ஹலோ மக்களே உங்களுக்கு ஒரு உடையும் செய்தி ,அதாங்க பிரேக்கிங் நியூஸ்ன்னு சொல்ல வந்ந்தேன்.
நம்ம வலைசரம் பற்றி உங்க எல்லாருக்கும் தெரியும், இந்தவாரம் நான் தான். ஒரு வாரம் உங்கள ஒரு வழி பண்ண போறேன் ( அப்ப இது கண்டிப்பா மனம் உடையும் செய்திதான்).
அங்க எப்போவும் பெரிய பெரிய ஆளுங்க தான் எழுதுறாங்க , சீனா சார் பெரியமனசு பண்ணி பாவம் போனா போகுதுன்னு என்னையும் அழைத்து பெருமைப்படுத்தி விட்டார்.
முடிந்தவரை சுவாரஸ்யமாக எழுத முயற்சிக்கிறேன்.எல்லாரும் குழந்தை குட்டியோட வந்து படிச்சு சிரிச்சு சந்தோஷமா உங்க கருத்துக்களை சொல்லுங்க.
நிறைய கமெண்ட்ஸ் & விசிட்டர்ஸ்னு பல சாதனைகளை பல பேர் செஞ்சுட்டு இருக்காங்க அங்க. ஆனா நான் வேறு வகையில சாதனை செய்ய முயற்சிக்கிறேன்...... அதென்ன வேறு வகையா? அதான் தப்பில்லாம தமிழ்ல எழுதிதான் ! ( நடக்கற கார்யமா???)
------------------------------
------------------------------
------------------------------
-------------------
என் பதிவை தொடர்ந்து படிக்கும் தாய்மார்களே தந்தைமார்களே ஆந்தைமார்களே (ஆந்தை மாதிரி நைட்ல கூட முழுச்சு பதிவு படிக்கிறவங்க) வாக்காள பெருமக்களே.... வருகின்ற தமிழ்மண விருது தேர்தலில்
"காமெடி, கார்டூன் பிரிவில்" போட்டியிடும் என்னை வெற்றி பெற செய்தால் வீட்டுக்கொரு லேப்டாப்பும் தெருவிற்கு ஒரு Wi-fi கனெக்ஷனும் இலவசமாக கொடுக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கிறேன்
மக்களே தயவு செய்து உங்க பொன்னான வாக்குகளை எனக்கு அளியுங்கள்
நன்றி நன்றி நன்றி