ம்ம தலைப்ப பார்த்தா எதோ பெரிய்ய சினிமா படப்பெயராட்டும் இருக்கு..அந்த லூசுத்தனமான intro சாங் எல்லாம் இங்கே கிடையாது..( ஆமா அது ஒண்ணுதான் கொறைச்சல் வேளக்கென்ன…)
இது ரொம்ப நல்ல இறுக்கே வரிசையா தொடர்பதிவா எழுதிட்டே போனா நல்லாத்தான் இருக்கு..ஐடியாக்கு யோசிக்க வேண்டாமுல்ல..( ஆமா அப்படியே தொடர் பதிவுக்கு கூப்பிட்டா மட்டும் என்ன பெருசா நடக்க போகுது..காதுல வர ரத்தம் வரத்தான் போகுது !! )
வார்னிங் : பெரிய்ய்ய்ய்ய்ய்ய பதிவு கைல காபி தண்ணி ஏதான வச்சுக்கிட்டு அப்புறமா படிக்க ஆரம்பிங்க
சரி சரி பாவம் சந்தியா மாமி அசையா எழுத சொல்லிருக்காங்க
இடம் : பல்பு டிவி ஸ்டுடியோ ( பின்ன பிபிசி லேந்தா கூப்பிடுவாங்க ??? )
தொகுப்பாளர் : பெயர் என்னவா இருந்த எனா ஆள் ஜம்முன்னு இருக்கருல்ல ஹா ஹா ( எவனாச்சும் இருந்தாதானே சொல்ல முடியும் இல்லான இப்படித்தான் சமாளிக்கன்னும்.. கண்டுக்கப்பிடாது..)
அண்ட் மீ தி மொக்கை காயத்ரி…
ஒன் டூ த்ரீ கோ..
தொகுப்பாளர் : வணக்கம் நேயர்களே…இந்த வார மொக்கை பதிவர் நிகழ்ச்சிக்கு உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..நமது பல்பு டிவியில முதல் முறையாக , என் அகில உலக தொல்லை ச்சே தொலைகாட்சியிலேயே முதல் முறையாக..( அங்கேந்து கேமராமேன் செய்கி காட்டுகிறார்..” யோவ் பொறுமையா..இந்த பொண்ணுக்கு இதுலாம் ஓவர்..அந்த பேஜ் அடுத்த வார மொக்க பதிவருக்கான இன்ட்ரோ..” )
என் மின்ட் வாய்ஸ்: அடப்பாவிகளா அப்போ எனக்கில்லையா…ஒருவேளை இன்னும் கம்பீரமா ஏதேனும் இருக்குமோ ??
தொகுப்பாளர் : வணக்கும் நேயர்களே…இந்த வார மொக்க பதிவர் நிகழ்ச்சிக்கு வர வேண்டிய பதிவாளர் மலேரியா வந்து மல்லாக்க படுத்து கிடப்பதால்…இப்பொழுது நாம் மொக்கை பதிவர் காயத்ரி அவர்களை சந்திப்போம் ( ஹோடெல்ல சரக்கு காலியானா உப்புமா போடறது இல்லையா அதுமாரிதான்..)
தொடருகிறார்….
இனி தொகுப்பாளர் தொகு என்று அழைக்க படுவார்..
வணக்கம் காயத்ரி
மீ : ஹாய் வணக்கம்
தொகு : எப்படி இருக்கீங்க ( நீங்க நல்லாத்தான் இருகீங்க நாங்க தான் உங்க பதிவ படிச்சுபுட்டு பைத்தியமா திரியறோம் )
மீ : நல்ல இருக்கேன்..நன்றி
தொகு : நிகழ்ச்சிக்கு போவோமா..எல்லாம் வழக்கமான கேள்விதான்..
முதல் கேள்வி.. வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
மீ : காயத்ரி
தொகு : அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?
மீ : ஆமாம் என் உண்மையான பெயரும் அதான் ( உண்மையான பெயரை வச்சே யாருக்கும் என்ன தெரியல இதுல புனை பெயர் வச்சா…) பதிவில் அந்த பெயர என் வச்சென்னா எனக்கு பொய் சொல்ல பிடிக்காது ( அடிங்கு….அப்போ நேத்து ஹோடெல்ல நான் டைடிங்ல இருக்கேன்னு சீன் காட்டிப்புட்டு ஒரு ஜூஸ் குடிச்சுப்புட்டு… வீட்டுல போயி நடு ராத்திரி பிரிட்ஜ் லேந்து கைல கடச்சதேல்லாம் உள்ள தள்ளினியே படுபாவி )
3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.
