Showing posts with label Funny. Show all posts
Showing posts with label Funny. Show all posts

8 Jul 2010

முக்கிய அறிவிப்பு !

கீழ்கண்ட அறிவிப்பினை திருமதி ஷோபனா ரவியோ அல்லது திருமதி பாத்திமாபாபு அவர்களோ படிப்பதுபோல் கற்பனை செய்துக்கொள்ளவும் !

வணக்கம்! ஒரு முக்கிய அறிவிப்பு ''இது நாள் வரை விடுமுறை கிடைக்காது என்று காயத்ரியை கடுப்படித்துக்கொண்டிருந்த  தலைவர் திரு.மணிகண்டன் அவர்கள் இப்பொழுது மனதுமாறி லீவ் கோரி டிக்கெடும் புக் செய்து விட்டக்காரனத்தினால் அவர்கள் தலைவி சுவர்ணவுடன்  , இந்த மாதக்கடைசியில் சென்னை வருகிறார்கள்..இதனையொட்டி சென்னையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது ( சென்னைய காப்பாற்ற வேண்டாமா ?? ). சென்னையில் பெருந்தலைவர்களை
  ( பெற்றோர்களை ) சந்தித்துவிட்டு மற்ற  ஊர்சுற்றுவது, நண்பர்களை சென்று சந்தித்து அவர்களை கடுப்படிப்பது, சினிமா பார்ப்பது , படித்த பள்ளி கல்லூரி போன்றவற்றிக்கு சென்று ஆசிரயபெருமக்களை சந்தித்து ஆசி பெறுவது போன்ற மேலான பணிகளை  முடித்க்கொண்டு ஒருமாத முடிவில் தலைவி சுவர்ணவிர்க்கு பள்ளி திறக்கின்ற காரணத்தினால் மீண்டும் ஷார்ஜா  திரும்புவார்கள் என்று எதிர்பர்க்கப்படுகிறது ''
'' பதிவுலக நண்பர்களே ! ( பலத்த க(கா)ரகோஷம்! ) சென்னையில் என்னவெல்லாம் புதுசா வந்துருக்கு ? எங்க லம் போய் பாக்கலாம் ? உங்கள் கருத்துக்களை கமெண்ட்ஸ் பொட்டில போடுங்க !" என்று காயத்ரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.'' இத்துடன் இந்த முக்கிய அறிவிப்பு நிறைவடைந்தது..( ஆளைவிட்ட போறும்ட சாமி என்று செய்திவாசிப்பாளர் ஓடுவது உங்கள் கண்களுக்கு தெரிகிறதா?)













1 Jul 2010

நான் தனி ஆள் இல்ல!!

நான் தான் கணக்குல புலின்னு நெனச்சுட்டு இருந்தேன் இதோ என்ன விடவும் புத்திசாலிங்க இருகாங்க பாருங்க...


என் சா(சோ)தனைகள்(??????)- பாகம் 1

நான் அப்போ 10த் படிசுட்டு இருன்தேன் ( படிச்சியான்னு கேக்கப்டாது அபீஷ்டு)
அரை ஆண்டு தேர்வு முடிஞ்சு எல்லாருக்கும் கணக்கு மார்க் குடுத்துட்டு இருந்தங்க,

