Recent Posts

4 Jul 2011

ரங்கமனியின் டைரி

7:00 am:  படுக்கை அறையில்

தங்கமணி : "என்னங்க இப்போ எழுதிருக்க போறீங்களா இல்லையா..எனக்கு ஆபிஸ் லேட் ஆச்சு...உங்க பாஸ் மாதிரி என் பாஸும் வெட்டி பீசுன்னு நெனச்சீங்களா?? லேட்டா போனா ரணகளம் ஆய்டும்...சீக்கரம் ரெடி ஆகுங்க...என்ன ட்ராப் பண்ணிட்டு வந்து வேணா தூங்குங்க.."

ரங்கமணி :" அடிப்பாவி அப்போ எனக்கு ஆபீஸ் லேட் ஆனா பரவல்லையா? நேத்து உங்க ஆப்ஸ்க்கு யாரோ இன்ச்பெக்டியன் வராங்கன்னு ஒரு மணி நேரமா மேக்கப் போட்டு என்ன கொடுமை பண்ணி அதுனால மீட்டிங் மிஸ் ஆகி நான் ஆபிஸ்ல ஆப்பு வாங்கினது எந்த கணக்குல போய் சேருமாம்..போய் ஆட்டோ பிடிச்சு போ.." என் மனதிற்குள் கத்திக்கொண்டு..." ம்ம சாரி மா..இப்போ ரெடி ஆகறேன் " என்று வெளியில் பொய்யை புன்னகைத்து ஆரம்பிக்கும் என் நாள்.

7:30am: டைனிங் டேபிள்

தங்கமணி  :"சமையல் மாமி வரல...அங்க பிரட் ஜாம் இருக்கும் ஒரு ரெண்டு செட் கொழந்தைக்கும் ஒரு செட் எனக்கும் பேக் பண்ணிடுங்க..நீங்க உங்க ஆபிஸ் கேண்டீன்ல சாப்டுடுங்க."
ரங்கமணி : ( அடிபாவி எனக்குதான் எடுத்து வச்சுருக்கேன்னு நெனச்சேன் ஆனந்த கண்நீர்லாம் விட்டேனே) சரி மா....

8:00am:

தங்கமணி: போற வழில ,கொஞ்சம் அண்ணா நகர் சங்கீத்தா வீடு வழியா போங்க..அவ வீட்டுகாரர் ஊருக்கு போயிருக்கார் சோ அவள பிக் அப் பண்ணிகர்தா சொல்லிருக்கேன்..சரியா 

ரங்கமணி : (அவ்வவ் ...திநகர் லேந்து போரூர் போரவழில அண்ணா நகர் எப்போமா வந்துது ??? உங்களுக்கு வேணும்னா போரவழில அமெரிக்காவே வந்தாலும் ஆச்சர்ய பட்ரதுக்கு இல்லை...அசோக்நகர் ல இருக்குற எங்கம்மாவ பாக்கணும்னா ஊற சுத்தி இப்போதான் போய் கொஞ்சனும்மா ன்னு சாக்கு சொல்லுவே...எல்லாம் என் நேரம்..பெட்ரோல் யார் உங்கப்பனா போடுவான் ")
சரி மா...

இதோட  போச்சா தெரியாத்தனமா அந்த தோழிய பார்த்தாலோ , நலம்
விசாரித்தாலோ அவ்ளோதான்... என்னைவிட அவ அழகா??? அவ எப்படி இருந்த என்ன ??? எதுக்கு அவள பாத்து சிரிசீங்க? அப்டி இப்படின்னு ராத்திரி பூகம்பமே வெடிக்குமே ! எனக்கெதுக்கு வம்பு. முன்ன பின்ன பாக்காம கொண்டுபோய் ரெண்டு பேரையும் ஆபிஸ்ல தள்ளிவிட்டு ஓடணும்..