மீ : ஒஹ் அது ஒரு ஆக்சிடென்ட்….நான் ஒரு பெரியா ஹார்ட் சர்ஜன் ஆகணு முன்னு….( சுருதி குறைகிறது…ஏன்னா தொகு முறைக்குது !! ) நெனைச்சேன்..ஆனா விஸ்காம் படிச்சு..கடசில இப்படி ஒரு பதிவாளர் ஆகிவிட்டேன்..
ஏன்னா நான் பேசறத கேக்க யாருமே இல்லாத ஒரு ஊருக்கு போயி செட்டில் ஆகிவிட்டோன் ( இந்தியா இப்போத்தான் நிம்மதியா இருக்கு ) எப்படியான நான் உளறுவத யாரான கேட்கனுமுன்னு ஒரு வெறியோட வந்தேன்…இன்னும் வெறியோட இருக்கேன்..( ஐயோ!! என்னடா இது பதிவர கூப்ட சொன்னா வெறி சொரின்னு பாயமுடுத்துதே இந்த பொண்ணு..பெண்ணா பேயா??)
தொகு : உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?
ம்ம எல்லாம் இறைவன் செயல் , இறைவனுக்கு அடுத்த படியா என் பதிவுலக நண்பர்கள் செயல் ( ஆமா பொழச்சு போகட்டும் பொண்ணு என்று பாவப்பட்டு…பரிதாபப்பட்டு…வெக்கப்பட்டு.. வேதனைப்பட்டு….. துயரப்பட்டு…துக்கப்பட்டு ..எதோ பின்னூட்டம் போடுராய்ங்க!!)
நானா ஒண்ணுமே செய்யல தான எதோ வண்டி ஓடுது ( அடிப்பாவி..அண்டப்புழுகி ஆகாசப்புழுகி…உன் பதிவ எல்லாரும் படிக்கணும் என்பாதுக்காக பதிவு பதிவா போயி பின்னூட்டம் போட்டு என் பதிவுக்கு வா வான்னு கூபிட்டே…)
நான் இன்னும் பிரபலம் ஆகவில்லை…ஆகினா சொல்றேன்…
தொகு : வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?
மீ : இந்த வலைப்பதிவே என் சொந்த கதை தானே..அதுல என்ன சொந்த விஷயம் இரவல் விஷயம்ன்னு ??? எனக்கு என் சொந்த மனசுல தொனுவதை சொந்த கையால..சொந்த லேப்டாப்ல டைப் பண்ணி போடறேன் ( அப்போ மத்தவங்க எல்லாம் என்ன ஆள் வச்சா டைப் செய்து போடறாங்க ரொம்பத்தான்..)
விளைவு என்ன ?? நல்ல விளைவுத்தான்…இப்பொழுது கூட என் பர்ஸ்சை தொலைச்சுட்டு ( PAN card , atm card , health card and cash all missing ) சுட சுட ஒரு பதிவு போட்டு உதவி கேட்டேன்…கேட்டேன் நொடிகளிலேயே..நண்பர்கள் ஜெய்லானி , அருன்ப்ரசாத் மற்றும் ஜெய் அவர்கள் உதவிக்கு வந்து என் குழப்பத்தை தீர்த்து வைத்தனர்.. இவங்களுக்கும் மற்றும் எனக்கு பின்னூட்டம் போடும் அனைத்து நல்ல உள்ளங்களுக்காக…
ஆகையால் என் சொந்த விஷயங்களை பகிர்ந்து கொள்வதால்
எனக்கு நன்மையே தவிர இதுவரை கொலை மிரட்டல் வரவில்ல..ஆனால் இப்பொழுதுதான் நாற்ப்பது கொல்லையர்களிடமிர்ந்து தப்பித்து வந்தேன்..( அந்த கதை தனிக்கதை )
தொகு : நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?
