Recent Posts

4 Jul 2011

ரங்கமனியின் டைரி

7:00 am:  படுக்கை அறையில்

தங்கமணி : "என்னங்க இப்போ எழுதிருக்க போறீங்களா இல்லையா..எனக்கு ஆபிஸ் லேட் ஆச்சு...உங்க பாஸ் மாதிரி என் பாஸும் வெட்டி பீசுன்னு நெனச்சீங்களா?? லேட்டா போனா ரணகளம் ஆய்டும்...சீக்கரம் ரெடி ஆகுங்க...என்ன ட்ராப் பண்ணிட்டு வந்து வேணா தூங்குங்க.."

ரங்கமணி :" அடிப்பாவி அப்போ எனக்கு ஆபீஸ் லேட் ஆனா பரவல்லையா? நேத்து உங்க ஆப்ஸ்க்கு யாரோ இன்ச்பெக்டியன் வராங்கன்னு ஒரு மணி நேரமா மேக்கப் போட்டு என்ன கொடுமை பண்ணி அதுனால மீட்டிங் மிஸ் ஆகி நான் ஆபிஸ்ல ஆப்பு வாங்கினது எந்த கணக்குல போய் சேருமாம்..போய் ஆட்டோ பிடிச்சு போ.." என் மனதிற்குள் கத்திக்கொண்டு..." ம்ம சாரி மா..இப்போ ரெடி ஆகறேன் " என்று வெளியில் பொய்யை புன்னகைத்து ஆரம்பிக்கும் என் நாள்.

7:30am: டைனிங் டேபிள்

தங்கமணி  :"சமையல் மாமி வரல...அங்க பிரட் ஜாம் இருக்கும் ஒரு ரெண்டு செட் கொழந்தைக்கும் ஒரு செட் எனக்கும் பேக் பண்ணிடுங்க..நீங்க உங்க ஆபிஸ் கேண்டீன்ல சாப்டுடுங்க."
ரங்கமணி : ( அடிபாவி எனக்குதான் எடுத்து வச்சுருக்கேன்னு நெனச்சேன் ஆனந்த கண்நீர்லாம் விட்டேனே) சரி மா....

8:00am:

தங்கமணி: போற வழில ,கொஞ்சம் அண்ணா நகர் சங்கீத்தா வீடு வழியா போங்க..அவ வீட்டுகாரர் ஊருக்கு போயிருக்கார் சோ அவள பிக் அப் பண்ணிகர்தா சொல்லிருக்கேன்..சரியா 

ரங்கமணி : (அவ்வவ் ...திநகர் லேந்து போரூர் போரவழில அண்ணா நகர் எப்போமா வந்துது ??? உங்களுக்கு வேணும்னா போரவழில அமெரிக்காவே வந்தாலும் ஆச்சர்ய பட்ரதுக்கு இல்லை...அசோக்நகர் ல இருக்குற எங்கம்மாவ பாக்கணும்னா ஊற சுத்தி இப்போதான் போய் கொஞ்சனும்மா ன்னு சாக்கு சொல்லுவே...எல்லாம் என் நேரம்..பெட்ரோல் யார் உங்கப்பனா போடுவான் ")
சரி மா...

இதோட  போச்சா தெரியாத்தனமா அந்த தோழிய பார்த்தாலோ , நலம்
விசாரித்தாலோ அவ்ளோதான்... என்னைவிட அவ அழகா??? அவ எப்படி இருந்த என்ன ??? எதுக்கு அவள பாத்து சிரிசீங்க? அப்டி இப்படின்னு ராத்திரி பூகம்பமே வெடிக்குமே ! எனக்கெதுக்கு வம்பு. முன்ன பின்ன பாக்காம கொண்டுபோய் ரெண்டு பேரையும் ஆபிஸ்ல தள்ளிவிட்டு ஓடணும்..

