Recent Posts

25 Nov 2010

கொலை முயற்சி

கொஞ்ச  நாளா நான் வலைப்பக்கம் வருவதில்லை,பதிவும் போடுவதில்லை.பின்னூட்டமும் இடமுடியவில்லை!.அப்படா சந்தோஷம் என்று அலுத்து கொண்ட சிலரும்,நீ இல்லேன்னா பதிவுலகத்தோட அதான் நம்ம தமிழ் பதிவுலகத்தோட எதிர்காலமே கேள்விக்குறியாகிடும் என்று புலம்ப மனது ரொம்ப கஷ்ட பட்டேன்...

எல்கே அண்ணன் குஜராத் போறாராம், தங்கமணி அக்கா இந்தியா போய்ட்டு

இப்போதான் வீடு திரும்பினார், அருண் சினிமா புதிரா போட்டு மக்களை சிந்திக்க வைக்கிறார், ஆதவனோ சேட்டனின் சேட்டைகளை பதிவை போட்டு என்டி டிவி க்கு சவால் விடுகிறாராம், 

இவர்களிடமிருந்து மக்களை மீட்டு காப்பாற்ற வேண்டும் என்று ஒரு ரசிகர் மன்றாட.........வந்துவிட்டேன்..


ஆனா நான் ஏன் வரல? என்ன பண்ணேன் இவ்ளோ நாள்?? எப்படி என் கண்மணிகளை பிரிந்து இருந்தேன்?? இந்த கேள்விகளெல்லாம் உங்க மனசுல வந்திருக்கும் எனக்கு தெரியும் சொல்றேன் சொல்றேன் ...அதுக்குதான் வந்தேன்..

கொஞ்ச நாள் முன்ன காலிங் பெல் அடிச்சது, நான் போய் திறந்தா.....

" உன்னபாத்துஎத்தன நாள் ஆச்சு? எப்டி இருக்கே ? நாங்க உங்க கூட கொஞ்ச நாள் தங்கிவிட்டு போகலாம்னு ஆசையா வந்துருக்கோம் என்றபடியே வீட்டினுள் என் அனுமதியை கூட எதிர்பார்க்காமல் உரிமையாய் என்டர் ஆனது அந்த குடும்பம்!
அம்மா அப்பா பிள்ளைகள் என்று ஆளுக்கொரு மூளைக்கு படையெடுத்தனர்.
இவங்கள யார் உள்ளவிட்டது என்று ரங்கமணி ஆத்திரமாய் சீற, என் பொண்ணோ அம்மா எனக்கு பயமா இருக்கு போக சொல்லுமா என்று அலற.. செய்வதறியாது திகைத்து நின்றேன்.
சிலர்  நம்ம வீட்டிற்கு வரமாட்டான்களா தங்கமாட்டாங்களா என்று நாம எண்ணி ஏங்குவோம்,  சிலர் எப்போடா போவாங்கன்னு விரக்தி அடைய வைப்பாங்க..இவர்கள் இரண்டாவது ரகம்..அம்மாக்காரிக்கு வேலையே இல்லையோ.... எத்தனை பிள்ளைகள்?? 

அப்பனோ ஜொள்ளு நான் போற இடத்துக்கேலாம் வந்து நிக்கறது...
கிச்சென்னுக்கு வந்து நான் சமைக்கறதயே உத்து பாக்குறது,
சமைச்சு  டேபிளுக்கு கொண்டு வந்து வச்சா துளி மூட மறந்தாலும் சாப்பாட்டுல கை வைகுறது, அட தூங்கும் பொழுது கூட பக்கத்துல படுத்து தூங்க பாக்குறான் அல்ப பிறவி. 