மீ : நான் அச்சுவலா ரொம்ப பிஸி ( தொகுப்பாளர் கையில் கட்டை எடுப்பது போல் லுக் விடுகிறார் ) ம்ம இப்போ தற்சமயம் யாருக்கும் என்னுடன் நேரம் செலவிட முடியாமல் போவதால் பொழுதை கழிக்கவும் , தனிமை உணர்வை குறைக்கவும் தான் பதிவெழுதுகிறேன்.
நிறைய சம்பாதிதிருக்கிறேன்…நண்பர்கள்….அக்கா அண்ணா என்று சொந்தங்கள்…கியுட் தோழிகள் என்று நிறைய சம்பாதித்து இருக்கிறேன்..
மற்றபடி எதுவும் இல்லை வேணும்னா என் பேங்க் அக்கௌன்ட் நம்பர் தரேன் எப்படி வசதி ?? கணக்கு காட்ட இல்லை மாமூல் வாங்க !! ஹா ஹா…( ஆளவிடு !! )
தொகு : நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?
மீ : இருங்க என் மேனேஜர்ர கேட்டு சொல்றேன்….செல்போன் எடுத்து கையில் வரும் நும்பேரை சுழற்றுகிறேன்..( dial செய்த என்னை சரி பார்க்கவும்…Please check the number you have dialed !! … அடடா பல்பா போச்சே !!! …. ) கட்டிக்க மட்டோமுல்ல..) ஹீ ஹீ அவர் பிஸியாம்…ஐ
தின்க் ஒரே ஒரு வளய்பதிவுதன்னு….ஆப் தி ரெகார்ட் வச்சுக்கோங்க…என்று ரகசியமாக சொல்லிவிட்டு…
( சத்தமாக…)அது ஒரு 99 இருக்கும்…கூடிய விரைவில் நூறாவது வளய்பதிவை தொடங்கிடுவேன்…கமல் சார கூப்பிட்டு திறப்பு விழா நடத்தலாமுன்னு நேத்து அவருடன் இன்டர்நெட்டில் சாட் செய்து கேட்டேன் ( இது கமல் சாருக்கு தெரியுமா??? )…கூடிய விரைவில் அறிவிப்பேன்..( யார் டா அங்கே கட்ட சைக்கிள செயின் எல்லாத்தையும் ரெடி பண்ணுங்க டா…அந்த அருவாவ தட்டி வை..என்று தொகு எஸ் எம் எஸ் செய்வது பொண்ணுக்கு தெரியாது )
தொகு : மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு இது கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?
மீ : கோபமா அப்படின்னா ?? ஒஹ் யு மீன் angry ?? ம்ம்ம் சில சமயம் வரும்..தேவை இல்லாமல் சண்டை போடுவது..தகாத வரத்தை பின்னூட்டங்கள் போடுவது..பிறர் மனது புண்படும் வகையில் எழுதுவது போன்ற காரியம் செய்பவர்களை கண்டால் மட்டும் கோவம் வரும்..( நீ எல்லார் நேரத்தையும் வீனடிக்கவே எழுதிரியே உன்ன என்ன செய்றது ??? )
பொறாமை..ம்ம்ம்ம் அனைவரும் சொல்லும் அதே பதில் தான் அனைவரின் எழுத்துக்களின் மீதும் ஒரு ஈர்ப்பு உள்ளது..எப்படித்தான் இப்படிலாம் யோசிக்கராய்ந்க்களோ தெரியல..நிறைய பின்னூட்டங்கள் பெரும் பதிவு எழுதுபவர்கள்..( உனுக்கு ஒன்னு வந்தாலே அது சாதனை ) குறிப்பாக நகைச்சுவையாக எழுதும் அனைவரின் மீதும் ஒரு பொறாமை இருக்கத்தான் செய்கிறது…what to do ?? am just an ordinary girl..
தொகு : உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..