9:30am: நேரா வந்துருந்தா ஒன்பது மணிக்கே அட்டெண்டென்ஸ் போற்றுபேன்..இப்போ அதுன்களால் லேட்.அவசர அவசரமாய் காரை நிறுத்த இடம் தேடும் பொழுது..இடம் கிடைக்காம.." கொஞ்சம் முன்னாடி வந்துருக்க கூடாதா சார் இப்படி தினம் இடம்தேட உட்றேங்கலேன்னு முனு முன்னுக்கும் செக்யூரிட்டி கிட்ட இழித்துகொண்டே பத்துநிமிடம் ஆபிஸ் பார்கிங் லாட்ட வளம் வந்து ஒருவழியா வண்டிய நிறுத்தி ஆபிஸ் குள்ள காலடி எடுத்து வச்சா. கொஞ்சத்தில் கிழே வராமல் முரண்டு பிடிக்கும் லிப்டிர்காக நின்னு நின்னு வேற வழி இல்லாம படி ஏறி நாலாவது மாடியில், இருக்கும் அலுவலகத்திற்கு போனா... கடிகாரமுள் பத்தை தாண்டி விள்ளத்தனமாய் சிரிக்கும்...


அதெப்படி இந்த ரிஷேப்சநிஸ்ட் மட்டும் தினமும் இவ்ளோ அழகா இருக்கா??
என்று வியந்து பல்லைக்காட்டி கொண்டே குட்மார்னிங் என்றபடியே கதவை திறந்து உள்ளே நுழைந்தால் "வரதே பாத்து மணிக்கு இதுல என்ன இளிப்பு ?? மீட்டிங் ஆரம்பிச்சு ஒரு மணிநேரமாச்சு...உண்ணலா கம்பனிக்கி இவ்ளோ லாஸ் அவ்ளோ லாஸ் என்று உப்பு பெறாத மீடிங்கிர்காக சீன போடும் டேமேஜராய் ஒன்னும் செய்யமுடியாமல் சாரி என்று மட்டும் சொல்லிவிட்டு அரைமணி நேர வாழ்த்துக்களுக்கு பின்னல் சீட்டுக்கு வந்து ஒக்காந்தா...

சர்வர் டவுன் என்று கழுத்தறுக்கும் கம்ப்யூட்டர்...ஒழுவழியா ஓபன் பண்ணி
மைல்பாக்ஸ் ஓபன் பண்ணா... இது சரி இல்லை அதுல சரி இல்லை..இதுல புரியல அது தப்புன்னு எக்குதப்பா மெயில்..

அதுங்களுக்கு பதிலனுப்பியே பாதிநாள் போய்டும், வேலைய பாக்க முழுசா மூணு மணிநேரம் கூட இருக்காது நடுல லஞ்ச் பிரேக்...இல்லாத ஆணிய புடுங்க மீட்டிங்குன்னு ரெண்டு மணி நேரம் போய்டும்...இருக்குற ஒரு மணி நேரத்துல என்னத்த ஆணி புடுங்கர்த்து...பேசாம மங்களம் பாடிட்டு வீட்டுக்கு போகவேண்டியதுதான்..

6:00pm - 7:45 pm : ஆமைபோல் நகரும் டிராபிக்கல நீந்தி நந்தம்பாக்கதுலேந்து திநகர் போகர்துக்குள்ள பேசாம வண்டிய சென்றல் ஸ்டேஷன்னுக்கு திருப்பி காசிக்கு போய்டலாம்னு வரும் என்னத்தை கட்டுபடித்தி கொண்டு வீடு போய் சேர்ந்தா...

