Recent Posts

25 Apr 2011

என்ன கொடுமை சார் இது....

என்ன நணபர்களே நலமா?? நானும் எழுதணும் ( ஏன் இந்த வேண்டாத வேலை ?? ) உங்க எல்லார் வலைபதிவையும் படிக்கணும் ( இது பேச்சு )அப்டின்னு ஆசை படறேன் என்ன செய்ய ஏதான வேலை வந்துண்டே இருக்கு ( அப்போ நாங்க எல்லாரும் வேலை வெட்டி இல்லதவன்களா??? ) ஐயோ அப்டி சொல்ல. நான் பிஸியா இருக்குது எனக்கே ஆச்சர்யமா இருக்கு…. மொக்கை அப்புறம் ( உன் பதிவே மொக்க! ).

இப்போ என் பொண்ணு ஒண்ணாம் வகுப்பு வந்துட்டா !! ஒரே சந்தோஷம் தாங்காம புக்ஸ் வாங்க ஸ்கூலுக்கு ஆவலா போனேன்..போனேனா…
பள்ளிகூட வாசலில் நுழைஞ்ச உடனே பக்! என்று இருந்தது..சரியாத்தான் வந்துருகோமா ?? இது பள்ளிகூடம்தனே ? இல்லை திருப்பதி கோவில் கிளை திறந்துட்டான்களோ ?? சொல்லவேல்ல !! ( அவ்ளோ ஒலகம் தெரியாம வளந்துட்டேன் என்ன செய்ய ? )

இப்படி ஒரு நீ………………………………………….ளமான வரிசையை கடைசியா திருப்பதி கோவிலில்  பார்த்த நியாபகம்!. எல்லாரும் பெற்றோர்கள் தான் பாவம் புத்தகம் வாங்க இப்படி தவமா வரிசையில் இருக்காங்க!!

நாங்க போய் அந்த ஜோதியில் ஐக்கியமாகும் பொழுது சுமார் ஒரு மணி இருக்கும்..தத்தி தத்தி ( அவ்ளோ கும்பல் பா ) இப்படியும் அப்படியும் பாம்பாயவிட அதிகம் நெளிவாய் இருந்த அந்த வரிசையை தாண்டி ஒருவழியா எங்கதான் போகுதுன்னு போனா…அடகொடுமையே இவ்ளோநேரம் தேவுடு கார்த்தது பணம் காட்டி ரசித்து வாங்கத்தானா???? அப்போ புக்ஸ்???? ஹஹஹஹா….( இது சும்மா டிரெய்லர் கண்ணா..மெயின் பிக்சர் இனிமேத்தான் !! )ன்னு புக் வாங்க தனி கவுண்டராம் !! அதுக்கு ஒரு தனி படை…..உஸ்ஸ்ஸ்……
இந்த கும்பலில் நீந்தி ஒரு வழியா பணம் கட்ட போனா….கரெக்ட் சில்லறை கொடுங்க எங்க கிட்ட சில்லறை இல்லை (?!) அப்டின்னு கொஞ்சம் கூட பாவம் பாக்காம நம்மூரு பஸ் கண்டக்டர் கணக்கா அந்த பொண்ணு சொல்ல…
சில்லறை தேடி சிட்டாய் பறந்தார் ரங்கமணி ( ஆபிசுல டேமேஜர் தொல்லைதான் தாங்கலனா இங்கயுமா ? என்று நொந்துகொண்டே ) அவர்வந்து பணம் காட்டி ரசித்து வாங்கி கடிகாரத்த பார்த்தா…..இரு இரு பணத்த காட்டி ரசிதுவான்கினா..ரசிதத்தானே பார்க்கணும், நீயேன் கடிகாரத்த பாக்குறே?? ( அவ்வ்வ்வ்வ்வ்வ்) மணி இப்போ நாளைதண்டி ஓடிக்கொண்டிருந்தது..
முதல் போரை வென்று அடுத்த போருக்கு ஆயத்தமாகி அந்த புக் வாங்கும் லைனுக்குள் முண்டி அடித்துக்கொண்டு ஓடிபோய் நிற்க ….இன்னும் ஒரு மணி நேரத்துல கவுண்டர் மூடிடும்..அதுக்குள்ளே உங்க டர்ன் வரலன தயவுசெய்து நாளை வரவும் ( அட கொடுமையே ) முன்னு ஸ்டைல்லா சொல்லிட்டு ஒரு புன்யவான் மைக்கில் சொலிட்டு ஆள் எஸ்..(பின்ன கைலகிடைச்சா மக்கள் பிச்சுபுடுவாங்கல்ல )

ஒரு ஒரு நிமிஷமும் மனசு திக திக என்று அடித்து கொண்டு இருக்க . ஒரு பால் நாலு ரன்..என்று இருக்கறதே நம்ம தோணி ஒரு சிக்ஸ் அடிச்சா எப்டி இருக்கும் ?? , அப்படி இருந்துச்சு மணி அஞ்சடிக்க பத்து நிமிஷம் இருக்கும்..ஒரு வழியா புக்ஸ் வாங்க எங்க டர்ன் வந்துது..புக்ஸ் வாங்கின ரங்கஸ் கன்னல ஒரு நடுக்கம்…..என்னங்க ? என்னாச்சுன்னு பதற…என்னாலேயே தூக்க முடியலையே…எப்டி இத கொழந்த தூக்கினு போகபோற??  தீர்க்கதரிசி….).

