Recent Posts

9 Oct 2010

உங்க கிட்ட பழைய ஆடைகள், பொம்மைகள் இருக்கா? (தொடர் பதிவு )

உங்க கிட்ட நீங்க உபயோகப்படுத்தாத பொருட்கள் ஆடைகள், பொம்மைகள் இருக்கா? அதை தூக்கி எறியவும் மனசு இல்லாமல் என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கிங்களா? அதை எங்களிடம் குடுங்க நாங்க அதை ஏழை எளியவர்களுக்கு குடுக்குறோம்.


CTC - Chennai Trekking Club என்று ஒரு இயக்கம் இருக்கிறது.. நீங்க மேற் சொன்ன விஷயங்களை எங்களிடம் அளிக்க விரும்பினால் இந்த சுட்டியில் உள்ள Excel Formஜ நிரப்பினால் எங்க தன்னார்வலர் ஒருவர் உங்களை தொடர்பு கொண்டு உங்களை சந்தித்து அதை பெற்றுக்கொள்வார். இப்போதைக்கு இது சென்னையில் உள்ளவர்களுக்கு மட்டுமே.. உங்களால் நீங்க அளிக்க இருக்கும் பொருட்களை சென்னைக்கு அனுப்ப முடிந்தால் நீங்க கூட எங்களை தொடர்பு கொள்ளலாம்.

முத்துலட்சுமி அக்கா சொன்ன மாதிரி இது ஆதரவற்ற முதியோர்களுக்கும், குழந்தைகளுக்கும் குடுக்க போறாங்க..எனவே தயவு செய்து திரும்ப உபயோகப்படுத்தும் நிலையில் இருந்தால் மட்டும் குடுங்க.. கிழிந்த துணிகளை எல்லாம் குடுக்காதிங்க பிளீஸ்..

பொதுவா நான் ஓட்டு போடுங்க, கமெண்டு போடுங்கன்னு கேக்க மாட்டேன். இது ஒரு நல்ல விஷயம் நாலு பேருக்கு தெரிந்தால் கூட நாலு ஜந்து பேருக்கு உதவி செய்யலாம். இந்த விஷயத்தை உங்களால் முடிந்தால் நாலு பேருக்கு பகிருங்க.

டிஸ்கி :உதவி பண்றேன்னு பெருமைக்காக நிறைய பேர் கிழிந்த , உடைந்த பொருட்களை தருகிறார்கள் , உங்களை யாரும் கட்டாயப் படுத்தவில்லை , கொடுக்கபோகும் துணிகளை நன்றாக துவைத்து , அயன் பன்னி உபயோகிக்கும் நிலையில் கொடுங்கள் இல்லையென்றால் சும்மா இருங்கள் யாரும் உங்களை குறைசொல்ல மாட்டார்கள். . அனைவரும் கட்டாயம் ஓட்டுப் போடுங்க , அது நிறைய பேரை சென்றடைய உதவும் .


நன்றி : மங்குனி அமைச்சர் மற்றும் சந்தோஷ்பக்கங்கள்.

நணபர்களே  முடிந்தால் உங்கள் வலைப்பூவில் ஒரு நாளாவது இந்த பதிவை
போடுங்கள்..முடிந்தவரை அனைவருக்கும் இவிஷயத்தை பகிருங்கள்.

26 கருத்துக்கள்:

எஸ்.கே said...

செய்கிறோம் சகோதரி!

dheva said...

உபோயோகமான தகவல் காயத்ரி....பகிர்வுக்கு நன்றி!

LK said...

நல்ல பதிவு. பகிர்வுக்கு நன்றி சகோதரி


Dr.Sameena Prathap
said...

Hi Gayathri,

That's a nice info dear...I usually give away old garments to my maid's daughters..Also give them away to an orphanage near my house..Should never throw them away...Ofcourse when we give ,we should also make sure they are in good condition..

