Recent Posts

10 May 2011

இது நம்ம வீடு

இது நம்ம வீடு , டிவி ல நல்ல ப்ரோக்ராம் வரும் பொழுது ரிமோட்
கிடைக்காது , அப்படியே கிடைத்தாலும் அதுல பேட்டரி போடும்
இடத்தில் ஒன்று கவர் இருக்காது இல்லை பேட்டரியே இருக்காது !


அப்படியே இருந்தாலும் அதுல பவர் சுத்தமா இருக்காது...பரவால்ல பேட்டரியை மாற்றலாம் என்றால் அதுக்கு மொதல்ல வாங்கி வச்ச
பேட்டரி பக்கெட் கிடைக்கணுமே ,அதைத்தான் நம்ம மக்கள் சுறு
சுறுப்பா பிரித்து செத்துப்போன பேட்டரிக்களின் நடுவே புதைத்து வைத்திருப்பார்களே !. திருப்பதியில் மொட்டை போட்டவன் என்ற
அடையாளத்தை வைத்து கொண்டு தேடுவதைப் போல் இருக்கும்
அதில் உயிருடன் புதையூண்டு இருக்கும் பேட்டரியை கண்டுப்பிடிப்பது.

    அப்படியே  பேட்டரி கிடைத்தாலும் ரிமோட்டில் ஏதாவது பட்டனை
அமுகினா சேனல் மாறுவதர்க்கு நூற்றில் ஒரு சதவிகிதம் தான்
வாய்ப்புள்ளது..அதான் பசங்க ஆயிரம் முறை கிழே போட்டு
உடைத்திருப்பார்களே !! ( அதுல நீ போட்டது ஐநூறு ).

அவசர  அவசரமா வரும் போன் கால் உடனே குறித்துக்கொள் என்று
ஓடி வரும் போன் நம்பர், நோட் பண்ண  தேடும் பொழுது கண்டிப்பா  கிடைக்காத பென்சில் , ஆபிஸ் கிளம்பும் பொழுது கிடைக்காத வண்டி சாவி,
மழைநாட்கள் வரும் சேதி அறிந்தார் போல் வந்து குவியும் துணி மூட்டை .

 விருந்தினர் வரும்பொழுது  தீர்ந்து போகும் கேஸ் , காப்பி பொடி , சர்க்கரை.
குளிக்கும்  பொழுதுநின்னு போகும் தண்ணீர், பரீட்சை காலத்தில் ஓடிவிடும் கரண்ட், வெளியே செல்லும் பொழுது தீர்ந்துபோகும் செல்போன் பேட்டரி,

அவரசரமெனும் பொழுது காலியாகும் செல் போன் பேலன்ஸ், யாரும் இல்லா ரோட்டில் நின்றுபோகும் வண்டி, கையோடு வரும் காப்பி கப்பின் கைப்பிடி,காந்தி காலம் முதல் தீண்டபடாமல் பிரிட்ஜில் பத்திரமாக இருக்கும்
பிஸ்கெட், தண்ணீர் ஊற்றினாலும் ஊர்ராவிட்டலும் பார்த்து பார்த்து பராமரித்தாலும் வாடிப்போகும் செடி , ஆசையாய் சினிமா பார்க்க உக்காரும் பொழுது ஓடாத டிவிடி , கிரிகெட் மேட்ச் நடக்கும் பொழுது சிக்னல் இல்லாமல்
பல்லைகாட்டும் செட்டாப்பாக்ஸ்.

எவ்வளவு கூப்பன் வாங்கினாலும் நம்மக்கு மட்டும் விழாத பரிசு , விருந்தினர் வரும் பொழுது திரிந்து போகும் பால் , வாரக்கடைசியில் , நடு இரவில் வரும் ராங் நம்பர் , ஆயிரம் ருபாய் மதிப்பிலான சட்டையை நிமிடத்தில் கலர் மாற்றும்  பத்துரூபாய் கலர் கர்சீப். ஒருமணிநேரம் ஓடியும் ஒரு இஞ் அழுக்கை  போக்காத வாஷிங் மிஷின்.

வத்தல் காயப்போட எங்கு தேடியும் கிடைக்காமல் மழை நாளில் கண்ணில் படும் பிளாஸ்டிக் ஷீட். நம் வீடு கணினியை மட்டும் குறிவைத்து தாக்கும் வைரஸ் , வைத்த இடத்திலிருந்து நொடியில் காணமல் போகும் புத்தகம். பின் இல்லாத ஸ்டேப்ளர் , மொக்கை ஷார்ப்னர் , பெயன்ட் உரிந்து இளிக்கும் சுவர்கள், சத்தம் போட்டு ஊரைக்கூட்டும் கதவு, சாவி கிடைக்காத காரத்தினால் பல வருடமாய் திறக்கப்படாத பெட்டி , உடுத்தவே உடுத்தாமல் நூல் விட்டு கிழிது தொங்கும் பட்டுபுடவை, காலையில் அடிக்கவே அடிக்காத தூங்குமூஞ்சி அலறாம் , ஒளிந்து விளையாடும் சாக்ஸ் ,வெளிவரமருக்கும் பாலிஷ்..

அசதியாய் தூங்க வரும் பொழுது படையெடுக்கும் கொசு , கழுத்தறுக்கும் நமத்துபோன கொசுவத்தி , போதாகொரைக்கு சுர்ரலாமா வேண்டாமா என்று ஓயாது யோசிக்கும் தத்தா காலத்து மின் விசிறி..உஸ்ஸ்ஸ்
 என்னதான் இருந்தாலும் இது நம்ம வீடு...home sweet home


..37 கருத்துக்கள்:

dheva said...

