Recent Posts

3 Nov 2010

சந்தேக சாம்பிராணி

மக்களே!

இது  ஒரு கற்பனை...இதுல ஹீரோ ஹீரோயின் எல்லாம் நீங்கதான்.

இதான்  சிச்சுவேஷன்..

பகல் பன்னிரண்டு மணி, சென்னை வெயில் மண்டைய பிளக்க ,
கால்ல செருப்பு இல்லை , பைல காசு இல்லை , வேலை இல்லை ,
வெட்டி இல்லை ...

உங்களுக்கோ ஒரே பசி , நொந்து நடந்து போறீங்க... அப்போ
உங்க கண்ணுல...ஒரு பத்து ரூபா நோட்டு படுது..
ரோடுக்கு ரைட் சைடு ல ஒரு கையேந்தி பவன் இருக்கு , உங்களுக்கோ அசுர பசி , தொலைவுல ஒருத்தர் தன் பத்து ரூபாய கானுமுன்னு தேடினு இருகக்ர் ,
அவர பார்த்தா பஞ்சதுல அடிபட்ட மாறி இல்லை பகட்டாத்தான் இருக்கார்,

இப்போ..

நீங்க...

அந்த பத்து ரூபாவ அவருகிட்ட குடுப்பீங்களா ?

இல்லைஅத எடுத்துண்டு போய்  கையேந்தி பவன்ல சாப்டுட்டு
நீங்கபாட்டுக்கு போவீங்களா?

இல்லை வேற என்ன செய்வீங்க??

சொல்லுங்க...

இதன்  பின்னால் இருக்கும் உளவியல் விஷயத்தை நான் நாளைக்கு சொல்றேன்

28 கருத்துக்கள்:

சௌந்தர் said...

அட டா இதை நாளைக்கி தான் சொல்விங்களா அப்போ நானும் நாளைக்கு சொல்றேன் என்ன பண்ணுவேன்.....

சௌந்தர் said...

அந்த கையேந்தி பவன் என்ன இருக்கும் சொல்லுங்க சாபிடனும்....!ஒரே பசி

சௌந்தர் said...

இந்த பத்து ரூபாய் நோட்டை எப்படி எடுக்கலாம் பார்கிறேன் முடியலையே....

கணேஷ் said...

திருப்பி கொடுத்துறுவேன்..

☀நான் ஆதவன்☀ said...

கண்டிப்பா சாப்பிடுவேன். உயிர் போற பசியில் வேற ஒன்னும் நினைக்க தோணாதுன்றது தான் உண்மை.

GSV said...
This comment has been removed by the author.
GSV said...

சூடா நாலு இட்லியும் கெட்டி சட்டினியும் சாப்பிடுவேன் !!!

ப்ளீஸ் அகுவபீன வாட்டர் பாட்டில் கிடைக்குமா இங்கன்னு கூட கேட்டுட்டு தான் நவருவேன்

வெங்கட் said...

சாதாரணமா இருந்தா நான்
அந்த பணத்தை அவர்கிட்ட குடுத்துடுவேன்..
அது என் Character..

ஆனா பசி வந்தா பத்தும் பறந்துடும்..
அப்ப என் Character-ம் நிச்சயம் பறந்துடும்..!!

எங்கே கையேந்தி பவன்..?!!

அருண் பிரசாத் said...

இதுல எந்த உள்குத்தும் இல்லையெ!

கண்டிப்பா போய் சாப்பிடுவேன்

Prasanna said...

//பகல் பன்னிரண்டு மணி, சென்னை வெயில் மண்டைய பிளக்க ,
கால்ல செருப்பு இல்லை , பைல காசு இல்லை , வேலை இல்லை ,
வெட்டி இல்லை ...

உங்களுக்கோ ஒரே பசி , நொந்து நடந்து போறீங்//

இதெல்லாம் இல்லனாலும் நான் எடுத்து புடுவேன்..
பட்.. ஒருத்தர் தேடிட்டு வரார்.. அதுனால கொடுத்துடுவேன்..

Philosophy Prabhakaran said...

கண்டிப்பா பணத்தை கொடுக்கமாட்டேன்...

மங்குனி அமைச்சர் said...

