எச்சரிக்கை : பதிவு கொஞ்சம் சின்னதா போச்சுது..முடிஞ்சா ஒரு ப்ளாஸ்க்ல காபி தண்ணி போட்டு வச்சுக்கிட்டு கூடவே சமோசா , போண்டான்னு வச்சுக்கிட்டு படிக்க ஆரம்பிங்க..முக்கியமா ஒரு பாட்டில் குளுகோஸ் முக்கியம். என் கடமை சொல்லி புட்டேன். முக்கியமா ஆம்புலேன்ஸ் நம்பர் வச்சுகோங்க !!
முஸ்கி : இந்த பதிவு முழுக்க முழுக்க சிரிக்க மட்டுமே! யார் மனதையும் புண்படுத்த இல்லை..சிரிப்பு வந்தா சிரிங்க ! வரலைன்ன ?? கமென்ட்ல புலம்பிட்டு போங்க!
------------------------------------------------------------------------------------------------------
இந்திய இல்லை உலக பதிவுலக வரலாற்றிலேயே முதல் முறையாக நம்ம பதிவுலக நண்பர்கள் எல்லாருமா சேர்த்து கொலுவுக்கு போகபோறோம் அதுவும் நம்ம சினிமா ஸ்டார்ஸ் வீட்டுக்கு..( இப்படியெல்லாம் காட்டு கத்தா கத்தி பிரச்சாரம் பண்ணினாதான் வராங்க என்ன செய்ய )
நம்ம கும்பலோ பெருசு பஸ் விட்டாலே போறாது ஆனா பாருங்க
பட்ஜெட் இடிக்கும் காரணத்தினால் ஒரே அம்பாசிடரில் இடித்துக்கொண்டு போகவேண்டி உள்ளதால் அனைவரும் பொறுமையுடன் அமரும் படி கேட்டு கொள்கிறேன்...! போலாமா? ஜூட் !
முதலில் நம்ம வண்டி AIRD ( ஆர்டிபிசியால் இன்டலிஜென்ஸ் ரிசெர்ச் அண்ட் டே வேலோப்மென்ட் ) வாசலை சென்று அடைகிறது. காலைவச்சு ஒரு நிமிஷம் ஆகல அதுக்குள்ள அங்கேந்து ஏதோ மெசினும் கையுமா ஒரு ரோபோட் வந்து " இன்விடேஷன் கார்டை இங்க ஸ்வைப் செய்யுங்க ! "
என்று பயமுறுத்த நம்ம அறிவியல் சிங்கம் கணேஷ் இறங்கி போய் கார்டை ஸ்வைப் செய்ய..' அக்செஸ் க்ராண்டேட் " கேட் திறக்கிறது ! இரண்டு பக்கமும் பெண் ரோபோக்கள் அழககழகா தாவணி போட்டுக்கிட்டு சூப்பரா நிக்க... குஷயாய் உள்ளே செல்கிறோம்.
நம்ம எல்கே " தலைவர் படி படியா கொலு வைப்பார்னு பாத்தா என்னடா இது எதோ மியூசியம் மாதிரி இருக்கு ? "
வரவேற்பறையில் பிரமாண்டமான ரோபோட் ரஜினி " வெல்கம் போல்க்ஸ் ! கொலுவுக்கு வந்தோமா சுண்டல தின்னோமான்னு போய்கிட்டே இருக்கணும்!
அதவுட்டு எதனா பாட்டு கீட்டு பாடினா அவ்ளோதான் உங்கள டிஸ்மாண்டில் பண்ணிடுவேன். டாட் !" என்று ஆசையாய் !? வரவேற்கிறது..
சரி வா பொறுமையா பார்ப்போம் என அனைவரும் செல்ல ஒரு நிமிஷம் டைனோசார் போல் காட்சியளிக்கும் பொம்மை அடுத்த ஐந்து நிமிடத்தில் ராட்சத பாம்பை மாறுகிறது..அடுத்த ஐந்து நிமிடத்தில் அதுவே ஒரு பெரியா சிங்கம் ! என்ன கொடுமைடா இது எப்படி இப்படிலாம் தோணுதேன்னு ஆர்வக்கோளாரில் நம்ம
பிங்கி ஒரு பெண்ணை கேட்க ! " ஹா ஹா ஹா அது பொம்மை இல்லை
" ஏலேக்ட்ரோ மாக்னேட்டால்" இணைந்து உருவம் மாறும் ரோபோக்கள்
கிட்டத்தட்ட ஒரு ஐநூறு குட்டி ரோபோக்கள் ! " அன்று கூறி மறைகிறது!! அட அது வர்ச்சுவல் பெண் உருவம் ! "
இங்க எது உண்மை எது ரோபோ எதுஎன்ன வென்றே புரியல..அதுக்குள்ள அங்குள்ள இன்டர்காமில் " சுண்டல் குடுக்குறாங்க. டீம் க்கு ஒரு ஆள் வந்து சுண்டலை பெற்று கொள்ளவும் "
" முதோ வெட்டு " என்று அருண் பாய் ! அடுத்து அடுத்து பலரும் பாய , சுண்டளுடன் பெட்டியுடன் வரும் அருண் முகத்தில் சோகம்! " என்ன தோழா என்னாச்சு? " என்று ஆறுதலாய் நம்ம டெர்ரர் கேட்க கையில் இருக்கும் பெட்டியை கொடுக்கிறார். டெர்ரர் டெர்ரராக முழிக்கிறார்.