ஹா ஹா ஹா தத்ரூபமா சொல்லி இருக்கீங்க....!!!!!

Sundharadhrusti said...

Super!! keep it up

சௌந்தர் said...

மின் விசிறி..உஸ்ஸ்ஸ் ////

யப்பா படிக்கவே இப்படி இருக்கே உண்மையா நடந்த இவங்களுக்கு எப்படி இருக்கும் ம்ம்ம்ம்.....

Chitra said...

ha,ha,ha,ha,ha.... ஆனாலும் பாவமா இருக்குது.... :-))))

குறையொன்றுமில்லை. said...

ஓ, எல்லார் வீட்டிலும் இதுதானா?
படிக்க சிரிப்பா இருந்தாலும் அனுபவிக்கும்பாது காதுல புகைதான்.

Gayathri said...

@dheva தினமும் படுற அவஸ்தை தான்...நன்றி

Gayathri said...

@sukanya raghavendranThanks da

Gayathri said...

@சௌந்தர் காதுல புகை புகையா வரும்...மூளை சூடாகி

Gayathri said...

@Chitra ஹீ ஹீ நன்றி

Gayathri said...

@Lakshmi மிக்க நன்றி மேடம்

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

நம்ம வீடும் அதே ஸ்வீட் வீடுதான்...

வெங்கட் said...

// அசதியாய் தூங்க வரும் பொழுது
படையெடுக்கும் கொசு , கழுத்தறுக்கும்
நமத்துபோன கொசுவத்தி , //

இன்னும் ஒன்னு சேர்த்துக்கோங்க..

கொஞ்ச நேரம் ரிலாக்ஸா இருக்கலாம்னு
நெட் பக்கம் வந்தா கொடுமை பண்ணும்
உங்க பதிவு...! :)

எல் கே said...

hahaha super

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வெங்கட் said...

// அசதியாய் தூங்க வரும் பொழுது
படையெடுக்கும் கொசு , கழுத்தறுக்கும்
நமத்துபோன கொசுவத்தி , //

இன்னும் ஒன்னு சேர்த்துக்கோங்க..

கொஞ்ச நேரம் ரிலாக்ஸா இருக்கலாம்னு
நெட் பக்கம் வந்தா கொடுமை பண்ணும்
உங்க பதிவு...! :)//


என்ன காயத்ரி நீங்க. வெங்கட் பீல் பண்றார்ல. எங்க சொல்லுங்க பாப்போம்!!

கொஞ்ச நேரம் ரிலாக்ஸா இருக்கலாம்னு
நெட் பக்கம் வந்தா கொடுமை பண்ணும்
வெங்கட் பதிவு...!

Gayathri said...

@மணி (ஆயிரத்தில் ஒருவன்)ஹா ஹா வெல்கம்

Gayathri said...

@வெங்கட் அவ்வ்வ்வ்வ்வ் ஏன் இந்த கொலை வெறி ப்ரோ..இருங்க முட்டைகோஸ் மந்திரம் வைக்கிறேன்..

Gayathri said...

@எல் கே நன்றி ப்ரோ

Gayathri said...

@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) ரொம்ப நன்றி ப்ரோ...ஹை நான் தனி ஆள் இல்லை

அமுதா கிருஷ்ணா said...

அட்டகாசமான வீடு..

Gayathri said...

@அமுதா கிருஷ்ணா மிக்க நன்றி

Anonymous said...

ஹேய், யாரது வெங்கட் சாரை கலாக்கறது. அவரோட பழைய விசிறிங்க இன்னும் தான் இருக்கோம்.

படிக்கவே கண்ணை கட்டுதே.

அப்பாவி தங்கமணி said...

ha ha...super round up.... but whatever it is... home sweet home thaan...no doubt...eli valainaalum thani valai right?.....:)))

அன்புடன் அருணா said...

இதெல்லாம் இல்லைன்னா அது வீடா என்ன????:)

Balaji saravana said...

சூப்பர் சூப்பர் சூப்பர்! :)

Gayathri Kumar said...

Super!

Unknown said...

me the first...

Unknown said...

Veeduna eppaithanganga erukkanum...
alaga elamey eruntha athukku peru motel aidum...

சி.பி.செந்தில்குமார் said...

ஹா ஹா சில பதிவுகளை படிக்கறப்ப மைனஸ் ஓட்டு போடனும்னு நினைப்போம்.அப்போ பார்த்து டூல் பார் ஒர்க் ஆகாது..

கவி அழகன் said...

யாளியா போகுது

Madhavan Srinivasagopalan said...

// அசதியாய் தூங்க வரும் பொழுது படையெடுக்கும் கொசு //

மொய்த்தாலும் இம்சைதான்.

Unknown said...

அனுபவங்கள்தான் வாழ்க்கை.மூச்சு முட்டுது.சூப்பர் வீடுங்க.

ரிஷபன் said...

அதுக்கென்ன பண்றது.. நம்ம வீடாச்சே.. அட்ஜஸ்ட் பண்ணிக்க வேண்டியதுதான்.. சுவாரசியமான தொகுப்பு.. எதையும் மிஸ் பண்ணாமல்..

☀நான் ஆதவன்☀ said...

:)))) எப்படி இப்படியெல்லாம் சகோ?

kumar2saran said...

ama maapla correct'ah sonna. adhuvum virundhaalinga varumpodhu thaan kottaavi nimishathuku 10 thadava varum. oru kashtam'ah irukum.

Sadhu said...

மேலும் வாசிக்க....

Do Visit

http://www.verysadhu.blogspot.com/

chicha.in said...

hii.. Nice Post

Thanks for sharing

For latest stills videos visit ..

www.ChiCha.in

www.ChiCha.in

Unknown said...

nice...