சொல்றது சொல்றிங்க அது என்ன 10 ரூபா ??? 500 , 1000 சொன்னா குறைஞ்சா போயிடுவிங்க ? இல்ல 500 , 1000 இருந்தா ஒரு ரெண்டு, மூணு நாளைக்கு சாப்படு சாப்பிடலாமேன்னு சொன்னேன் .

Sundharadhrusti said...

I will ask the person whether it is yours, if so give it to him, otherwise i will take it.

செல்வா said...

நான் நிச்சயமா அவரு கிட்ட கொடுத்திடுவேன் ..!!

எஸ்.கே said...

அவர்கிட்ட கொடுத்துடுவேன்.
இன்னொன்னு :
காசு கொடுத்துட்டு, ரொம்ப பசி கையில காசில்லன்னு சொல்லி பார்ப்பேன். காசு கொடுத்தா சாப்பிடலாம். இல்லைன்னா சும்மா போக வேண்டியதுதான்!

பவள சங்கரி said...

நான் அவருகிட்டே கொடுத்து விடுவேன் காயத்ரி.......பாவம் தானே.....

ராம்ஜி_யாஹூ said...

சுகன்யா கருத்து போலவே . அந்த நபரிடம் கேட்பேன், அன்பரே தொலைந்த ரூபாய் இதுதானா, எனக்கு பசியாக இருக்கிறது. நான் சாப்பிட உங்கள் பணத்தை பயன் படுத்தி கொள்ளலாமா என்று.

அவர் பணம் இல்லை என்று சொன்னால், கடையில் பொய் கேட்பேன் வேறு யாரும் தொலைத்த பணமா.
என்ற போதிலும் நான் நேரடியாக சொல்லி உணவு அருந்த முயலுவேன்

Ravi kumar Karunanithi said...

neenga soldra hotel name is kaiyaendhi bhavan. so anga poi kai aendhi nippen. then adha vachi sapiduven.. correct'ah?

எல் கே said...

இப்ப இருக்கற நிலைமையில் அந்தப் பத்து ரூபா வச்சு ரெண்டு இட்லிதான் சாப்பிட முடியும். இல்ல ரெண்டு டீ குடிக்கலாம் . அம்புட்டுதான் பண்ண முடியும்... எஅதை எடுத்து என் பாக்கெட்டில் போட்டுகிட்டு போய்டுவேன்

vinu said...

எனக்கு முதலில் கீழே கிடக்கும் ஒன்றை அது பணமாக இருப்பின் எடுக்கப் பிடிக்காது நாணயங்கள் என்றால் கூட எடுத்திருப்பேன்; பிறகு யாரோ ஒருவர் ஏதோ ஒன்றை தேடினாலே அவருக்கு உதவுவது முதல் வேலையாய் இருக்கும்; அப்படி இருக்க அந்த பணம் அவருடையதாய் இருகுமோ என்ற சந்தேகத்திலேயே அதனை எடுக்க தையிரியம் வராது எனக்கு முதலில்; இதில் அந்த பணத்தை எடுத்து போய் சாப்பிடுவதா நிச்சயம் நான் என் சுயநினைவோடு இருக்கும் போது செய்ய வாய்பே இல்லை;

அதுவும் இல்லாமல் பசி என்பது என்னை பொறுத்தளவில் ஒரு உணர்வு அதனை திருப்த்தி அல்லது மனநிறைவு எனும் இன்னுமொரு உணர்வின் மூலம் கொஞ்ச நேரத்திற்க்கு தள்ளிப்போட முடியும் ஆக அதனை எடுத்து அவருக்கு கொடுப்பதே அந்த சூழ்நிலையில் பொருத்தமாய் இருக்கும்; ஏனெனில் அதனை எடுத்து சாப்பிட்ட பின் வயிறு நிரம்பிவிடும் ஆனால் நம்மை போன்ற middle class மனசாட்சி உறுத்தியேக் கொன்றுவிடும்; அதக்குப்பின் நமது பயணம் முழுவதுமே தடை படலாம்; வாழ்நாள் முழுதும் ஒவொரு முறை ஒரு பத்து ருபாய் தாளை பார்கையில் எல்லாம் ஒரு நேர்மையாளின் மனசாட்சி அவனை குத்திக்கொண்டே இருக்கும்; so என்னை என் மனசாட்சி அந்த சூல்நிலைய்க்கு பொருத்தமான ஒரு முடிவாய் அதை உரியவரிடம் ஒப்படைகவே அறிவுறுத்தும்