ஒரு ஒரு நாளும் என் பொண்ணு அந்த புத்தக பையை தஊக்கமுடியாமா தூக்கிண்டு பஸ் ஏறி இறங்குரத பார்க்க எனக்கு துளியும் தெம்பில்லை…
இப்போ ரெண்டு நாள் மின்னால பள்ளிகுடதுக்கு போகநேர்ந்தது….வகுப்பு முடிஞ்சு வெளியே வரும் வாண்டுகளை பார்க்கும் பொழுது என் மனசுக்குள்ள இப்படிதான் தோணிச்சு….


Web


என்ன கொடுமை இது அஞ்சுவயசு குழந்தைய இப்படிய பாடம் என்ற பெருசா வாட்டி வதைகர்த்து…என்னமோ போ..இதுக்கெல்லாம் விடிவுகாலம் எப்போ பிறக்குமோ..
Web

36 கருத்துக்கள்:

Chitra said...

என்ன கொடுமை இது அஞ்சுவயசு குழந்தைய இப்படிய பாடம் என்ற பெருசா வாட்டி வதைகர்த்து…என்னமோ போ..இதுக்கெல்லாம் விடிவுகாலம் எப்போ பிறக்குமோ..


..... :-(
பாவம் குழந்தைங்க..... population கூட கூட - போட்டி அதிகமாகி - ம்ஹூம்......

அப்பாவி தங்கமணி said...

// நான் பிஸியா இருக்குது//

தமிழ் உன்கிட்ட மாட்டிட்டு முழிக்குது... ஹா ஹா... என்னாதிது? திடீர்னு நமீதா தமிழ் எல்லாம் பேசுது...:)))//பணம் காட்டி ரசித்து வாங்கத்தானா//

என்னது ரசித்து வாங்கினயா? எதை ரசித்து வாங்கினாய்... ஹா ஹா... எப்பவும் எல்லாரும் என் போஸ்ட்ல தப்பு கண்டு பிடிப்பாங்க... இன்னைக்கி எனக்கு நல்ல வேட்டை...:))

அப்பாவி தங்கமணி said...

// புக் வாங்க தனி கவுண்டராம்//

கவுண்டருக்கு அந்த லைன்'னா, அப்ப முதலியார் பிள்ளைவாள் எல்லாம் வேற லைன்ல நிக்கனுமா? சரி சரி புரிஞ்சு போச்சு...:)//அவர்வந்து பணம் காட்டி ரசித்து வாங்கி கடிகாரத்த பார்த்தா//

ஸ்ஸ்ஸ்ஸ்ப்ப்பாஆ... இந்த பொண்ணு எழுதறதை நல்ல தமிழுக்கு மொழி பெயர்க்கவே ஒரு அசிஸ்டன்ட் வேணும் போல இருக்கே...:))

அப்பாவி தங்கமணி said...

//முன்னு ஸ்டைல்லா//... //சொலிட்டு//... //அட கொடுமையே//

அய்யயோ...காப்பாத்துங்க...அட கொடுமையே எல்லாம் நாங்க சொல்லணும்...:))//பின்ன கைலகிடைச்சா மக்கள் பிச்சுபுடுவாங்கல்ல//

இந்த பதிவ படிக்கறவங்க கைல நீ கிடைச்சா என்ன ஆகும்னு நான் யோசிச்சுட்டு இருக்கேன் காயத்ரி...ஜஸ்ட் கிட்டிங்... நோ டென்சன் ஒகே...:))

அப்பாவி தங்கமணி said...

//மனசு திக திக என்று அடித்து கொண்டு//

ஓ... திக்கு திக்குனு சொல்ல வர்றியா... ஒகே ஒகே...//பள்ளிகுடதுக்கு//

தண்ணி குடம் தெரியும்....அதென்ன பள்ளி குடம்... உங்க ஊர்ல கிடைக்குமா....:))

அப்பாவி தங்கமணி said...