என்னதான் நடக்குதுன்னு எட்டி பார்த்தா...... எதோ உலோக பெட்டி மேல ஒரு குட்டி கீபோர்ட் ! "அதுல ஒழுங்கா பாஸ்வோர்ட் போட்டாத்தான் போட்டி தொறந்து சுண்டல் வெளியே வருமாம்! நாசமா போச்சு ! எப்போ திறந்து எப்போ சாப்பிட்டு ?? பேசாம அதை தூக்கி உள்ள வைங்க நாம கார்ல திறந்துக்கலாம் " என்று மாதவன் நேரமாவதை சுட்டி காட்டி சமயோஜிதமாய் ஐடியா கூற..
அனைவரும் அங்கிருந்து வெளியே வந்தனர்.
இதற்கிடையில் சாலையெங்கும் பெரிய பெரிய தொல்லை காட்சி. " பன் பிக்சர்ஸ் குலாநிதி மாறன வழங்கும் " நவராத்திரி " மாபெரும் கொலு படி கட்டும் விழா காணத்தவறாதீர்கள் ! " என்று ஐந்து நிமிடத்துக்கு ஒரு முறை நம்மை வதைக்கிறது.
மெதுவாய் நம்ம டி ஆர் வீட்டுக்குள் நுழைய " நாமே எங்க இருக்கோம்?? ஹை எகிப்தா ? எவ்ளோநாளா நானும் ஆசை படறேன் இன்னிக்காவது வந்தோம் " என்று காயத்ரி குதிக்க ( நானேதான் ! ) " ஆத்தா இது எகிப்தில்ல நம்ம
டீ ஆர் சார் வீடு கொலுவுக்கு செட்டு போட்டுருக்குறார் , இருந்தாலும் இது ஓவரு! " என்று ஒரு குரல் மிரட்ட... மிரட்டுவது நம்ம டெரர்..மெதுவா ஒரு ஒரு தரா உள்ள போனா.......அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
கொலுபடியே காணும்!! பெரிய செட் ஒன்னு இருக்கு அவ்ளோதான் அதுல பெருசா நம்ம சந்தரலேகா பட கிளைமாக்ஸ் காட்சி பாட்டுல வருமே அந்த மாதிரி ஒரு பெரிய ட்ரம் அதுமேல நம்ம டி ஆர்! " இருந்தாலும் இது கொஞ்சம் டூ மச். இப்படியா அலம்பல் பண்றது? " தங்கமணி அக்கவால் அங்க நிக்க முடியல! " என் இட்லியே இதுக்கு தேவலை!! " என்று மனதுக்குள் அலுத்துக்கொண்டார்.
ஆச்சர்யத்துடன் , வரும் சிரிப்பையும் அடக்கி கொண்டு நம்ம ஜெய்லானி சந்தேகமாய் " சார் என்ன இது பொம்மையே வைக்காம நீங்களே இப்படி உட்கார்ந்து இருக்குறீஇங்க? ஒண்ணுமே புரியலையே? "
"அடுக்கு மொழிக்கு டீயாறு !
அடுக்கடுக்கா கொலுவைக்க வேற ஆள பாரு !
அஜித்து ஓட்டுவாறு காரு !
நான் ஒக்காந்த கொலுவ வந்து நீ பாரு !
கொலுவச்சா கொடுப்பாங்க சுண்டல் !
என்ன பார்த்து பண்ணாதே கிண்டல் !
Sorry for the interruption !
this is only my introduction !
decoction of the constipation of the action and direction
ஹேய் டண்டனக்கா , டனக்கு டக்கா! "
அவர் பாடி முடிக்கும் முன் அங்கிருந்த நம் பதிவுலமே கண்கலங்கி மனம் உடைந்து சுண்டளுக்காக காத்திருக்காமல் காரினுள் பாய , கார் அசுர வேகத்தில் அங்கிருந்து ஓடுகிறது...