மீ : முதல் முதலில் பின்னோட்டம் போட்டது என்று சொன்ன அது என் மாமி சந்தியா அவர்கள் தான்…வணக்கம் என்று என்னை அறிமுக படுத்தி கொண்ட பதிவுக்கு இதுதான் அது
- வாங்க வாங்க எவ்ளோ நாளா காத்திடிருந்தேன் ...தமிழ் லே தான் எழுதணம்..கொங்கனி பெண்ணானா நானே எழுதறேன் அப்புறம் பச்சை தமிழச்சி நீங்க எழுதாமல் வேறே யாரு எழுதுவாங்க?? “
என்னை ஊக்க படுத்திய நண்பர்கள் கார்த்தி ( LK) , தக்குடுபாண்டி , ஜெய் , புன்னகை தேசம் , சித்ரா , அப்பாவி தங்கமணி , சீனா , அருண் பிரசாத் , பிங்கி ரோஸ் , காலநேசன் , கௌசல்யா , ஆதவன் , ஸ்ரீராம் , ஜெய்லானி , பட்டாபட்டி , மங்குனி அமைச்சர் , பாலா , சௌந்தர் , மாதவன் , ரமேஷ் ரொம்ப நல்லவன் , ஆனந்தி ,வெங்கட், பிரசன்னா , கவிதா ஆர் கோபி , டேர்றோர் பாண்டியன் , சிவா , பிரியா , சுகன்யா , சுசி , கணேஷ் , வினு..யார் பெயரான விட்டு போயிருந்தா மன்னிக்கவும். சொல்லுங்கள் சேர்த்து விடுகிறேன்..( அப்பாடா ஒரு ஜூஸ் ப்ளீஸ் )
டிஸ்கி : இதுல விளையாட விரும்பவில்லை ஸோ... இந்த பதில் மட்டும் சீரியஸ் !!
தொகு : கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...
மீ : நான் பொறந்தது அமெரிக்கவுல ( !!!! அதேப்போ நடந்துது?? ) பேசினது ஐநா சபாயில , நடந்தது Formula One race track la ( அடுக்குமா கொஞ்சமான லாஜிக் இருக்கா ?? ) , படிச்சது harvard universityla ( என்னால முடியல காதுல ரத்தமும் கண்ல தன்னியுமா வாயா பொளந்துக்கிட்டு தொகு பாக்குது பாவமா ! ) நேத்து கூட என் தோழி பிறந்தநாள் பார்டிக்காக லண்டன் போயிட்டு…..( தொகு தொல்லை தாங்க முடியாம நாற்காலிய விட்டு எழுந்துக்க பார்கிறார்…)
ஐயோ இருங்க எங்கே போறேங்க ஐ வாஸ் ஜஸ்ட் கிட்டிங்…நான் பொறந்து வளந்து நடந்து ஓடி ஆடி…விஸ்காம் படிச்சு புன்னாக்கானது எல்லாம் சென்னைல தான்..இப்போ ஷார்ஜால ஷேக்க்கு பிசினெஸ் கவுன்சிலரா இருக்கேன்..நேத்து கூட ஒபாமாவுக்கு உப்புமா செய்ய சொல்லித்தந்தேன்!! ( ஐயோ அவரைக்கூட விட்டு வைக்கலியா நியி?? )…வீட்டுக்கு nutritionistaவும் அப்போ அப்போ அக்கௌன்டன்ட்டாவும் , சில சமயம் painteraவும் , photographerஆவும் , இப்போ வலைபதிவு பதிவாலராவும் இருக்கேன்…முக்கிய வேலை என்றா freelance graphics and Web designing…இப்போதிக்கு என் பாஸ் என் பொண்ணு சுவர்ணா தான்…
58 comments:
படிக்க 2 நாள் ஆகும் போல, இருங்க 2 நாள் கழிச்சி வந்து கமெண்ட் போடுறேன்
இது உனக்கு தேவையா அருண்! நீபாட்டுக்கு சண்டே சாப்பிட்டு தூங்காம, புது பதிவை படிக்கிறென்னு உட்கார்ந்து இப்படி காதுல ரத்தம் வழிய மொக்கை வாங்கி இருக்க. எல்லாம் அந்த சந்தியா மாமிய சொல்லனும், Pan card தொலைஞ்சிடுச்சினு இருந்தவங்களை உசுப்பேத்தி இப்படி ஒரு பேட்டிய போட வெச்சிட்டாங்க.
யப்பா, ஜெய், Terror, செளந்தர், ரமெஷ் - இங்க வாங்க மொக்கைகளின் தலைவி இங்க தான் இருக்காங்க.
காயத்ரி எப்போதும் போல சூப்பர் கலக்கல் பதிவு ...வாழ்த்துக்கள்.
உங்க சப்மிட் பட்டன், பதிவுக்கு கிழே இருக்கனும், கமெண்ட்ல இருக்கு. ஏதோ தப்பா இனைசிருக்கீங்க. செக் பண்ணுங்க
iya iya iay namma perum unga listla irrukkurathai ninaichaa roamba sandhosamakeethu pa
யப்பா... எவ்வளவு பெரிய பதிவு கொஞ்சம் வெயிட் பண்ணுங்க படிச்சிட்டு வரேன்,...