"தொலைவுல ஒருத்தர் தன் பத்து ரூபாய கானுமுன்னு தேடினு இருகக்ர் ,
அவர பார்த்தா பஞ்சதுல அடிபட்ட மாறி இல்லை பகட்டாத்தான் இருக்கார்,"

நமது செயல் நமது மனநிலையின் வெள்ளிப்பாடே தவிர அதற்கு இது போன்ற சூழ்நிலை காரணங்களை பயன்படுத்திக் கொள்வதென்பது escapeisam; அவர் எப்படி இருப்பினும் அந்த பணம் அவருடையது எனும் சூழ்நிலையில் அவரிடம் சேர்ப்பதுதான் சரி; அவர் வசதிக்கும் நமது தவறுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை; so அவர் ஒண்ணும் பெரிதாய் ஒன்றும் இழந்துவிடவில்லை பார்க்க மிகவும் வசதியானவர் போலிருந்தார் என்பெதெல்லாம் சும்மா escapeisam

vinu said...
This comment has been removed by the author.
ADHI VENKAT said...

கண்டிப்பா குடுத்திடணும்னு நினைப்பேன் காயத்ரி.

Unknown said...

திருப்பி கொடுக்க முடியாது. ஏன்னா நாங்க கடன் வாங்குனாவே திருப்பி தர்ர பழக்கம் கிடையாது. நான் மொதல்ல ரெண்டு இட்லி ஒரு வடை சாப்பிடர வழிய பார்ப்பேன்.

(நானும் உளவியல் படிச்சிட்டு தானுங்கோ ‍‍‍இந்த இடத்துல ஆணி புடுங்கிக்கிட்டு இருக்கேன்‍‍ ‍என்ன புரோசனம்)

Fera said...

சாபிட்டுவிட்டு அவரிடம் போய் , "ஐயா, சாப்பாடு போட்டதற்கு ரொம்ப நன்றி" என்று சொல்லிட்டு போயிடுவன்........
(ஹி....ஹி.....காச விட நன்மை பெறுமதியனதுதனே....அதான் அவருக்கு நன்மைய கொடுத்தன்.......ஹி....ஹி....)

Madhavan Srinivasagopalan said...

//இதன் பின்னால் இருக்கும் உளவியல் விஷயத்தை நான் நாளைக்கு சொல்றேன்//

இதை இன்னும் சொல்லலியா ?
அதுசரி.. தலைப்பு பொருந்தவில்லையே ?

Gayathri said...

கமெண்ட் போட்ட அனைவருக்கும் ரொம்ப நன்றி..எதோ நீங்கல்லாம் படிகர்துனாலதான் என் பதிவு உண்ணும் ஓடுது..

இதுக்கான விடையை போஸ்ட் பண்ணிருக்கேன் டைம் இருக்கறதே பாருங்கோ

நன்றி

Radhakrishnan said...

அவரிடம் தான் கொடுப்பேன். இதே மனநிலையுடன் நான் அங்கிருந்தால்.

அப்பாவி தங்கமணி said...

உண்மைய ஒத்துக்கறேன்... எனக்கு பசி வந்தா அவ்ளோ தான்... பத்தென்ன நூறே பறந்து போகும்... வயத்த கவனிச்சப்புறம் தான் தத்துவம் பித்துவம் எல்லாம் தோணும்... அதுவும் கிடைச்ச எதையாச்சும் சாப்பிடுற ஆளு கூட இல்ல... அப்பவும் வாய்க்கு ருசியா வேணும்... ரங்க்ஸ் எப்பவும் அடிக்கற கிண்டல் "புவனா பசித்தாலும் பிட்ஸா தின்னாது" ஹா ஹா... அப்பவும் நமக்கு ரசம் சாதம் தான் வேணும்... எங்க செய்ய அப்படியே வளந்துட்டேன்

அது சரி...இது என்ன திடீர்னு இப்படி எல்லாம் கேள்வி உனக்கு?