//வாட்டி வதைகர்த்து//

தப்பி தவறி கூட ஸ்வர்ணாக்கு நீ தமிழ் சொல்லி குடுத்துடாதே தாயே... :))//இதுக்கெல்லாம் விடிவுகாலம் எப்போ பிறக்குமோ//

நீயே பதிவு போட்டுட்டு நீயே கமெண்ட் போட்டுட்ட போல இருக்கே காயத்ரி... தட்ஸ் குட்... :))

அப்பாவி தங்கமணி said...

சாரி ரெம்ப கலாய்ச்சுட்டேன்...கிடைச்ச சான்சை மிஸ் பண்ண மனசு வரலை... நமக்குள்ள என்ன காயத்ரி... நீ ஒண்ணும் பீல் பண்ணாத... வேணும்னா அடுத்த போஸ்ட்ல நீ என்னை வாரிக்கோ...ஹா ஹா...:))


Jokes apart, you're right. Kids are paavam only... what to do?...:((((

மாணவன் said...

//என்னமோ போ..இதுக்கெல்லாம் விடிவுகாலம் எப்போ பிறக்குமோ.. //

:))

சி.பி.செந்தில்குமார் said...

நகைச்சுவை நடை அழகு.. குறிப்பா வித் இன் பிராக்கெட்ல இருக்கற சிவப்பு எழுத்துக்கள் செம கமெடி.. அதுக்காக அடுத்த பதிவை ஃபுல்லா சிவப்புலயே போட்றாதீங்க.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ஹா ஹா

எல் கே said...

//பாம்பாயவிட //

பாம்பை விட ???

இந்தியாவில் தான் இந்தக் கொடுமைனா அங்கயுமா ?? பாவம் குழந்தைகள். ரொம்பக் கஷ்டப் படறாங்க . என்னதான் பண்றதோ தெரியலை

எல் கே said...

intha template nallaa irukku

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

present madam

பாலா said...

ஒருவேளை வாழ்க்கை பாரத்தை சுமக்க இப்போதே டிரெய்நிங் கொடுக்கிறார்களோ?

Jey said...

வீட்டுக்கு வீடு வாசப்(ஸ்கூல்)படி....

எங்க சுட்டிக்கி பரவாயில்ல(UKG),பாதி புக்ஸை ஸ்கூல்லேயே வச்சிகிட்டு வீட்டுப் பாடம் புக்ஸை மட்டும் குடுத்து அனுப்புறதால சுமை கம்மிதான்.....

☀நான் ஆதவன்☀ said...

// நான் பிஸியா இருக்குது//

தமிழ் உன்கிட்ட மாட்டிட்டு முழிக்குது... ஹா ஹா... என்னாதிது? திடீர்னு நமீதா தமிழ் எல்லாம் பேசுது...:)))//

haa haa appaaviiii rockss :))

:)))) சகோ இனி உனக்கு ஏதாச்சும் டவுட் இருந்தா உன் பொண்ணுகிட்ட கேட்கனும் போல

Gayathri said...

@Chitra yes never ending story

GEETHA ACHAL said...

ரொம்ப கொடுமை தான்..

நம்மூரில் தான் இப்படி படிபடி என்று சொல்லி குழந்தைகளை கஷ்ட படுத்துகிறோம்..

ஆனால் இப்பொழுது தான் கல்வி திட்டம் நிறைய மாற்றிவிட்டாங்க என்று கேள்விபட்டேனே...

இந்த ஸ்கூல் பெயர் என்ன...எங்கே இருக்கின்றது...

கோவை2தில்லி said...

குழந்தைகள் ரொம்ப பாவம் தான். :((( எங்கள் மகள் ரோஷ்னியும் இந்த வருடம் முதல் வகுப்பு தான். அவளும் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு தான் பள்ளிக்கு செல்கிறாள்.

Gayathri said...

@அப்பாவி தங்கமணி ஏன் அக்கா இப்படி கொலை வெறியோட தாக்கிடீங்க...எனக்கு ப்ரூப் பாக்குற நல்லவர் மனம் உடைந்து செவ்வாய் க்ருஹதுக்கு போய்விட்டார்...அதான் இப்படி

Gayathri said...

@மாணவன் :-)..nandri

Gayathri said...

@சி.பி.செந்தில்குமார் ஹிஹி அந்த பயம் வேணாம்..நன்றி

Gayathri said...

@எல் கே எங்க போனாலும் இதுதான் போல இருக்கு...இந்த புக்ஸ் பதிலா சீடி ஈமெயில் வந்தா நல்லா இருக்கும்

Gayathri said...

@எல் கேதேங்க்ஸ்

Gayathri said...

@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)marked

Gayathri said...

@பாலா நல்லாவே யோசிகுறீங்க

Gayathri said...

@Jey அப்டி செய்தால் கூட பரவால்லையே

Gayathri said...

@☀நான் ஆதவன்☀ என் கண்ல பட்டுடதீங்க ப்ரோ சொல்றேன் ஏன் இந்த கொலை வெறி

Gayathri said...

