என்ன எல்லாரும் நலமா ? ரொம்ப நாள் ஆச்சு இந்த பக்கம் வந்து.
கொஞ்ச நாள் நீங்க எல்லாரும் சந்தோஷமா இருக்கலாம்னுதான் நானும் வராம விட்டேன். இனி என்னால் பொறுக்க முடியாது..அதான் மறுபடியும் வந்துட்டேன்!
முந்தா நேத்து ராத்திரி பன்னிரண்டரை மணி இருக்கும் . என் மகளும் அவரும் அப்போதான் தூங்க ஆரம்பிச்சாங்க , எனக்குதான் அவ்வளவு சீக்கிரம் தூங்கும் கெட்டப்பழக்கம் கிடையாதே..கொஞ்ச நாள் நீங்க எல்லாரும் சந்தோஷமா இருக்கலாம்னுதான் நானும் வராம விட்டேன். இனி என்னால் பொறுக்க முடியாது..அதான் மறுபடியும் வந்துட்டேன்!
எப்பவும் படுத்துக்கிட்டு தூக்கம் வரும்வரை மொபைல் போன்ல எதாவது பாட்டுப் கேட்பேன் . அன்னைக்கும் அதுதான் பண்ணிக்கிட்டு இருந்தேன் . என்ன ஒரு ஆச்சர்யம் ?? பாட்டு கேட்டு கட்டில் ஊஞ்சல் மாதிரி ஆடியது !
இசைக்குத்தான் என்ன ஒரு வலிமை ! அப்டின்னு நினைத்துக்கொண்டே சும்மா இருந்தேன். மெதுவ சைடு ல இருக்குற டேபிள், மேல இருக்குற விளக்குன்னு எல்லாமும் ஆட , ஆஹா பாட்டுக்கு ஆடலை .பூமி அதுப்பாட்டுக்கு தனியா ஆடுதுன்னு புரிஞ்சது .
அலறி அடித்துக்கொண்டு அவரை என்னங்க..பூகம்பம் வந்துருக்கு எழுந்துருங்கோ , குழந்தையை தூக்கிண்டு கீழப்போலாம்னு " ன்னு நான் பதற ....பாரதிராஜா பட ஹீரோ வாட்டும் ஸ்லோ மோஷன் ல கண்ணைத்திறந்து " என்ன இது?? தூங்காமலே கனவா?? தூங்கும்மா ! "என்று சொல்லிவிட்டு தூங்க தொடங்கினார் !
விடுவேனா திருப்பி " இப்போ எழுதுக்க போறேளா இல்லையா நெஜம்மா பூகம்பம் ப்ளீஸ் எழுதுருங்க ன்னு கத்த , அப்பவும் மெதுவா எழுந்துப் போய் ஒரு நிமிஷம் நின்னார், பாரு ஒன்னும் ஆடுற மாதிரி எனக்கு தோணலை. எல்லாம் சரியாதான் இருக்குன்னு சொல்லிட்டு தூங்க வந்தார் ,விடுவதாக இல்லை, மொபைல் எடுத்து earthquake nowனு கூகிள் ஆண்டவர கேட்டா பாகிஸ்தான்ல 7.4 earthquake!!! ஐயோ அம்மான்னு கத்தி அவரை எழுப்பினால் "தூங்கும்மா.. இதுக்காக வெளில போய் இடிபட்டு அடிபட்டு ஓடி நசுங்கி போய்சேர எனக்கு இஷ்டம் இல்லை , எப்படியும் போகனும்னு இருந்தா நிம்மதியா இங்கயே கட்டில்ல படுத்துண்டு போகலாம் அதைவிட்டு அர்த்த ராத்திரி ஓடு ஆடுன்னு சொல்லிகிட்டு..,, பேசாம படுத்து தூங்கு ! " அப்படின்னு கன்னாபின்னான்னு கத்த , இதுக்கு அந்த earthquake பரவாயில்லைன்னு கப் சிப்ன்னு தூங்கிட்டேன்!!
டிஸ்கி : பயம் மட்டும் இன்னும் போகவே இல்லை ரெண்டுநாளா வீடே ஆடுறமாதிரி ஒரே பிரம்மையாவே இருக்கு