7:45pm:  (ஆசையாய் வீடு வாசலில் காத்துக்கொண்டு நிற்கும் மாணவி...) ஹலோ கெட் அப்.. அந்த சீன் இங்க இல்லை..பாத்து நிமிஷம் காலிங் பெல்லை அமுக்கி  அமுக்கி விரல் தெய்தாலும் யாரும் வந்து கதவ திறக்க போறது இல்லை..
அலுத்துக்கொண்டே சாவியை எல்லா பாகேட்ட்டிலும் தேடி..ஒரு வழியாய் லேப்டாப் ப்பையில்இருந்து  எடுத்து..உள்ள போய் டிரஸ்மத்தி , கிட்சேன் புகுந்து எதனா தின்ன கிடைக்குமான்னு கழுகாட்டும் தேடியும் எதுவும் கிடைக்காம பிரிட்ஜ் பக்கம் திரும்பினான் போச்டிட் நோட்டில் " நாங்க  வர லேட் ஆகும் அம்மா வீட்டுக்கு போய்ட்டு ஷாப்பிங் போய்ட்டு வருவோம்..., ( அப்போ நாளைக்கு தான் வருவேன்னு சொல்லிருகலாமே ) போன்  கொண்டு போகல( தெரியும் நான் போன் பன்னுவேன்னுதானே) , உள்ள எதுவும் இல்லை..( என்னிக்கி இருந்துச்சு?? ) பிச்சா ஆர்டர் பண்ணி தின்னுட்டு எங்களுக்கு கொஞ்சம் மைக்ரோவேவ் டிஷ் ல போட்டு வைங்க ( ஏன் கொஞ்சம் துணியும் தோச்சு பாத்திரமும் தேச்சு வச்சுட்டு துன்குன்னு போடவேண்டியதுதானே? ) வாஷிங் மாசின் ல துணி இருக்கு எடுத்து உலர்திடுங்க( என் நாக்குல சனி !! ) சீரகம் துன்கிடுங்க..லவ் யு குட் நைட் ( இதெல்லாத்தையும் செஞ்சு எப்போ தூங்கி இதுல லவ்வும் குட் நைட்டுடும் ரொம்ப முக்கியம் !!)  "

எல்லதத்யும்  முடித்துக்கொண்டு, போய் துங்கலாம்ன்னு பதினொரு மணிக்கு கண்ணை மூடினா...டிங் டாங்...வந்தாச்சு கொரங்கு கூட்டம் !! இனி அவங்க அம்மா கதை,  ஷாப்பிங்ல நூறு ரூபா துணிய பேரம் பேசி எப்படி தொன்னுர்ரி ஒரு ரூபாய்க்கு வாங்கினா...பத்து ரூபா பெறாத சாயம் போய் கசங்கி போய் இருக்கும் சுடிதார ஐநூறு ரூபாய்க்கு வாங்கின பீத்தல் கதைன்னு எல்லாத்தையும் கேட்டு, இது நடுல "பிச்சால பைன் ஆப்பிள் போட்ட எனக்கு பிடிக்கும்ன்னு தெரியாதா??? "என்று கிச்சன் லேந்து கத்தும் ஆசை ?#% மாணவி ( பைன் ஆப்பிள் என்னமா அடுத்த வாட்டி பலாபழமே முழுசா போட சொல்றேன் ) சாரி டியர்..அடுத்த......( சொல்லி முடிக்கும் முன் கொர்ர்ர்ர்ர்ர்ர்)

கனவுல நமிதா,,என்ஜலீனா அப்டி இப்டின்னு டூயட் பாடிட்டு  இருக்கும் பொழுதே...

"என்னங்க இப்போ எழுதிருக்க போறீங்களா இல்லையா.. !!!!!!!  (விடாது கருப்பு)தொடரும்......

10 May 2011

இது நம்ம வீடு

இது நம்ம வீடு , டிவி ல நல்ல ப்ரோக்ராம் வரும் பொழுது ரிமோட்
கிடைக்காது , அப்படியே கிடைத்தாலும் அதுல பேட்டரி போடும்
இடத்தில் ஒன்று கவர் இருக்காது இல்லை பேட்டரியே இருக்காது !


அப்படியே இருந்தாலும் அதுல பவர் சுத்தமா இருக்காது...பரவால்ல பேட்டரியை மாற்றலாம் என்றால் அதுக்கு மொதல்ல வாங்கி வச்ச
பேட்டரி பக்கெட் கிடைக்கணுமே ,அதைத்தான் நம்ம மக்கள் சுறு
சுறுப்பா பிரித்து செத்துப்போன பேட்டரிக்களின் நடுவே புதைத்து வைத்திருப்பார்களே !. திருப்பதியில் மொட்டை போட்டவன் என்ற
அடையாளத்தை வைத்து கொண்டு தேடுவதைப் போல் இருக்கும்
அதில் உயிருடன் புதையூண்டு இருக்கும் பேட்டரியை கண்டுப்பிடிப்பது.

    அப்படியே  பேட்டரி கிடைத்தாலும் ரிமோட்டில் ஏதாவது பட்டனை
அமுகினா சேனல் மாறுவதர்க்கு நூற்றில் ஒரு சதவிகிதம் தான்
வாய்ப்புள்ளது..அதான் பசங்க ஆயிரம் முறை கிழே போட்டு
உடைத்திருப்பார்களே !! ( அதுல நீ போட்டது ஐநூறு ).