9:30am: நேரா வந்துருந்தா ஒன்பது மணிக்கே அட்டெண்டென்ஸ் போற்றுபேன்..இப்போ அதுன்களால் லேட்.அவசர அவசரமாய் காரை நிறுத்த இடம் தேடும் பொழுது..இடம் கிடைக்காம.." கொஞ்சம் முன்னாடி வந்துருக்க கூடாதா சார் இப்படி தினம் இடம்தேட உட்றேங்கலேன்னு முனு முன்னுக்கும் செக்யூரிட்டி கிட்ட இழித்துகொண்டே பத்துநிமிடம் ஆபிஸ் பார்கிங் லாட்ட வளம் வந்து ஒருவழியா வண்டிய நிறுத்தி ஆபிஸ் குள்ள காலடி எடுத்து வச்சா. கொஞ்சத்தில் கிழே வராமல் முரண்டு பிடிக்கும் லிப்டிர்காக நின்னு நின்னு வேற வழி இல்லாம படி ஏறி நாலாவது மாடியில், இருக்கும் அலுவலகத்திற்கு போனா... கடிகாரமுள் பத்தை தாண்டி விள்ளத்தனமாய் சிரிக்கும்...


அதெப்படி இந்த ரிஷேப்சநிஸ்ட் மட்டும் தினமும் இவ்ளோ அழகா இருக்கா??
என்று வியந்து பல்லைக்காட்டி கொண்டே குட்மார்னிங் என்றபடியே கதவை திறந்து உள்ளே நுழைந்தால் "வரதே பாத்து மணிக்கு இதுல என்ன இளிப்பு ?? மீட்டிங் ஆரம்பிச்சு ஒரு மணிநேரமாச்சு...உண்ணலா கம்பனிக்கி இவ்ளோ லாஸ் அவ்ளோ லாஸ் என்று உப்பு பெறாத மீடிங்கிர்காக சீன போடும் டேமேஜராய் ஒன்னும் செய்யமுடியாமல் சாரி என்று மட்டும் சொல்லிவிட்டு அரைமணி நேர வாழ்த்துக்களுக்கு பின்னல் சீட்டுக்கு வந்து ஒக்காந்தா...

சர்வர் டவுன் என்று கழுத்தறுக்கும் கம்ப்யூட்டர்...ஒழுவழியா ஓபன் பண்ணி
மைல்பாக்ஸ் ஓபன் பண்ணா... இது சரி இல்லை அதுல சரி இல்லை..இதுல புரியல அது தப்புன்னு எக்குதப்பா மெயில்..

அதுங்களுக்கு பதிலனுப்பியே பாதிநாள் போய்டும், வேலைய பாக்க முழுசா மூணு மணிநேரம் கூட இருக்காது நடுல லஞ்ச் பிரேக்...இல்லாத ஆணிய புடுங்க மீட்டிங்குன்னு ரெண்டு மணி நேரம் போய்டும்...இருக்குற ஒரு மணி நேரத்துல என்னத்த ஆணி புடுங்கர்த்து...பேசாம மங்களம் பாடிட்டு வீட்டுக்கு போகவேண்டியதுதான்..

6:00pm - 7:45 pm : ஆமைபோல் நகரும் டிராபிக்கல நீந்தி நந்தம்பாக்கதுலேந்து திநகர் போகர்துக்குள்ள பேசாம வண்டிய சென்றல் ஸ்டேஷன்னுக்கு திருப்பி காசிக்கு போய்டலாம்னு வரும் என்னத்தை கட்டுபடித்தி கொண்டு வீடு போய் சேர்ந்தா...

