கிடைக்காது , அப்படியே கிடைத்தாலும் அதுல பேட்டரி போடும்
இடத்தில் ஒன்று கவர் இருக்காது இல்லை பேட்டரியே இருக்காது !
அப்படியே இருந்தாலும் அதுல பவர் சுத்தமா இருக்காது...பரவால்ல பேட்டரியை மாற்றலாம் என்றால் அதுக்கு மொதல்ல வாங்கி வச்ச
பேட்டரி பக்கெட் கிடைக்கணுமே ,அதைத்தான் நம்ம மக்கள் சுறு
சுறுப்பா பிரித்து செத்துப்போன பேட்டரிக்களின் நடுவே புதைத்து வைத்திருப்பார்களே !. திருப்பதியில் மொட்டை போட்டவன் என்ற
அடையாளத்தை வைத்து கொண்டு தேடுவதைப் போல் இருக்கும்
அதில் உயிருடன் புதையூண்டு இருக்கும் பேட்டரியை கண்டுப்பிடிப்பது.
அப்படியே பேட்டரி கிடைத்தாலும் ரிமோட்டில் ஏதாவது பட்டனை
அமுகினா சேனல் மாறுவதர்க்கு நூற்றில் ஒரு சதவிகிதம் தான்
வாய்ப்புள்ளது..அதான் பசங்க ஆயிரம் முறை கிழே போட்டு
உடைத்திருப்பார்களே !! ( அதுல நீ போட்டது ஐநூறு ).
அவசர அவசரமா வரும் போன் கால் உடனே குறித்துக்கொள் என்று
ஓடி வரும் போன் நம்பர், நோட் பண்ண தேடும் பொழுது கண்டிப்பா கிடைக்காத பென்சில் , ஆபிஸ் கிளம்பும் பொழுது கிடைக்காத வண்டி சாவி,
மழைநாட்கள் வரும் சேதி அறிந்தார் போல் வந்து குவியும் துணி மூட்டை .
விருந்தினர் வரும்பொழுது தீர்ந்து போகும் கேஸ் , காப்பி பொடி , சர்க்கரை.
குளிக்கும் பொழுதுநின்னு போகும் தண்ணீர், பரீட்சை காலத்தில் ஓடிவிடும் கரண்ட், வெளியே செல்லும் பொழுது தீர்ந்துபோகும் செல்போன் பேட்டரி,
அவரசரமெனும் பொழுது காலியாகும் செல் போன் பேலன்ஸ், யாரும் இல்லா ரோட்டில் நின்றுபோகும் வண்டி, கையோடு வரும் காப்பி கப்பின் கைப்பிடி,காந்தி காலம் முதல் தீண்டபடாமல் பிரிட்ஜில் பத்திரமாக இருக்கும்
பிஸ்கெட், தண்ணீர் ஊற்றினாலும் ஊர்ராவிட்டலும் பார்த்து பார்த்து பராமரித்தாலும் வாடிப்போகும் செடி , ஆசையாய் சினிமா பார்க்க உக்காரும் பொழுது ஓடாத டிவிடி , கிரிகெட் மேட்ச் நடக்கும் பொழுது சிக்னல் இல்லாமல்
பல்லைகாட்டும் செட்டாப்பாக்ஸ்.
எவ்வளவு கூப்பன் வாங்கினாலும் நம்மக்கு மட்டும் விழாத பரிசு , விருந்தினர் வரும் பொழுது திரிந்து போகும் பால் , வாரக்கடைசியில் , நடு இரவில் வரும் ராங் நம்பர் , ஆயிரம் ருபாய் மதிப்பிலான சட்டையை நிமிடத்தில் கலர் மாற்றும் பத்துரூபாய் கலர் கர்சீப். ஒருமணிநேரம் ஓடியும் ஒரு இஞ் அழுக்கை போக்காத வாஷிங் மிஷின்.
வத்தல் காயப்போட எங்கு தேடியும் கிடைக்காமல் மழை நாளில் கண்ணில் படும் பிளாஸ்டிக் ஷீட். நம் வீடு கணினியை மட்டும் குறிவைத்து தாக்கும் வைரஸ் , வைத்த இடத்திலிருந்து நொடியில் காணமல் போகும் புத்தகம். பின் இல்லாத ஸ்டேப்ளர் , மொக்கை ஷார்ப்னர் , பெயன்ட் உரிந்து இளிக்கும் சுவர்கள், சத்தம் போட்டு ஊரைக்கூட்டும் கதவு, சாவி கிடைக்காத காரத்தினால் பல வருடமாய் திறக்கப்படாத பெட்டி , உடுத்தவே உடுத்தாமல் நூல் விட்டு கிழிது தொங்கும் பட்டுபுடவை, காலையில் அடிக்கவே அடிக்காத தூங்குமூஞ்சி அலறாம் , ஒளிந்து விளையாடும் சாக்ஸ் ,வெளிவரமருக்கும் பாலிஷ்..
அசதியாய் தூங்க வரும் பொழுது படையெடுக்கும் கொசு , கழுத்தறுக்கும் நமத்துபோன கொசுவத்தி , போதாகொரைக்கு சுர்ரலாமா வேண்டாமா என்று ஓயாது யோசிக்கும் தத்தா காலத்து மின் விசிறி..உஸ்ஸ்ஸ்
என்னதான் இருந்தாலும் இது நம்ம வீடு...home sweet home
..