Recent Posts

20 Jan 2011

ஆடிய ஆட்டமென்ன ???

என்ன எல்லாரும் நலமா ? ரொம்ப நாள் ஆச்சு  இந்த பக்கம் வந்து.
கொஞ்ச நாள் நீங்க எல்லாரும் சந்தோஷமா இருக்கலாம்னுதான் நானும் வராம விட்டேன். இனி என்னால் பொறுக்க முடியாது..அதான்  மறுபடியும் வந்துட்டேன்!

முந்தா நேத்து ராத்திரி பன்னிரண்டரை மணி இருக்கும் . என் மகளும் அவரும் அப்போதான் தூங்க ஆரம்பிச்சாங்க , எனக்குதான் அவ்வளவு  சீக்கிரம்  தூங்கும் கெட்டப்பழக்கம் கிடையாதே..

 எப்பவும்  படுத்துக்கிட்டு   தூக்கம் வரும்வரை மொபைல் போன்ல எதாவது  பாட்டுப் கேட்பேன் . அன்னைக்கும் அதுதான் பண்ணிக்கிட்டு இருந்தேன் . என்ன ஒரு ஆச்சர்யம் ?? பாட்டு கேட்டு கட்டில்  ஊஞ்சல்  மாதிரி ஆடியது !

இசைக்குத்தான் என்ன ஒரு வலிமை ! அப்டின்னு நினைத்துக்கொண்டே  சும்மா இருந்தேன். மெதுவ சைடு ல இருக்குற டேபிள், மேல இருக்குற விளக்குன்னு  எல்லாமும் ஆட , ஆஹா  பாட்டுக்கு ஆடலை .பூமி அதுப்பாட்டுக்கு தனியா ஆடுதுன்னு புரிஞ்சது .

அலறி அடித்துக்கொண்டு அவரை என்னங்க..பூகம்பம்   வந்துருக்கு எழுந்துருங்கோ , குழந்தையை  தூக்கிண்டு கீழப்போலாம்னு  " ன்னு நான் பதற ....பாரதிராஜா பட ஹீரோ வாட்டும் ஸ்லோ மோஷன் ல கண்ணைத்திறந்து " என்ன  இது?? தூங்காமலே கனவா?? தூங்கும்மா ! "என்று சொல்லிவிட்டு தூங்க தொடங்கினார் !
விடுவேனா திருப்பி " இப்போ எழுதுக்க போறேளா இல்லையா நெஜம்மா பூகம்பம்  ப்ளீஸ் எழுதுருங்க ன்னு கத்த , அப்பவும்  மெதுவா எழுந்துப்  போய் ஒரு நிமிஷம் நின்னார், பாரு ஒன்னும் ஆடுற மாதிரி  எனக்கு  தோணலை. எல்லாம் சரியாதான் இருக்குன்னு சொல்லிட்டு தூங்க வந்தார் ,
விடுவதாக இல்லை, மொபைல் எடுத்து earthquake nowனு கூகிள் ஆண்டவர கேட்டா பாகிஸ்தான்ல 7.4 earthquake!!! ஐயோ அம்மான்னு கத்தி அவரை  எழுப்பினால் "தூங்கும்மா.. இதுக்காக வெளில  போய் இடிபட்டு அடிபட்டு ஓடி நசுங்கி போய்சேர எனக்கு இஷ்டம் இல்லை , எப்படியும் போகனும்னு இருந்தா நிம்மதியா இங்கயே கட்டில்ல படுத்துண்டு போகலாம் அதைவிட்டு அர்த்த ராத்திரி ஓடு ஆடுன்னு சொல்லிகிட்டு..,, பேசாம படுத்து தூங்கு ! " அப்படின்னு கன்னாபின்னான்னு கத்த , இதுக்கு அந்த earthquake பரவாயில்லைன்னு  கப் சிப்ன்னு  தூங்கிட்டேன்!!


என்ன செய்ய முடியும் !?
இந்த பூகம்பம்  அளவில் பெரியதாய் இருந்தாலும் உயிர் சேதம் எதுவும் நிகழவில்லைன்னு எல்லாரும் சொல்றாங்க , கடவுள் எதோ நல்ல மூட் ல இருந்திருக்கிறார்  , அப்படியே இருக்கட்டும் .

இப்படி சாதுவா வந்து பூமி ஊஞ்சல் ஆட்டும்னா  பரவாயில்லை
நல்லாத்தான் இருக்கு .......டிஸ்கி : பயம் மட்டும் இன்னும் போகவே இல்லை ரெண்டுநாளா வீடே ஆடுறமாதிரி ஒரே பிரம்மையாவே இருக்கு 

34 கருத்துக்கள்:

எல் கே said...