அவசர  அவசரமா வரும் போன் கால் உடனே குறித்துக்கொள் என்று
ஓடி வரும் போன் நம்பர், நோட் பண்ண  தேடும் பொழுது கண்டிப்பா  கிடைக்காத பென்சில் , ஆபிஸ் கிளம்பும் பொழுது கிடைக்காத வண்டி சாவி,
மழைநாட்கள் வரும் சேதி அறிந்தார் போல் வந்து குவியும் துணி மூட்டை .

 விருந்தினர் வரும்பொழுது  தீர்ந்து போகும் கேஸ் , காப்பி பொடி , சர்க்கரை.
குளிக்கும்  பொழுதுநின்னு போகும் தண்ணீர், பரீட்சை காலத்தில் ஓடிவிடும் கரண்ட், வெளியே செல்லும் பொழுது தீர்ந்துபோகும் செல்போன் பேட்டரி,

அவரசரமெனும் பொழுது காலியாகும் செல் போன் பேலன்ஸ், யாரும் இல்லா ரோட்டில் நின்றுபோகும் வண்டி, கையோடு வரும் காப்பி கப்பின் கைப்பிடி,காந்தி காலம் முதல் தீண்டபடாமல் பிரிட்ஜில் பத்திரமாக இருக்கும்
பிஸ்கெட், தண்ணீர் ஊற்றினாலும் ஊர்ராவிட்டலும் பார்த்து பார்த்து பராமரித்தாலும் வாடிப்போகும் செடி , ஆசையாய் சினிமா பார்க்க உக்காரும் பொழுது ஓடாத டிவிடி , கிரிகெட் மேட்ச் நடக்கும் பொழுது சிக்னல் இல்லாமல்
பல்லைகாட்டும் செட்டாப்பாக்ஸ்.

எவ்வளவு கூப்பன் வாங்கினாலும் நம்மக்கு மட்டும் விழாத பரிசு , விருந்தினர் வரும் பொழுது திரிந்து போகும் பால் , வாரக்கடைசியில் , நடு இரவில் வரும் ராங் நம்பர் , ஆயிரம் ருபாய் மதிப்பிலான சட்டையை நிமிடத்தில் கலர் மாற்றும்  பத்துரூபாய் கலர் கர்சீப். ஒருமணிநேரம் ஓடியும் ஒரு இஞ் அழுக்கை  போக்காத வாஷிங் மிஷின்.

வத்தல் காயப்போட எங்கு தேடியும் கிடைக்காமல் மழை நாளில் கண்ணில் படும் பிளாஸ்டிக் ஷீட். நம் வீடு கணினியை மட்டும் குறிவைத்து தாக்கும் வைரஸ் , வைத்த இடத்திலிருந்து நொடியில் காணமல் போகும் புத்தகம். பின் இல்லாத ஸ்டேப்ளர் , மொக்கை ஷார்ப்னர் , பெயன்ட் உரிந்து இளிக்கும் சுவர்கள், சத்தம் போட்டு ஊரைக்கூட்டும் கதவு, சாவி கிடைக்காத காரத்தினால் பல வருடமாய் திறக்கப்படாத பெட்டி , உடுத்தவே உடுத்தாமல் நூல் விட்டு கிழிது தொங்கும் பட்டுபுடவை, காலையில் அடிக்கவே அடிக்காத தூங்குமூஞ்சி அலறாம் , ஒளிந்து விளையாடும் சாக்ஸ் ,வெளிவரமருக்கும் பாலிஷ்..

அசதியாய் தூங்க வரும் பொழுது படையெடுக்கும் கொசு , கழுத்தறுக்கும் நமத்துபோன கொசுவத்தி , போதாகொரைக்கு சுர்ரலாமா வேண்டாமா என்று ஓயாது யோசிக்கும் தத்தா காலத்து மின் விசிறி..உஸ்ஸ்ஸ்
 என்னதான் இருந்தாலும் இது நம்ம வீடு...home sweet home


..2 May 2011

டவுட்டு....

" ஒசாமா அமெரிக்க ராணுவத்தினால் சுட்டுக் கொல்லப்பட்டார் !! "

அதான் தெரியுமே புதுசா என்ன சொல்ல போறே???ன்னு கேக்குறீங்களா..