'சோ' he too... GREAT..
gud1
//டிஸ்கி : இதுல விளையாட விரும்பவில்லை சோ இந்த பதில் மட்டும் சீரியஸ் !! //
siruchi ciruchi en ponnu oru maathiri paarkara g3
வழக்கம் போல கலக்கல்..
நீங்க ஏன் Indli-ல Submit
பண்றதில்ல...??
உங்க போன பதிவையும்
நான் Submit பண்ண முயற்சி
பண்ணினேன்.. But முடியல..
தடை செய்யப்பட்ட முகவரின்னு
வருது..
இந்த பதிவுக்கும் முயற்சி பண்ணினேன்..
But Same Result..
Pls Check
@அருண் பிரசாத் ஹை நெஜமாவே அவ்ளோ மொக்கையா இருக்க நன்றி..எதோ எல்லாரும் சிரிக்க எதையாந கிரிக்குறேன்...எல்லாரும் சிரிச்சா பொறும வேற என்ன வேணும்..நன்றி...அண்ட் மொக்கை ராணி..கேக்க நல்ல இருக்கு
@sandhya நன்றி மாமி...உங்களால தான் இந்த பதிவு மிக்க ஏன் ஏன் வலைபதிவே உங்களால தான்... நன்றி மாமி..
@அருண் பிரசாத் சரி செய்துவிட்டேன்...வோட் போடுங்க பாஸ் நன்றி
@vinu நன்றி..நண்பர்களுக்கு நன்றி சொல்ல இந்த பதிவை பயன்படுத்திக்கொண்டேன்...நன்றி ப்ரோ
@வெறும்பய ஹா ஹா உண்ணுமா படிக்கிறீங்க..அதன் வார்னிங் குடுத்தேன்
@Madhavan நன்றி...மாற்றிவிட்டேன்...
@LK ஹா ஹா நன்றி...சிரிச்சீங்கன்னு கேள்விப்பட்டு சந்தோஷமா இருக்கு..மிக்க நன்றி
@வெங்கட் சரி செய்து விட்டேன்..நன்றி ப்ரோ...வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி...வோடே போட்டு போங்க...:-)
//காதுல வர ரத்தம் வரத்தான் போகுது !! //
காதுல இல்லிங்க கன்னுல ரத்தம் வருது...
//ஒன் டூ த்ரீ கோ..//
வாசகர்கலே உங்களதன் சொல்ராங்க.... ஓடுங்க ஓடுங்க... இதுக்கு மேல படிக்கதிங்க...
//யார் டா அங்கே கட்ட சைக்கிள செயின் எல்லாத்தையும் ரெடி பண்ணுங்க டா…அந்த அருவாவ தட்டி வை//
ஆயுதமும் ரெடி... அடிக்க ஆளும் ரெடி.. அட்டோவும் ரெடி... அட்ரஸ் மட்டும் கிடைக்கட்டும்...கிர்ர்ர்ர்ர்ர்ர்
//தேவை இல்லாமல் சண்டை போடுவது//
எலேய் அருண் என்கூட சண்டை போடாத சொன்ன கேக்கறிய?? இப்போ பாரு பப்ளிக் கிட்ட கெட்ட பெயர்.
//தகாத வரத்தை பின்னூட்டங்கள் போடுவது//
ரமேஷ் உன்னதான்யா சொல்றாங்க...
//பிறர் மனது புண்படும் வகையில் எழுதுவது//
ஆமாங்க இந்த ஜெய் எப்போ பாத்தாலும் சீரியஸ் பதிவு போட்டு என் மனச புண் ரொம்ப படுத்தறாரு..
@TERROR-PANDIYAN(VAS)
" காதுல இல்லிங்க கன்னுல ரத்தம் வருது.."
அடக்கடவுளே வாயில மட்டும் ஏன் வரல ?? ஹா ஹா
" வாசகர்கலே உங்களதன் சொல்ராங்க.... ஓடுங்க ஓடுங்க... இதுக்கு மேல படிக்கதிங்க..."
ஆஹா பொழப்புல மண்ணள்ளி போட்டுரீங்க்களே..