கண்க்கு டிச்சர் : "எல்லார் கைலயும் இப்போ உங்க பேப்பர் குடுக்க போரேன் , வாங்கி சரிப் பார்த்துட்டு என் கிட்ட திருப்பி குடுக்கனும் சரியா'ன்னு சொல்லிட்டு ஒரு ஒருத்தரயா கூப்டு பேப்பர குடுக்க ஆராம்பிச்சாங்க ( இதை தான் நம் முன்நோர்க்ள் சனி புடிக்கர்துன்னு சொல்ராங்களோ ??)..என் தோழிக்கு கண்லாம் கலங்கி போய் இருந்தது "என் டீ அழர எவ்ளோ மார்க் ? நு கேட்டேன் ." அவ " போடி 80 தன் நன் 90 மேல எதிர்பாத்தேன்''ன்னு சொல்லின்டே அழுகய தொடர ஆரம்பிச்சா..(இது லாம் ஒவெரா இல்ல?)  எங்க வகுப்பே ஒரு அல்லேல் கல்லேல்ப்ப்ட்டிடுன்டு இருந்தது.எல்லாரும் அவன் அவன் பேப்பர விட்டு அடுத்தவன் பேப்பர அராய்ச்சிப் பன்னிட்டு இருந்தாங்க.
அப்போதான் ''காய்த்ரி ..''ன்னு கேட்டுது .எல்லார் பேப்பரையும் குடுத்துடு கடசியா என்னை குப்பட்ரதுனால ஒரு ஸஸ்பென்ஸோட வகுப்பே என்னை ஆர்வமா பத்து கொண்டிருக்கும் போது ..கொஞ்சம் தயக்கம் கொஞ்சம் பயம்னு இருந்த உனர்வு எதயும் வெளியில் காட்டிக்கொளாம ,நானாவது பயமாவதுன்னு?ன்ற  ஒரு முக பாவத்தோட போய் என் பேப்ர வாங்கினேன் .உட்டா பொரும்டா சாமின்னு என் பென்ச்சுக்கு ஓடி வந்து பேப்பர தொரந்தா............. 1/2 / 100 ???????????????
ஒரு ந்மிஷம் உயிர் மேலே போய் வந்துது. என்னடா இது . நான் ஒரு 15 பக்கத்துக்கு குறயாம எழுதிருக்கேன் என்ன இது 1/2 இதுலாம் அக்ரமம்ன்னு ஒரே ஆத்ரம். அப்போ கணக்கு டீச்சர் என்னயே பாத்துட்டு இருக்கர்து என் கண்னுக்கு ( அறிவுக்கண்னுக்கு  )
தெரிஞ்சுது..இந்தமாதிரியான சமயங்களில் நடிச்சே ஆகனும் இல்லனா மானம் போய்டும் ( என்ன இருக்கு போக??)
டீச்சர் அப்டியே நம்ம சிங்கம் சூர்யா மாதிரி ஆத்திரமா " காயத்ரி..நீ என்ன தான் பன்ரேன்னு பக்க நானும் பொருமயா இருக்கலாம்னு நென்ச்சா ..நீ யெதோ 100 மார்க்க 1 மார்க் ல கோட்ட விட்டவமாரி அப்டியென்ன தேட்ர பேப்பர்ல??''னு கேட்டாங்க.
அவங்க அப்படி கேட்டதும் வகுப்பே சிரிப்புச்சத்தத்துல ஆடிபோச்சு!! ( எனக்கு இத்தனை ரசிகர்களா நு பெருமைல திளைத்துப்போன ( நெனப்புத்தான் ) என் முகத்தோட கம்ப்கிராமா??? எழுந்து நின்னு ''அதுவா டீச்சர் ..நானும் தேடி தேடி ப்பாத்தேன் இந்த அறை மார்க் எங்கேந்து வந்துதுன்னு பாத்துனு இருக்கேன் அவ்லோதான் !!''னு சொன்னேன் .. அப்போ பருங்க என்ன ஒரு கரகோஷம் !( என் மனசுக்குள்ள தான்..பின்ன நெஜமாவா..அதான் வகுப்பே அதிர்ச்சீல ஒரஞ்சு போய்ருக்குல )..இப்படி ஒரு பதிலை எதிர்பாக்காத டீச்சர் எப்படி இதுக்கு பதில் சொல்ரதுன்னு தெரியாம அப்படியே ..ஆடிப்போய் நாற்காலில ஒக்காந்துன்டாங்க..நானும் கண்ல இருந்த ஆன்ந்த ????????கண்ணீர யாருக்கும் தெரியாம துடைத்து கொன்டு உட்கார்ந்தேன்.
(அப்போ ஏர்பட்ட அவமானத்தை மறக்க படிச்சு 12த் ல நானும் ''school topper"கள் ல ஒருத்தரா வந்து பெருமையோட பள்ளிப்படிப்ப முடிசுட்டு வந்தேன்ரது தனி கதை !!)








Special note to my maths teacher ( if you are reading) : Sorry !!

25 Jun 2010

வரும் ஆனா வராது !!!

என் நாலு வயசுப்பொன்னு சுவர்ணா எப்பொவும் கார்டூன் பார்துன்டே இருக்கான்னு இன்னிக்கு கொஜ்ஜம் கோவப்பட்டேன் "இப்படி டிவி எப்பொவும் பாதுன்டே இருக்கியே எப்போ படிக்க வரபொரே மா நீ?, நீ படிக்கலனா ரிப்பொர்டு கார்டுல ஸ்மைலி எப்படி வரும்?"னு கேட்டேன். இவ யுகெஜி படிகரா ரிபோர்ட் கார்டுல நல்லா  படிக்கர பசங்களுக்கு ஸ்மைலி பொம்மை ஒட்டு வாங்க.நான் கேட்டது தான் தாமதம் ஒடனே அவ சொன்னா "வரும் ஆனா வராதுன்னு !!!!"