7:45pm:  (ஆசையாய் வீடு வாசலில் காத்துக்கொண்டு நிற்கும் மாணவி...) ஹலோ கெட் அப்.. அந்த சீன் இங்க இல்லை..பாத்து நிமிஷம் காலிங் பெல்லை அமுக்கி  அமுக்கி விரல் தெய்தாலும் யாரும் வந்து கதவ திறக்க போறது இல்லை..
அலுத்துக்கொண்டே சாவியை எல்லா பாகேட்ட்டிலும் தேடி..ஒரு வழியாய் லேப்டாப் ப்பையில்இருந்து  எடுத்து..உள்ள போய் டிரஸ்மத்தி , கிட்சேன் புகுந்து எதனா தின்ன கிடைக்குமான்னு கழுகாட்டும் தேடியும் எதுவும் கிடைக்காம பிரிட்ஜ் பக்கம் திரும்பினான் போச்டிட் நோட்டில் " நாங்க  வர லேட் ஆகும் அம்மா வீட்டுக்கு போய்ட்டு ஷாப்பிங் போய்ட்டு வருவோம்..., ( அப்போ நாளைக்கு தான் வருவேன்னு சொல்லிருகலாமே ) போன்  கொண்டு போகல( தெரியும் நான் போன் பன்னுவேன்னுதானே) , உள்ள எதுவும் இல்லை..( என்னிக்கி இருந்துச்சு?? ) பிச்சா ஆர்டர் பண்ணி தின்னுட்டு எங்களுக்கு கொஞ்சம் மைக்ரோவேவ் டிஷ் ல போட்டு வைங்க ( ஏன் கொஞ்சம் துணியும் தோச்சு பாத்திரமும் தேச்சு வச்சுட்டு துன்குன்னு போடவேண்டியதுதானே? ) வாஷிங் மாசின் ல துணி இருக்கு எடுத்து உலர்திடுங்க( என் நாக்குல சனி !! ) சீரகம் துன்கிடுங்க..லவ் யு குட் நைட் ( இதெல்லாத்தையும் செஞ்சு எப்போ தூங்கி இதுல லவ்வும் குட் நைட்டுடும் ரொம்ப முக்கியம் !!)  "

எல்லதத்யும்  முடித்துக்கொண்டு, போய் துங்கலாம்ன்னு பதினொரு மணிக்கு கண்ணை மூடினா...டிங் டாங்...வந்தாச்சு கொரங்கு கூட்டம் !! இனி அவங்க அம்மா கதை,  ஷாப்பிங்ல நூறு ரூபா துணிய பேரம் பேசி எப்படி தொன்னுர்ரி ஒரு ரூபாய்க்கு வாங்கினா...பத்து ரூபா பெறாத சாயம் போய் கசங்கி போய் இருக்கும் சுடிதார ஐநூறு ரூபாய்க்கு வாங்கின பீத்தல் கதைன்னு எல்லாத்தையும் கேட்டு, இது நடுல "பிச்சால பைன் ஆப்பிள் போட்ட எனக்கு பிடிக்கும்ன்னு தெரியாதா??? "என்று கிச்சன் லேந்து கத்தும் ஆசை ?#% மாணவி ( பைன் ஆப்பிள் என்னமா அடுத்த வாட்டி பலாபழமே முழுசா போட சொல்றேன் ) சாரி டியர்..அடுத்த......( சொல்லி முடிக்கும் முன் கொர்ர்ர்ர்ர்ர்ர்)

கனவுல நமிதா,,என்ஜலீனா அப்டி இப்டின்னு டூயட் பாடிட்டு  இருக்கும் பொழுதே...

"என்னங்க இப்போ எழுதிருக்க போறீங்களா இல்லையா.. !!!!!!!  (விடாது கருப்பு)தொடரும்......

34 கருத்துக்கள்:

சி.பி.செந்தில்குமார் said...

முதல் மழை

சி.பி.செந்தில்குமார் said...

>>உங்க பாஸ் மாதிரி என் பாஸும் வெட்டி பீசுன்னு நெனச்சீங்களா??

அண்ணி. தில்லு இருந்தா எங்க அண்ணன் விழிச்சிருக்கும்போது சொல்லனும், சும்மா தூக்கக்கலக்கத்துல இருக்கறப்ப உங்க வீரம் ச் ஹா ஹா ஹா

சி.பி.செந்தில்குமார் said...

haa haa ஹா ஹா வித் இன் பிராக்கெட்ல போட்ட மேட்டர் எல்லாமே செம காமெடி ..