" வாசகர்கலே உங்களதன் சொல்ராங்க.... ஓடுங்க ஓடுங்க... இதுக்கு மேல படிக்கதிங்க..."
ஐயோ நான் இல்லை...அட்ரஸ் தானே வேணும்
இந்தாங்க
காயத்ரி
வார்டு நம்பர் முனு , பைத்திய கார ஆஸ்பத்திரி , சென்னை
@TERROR-PANDIYAN(VAS) ஆஹா பேருக்கு ஏற்றார்ப்போல்...பின்னுட்டங்களும் terror ஆதான் இருக்கு...
ஐயோ நான் யாரையும் குர்ப்பிட்டு சொல்லல..ஏன் ஏன் ஹாஹா மிக்க நன்றி ப்ரோ..
//டேர்றோர் பாண்டியன்//
என்ன ஒரு டெரரா எழுதி இருகிங்க... அவ்வ்வ்வ்வ்வ் இதுக்கே ஒரு அட்டோ அனுப்பனும்.
//நடந்தது Formula One race track la //
இது ஸுப்பர்...
//இப்போ ஷார்ஜால ஷேக்க்கு பிசினெஸ் கவுன்சிலரா இருக்கேன்..//
ஐயா ஜய்லனி!! இப்பொ தெரியுதா என் நம்ப ஷார்ஜால பிசினஸ் செத்து கிடக்குனு...
@TERROR-PANDIYAN(VAS) ஹீ ஹீ
@TERROR-PANDIYAN(VAS) நன்றி
@TERROR-PANDIYAN(VAS) அடக்கடவுளே அது வேற ஷேக்கா இருக்கும் பாஸ்
//என் பாஸ் என் பொண்ணு சுவர்ணா தான்…//
அம்மா தாயே சுவர்ணா.... கொஞ்சம் மொக்கை குறைக்க சொல்லுமா.... முடியல.... நல்லவேளை உயிர் இருக்கு...
@TERROR-PANDIYAN(VAS) ayyo mokkaiyaava irukku..ennappannalaam koraikkalaamaa unnum increase pannalaamaa?
நல்ல நகைச்சுவைய எழுதி இருக்கிங்க அதனால் பதிவின் நீளம் தெரியவில்லை.... நன்றி!!
(கஷ்டபட்டு எழுதிய பதிவர் மனம்மகிழ இப்படி எதவது பொய் சொல்லுவேன்... கண்டுக்காதிங்க..)
@TERROR-PANDIYAN(VAS) பொய்யாவே இருந்தாலும் கேக்க சந்தோஷமா இருக்கு...நன்றி ப்ரோ..மிக்க சந்தோஷம்...
பல ஆட்டோ க்கள் அனுப்ப வேண்டிய வரும் போல இருக்கு
உங்க டான்ஸ் நல்லாருக்கு, எத்தனை வருசமா கத்துகிட்டு இருக்கீங்க?.
பதிவ படிச்சதுல ஒரே கேராவா இருக்கு... தெளிஞ்சி வந்து பதில் போடுரேன்...:)
சூப்பர். அருமையான பதிவு. எழுத்து பிழைகள் இல்லை.
ஐயோ இந்த டெர்ரர் கூட சேர்ந்து பொய் பொய்யா வருதே கடவுளே...
இதை படிச்சதுக்கு அப்புறம் KEY BOARD ல எழுத்து ஒண்ணுமே தெரியல..அப்படியே பொய் கொஞ்சம் தண்ணி குடிச்சிட்டு வந்தப்புறம் தான் இதை எழுதுறேன்....என்னதான் மொக்கை என்று எழுதினாலும் அதில் கொஞ்சம் யோசிக்கும் படியான விசயங்களும் இருக்கு....
@நசரேயன் எனக்கு ஆட்டோ வேணாம்...சுமோ அனுப்புங்க அப்போத்தான் ஒரு கெத்தா இருக்கும்..
ஆஹா... எல்லா பதிலும் சூப்பர்...
உங்களுக்குள்ள இப்படி ஒரு திறமையா....??