" இப்போவே கண்ணா கட்டுதே !!" என்னப்பா இது எதோ கொலு சுண்டலுன்னு ஆச காட்டி இப்படி பாடா படுத்துறீங்க! " என்று சௌந்தர் நொந்து கொள்ள ! " இருங்க நாம அந்த எந்திரன் வீட்ல குடுத்த சுண்டல கொஞ்சம் சாப்புடலாம் அதுக்குள்ள அடுத்த வீடு வந்துரும் சரியா !" என்று தேவா ஐடியா தர..அனைவரும் ஒப்புக்கொண்டனர்
ஆளாளுக்கு ஒரு ஒரு பச்ச்வோர்ட் ட்ரை பண்ண ஒன்னும் வேலைகாகரமாதிரி இல்லை ! கடைசியா பிங்கி சனா என்று டைப் செய்ய பெட்டி திறக்கிறது..அனைவரும் ஆவலுடன் பெட்டியை எட்டிப்பார்த்தனர்.
பெரிய பல்பு ! சுண்டல் இல்லை நிறைய நட்டும் போல்டுமா இருக்கு!! ( பின்ன எந்திரன் வீட்ல என்ன தேங்கா மாங்கா பட்டாணி சுண்டலா கிடைக்கும்???? )
இதை பார்த்த எல் கே அண்ணாவுக்கு கவிதை பொங்க
" பொம்மை
பார்க்க வந்தோம்
பொம்மையே
பரிசிலாய் வந்தால்
மனமது கூத்தாடும் - ஆனால்
பரிசிலும் இல்லாமல்
பசியாற வகையும் இல்லாமல்
இதை கொடுத்ததேன்? "
( நெஜமாவே இது எல் கே அண்ணா எழுதின கவிதை )
:- நன்றி அண்ணா
அனைவரும் ஜோரா கைதட்டம் போது ஒரு குரல் அலறியது. அதே தொல்லை காட்சி. " உலக தொலைகாட்சியில் முதல் முறையாக குலாநிதிமாறன் பெருமையுடன் வழங்கும் "நவராத்திரி " கொலு பார்க் கட்டும் விழா மலேசியாவிலிருந்து நேரடி ஒளிபரப்பு ! திரை உலகமே திரண்டு வந்து வாழ்த்தும் உன்னத நிகழ்ச்சி.
காணத்தவறாதீர்கள்! " என்ன கொடுமைடா இதுகேல்லாமா விளம்பரம்!
அடுத்து இயக்குனர் ஷங்கர் வீடு வந்தது. இப்படியும் எளிமையான வீடா அசந்தே போனோம்..உள்ள போனாதான் தெரிது. எங்கயோ வெளிநாட்டு மாளிகையில் வந்தது போல் இருக்கிறது..செட்டு ச்சே டிசைன் போட்டது தோட்டா தரணியாமே? இப்போவே கண்ணா கட்டுதே.
" வாங்க.. வாங்க.. இது என் நான்கு வருட கனவு இப்பொழுதுதான் நினைவாயிருக்கு.." என்று பெருமை பேச " எங்கய்யா கொலுவ காணும் படியையும் காணும்! " என்று ஆர்வமாய் தம்பி சிவா கேட்க " என்ன இப்படி கேட்டுடீங்க?? மோதல் படிய இத்தாலில வச்சுருக்கேன்! இரண்டாவது படிய பிரேசில்ல வச்சுருக்கேன் , மூணாவது படிய துபாய் புர்ஜ் கலிபா பில்டிங் கடைசி மாடில வச்சுருக்கேன் , நாலாவது படிய ஆஸ்திரேலியா ல வச்சுருக்கேன், அஞ்சாவது படிய இப்போ நிலாவுல இப்போதான் வச்சேன்...."
"ஆறாவது படிய.." என் தலையில வை என்று அசரீரி ஒலிக்க.. " சார் கப் சிப் " அப்போ நாங்க என்ன செய்றது? என்று ஆவலாய் அனானிமஸ் குரல் ஒலிக்க " காத்திருங்கள் விரைவில் தெரிவிப்பேன் என்று சொல்லி சார் எஸ் !
இவரோட பிரமாண்ட அலம்பளுக்கு அளவில்லையா?? நிலாவுல வைக்கிறாராம் நிலாவுல! கடவுளே....என்று நொந்து நூடுல்ஸ் ஆகி நடயைக்கட்டினர் பதிவர்கள்.