இதனால் என் மனதுக்குள் எழுந்திருக்கும் சில டவுட் தான்... 
( நாமெல்லாம் வெட்டி பீஸ் நம்மக்குவேற என்ன வேலை ?? ) 


நம்ம ஹீரோஸ் எப்புடி ஸ்டன்ட் போட்டு நம்மள ஏமாத்துறாங்களோ அதேபோல , ஒசாமா ( பாடி டபிள் ) வைச்சு ஒபாமாவ ஏமாற்றி இருந்தா  ???? 
( இப்படித்தானே புரளிய கிளப்பிவிடனும்  )  

எனக்கு டவுட்........

ஒசாமா போய்ட்டா தீவிரவாதம் அழிஞ்சுடுமா ??? புதுசா எவனாவது அல் கொய்தா தலைவரானா????

எனக்கு டவுட்........


சரி இப்போ ஒசாமா பரலோகம் சென்றுவிட்டார் அங்கே இப்போ தீவிரவாதம்
வெடிக்குமோ??? 

எனக்கு  டவுட்......


அமெரிக்கர்களை கொன்றதால் ஒசாமாவை தேடி வேட்டையாடி விட்டது அமெரிக்கா...மும்பை தாக்குதல் நடத்திய அரக்கர்களை இந்தியா என்ன செய்யபோகுது??? வழக்கை தள்ளிபோட்டு , ஆட்சி மாற்றத்தால் இழுத்தடிக்க பட்டு ..நமக்கு வழுக்கை விழும் வரை...சாக்கு சொல்லுமோ??? அதுக்குள்ளே அந்த படுபாவிகள் தான வயசாகி செத்தே போய்வுடுவார்கள்...என்ன நடக்குமோ...

எனக்கு டவுட்.......

என்னமோ செய்துண்டு போகட்டும்...ஆகமொத்தம் டிவி க்களுக்கு நல்ல வேட்டை...யார் இந்த ஒசாமா???? எப்படி அவன் தீவிரவாதி ஆனான் ??? 
செப்டம்பர் 2001நில் அமெரிக்காவில் நடந்தது என்ன?? அப்படி  இப்படின்னு போட்டு நம்ம உயிரவாங்க ஆரம்பிச்சுட்டாங்க....இவங்க தொல்லை எப்போ தீருமோ??? 


எனக்கு டவுட்.....

25 Apr 2011

என்ன கொடுமை சார் இது....

என்ன நணபர்களே நலமா?? நானும் எழுதணும் ( ஏன் இந்த வேண்டாத வேலை ?? ) உங்க எல்லார் வலைபதிவையும் படிக்கணும் ( இது பேச்சு )அப்டின்னு ஆசை படறேன் என்ன செய்ய ஏதான வேலை வந்துண்டே இருக்கு ( அப்போ நாங்க எல்லாரும் வேலை வெட்டி இல்லதவன்களா??? ) ஐயோ அப்டி சொல்ல. நான் பிஸியா இருக்குது எனக்கே ஆச்சர்யமா இருக்கு…. மொக்கை அப்புறம் ( உன் பதிவே மொக்க! ).

இப்போ என் பொண்ணு ஒண்ணாம் வகுப்பு வந்துட்டா !! ஒரே சந்தோஷம் தாங்காம புக்ஸ் வாங்க ஸ்கூலுக்கு ஆவலா போனேன்..போனேனா…
பள்ளிகூட வாசலில் நுழைஞ்ச உடனே பக்! என்று இருந்தது..சரியாத்தான் வந்துருகோமா ?? இது பள்ளிகூடம்தனே ? இல்லை திருப்பதி கோவில் கிளை திறந்துட்டான்களோ ?? சொல்லவேல்ல !! ( அவ்ளோ ஒலகம் தெரியாம வளந்துட்டேன் என்ன செய்ய ? )

இப்படி ஒரு நீ………………………………………….ளமான வரிசையை கடைசியா திருப்பதி கோவிலில்  பார்த்த நியாபகம்!. எல்லாரும் பெற்றோர்கள் தான் பாவம் புத்தகம் வாங்க இப்படி தவமா வரிசையில் இருக்காங்க!!