வெங்கட் நாகராஜ் said...

விடாது கருப்பு... ம்... :))))

கோவை2தில்லி said...

:))))

Madhavan Srinivasagopalan said...

ல்ல கற்பனை..


//...(ஆசையாய் வீடு வாசலில் காத்துக்கொண்டு நிற்கும் மாணவி...) ஹலோ கெட் அப்.. ...//

//...என்று கிச்சன் லேந்து கத்தும் ஆசை ?#% மாணவி ( பைன் ஆப்பிள் என்னமா அடுத்த //

அதெதுக்கு ரெண்டு 'மாணவி' வராங்க வீட்டு ஸ்டோரில.. ?

Ravi said...

// கடிகாரமுள் பத்தை தாண்டி விள்ளத்தனமாய் சிரிக்கும்...//

// (அவ்வவ் ...திநகர் லேந்து போரூர் போரவழில அண்ணா நகர் எப்போமா வந்துது ???//

---- super write up :)

எல் கே said...

யாருங்க அது மாணவி ???

☀நான் ஆதவன்☀ said...

//
6:00pm - 7:45 pm : ஆமைபோல் நகரும் டிராபிக்கல நீந்தி நந்தம்பாக்கதுலேந்து திநகர் போகர்துக்குள்ள பேசாம வண்டிய சென்றல் ஸ்டேஷன்னுக்கு திருப்பி காசிக்கு போய்டலாம்னு வரும் என்னத்தை கட்டுபடித்தி கொண்டு வீடு போய் சேர்ந்தா...//

:))))) enna sago ippadi thideernu kilambitta? kalakkal po

sukanya raghavendran said...

so nice....keep doing....expecting more scenes...

அப்பாவி தங்கமணி said...

//ம்ம சாரி மா..இப்போ ரெடி ஆகறேன் " //

ஹா ஹா ஹா...சூப்பர் ...:)


//பாவி எனக்குதான் எடுத்து வச்சுருக்கேன்னு நெனச்சேன் ஆனந்த கண்நீர்லாம் விட்டேனே//

விடுங்க பாஸ்... அம்மணி சமையல்ல இருந்து தப்பிச்சது எவ்ளோ பெரிய மேட்டர்...:)


//உங்களுக்கு வேணும்னா போரவழில அமெரிக்காவே வந்தாலும் ஆச்சர்ய பட்ரதுக்கு இல்லை.//

அரசியல்ல இதெல்லாம் ஜகஜமப்பா...:))

அப்பாவி தங்கமணி said...

//கடிகாரமுள் பத்தை தாண்டி விள்ளத்தனமாய் சிரிக்கும்...//
கடிகார முள் ஏன் விள்ளுது... ஓ வில்லத்தனமாவா? ஹி ஹி ஹி...

//ஆசையாய் வீடு வாசலில் காத்துக்கொண்டு நிற்கும் மாணவி..//
என்னது மாணவியா? வேண்டாம் காயத்ரி அழுதுருவேன்... "மனைவி"னு மாத்திரு அம்மணி...:))

//சீரகம் துன்கிடுங்க//
சீரகம் மட்டும் தூங்கினா போதுமா? மிளகு கொத்தமல்லி எல்லாம் தூங்க வேண்டாமா?....அவ்வ்வ்வவ்... சீக்கரம் தூங்கணுமா? இதை படிச்சு புரிஞ்சு அவர் தூங்கரதுகுள்ள எப்படியும் காலைல ஆய்டும்...:))

அப்பாவி தங்கமணி said...