@கோவை2தில்லி பாவம் பசங்க..ஆல் தி பெஸ்ட்

Gayathri said...

@GEETHA ACHAL ஸ்கூல் பெயர் வேண்டாம்..( எதுக்கு வம்பு ) ஷார்ஜா ல இருக்கு

வெங்கட் நாகராஜ் said...

குழந்தைகள் பாவம்! பொதிகாளை மாதிரி ஆக்கி விடுகிறார்கள் குழந்தைகளை...

priya.r said...

நல்ல பதிவு ;கவலை வேண்டாம் காயத்ரி
ஸ்கூலில் எல்லா நோட் களையும் அட்டை போட்டதற்கு அப்புறம் வாங்கி கொண்டு
டெர்ம் வாரியாக கொடுப்பார்கள் ;அதனால் சுமை குறைந்து விடும்
அப்புறம் டைம் டேபிள் இப்போது முதல் வகுப்பில் இருந்தே வந்து விட்டது
அதனால் டைம் டேபிள் படி தினமும் புத்தகங்களை கொடுத்து அனுப்பலாம்
அப்பாவி ரெம்பா கிண்டல் பன்றாளோ., அவளை அடிச்சுடலாம் :)

priya.r said...

ஸ்வர்ணா வை பற்றி நிறைய எழுதலாமே காயத்ரி ..

Gayathri said...

@வெங்கட் நாகராஜ் ஆமா என்ன பண்றது...

Gayathri said...

@priya.rஇங்கே அப்படி வாங்கி கொள்ளவும் இல்லை. டைம் டேபிள் கொடுதுருக்காங்களே தவிர தினமும் எல்லா புத்தகங்களையும் கொண்டு வர சொல்லி சொல்றாங்க அதான் தலை வலி

Anonymous said...

இதுக்கு ஹோம் ஸ்கூலிங்கே பரவாயில்லை. எல்லோரும் சேர்ந்து ஹோம் ஸ்கூலிங்ன்னு பசங்களை ஸ்கூலுக்கு அனுப்பாட்டித் தான் இவங்களுக்கு புத்தி வரும்.

ஒரு ஜோக் சொல்லட்டுமா? நீங்க இல்லேன்னு சொன்னாலும் நான் சொல்றதை நிறுத்தப் போவதில்லை. சொல்லிடறேன். இந்த வருசம் மட்ராஸ் பையனை எங்க கம்பசில் சேர்க்கறதுக்கு அவனோட அம்மா, அப்பா, மாமா, அத்தை, அவங்க பிள்ளைங்கன்னு ஒரே படையே வந்துச்சு. ஹி ஹி. மதியம் போல அவங்க என்டரஸ் ஆகாவும், நான் வெளியே போகவும் டைம் சரியாக இருந்துச்சு. நம்ம ஊர் பொண்ணு மாதிரி இருக்கேன்னு நிறுத்தி பேச ஆரம்பிச்சாங்க. கையில இரண்டு பேப்பரை சுருட்டி வைச்சிருந்ததைப் பார்த்து, இப்ப கம்பஸ் லீவான்னு கேட்டாங்க. இல்லையே. இப்பத்தான் இரண்டு க்ளாஸ் முடிச்சுட்டு வரேன்னு சொன்னேன். அப்படியா, கையில எந்த புக்ஸ்/நோட்டஸ் எதையும் காணோம்னு கேட்டாங்க. இது தான் நோட்ஸ்னு சொன்னேன். "என்னது. இதுவா" என்று அதில ஒரு அம்மா ஷாக் ஆகிட்டாங்க. ஆமான்னு சொன்னா, இப்படி எல்லாம் படிச்சு என்ன செய்யப் போறீங்கன்னு ஒரு அங்கிள் கேட்டார். அப்புறம், எப்படி நோட்ஸ் எடுக்காம படிக்கறீங்கன்னு கேட்டார். இதிலயே குறிச்சு வைச்சுக்குவோம்ன்னு சொன்னேன். அதில் ஒரு அங்கிள் நம்பவே இல்லை. பெஸ்ட் ஸ்டான்டட் குழந்தையே ஒரு மூட்டை புக்ஸ் கொண்டு போறாங்க. நீங்க என்ன இப்படி அலட்சியமாக இருக்கீங்கனு, ஒழுங்கா புக் எல்லாம் கொண்டு போய் படின்னு எனக்கு அட்வைஸ் வேற. அப்ப அவர் சொன்னப் போ ஏதோ கூட்டிக் கொறைச்சு சொல்லாருன்னு நினைச்சேன். God bless those kids.

chicha.in said...

hii.. Nice Post

Thanks for sharing

For latest stills videos visit ..

www.ChiCha.in

www.ChiCha.in