நாங்க போய் அந்த ஜோதியில் ஐக்கியமாகும் பொழுது சுமார் ஒரு மணி இருக்கும்..தத்தி தத்தி ( அவ்ளோ கும்பல் பா ) இப்படியும் அப்படியும் பாம்பாயவிட அதிகம் நெளிவாய் இருந்த அந்த வரிசையை தாண்டி ஒருவழியா எங்கதான் போகுதுன்னு போனா…அடகொடுமையே இவ்ளோநேரம் தேவுடு கார்த்தது பணம் காட்டி ரசித்து வாங்கத்தானா???? அப்போ புக்ஸ்???? ஹஹஹஹா….( இது சும்மா டிரெய்லர் கண்ணா..மெயின் பிக்சர் இனிமேத்தான் !! )ன்னு புக் வாங்க தனி கவுண்டராம் !! அதுக்கு ஒரு தனி படை…..உஸ்ஸ்ஸ்……
இந்த கும்பலில் நீந்தி ஒரு வழியா பணம் கட்ட போனா….கரெக்ட் சில்லறை கொடுங்க எங்க கிட்ட சில்லறை இல்லை (?!) அப்டின்னு கொஞ்சம் கூட பாவம் பாக்காம நம்மூரு பஸ் கண்டக்டர் கணக்கா அந்த பொண்ணு சொல்ல…
சில்லறை தேடி சிட்டாய் பறந்தார் ரங்கமணி ( ஆபிசுல டேமேஜர் தொல்லைதான் தாங்கலனா இங்கயுமா ? என்று நொந்துகொண்டே ) அவர்வந்து பணம் காட்டி ரசித்து வாங்கி கடிகாரத்த பார்த்தா…..இரு இரு பணத்த காட்டி ரசிதுவான்கினா..ரசிதத்தானே பார்க்கணும், நீயேன் கடிகாரத்த பாக்குறே?? ( அவ்வ்வ்வ்வ்வ்வ்) மணி இப்போ நாளைதண்டி ஓடிக்கொண்டிருந்தது..
முதல் போரை வென்று அடுத்த போருக்கு ஆயத்தமாகி அந்த புக் வாங்கும் லைனுக்குள் முண்டி அடித்துக்கொண்டு ஓடிபோய் நிற்க ….இன்னும் ஒரு மணி நேரத்துல கவுண்டர் மூடிடும்..அதுக்குள்ளே உங்க டர்ன் வரலன தயவுசெய்து நாளை வரவும் ( அட கொடுமையே ) முன்னு ஸ்டைல்லா சொல்லிட்டு ஒரு புன்யவான் மைக்கில் சொலிட்டு ஆள் எஸ்..(பின்ன கைலகிடைச்சா மக்கள் பிச்சுபுடுவாங்கல்ல )

ஒரு ஒரு நிமிஷமும் மனசு திக திக என்று அடித்து கொண்டு இருக்க . ஒரு பால் நாலு ரன்..என்று இருக்கறதே நம்ம தோணி ஒரு சிக்ஸ் அடிச்சா எப்டி இருக்கும் ?? , அப்படி இருந்துச்சு மணி அஞ்சடிக்க பத்து நிமிஷம் இருக்கும்..ஒரு வழியா புக்ஸ் வாங்க எங்க டர்ன் வந்துது..புக்ஸ் வாங்கின ரங்கஸ் கன்னல ஒரு நடுக்கம்…..என்னங்க ? என்னாச்சுன்னு பதற…என்னாலேயே தூக்க முடியலையே…எப்டி இத கொழந்த தூக்கினு போகபோற??  தீர்க்கதரிசி….).

ஒரு ஒரு நாளும் என் பொண்ணு அந்த புத்தக பையை தஊக்கமுடியாமா தூக்கிண்டு பஸ் ஏறி இறங்குரத பார்க்க எனக்கு துளியும் தெம்பில்லை…
இப்போ ரெண்டு நாள் மின்னால பள்ளிகுடதுக்கு போகநேர்ந்தது….வகுப்பு முடிஞ்சு வெளியே வரும் வாண்டுகளை பார்க்கும் பொழுது என் மனசுக்குள்ள இப்படிதான் தோணிச்சு….