இப்படி எதுக்கு எடுத்தாலும் டென்சன் ஆகிற உனக்கு, மணி சரியான ஜோடிதான். ரொம்ப நிதானம். அட தப்பே இல்லை.. சூப்பர்

Gayathri said...

@எல் கே பூகம்பம் வந்தா கூட பதற கூடாதுன்ன எப்படி ப்ரோ !

sukanya raghavendran said...

lite ah aadina pathara vendam....aana...romba aadina patharathan veenum.

நான் ஆதவன் said...

:)))

நான் நல்லா கும்பகர்ணன் மாதிரி தூங்கிட்டேன். எனக்கு ஒன்னும் தெரியலயே!

சௌந்தர் said...

ம்ம எனக்கும் நேத்து தகவல் வந்தது அட டா அந்த நாட்டில் நிறைய பேர் தெரிந்த ஆள் இருக்காங்க அடுத்த தடவை பூகம்பம் வர கூடாது வேண்டி கோங்கோ....நல்ல வேளை நீங்க முன்னாடியே பதிவு போடலை போட்டா இன்னும் அதிக ரிக்டர் ஆகியிருக்கும்

Gayathri said...

@sukanya raghavendran hehehehe evlo vandhalum bhayam thaan

Madhavan Srinivasagopalan said...

ஆண்டவா பூகம்பமே வேண்டாம்..
உழுங்கா, மரியாதையா, பதிவெழுதாம இருந்தா இவங்கள பூகம்பம் வந்து பதிவு எழுத வெச்சிடிச்சே.. வீடு, நாடு, உலகம் தாங்குமா ?

Gayathri said...

@நான் ஆதவன் நல்ல வேலை நீங்க தூங்கிட்டேள் ப்ரோ

Gayathri said...

@சௌந்தர் இப்படிலாம் புரளிய கேள்ளப்பி விட்டா என்ன செய்ய

Gayathri said...

@Madhavan Srinivasagopalan எதோ உலக காப்பாத்த போஒகம்பாம் வேணாம்னு சொல்றேள்ன்னு நெனச்சேன்

ஏன் இந்த கொலை வெறி

Madhavan Srinivasagopalan said...

@Gayathri

என்ன பண்ணுறது.. என்னைய மாதிரி ஆளுங்களுக்கு இப்படித்தான் கமெண்டு போட வருது..

அது சரி.... சூரியன்லகூட பூகம்பம் வராதான்.. எப்படி வசதி..

Gayathri said...

@Madhavan Srinivasagopalan

அதுக்குன்னு இப்போ சூரியனுக்கு போகவா ?? ஆஹா ஏன் இப்பிடி ?? அங்க போனாலும் பதிவேழுதுவேன் ப்ரோ

vinu said...

chea just escapeaaa; vara vara intha kadavulukku moolayea kidaiyaathu; correcttaa miss panniduraaru;


neenga onnum varuththap padaatheenga next time miss aaggaama paarthukka solli naan venumnaa oru sms anuppiduren;

கோவை2தில்லி said...

இங்கு தில்லியில் கூட தெரிந்ததுன்னு சொன்னாங்க. ஆனா நாங்க நல்லா தூங்கினதால ஒன்றும் தெரியலை.

Chitra said...

Safe..... Thank God!

கக்கு - மாணிக்கம் said...

முதல்ல இந்த டெம்ப்ளேட் சைச சரிபண்ணனும். எழுத்துக்கள் வலது பக்கம் கணாபூடுச்சு தாயி !

dheva said...

சேம் பிளட்.. இங்க கூடா..

அப்போதான் தூங்க போன நான் கட்டில் கட கடன்னு ஆடுதே என்னனு பயந்து போய் எதுவும் காத்துதான் அடிக்குதோன்னு பயந்து போய் வெளில பால்கனிய பாத்த கப் சிப்னு இருக்குது....12:30 இருக்கும்னு நினைக்கிறேன்....

அடுத்த நாள் கஃல்ப் நியூஸ் பாத்தாதான் விவரம் புரியுது....என்னத்த பண்றது போங்க....கூட செத்த நேரம் ஆடி இருந்தா........என்ன் ஆகியிருக்கும்..

எதோ புண்ணியம் போல...இருந்தாலும் நம்ம கைல என்ன இருக்கு போங்க....

அப்பாவி தங்கமணி said...