செம செம.. பேட்டி.. :D :D
பி. கு: என் பேர் சொல்லல... உங்க கூட டூ டூ டூ :-((
@Ananthi மன்னிச்சுடுங்க தோழி..இப்போ சேர்த்துவிட்டேன்....நன்றி
@Jey ஹா ஹா போன ஜன்ம வாசனை....சரி சரி ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க..நன்றி
@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) ஆஹா ச்சே ஒரு நிமிஷம் ஏமாந்து போனேன்...ஹி ஹி நன்றி
@ganesh ஆஹா என்ன எல்லரும் என்ன இப்படி ஆகிட்டிங்க...அடப்பாவமே...
உங்களுக்கு கற்பனை ஆற்றல் அதிகம் காயத்ரி!
தற்பொழுது தான் கவனித்தேன் .,
குறுகிய காலத்தில் 25 பதிவுகளை எழுதி இருக்குறீர்கள் .,
25 க்கும், பதிவு பணி தொடரவும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்பா ;
வாழ்த்துக்கள்!
நானும் ஒரு freelancer தான்!
Freelancer ஐய எஸ்.கே மற்றும் freelancer அம்மா காயத்ரி நீங்க பண்ண வெப்சைட் லிங்க் இல்லன உங்க ஆன்லைன் profile லிங்க் இருந்த கொடுங்களேன்... சும்மா பாக்க.
Nice one dear!!
@priya.r This is a news to me ! 25 பதிவுகளா ? எனக்கே தெரியல மிக்க நன்றி தோழி..எல்லாத்துக்கும் கூடி நின்னு உசுப்பேத்தும் பதிவுலக நண்பர்களின் ஊக்கம் தான் காரணம்...மிக்க நன்றி
@எஸ்.கே ஒஹ் வருகைக்கு நன்றி..உங்களை தெரிந்துகொண்டதில் மிக்க மகிழ்ச்சி..
@எஸ்.கே ஒஹ் வருகைக்கு நன்றி..உங்களை தெரிந்துகொண்டதில் மிக்க மகிழ்ச்சி..
@TERROR-PANDIYAN(VAS) http://www.tamilladiescircle.com/
www.iotips.com ithu en sontha website but still under development..
another one for client is also under development...
யாருப்பா அங்க பஸ்ட்டு இந்த பொண்ணுக்கு ஒரு ஜூஸ் குடுங்க ரொம்ப கலைச்சு போச்சு , ஏம்மா விரலுக்கு தகுந்த வீக்கம் வேணும் , உஅடம்புக்கு தகுந்த டிரஸ்சு வேணும் , வாயிக்கு தகுந்த லட்டு வேணும் பாத்து எழுதப்படாதா ? பாரு இப்ப நீதான் அவஸ்தை படுற ................
கலக்கல் பதில்கள் , அசத்துங்க
@மங்குனி அமைசர் என்மேல் நீங்க காட்டினே அக்கறைக்கு நன்றி...ஹா ஹா ..உண்மையா சொன்ன மனசு சரி இல்லை அதான் இந்த பதிவ எழுதினேன்..கொஞ்சம் மூட் மாற...மிக்க நன்றி
//@priya.r This is a news to me ! 25 பதிவுகளா ? எனக்கே தெரியல மிக்க நன்றி தோழி..எல்லாத்துக்கும் கூடி நின்னு உசுப்பேத்தும் பதிவுலக நண்பர்களின் ஊக்கம் தான் காரணம்...மிக்க நன்றி//
ஆஹா ! நன்றியோடு ஸ்வீட்டும் தரவேண்டுமாக்கும் !
எப்போ ட்ரீட் தரீங்க காயத்ரி !!
குவைத்ல இருக்கும் என்னோட தோழி குந்தவையுடம் கொடுத்து அனுப்பினா கூட போதும்பா !
:))))hey am the first....sorry konjam late aitu...
அங்க பஸ்ட்டு இந்த பொண்ணுக்கு ஒரு ஜூஸ் குடுங்க ரொம்ப கலைச்சு போச்சு "
allo aloo,
stop antha jusea enta padiva padikra enaku kuduka chollunga amam choliputen.
nethuthan LEAVE POTEN..
MARUPADIUMA????
THEN..
neenga cute-a dance adrell..appuram unga
mind voice then timing humar...all good.
ஹா ஹா ஹா... சூப்பர் சூப்பர் சூப்பர்... சிரிச்சு சிரிச்சு முடியல காயத்ரி... அதுலயும் அந்த Formula One race track ha ha ha எப்படி இப்படி எல்லாம்? super
Post a Comment