Dr.Sameena@
www.lovelypriyanka.blogspot.com

www.myeasytocookrecipes.blogspot.com

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

நல்ல விசயம். கண்டிப்பாகச் செய்யலாம். பகிர்வுக்கு நன்றிம்மா காயத்ரி.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

.பகிர்வுக்கு நன்றி!

சந்தோஷ் = Santhosh said...

என் பதிவை ரீ ஷேர் செய்ததுக்கு ரொம்ப நன்றிங்க..

சந்தோஷ் = Santhosh said...

என் பதிவை ரீ ஷேர் செய்ததுக்கு ரொம்ப நன்றிங்க..

வெறும்பய said...

நிச்சயமாக...

சௌந்தர் said...

நல்ல தகவல் பகிர்வுக்கு நன்றி

ஸ்ரீராம். said...

உபயோகமான பதிவு.

அப்பாவி தமிழன் பரணி said...

சகோதரி நான் ஏற்கனவே இதை செய்துகொண்டு உள்ளேன் தனிப்பட்ட முறையில் , உங்கள் பதிவில் இதையும் சேர்க்கவும், பண்டிகைகள், திருமண விழா மற்றும் அது சம்பந்தப்பட்ட விழாக்களில் உணவு பண்டங்கள் அதிகமாக குப்பையில் கொட்டப்படுகின்றன, அதை கொட்டாமல் அருகில் இருக்கும் அனாதை விடுதிகளுக்கோ அல்லது அங்கு வாழும் வறுமையில் வாடும் மக்களுக்கோ கொடுப்பதால் அவர்கள் மனமும் மகிழும், அதை விட அந்த விழா சம்பந்தப்படவர்களுக்கு வேறு சிறந்த வாழ்த்து கிடைக்காது, ஏழையின் சிரிப்பில் இறைவன் வாழ்கிறான்

ப.செல்வக்குமார் said...

சந்தோஷ் அண்ணா ப்ளாக்ல படிச்சேங்க..!!
அவசியமான பதிவு .!!

சசிகுமார் said...

good job i will put in my post thnks for sharing

siva said...

அவசியமான பதிவு .!!--repeatu...

சசிகுமார் said...

@சசிகுமார்

Please give link

Gayathri said...

பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி..

முக்கியமாக அனைவரும் சந்தோஷ் அவர்களுக்கு நன்றி சொல்லவேண்டும் அவருடைய முயற்சிதான் இது..

மிக்க நன்றி சந்தோஷ் சார்

DREAMER said...

நல்ல பயனுள்ள தகவல்..!

-
DREAMER

ஜிஜி said...

கண்டிப்பாகச் செய்றோம்.நல்ல பயனுள்ள தகவல் காயத்ரி.பகிர்வுக்கு நன்றி!

♥Sharon♥ said...
This comment has been removed by the author.
vinu said...

kolu materrru superuuuuuuuuuuuuuu


konja naalaaa konjam busypa athaan inthaa pakam vara mudiyala ippo ellam over..

நா.மணிவண்ணன் said...

கண்டிப்பாக இந்த கடமையை செய்வேன் சகோதிரி

Ananthi said...

நல்ல பயனுள்ள பதிவு காயத்ரி... நன்றி.. :-))

(ரொம்ப நாள் ஆச்சுப்பா.. எப்படி இருக்கீங்க? )

கோவை2தில்லி said...

ரொம்ப நல்ல காரியம் தோழி. நாங்கள் இங்கு தில்லியில் அருகில் உள்ள குஷ்ட ரோகிகள் ஆஸ்ரமத்தில் கொடுத்து விடுவோம். நண்பர்களிடமிருந்தும் சேகரித்து கொடுப்போம்.

அப்பாவி தங்கமணி said...

Nice useful info Gayathri

தக்குடுபாண்டி said...

நல்ல பயனுள்ள பதிவு காயத்ரி... நன்றி..:)