" ஏன்ப்பா டிரைவர் அடுத்து எங்க போறோம்?? நல்ல இடமா கூட்டிகிட்டு போப்பா ப்ளீஸ் " என்று ரமேஷ் ( சத்தியமா இவரு நல்லவரு ) கோவத்தை கட்டு படுத்தி கொண்டு கேட்டார். . "கண்டிப்பா நல்ல காமெடியான இடம் தான். "என்று டிரைவர் பதிலளித்தார்.
கார் போய் நின்றது அட நம்ம விஜகாந்த் வீடு. வீடே சும்மா கம்பீரமா இருக்கு. ஆசை ஆசையாய் உள்ளே செல்கிறோம் " வாங்க வாங்க உட்காருங்க எப்படி போகுது பதிவெல்லாம்?? " என்று ஆசையாய் விசாரிக்கிறார்..
"என்ன நீங்க இத்தன படி வச்சிருக்கீங்க?? ஒரு முப்பது நாற்பது படி இருக்கும் போலிருக்கே ! " என்று ஆர்வமாய் அருண் கேட்டார்.
" இந்தியாவுல இந்த கொலுவ கொண்டாடுரவங்க மொத்தம் அறுபது கொடுயே நாலு லட்சம் பேர். அதுல கொலு வச்சு கொண்டாடுறவங்க முப்பது கோடியே மூணு லட்சம் பேரு, அதுல மூணு படி வைக்கிறவங்க இருபது கோடியே நாற்பது லட்சத்தி எட்டாயிரம் பேரு, இது பார்க் கட்டி ஆறேழு படிவைக்கிறவங்க பத்து லட்சத்தி அறுபத்தி ஐந்து பேர், இப்படி முப்பது கொலு வைக்குறது நான் மட்டும் தான்!..."
பாதிவுலகமே தலை கிர்ர் கிர்ர் என்று சுத்த கண்கள் இருட்ட திக்கு முக்காடி போகுது.
"இப்படி பேசிட்டே போனா என்ன அர்த்தம் ? நீயே சொல்லு கார்த்தி இதுலாம் சரி இல்ல! எங்கபோய் முடியுமோ! நான் போறேன் போய் ஒரு மில்க் ஷேக் சாப்டு வரேன் அப்போதான் கூல் ஆகும்..ச்சே ச்சே டென்ஷன் ! " என்று சந்தியா மாமி கிடைத்தா கேப்பில் வீட்டுக்கு பறந்து விட்டார் !
" அதுலயும் வேர் கடலை சுண்டல் செய்ரவங்க.." என்று அவர் தொடர
" பீம்பிளிக்கி பீலாபி!! மாமா பிஸ்கோத்து ! " என்று ஜெய் , எல் கே , தேவா , மங்குனி , பட்டாபட்டி , சௌந்தர் , அப்பாவி தங்கமணி , பிங்கி, சிவா , ரமேஷ் " எல்லாரும் கூட்டமாய் கத்த
நம்ம விஜயகாந்த் கொவாமாக துப்பாக்கி எடுக்குறார். " நாங்கல்லாம் தாய்லாந்து புலிக்கே தண்ணி காடுரவங்க உங்க துப்பாக்கிக்கு எல்லாம் பயப்படமாட்டோம்.. " என்று நம்ம ஆதவன் கம்ப்ஹீரமா முன்னே செல்ல..
தமிழ் ல எனக்கு பிடிக்காத ஒரு வார்த்த " புலி " ! பீர் கூட மோராகும் ஆனா நாய் நரியாகுமா?? " என்று ஏதேதோ பொலம்ப ஆரம்பிக்க அடுத்த கணமே அனைவரும் மாயம் !
உஸ்ஸ் அப்பா இப்போவே பாதி உயிர் போயிடுச்சு என்னய்யா இது இப்படி ஆளாளுக்கு போட்டு டார்ச்சர் பன்றாங்களே! என்று அனைவரும் கண்ணில் ரத்தம் வடிய நொந்து கொண்டிருந்தனர்
சாலையோர தொல்லை கட்சியில் " சன் பிக்சர்ஸ் குலாநிதி மாறன் பெருமையுடன் வழங்கும் "நவராத்திரி " துபாயில் நடந்த ,முதல் கொலு பொம்மை வைக்கும் கோலாகல நிகழ்ச்சி உங்கள் பன் டிவியில் காணத்தவராதீ....." டமாஆஆஆஆஆஆஆஆஆல் " அசுர வேகத்தில் பதிவுலகமே ஆத்திரமாய் அந்த தொல்லை பெட்டியை உடைத்து விட்டு நேரா கீழ்பாக்கில் ஒரு வார்டையே புக் செய்து அட்மிட் ஆனது.
அனைவரும் முணுமுணுக்கும் அந்த ஒரே வார்த்தை!!!
" ஆணியே புடுங்க வேணாம் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! "