கு காயத்ரி.. :-)))

Jaleela Kamal said...

எம்மாடி செம்ம ஜாலி யா படிச்சே, நல்ல சிரிச்சாச்சு பன் பிச்சர்ஸ் குலாநிதிமாறான்\எப்படி இப்படி எல்லாம் தோனுது.

Jaleela Kamal said...

//" பீம்பிளிக்கி பீலாபி!! மாமா பிஸ்கோத்து ! " என்று ஜெய் , எல் கே , தேவா , மங்குனி , பட்டாபட்டி , சௌந்தர் , அப்பாவி தங்கமணி , பிங்கி, சிவா , ரமேஷ் " எல்லாரும் கூட்டமாய் கத்த
./
இந்த கோரஸ் தூள்

Lakshmi said...

நல்ல சென்ஸாஃப் ஹ்யூமர் உங்களுக்கு