பிள்ளைகள்!! ஐயோ பசங்களா அதுங்க?? கண்ட எடத்துல ஏறவேண்டியது கண்டத்த தின்ன வேண்டியது, பட்னி போட்டா கூட தண்ணி குடிச்செனும் வாழ்வேன் ஆனா உன்ன விட்டு பிரியமாட்டேன் அன்பு தொல்லை.
இப்படியே  ஒரு மாசம் பொறுக்க முடியவில்லை ,

அப்பொழுதுதான் துணிந்து அந்த பாவ செயலை செய்ய துணிந்தோம்.. விஷம் கொடுத்து கொள்ள மனசு வரவில்லை, என்னதான் இருந்தாலும் விருந்தாளி.
ரங்கமணி பொறுமை இழந்தார், போன் போட்டார் இரண்டு அடியாட்களை தயார் செய்தார். சனிக்கிழமை நாங்க வரோம், குழந்தை இருந்தா நீங்க வெளில போயிடுங்க கொலை செய்வதை குழந்தை பார்த்தால் பிஞ்சு மனசு உறைந்து போகும், கொலை செய்வது எங்கள் வேலை ஆனா மத்தத நீங்கதான் பாத்துக்கணும் என்று கண்டிஷன் போட்டார்கள்..

அவர்கள் கொலை செய்வதில் பெயர்போனவர்களாம் ! ஒரே அடி டிக்கெட் நிச்சயம் என்று அனைவரும் பேசிக்கொண்டனர், இது ரொம்ப ஆபத்தான முடிவு என்று சிலர் எச்சரித்தனர்.

சனியன் சனிக்கிழமை வரான் என்று விருந்தினர்களிடம் நாங்கள் சொல்லவில்லை. மரணத்தை ஏற்று கொள்ளும் மனப்பக்கும் அவர்களுக்கு ஏன் யாருக்குத்தான் இருக்கிறது??

ஒரு வழியாக வந்தது சனிக்கிழமை, சத்தம் போடாமல் ஒவ்வருவராக தயாரானோம், வெளியில் செல்வதை காட்டிக் கொள்ளவில்லை !
மணி நாலு முப்பது அடித்தது

அதே காலிங் பெல் , கதவை திறந்தால்....இருவர் பார்க்க கொலைகாரகலைபோல் தெரியவில்ல மிகச்சாதாரணமாக இருந்தார்கள். நீங்க வெளியே போயிடுங்க நாங்க வேலைய முடிச்சுட்டு கீழே வந்து சொல்றோம்.
திரும்ப வந்து நீங்கதான் பிணங்களை அப்புற படுத்த வேண்டும் வாடை வீசலாம் பார்த்து கொள்ளுங்கள் என்று எச்சரித்துவிட்டு கொலைவெறியுடன் வீடு புகுந்தனர், நாங்கள் என்ன ஆகுமோ ஏதாகுமோ என்று உறைந்து கொண்டு கீழே சென்று நின்றோம் .என்ன அதிசயம் ஒரு சத்தம் இல்லை அலறல இல்லை பத்து நிமிடங்கள் கழிந்தன , வெற்றிப்புன்னகையுடன் அவர்கள் வந்தார்கள்.

" முடிச்சுட்டோம்! கொஞ்ச நேரம் கழிச்சு  போய் கிளீன் பண்ணிடுங்க, " என்று கூறி விடைபெற்றனர்.

மூன்றுமணிநேரம் செய்வதறியாது ஷாப்பிங் மாலுக்கு சென்று வீடு திரும்பினோம், ரங்கமணிக்கு அப்படி ஒரு துணிச்சல் , " நான் போய் பிணங்களை அப்புறப்படுத்துறேன் குழந்தை பார்க்க வேண்டாம் நீ கொஞ்ச நேரம் பொறுத்து மெல்ல வா " என்று உத்தரவு போட்டுவிட்டு வீட்டிற்குள் சென்றார்..

சிலநிமிடங்கள் கழித்து....

காயத்ரி......................... என்று ஒரு அலறல், உயிர் நின்றே போனது எனக்கு
பதறி அடித்து கொண்டு போனேன்!!!

கடவுளே என்ன காரியம் செய்துவிட்டோம் என்று பயம் வேறு தொற்றிக்கொண்டது ..மெதுவாய் கதவை திறந்தேன்.
 
முகம் முழுதும் வியர்வையும் பயமும் தாண்டவமாட கண்கள் சிவந்து
கண்ணீர மல்க ரங்கமணி,

" காயத்ரி நாம பட்ட கஷ்டமெல்லாம் இப்படி ஆகிடுச்சே! அவங்க சாகல போகவும் இல்லை!! என்ன செய்ய போறோம்?? நாம இவங்க கூடத்தான் வாழனுமா ?? அவனுக்க கொன்னுட்டதா போய் சொல்லிட்டாங்க?? பாரு என்று காட்ட "

இதுவரை அப்படி அதிர்ந்ததில்லை. ஒருவருக்கும் ஒன்றும் ஆகவில்லை அடிகூட படல!! அவனுங்கள பேசி கவுத்துடான்களோ?? என்ன கொடுமை?? எப்படி இப்படி???