Web


என்ன கொடுமை இது அஞ்சுவயசு குழந்தைய இப்படிய பாடம் என்ற பெருசா வாட்டி வதைகர்த்து…என்னமோ போ..இதுக்கெல்லாம் விடிவுகாலம் எப்போ பிறக்குமோ..
Web

28 Mar 2011

பதிவுலக கோரிக்கை!!!!!

என்ன மக்களே நலமா ? தேர்தல் வருது எல்லாரும் பிஸியா இருப்பீங்க...
அவங்க அவங்க கொடுக்குற வாக்குறுதிகளை பார்த்தா புல்லரிக்குது....
இலவசமா லேப்டாப் பிரிட்ஜ்  மிக்சி அப்டி இப்டின்னு ஒரே கலவரமா இருக்கு

எல்லாரும் மாணவர்களுக்கு, கர்பிணி பெண்களுக்கு ,வயசானவங்களுக்கு.வீடு இல்லாதவங்களுக்கு  இவங்களுக்கு அவங்களுக்குன்னு வாக்குறுதிகளை அடிச்சு விடறாங்க நம்ம பதிவுலகை யாரும் அவ்ளோவா கண்டுக்கலே..

அவங்க  மறந்துட்டாங்க என்பதற்காக நாம சும்மா இருக்கலாமா ?? நம்மக்கு என்ன வேணும்னு நாமதானே கேக்கணும்!!

நம்ம பதிவுலகுக்கு என்னவெல்லாம் வேணும்னு ஒரு லிஸ்ட் போடுவோம் அத அரசியல் கட்சி களுக்கு அனுப்புவோம் அதுக்கு அவங்க ஒத்துகிட்டா ஆளுக்கு ஒரு வோட்டு என்ன ரெண்டு மூனுன்னு அடிசுவிடுவோம் என்ன சொல்றீங்க??

என் லிஸ்ட் இதோ :

பதிவெழுத ஒரு சூப்பர் லேப்டாப் ரொம்ப வேணாம்.....
1.core  i7 மேக்புக்
2.இலவச18mbps இன்டர்நெட்...
3.அரசு செலவுலையே இலவசமா வலைப்பூவை கொஞ்சம் பிரபல படுத்தினால் சந்தோஷம்
4.கூடவே கும்மி அடிக்க ஒரு நாளைக்கு கொறஞ்சது ஆயிரம் பேர் !
5.ஊக்க தொகையா ஒரு ஒரு பதிவருக்கும் மாசம் 50 ஆயிரம் ரூபாய் !
6.அரசு செலவில் பதிவர் சந்திப்பு, பாராட்டு விழா, அவார்ட் அப்டி இப்டின்னு

எதோ சின்னதா செஞ்சா போரும்னு எனக்கு தோணுது என்ன சொல்றீங்க ????உங்களுக்கு ஏதேனும் லிஸ்ட இருக்கா ???


 இதுவரை ஒரு முறைகூட ஓட்டு போட்டதே இல்லை ! ஆமா அத எப்டி போடுவாங்க?? போட்டா உடையுமா? என்னமோ மர்மமாத்தான் இருக்கு !!

தொடர்பதிவு எழுதனும்னு ஆவல் இருக்கறவங்க எழுதுங்க மீதிபேர் வந்து படிச்சு கும்மிட்டு போங்க...

22 Mar 2011

ஒரு நாள் இன்று !!!20 Jan 2011

ஆடிய ஆட்டமென்ன ???

என்ன எல்லாரும் நலமா ? ரொம்ப நாள் ஆச்சு  இந்த பக்கம் வந்து.
கொஞ்ச நாள் நீங்க எல்லாரும் சந்தோஷமா இருக்கலாம்னுதான் நானும் வராம விட்டேன். இனி என்னால் பொறுக்க முடியாது..அதான்  மறுபடியும் வந்துட்டேன்!

முந்தா நேத்து ராத்திரி பன்னிரண்டரை மணி இருக்கும் . என் மகளும் அவரும் அப்போதான் தூங்க ஆரம்பிச்சாங்க , எனக்குதான் அவ்வளவு  சீக்கிரம்  தூங்கும் கெட்டப்பழக்கம் கிடையாதே..

