வணக்கம்! ஒரு முக்கிய அறிவிப்பு ''இது நாள் வரை விடுமுறை கிடைக்காது என்று காயத்ரியை கடுப்படித்துக்கொண்டிருந்த தலைவர் திரு.மணிகண்டன் அவர்கள் இப்பொழுது மனதுமாறி லீவ் கோரி டிக்கெடும் புக் செய்து விட்டக்காரனத்தினால் அவர்கள் தலைவி சுவர்ணவுடன் , இந்த மாதக்கடைசியில் சென்னை வருகிறார்கள்..இதனையொட்டி சென்னையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது ( சென்னைய காப்பாற்ற வேண்டாமா ?? ). சென்னையில் பெருந்தலைவர்களை
( பெற்றோர்களை ) சந்தித்துவிட்டு மற்ற ஊர்சுற்றுவது, நண்பர்களை சென்று சந்தித்து அவர்களை கடுப்படிப்பது, சினிமா பார்ப்பது , படித்த பள்ளி கல்லூரி போன்றவற்றிக்கு சென்று ஆசிரயபெருமக்களை சந்தித்து ஆசி பெறுவது போன்ற மேலான பணிகளை முடித்க்கொண்டு ஒருமாத முடிவில் தலைவி சுவர்ணவிர்க்கு பள்ளி திறக்கின்ற காரணத்தினால் மீண்டும் ஷார்ஜா திரும்புவார்கள் என்று எதிர்பர்க்கப்படுகிறது ''
'' பதிவுலக நண்பர்களே ! ( பலத்த க(கா)ரகோஷம்! ) சென்னையில் என்னவெல்லாம் புதுசா வந்துருக்கு ? எங்க லம் போய் பாக்கலாம் ? உங்கள் கருத்துக்களை கமெண்ட்ஸ் பொட்டில போடுங்க !" என்று காயத்ரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.'' இத்துடன் இந்த முக்கிய அறிவிப்பு நிறைவடைந்தது..( ஆளைவிட்ட போறும்ட சாமி என்று செய்திவாசிப்பாளர் ஓடுவது உங்கள் கண்களுக்கு தெரிகிறதா?)