பூமாதேவி பொறுமைசாலி தான் காயத்ரி... ஆனா பாரு எவ்ளோ நாள் தான் உன் தமிழ் கொலையை பொறுத்துட்டு இருக்கறதுன்னு பொங்கி எழுந்துட்டா... ஹா ஹா ஹா... ஜஸ்ட் கிட்டிங்... missed your posts ....

நானெல்லாம் உன்னை விட உலக மகா பேடி... நீ ரங்க்ஸ்ஐ மட்டும் தான் டென்ஷன் பண்ணின... நான் பயத்துல ஊரையே அலற வெச்சுருவேன்... ஹா ஹா ஹா... (ஆனாலும் அவர் அநியாயத்துக்கு கூல் போல இருக்கே... பூகம்பத்துகே அசையலியே... ஒருவேள உன்னை விடவா அது பெரிய terror னு கூல் ஆகிட்டாரோ... ஹா ஹா ஹா)

Jokes apart, I experienced it once, so can totally understand how it feels...

ராம்ஜி_யாஹூ said...

oh ok

வெங்கட் said...

என்ன இது சின்னப்புள்ளத்தனமா
காமெடி பண்ணிட்டு.. இதென்ன
சின்ன மேட்டரா..? பீல் பண்ண
வேண்டிய மேட்டர்..

அனுபவிச்சு பாத்தவங்களுக்கு
தான் தெரியும் அதோட வலி என்னான்னு..

ஹி., ஹி., ஹி..!! நான் நீங்க
திரும்ப பதிவு எழுத வந்ததை
பத்தி சொன்னேன்..!!

:-)

வெங்கட் said...

// முதல்ல இந்த டெம்ப்ளேட் சைச சரிபண்ணனும்.
எழுத்துக்கள் வலது பக்கம் கணாபூடுச்சு தாயி ! //

ஆமா.. ஆமா..
வேற எதுனா சிம்பிள் டெம்ப்ளேட்
Try பண்ணுங்களேன்..

வெங்கட் நாகராஜ் said...

இங்கே தில்லியிலும் அதிர்ச்சி தெரிந்ததாக செய்தி!!! :))))) நல்ல உறக்கத்தில் இருந்ததால் தெரியவில்லை.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

:(

suganya said...

Hey, be safe de..:) btw, right side words can't be read as it is hidden....:((

Philosophy Prabhakaran said...

நிலம்பம் மொக்கை சூப்பர்...

அருண் பிரசாத் said...

முதல்ல டெம்பிளேட் மாத்துங்க...பாதி பதிவு தான் தெரியுது....

ரங்கமணிகளுக்கு பூகம்பம்லாம் சாதாரணம் உங்கள மாதிரி தங்கமணிகளையே சமாளிக்கறாங்கல்ல....

Sangeetha Nambi said...

Well explained !!! Love to follow u :)

Do visit this new comer in
http://recipe-excavator.blogspot.com

Kannan said...

Nalla vedikkai.

இராஜராஜேஸ்வரி said...

பூகம்பமே வந்துட்டுப் போயிருக்கே!!

தமிழ்வாசி - Prakash said...

வலைச்சரம் பொறுப்பாசிரியர் சீனா எக்ஸ்க்ளுசிவ் பேட்டி! விரைவில்
கேள்விகள் கேட்கப் போவது நீங்கள் தான். சீனா பதிலளிக்க காத்திருக்கிறார். மேலும் விபரங்களுக்கு மேற்கண்ட LINK- ஐ பார்க்கவும்.

தக்குடு said...

//தூங்கும்மா.. இதுக்காக வெளில போய் இடிபட்டு அடிபட்டு ஓடி நசுங்கி போய்சேர எனக்கு இஷ்டம் இல்லை , எப்படியும் போகனும்னு இருந்தா நிம்மதியா இங்கயே கட்டில்ல படுத்துண்டு போகலாம் அதைவிட்டு அர்த்த ராத்திரி ஓடு ஆடுன்னு சொல்லிகிட்டு//

LOL post!!..:)

Free Traffic said...

www.classiindia.com Top India Classified website . Post One Time & get Life time Traffic.

New Classified Website Launch in India - Tamil nadu

No Need Registration . One time post your Articles Get Life time
Traffic. i.e No expired your ads life long it will in our website.
Don't Miss the opportunity.
Visit Here -------> www.classiindia.com

Free Traffic said...

www.classiindia.com Best Free Classifieds Websites
Indian No 1 Free Classified website www.classiindia.com
No Need Registration . Just Post Your Articles Get Life time Income.
Life time traffic classified websites.Start to post Here ------ > www.classiindia.com

swarna said...

Nice Interesting Post