எப்படி இவங்க இப்படி தப்பிச்சாங்க?? விடை கிடைத்தது அது கடைசியில் !
இப்பொழுது வேறு வழி இன்றி அவர்களுடன் ஒன்று பட்டு வாழ மனதை தயார் செய்துகொண்டு வருகிறோம் :(

எப்படி  தப்பித்தார்கள்?????
மேல ஏறித்தான்!! பாவி பசங்க கீழே அடிச்சா இவங்க மேல ஏறி டேக்கா குடுத்திருக்காங்க!!!
அவங்கள பாக்கனும்னு ஆசையா இருக்க?
இவங்க தான் அவங்க எங்க வீடு விடா கண்டன் கொடா கண்டன் போகாமல் சாகடிக்கும் விருந்தாளிகள்
.

.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.


51 கருத்துக்கள்:

சௌந்தர் said...

பாவம் அந்த விருந்தாளிகள் ஏன் கொலைபன்னியாச்சா

வெங்கட் said...

ஐயோ.. கொலை.., கொலை...!!
யாராவது காப்பாத்துங்களேன்..!!

எல் கே said...

ஹிஹி கொலையும் செய்வாள் காயத்ரி

☀நான் ஆதவன்☀ said...

:)))

இந்தமாதிரி விருந்தாளிங்களை எல்லாம் சும்மா விடக்கூடாது. கொல்றது தான் சரி :)

Prasanna said...

ப்ளீஸ் வந்தாரை வாழ வைங்க :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நான் கெஸ் பண்ணினேன். ஆனா நாய் அப்டின்னு நினைச்சேன். ஆனா ஏமாத்திட்டேங்க. ஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//வெங்கட் said...

ஐயோ.. கொலை.., கொலை...!!
யாராவது காப்பாத்துங்களேன்..!!///

உங்க போஸ்ட்ல பதிவை மட்டும் படிக்காதீங்கண்ணு எத்தன தபா சொல்றது. பாருங்க நீங்களே எழுதிட்டு நீங்களே பயப்படுரீங்கே..

பவள சங்கரி said...

ஹ...ஹா....நினைச்சேன்......

கணேஷ் said...

வாங்க நலமா?

தலைப்பை படிச்சிட்டு நானும் ஏதோ அக்கா கவிதை,அறிவியல் புனைவு இந்த மாதிரி எதாச்சும் எழுதி இருப்பாங்கன்னு வந்தா...)))))

Gayathri said...

@சௌந்தர் எங்க மயக்கம் கூட போடமாட்டேன்குது !

Gayathri said...

@வெங்கட் செய்யாத கொலைக்கு இதெல்லாம் ஓவர ப்ரோ

Gayathri said...

@LK
செய்வேன் கரபானை விடுவதாய் இல்லை

Gayathri said...

@☀நான் ஆதவன்☀ அஹா அப்டி சொலுங்க ப்ரோ..

Gayathri said...

@Prasanna நான் எங்க போய் வாழ்வது? வீடெல்லாம் அவர்களே

Gayathri said...

@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) ஆஹா...கரபானே தாங்கல இதுல நாய் வேறயா..கடவுளே காப்பாத்து

Gayathri said...

@நித்திலம்-சிப்பிக்குள் முத்து ஆஹா அவ்ளோ ஈசியா போச்சா...

Gayathri said...

@ganeshநலம்...

அதென்ன வந்தா....ஆஹா சரி இல்லையே...போலம்பா விட்டுட்டேனோ

வெங்கட் நாகராஜ் said...

நில நடுக்கம் வந்தால் கூட சாகாத ஒரு ஜந்துங்க அது…. இதுக்கெல்லாமா பயப்படும்…. அப்பத்திக்கு போற மாதிரி போய்ட்டு, திரும்ப வந்துடும்…. “உங்களமாதிரி எத்தனை பேரை பார்த்திருக்கோம்னு” சொல்லிட்டே….