//பைன் ஆப்பிள் என்னமா அடுத்த வாட்டி பலாபழமே முழுசா போட சொல்றேன் //

தலை மேலயா? கொல கேஸ் ஆகிற போகுது அம்மணி...:))


//என்னங்க இப்போ எழுதிருக்க போறீங்களா இல்லையா.. !!!!!!! (விடாது கருப்பு)//

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா... சூப்பர் போஸ்ட்...:))

அப்பாவி தங்கமணி said...

சாரி, ரெம்ப கலாய்ச்சுட்டேன்... சான்ஸ் கிடைச்சா விட முடியுமா சொல்லு... இன்னைக்கும் உன்னோட proof reader ஊர்ல இல்லை போல இருக்கே... :))) இந்த போஸ்டை கலாய்ச்சு ஒரு போஸ்ட் போடலாம்னு கூட கை துரு துருங்குது... ஆனா பாவம் சிஸ்டர்னு விட்டுட்டேன்..:))

கவி அழகன் said...

செம செம செம காமெடி ..

Gayathri said...

@சி.பி.செந்தில்குமார் Enna seyyarthu adutha vati muzhichu irukarthe thitidalam...hahaha

nandri

Gayathri said...

@வெங்கட் நாகராஜ் Nandri

Gayathri said...

@கோவை2தில்லி Nandri bro

Gayathri said...

@Madhavan Srinivasagopalan manaivi than maanavi ayta bro sorry next time pathukaren

Gayathri said...

@Ravi
Thanks a lot bro

Gayathri said...

@எல் கே theriyalaye maa .......

Gayathri said...

@☀நான் ஆதவன்☀epdi iruke bro.enga postaye kanum

Gayathri said...

@sukanya raghavendran thanks da

Gayathri said...

@அப்பாவி தங்கமணி haha akka ungakuda mudiuma ennaala...ipdi kalaaichutengale

Gayathri said...

@கவி அழகன் Nandri bro

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

ha ha ha.. Enjoyed it.. :) thanks.

//விடாது கருப்பு...// தூள்..!! ;)

சீனுவாசன்.கு said...

ha ha ha...(i expect more from u...)

justin bieber quizzes said...

Very nice blog and theme. but i cant type in tamil any help?

Thanai thalaivi said...

அது, "சீக்கிரம் தூங்குங்கள்ளா" நான் கூட சீரகம் எதுக்கு தூங்கணும்னு யோசிச்சேன். : ))))

More Entertainment said...

hii.. Nice Post

Thanks for sharing

For latest stills videos visit ..

www.ChiCha.in

www.ChiCha.in

இராஜராஜேஸ்வரி said...

நந்தம்பாக்கதுலேந்து திநகர் போகர்துக்குள்ள பேசாம வண்டிய சென்றல் ஸ்டேஷன்னுக்கு திருப்பி காசிக்கு போய்டலாம்னு வரும் என்னத்தை கட்டுபடித்தி கொண்டு வீடு போய் சேர்ந்தா..

விடாது கருப்பு ...

Binance Support said...

Is your Binance account got hacked in Binance? Hacking issues are fine-tuned and should be well-taken care of because as they can produce the huge jumble in your account. In order to resolve all the queries, you can dial Binance Customer Service Number 1800-665-6722 and speak to the executives who are always there to guide you. You can contact them around the clock and don’t have to worry about the issues as they will be covered in a fraction of time with their deserving services.

Blockchain Customer Service 24*7 Help said...

Blockchain has many attracting features, but one feature which gives the assurance to the users is security features. They have the best security and privacy features among all the other cryptocurrency competitors. If you face any problem in your Blockchain account related to Security or you wa0nt to know more features of security options, you just dial Blockchain helpline Number +1 (800) 861-8259 and get connected to Blockchain Customer service team.

Blockchain Customer Service 24*7 Help said...

Is your Blockchain 2fa got failed? Do you know the accurate means and methods to deal with this error? If no, you can always get in contact with the team of talented advisors who is always there to support you in the worst time. Dial Blockchain Support Number +1 (800) 861-8259 and attain the full-fledged information about Blockchain and learn the recovery measures to erase all your errors and glitches.