 எப்பவும்  படுத்துக்கிட்டு   தூக்கம் வரும்வரை மொபைல் போன்ல எதாவது  பாட்டுப் கேட்பேன் . அன்னைக்கும் அதுதான் பண்ணிக்கிட்டு இருந்தேன் . என்ன ஒரு ஆச்சர்யம் ?? பாட்டு கேட்டு கட்டில்  ஊஞ்சல்  மாதிரி ஆடியது !

இசைக்குத்தான் என்ன ஒரு வலிமை ! அப்டின்னு நினைத்துக்கொண்டே  சும்மா இருந்தேன். மெதுவ சைடு ல இருக்குற டேபிள், மேல இருக்குற விளக்குன்னு  எல்லாமும் ஆட , ஆஹா  பாட்டுக்கு ஆடலை .பூமி அதுப்பாட்டுக்கு தனியா ஆடுதுன்னு புரிஞ்சது .

அலறி அடித்துக்கொண்டு அவரை என்னங்க..பூகம்பம்   வந்துருக்கு எழுந்துருங்கோ , குழந்தையை  தூக்கிண்டு கீழப்போலாம்னு  " ன்னு நான் பதற ....பாரதிராஜா பட ஹீரோ வாட்டும் ஸ்லோ மோஷன் ல கண்ணைத்திறந்து " என்ன  இது?? தூங்காமலே கனவா?? தூங்கும்மா ! "என்று சொல்லிவிட்டு தூங்க தொடங்கினார் !
விடுவேனா திருப்பி " இப்போ எழுதுக்க போறேளா இல்லையா நெஜம்மா பூகம்பம்  ப்ளீஸ் எழுதுருங்க ன்னு கத்த , அப்பவும்  மெதுவா எழுந்துப்  போய் ஒரு நிமிஷம் நின்னார், பாரு ஒன்னும் ஆடுற மாதிரி  எனக்கு  தோணலை. எல்லாம் சரியாதான் இருக்குன்னு சொல்லிட்டு தூங்க வந்தார் ,
விடுவதாக இல்லை, மொபைல் எடுத்து earthquake nowனு கூகிள் ஆண்டவர கேட்டா பாகிஸ்தான்ல 7.4 earthquake!!! ஐயோ அம்மான்னு கத்தி அவரை  எழுப்பினால் "தூங்கும்மா.. இதுக்காக வெளில  போய் இடிபட்டு அடிபட்டு ஓடி நசுங்கி போய்சேர எனக்கு இஷ்டம் இல்லை , எப்படியும் போகனும்னு இருந்தா நிம்மதியா இங்கயே கட்டில்ல படுத்துண்டு போகலாம் அதைவிட்டு அர்த்த ராத்திரி ஓடு ஆடுன்னு சொல்லிகிட்டு..,, பேசாம படுத்து தூங்கு ! " அப்படின்னு கன்னாபின்னான்னு கத்த , இதுக்கு அந்த earthquake பரவாயில்லைன்னு  கப் சிப்ன்னு  தூங்கிட்டேன்!!


என்ன செய்ய முடியும் !?
இந்த பூகம்பம்  அளவில் பெரியதாய் இருந்தாலும் உயிர் சேதம் எதுவும் நிகழவில்லைன்னு எல்லாரும் சொல்றாங்க , கடவுள் எதோ நல்ல மூட் ல இருந்திருக்கிறார்  , அப்படியே இருக்கட்டும் .

இப்படி சாதுவா வந்து பூமி ஊஞ்சல் ஆட்டும்னா  பரவாயில்லை
நல்லாத்தான் இருக்கு .......டிஸ்கி : பயம் மட்டும் இன்னும் போகவே இல்லை ரெண்டுநாளா வீடே ஆடுறமாதிரி ஒரே பிரம்மையாவே இருக்கு 

11 Jan 2011

மீ தி back

ஹலோ எப்டி இருக்கீங்க?

சில பலகாரணங்களினால் இந்த பக்கம் வரமுடியல, இன்னும் கொஞ்சநாள்
லீவ் வேணும் மக்களே....

வரமாட்டேன்னு  நெனச்சு ரொம்ப சந்தோஷ படவேண்டாம் !

ஐ வில் பி பாக்
வில் பி பாக்
பி பாக்
பாக்
க்
-------------------------------------------------------------------------------------------