Madhavan Srinivasagopalan said...

//கொஞ்ச நாளா நான் வலைப்பக்கம் வருவதில்லை,பதிவும் போடுவதில்லை.பின்னூட்டமும் இடமுடியவில்லை!.//

1) போய்.. செலக்டட் வலைபதிவர்கள்(eg. kenivanam) பதிவுகளுக்கு பின்னூட்டம் போட்டீங்க..
என்னோட 100வது பதிவுக்கு கமெண்டு போடலை.. (இது கொலை குற்றத்தைவிட கடுமையானதாகும்)

2) இந்தப் பதிவும், முடிவை எளிதாக ஊகிக்க முடிந்தது..

எனவே இந்த பதிவிக்கு இன்ட்லியில் ஒட்டு போட்டாலும், இங்கு கமெண்டு போடாமல் வெளிநடப்பு செய்கிறேன்.

Madhavan Srinivasagopalan said...

அதுமட்டுமில்லை.. என்னோட பதிவுகளுக்கு நீங்க இன்ட்லி, தமிழ்மணம், தமிஒ௰ ல ஒட்டு கூட போடுறதில்லை.. இத கேச வேற கோர்ட்லே வெச்சுக்கலாம்.. மொதல்ல அந்த கேசப் பாப்போம்..

பொன் மாலை பொழுது said...

பரவாயில்லை , முன்னைக்கு இப்போ தப்புக்கள் கொரஞ்சியிருக்கு.
//ஆத்தா.................காயத்ரி பாஸ் பண்ணிடுச்சு //

Chitra said...

So many pop up windows, when I am trying to open your blog page. Please, check it out.

Anonymous said...

ஹா ஹா.. க்ரைம் ஸ்டோரி படிச்ச மாதிரில இருக்கு :)
//சித்ரா சொன்னது So many pop up windows, when I am trying to open your blog page. Please, check it out.//ரிப்பீட்டு.. கொஞ்சம் என்னனு பாருங்க...

ஆமினா said...

ஹா...ஹ...ஹ...

இந்த விருந்தாளி தானா? நான் கூட போலீஸ் பயபுள்ளைக வளக்குற நாய் தான். அத பாத்து தான் புள்ளைங்க அலர்துகன்னு நெனச்சென் :)

அருண் பிரசாத் said...

கரப்பான்பூச்சிக்கு இந்த அக்கபோரா... முடியல....

மங்குனி அமைச்சர் said...

மேடம் நீங்க சமைச்சு முடிச்ச உடனே அதுல மூட்ட பூச்சி மருந்த கலந்து விட்ருங்க , சாப்பிட்ட உடனே அது செத்துப்போகும் ,,,,,,,இருங்க..இருங்க ....ஒரு நிமிஷம் ..... என்னது நீங்க சமைச்ச சாப்பாட சாப்பிட்டு இன்னும் அதுக உயிரோட இருக்கா ????????????? ஆகா விஞ்ஞான அதிசயம்

ஜெயந்த் கிருஷ்ணா said...

நானாவது பரவாயில்ல ஒரே ஒரு எறும்பை தான் கொன்னேன்... நீங்க கூட்டம் கூட்டமாயில்ல கொலை பண்றீங்க...

Mugilan said...

ரொம்ப terror'ஆ இருக்கீங்க terror'ஆ

ADHI VENKAT said...

கரப்பான்பூச்சிக்காக ஒரு பதிவு. ஆஹா ரொம்ப நல்லாயிருக்குங்க.

Anonymous said...

ஐயோ பாவம் பண்ணிட்டியே பண்ணிட்டியே விருந்தாளிகள் கடவுள் மாதிரி ன்னு நம்ம கலாசாரம் ...நீ என்னடா ஏன்னா கொலை பண்ணிட்டியா ...பாவம் விருந்தாளிகள் ( சும்மா தமாஷு )
நல்லா இருந்தது உன் எழுத்து ..சூப்பர் .

sandhya maami

அப்பாவி தங்கமணி said...

//எல்கே அண்ணன் குஜராத் போறாராம்//
குஜராத் மக்கள் பண்ணின தப்பு என்ன...ஹி ஹி... பேச்சு பேச்சா தான் இருக்கணும், நானும் சொல்லிட்டேன்... ஒகே கூல் கூல்...

ஹா ஹா ஹா...சூப்பர் போஸ்ட்... இங்கயும் சம்மர்ல இந்த விருந்தாளிக வர்றதுண்டு... அப்புறம் விண்டர்ல அவங்களே விடை பெற்று ஓடிடுவாங்க... சோ ஹாப்பி நௌ... ஹா ஹா

ஹாப்பி லிவிங் வித் ரோச்செஸ்...... ஹா ஹா... அவங்க இல்லாத இடம் எதுவும் இல்ல போ...

எஸ்.கே said...

Nice Nice!

Gayathri said...

@வெங்கட் நாகராஜ் ஆமா ரொம்ப திமிரு பிடித்த பூச்சி என்ன செய்வது ?

Gayathri said...

@Madhavan Srinivasagopalan வந்தேன் வந்தேன் , மன்னிச்சுடுங்க

Gayathri said...

@கக்கு - மாணிக்கம் பாஸ் பண்ணிவிட்டதர்க்கு மிகவும் நன்றி அய்யா

Gayathri said...

@Chitra என்ன பிரச்சனை என்று தெரியவில்லை , சரி செய்ய பார்க்கிறேன்

Gayathri said...

@Balaji saravana நன்றி , விரைவில் சரி செய்கிறேன், என்ன பிரச்சனையை என்று புரியவில்லை

Gayathri said...

@ஆமினா ஒஹ் , ஹஹா நன்றி

Gayathri said...

@அருண் பிரசாத் இங்க இருக்கும் விருந்தாளிகளில் நாலு பேரை பிடிச்சு முரிஷியஸ்க்கு பார்சல் அனுப்பவா

Gayathri said...

@மங்குனி அமைச்சர் எப்போ என் சமையல் சாப்பிட்டு உயிரோட உலாவுதோ அப்போதே எனக்கு புரிந்துவிட்டது, இது ஒரு வெளிநாட்டு சதி என்று , அவை கரபான்களே இல்லை, வேற எதோ ஏலியன் பூச்சிகள்

Gayathri said...

@வெறும்பய காதலுக்காக கொள்வது வேறு குழந்தையின் பாதிகாப்பிர்காக கொள்வது வேறு. ரைட் தானே ப்ரோ

Gayathri said...

@Mugilan ஹா ஹா நன்றி

Gayathri said...

@கோவை2தில்லி பாவம் அவர்களுக்காக இதை டெடிகேட் செய்கிறேன் - கரப்பான் பூச்சிய்யால் பாதிக்க பட்ட அனைத்து மனிதர்களுக்கும்.

Gayathri said...

@Anonymous என்ன செய்ய மாமி, என்ன செய்வதென்றே தெரியவில்லை, தொல்லை தாங்க முடியல கண்டபடி ஓடுது , நன்றி மாமி

Gayathri said...

@அப்பாவி தங்கமணி ஒஹ் அப்போ குளுறு வந்த போய்டுமா? கடவுளே எப்டியும் செரியாபோன போரும்

Gayathri said...

@எஸ்.கே மிக்க நன்றி

சாமக்கோடங்கி said...

முதல் முறையா உங்க பகுதிக்கு வந்து இருக்கிறேன். நீங்கள் இவ்வளவு பெரிய கொலைகாரப் பாவியாக இருப்பீர்கள் என்று தெரிந்து இருந்தால் இந்தப் பக்கம் வந்தே இருக்க மாட்டான் இந்த சாமக்கோடங்கி..

Gayathri said...

@சாமக்கோடங்கிகொலை செய்யாமலே இந்த பேரா? ஆஹா அப்போ செஞ்சுட்டு சொல்றேன்

டிஸ்கி : கரபானைத்தான்

அன்பரசன் said...

நல்லாவே கொலை பண்றீங்க.

சாந்தி மாரியப்பன் said...

ஆஹா!!.. வீட்டுக்கு வந்த விருந்தாளிக்கு இப்படி ஒரு கவனிப்பா. அசத்திட்டீங்க போங்க :-))

இராஜராஜேஸ்வரி said...

லஷ்மண் ரேகா உபயோகித்துப்பாருங்கள்.