கொஞ்ச நாளா நான் வலைப்பக்கம் வருவதில்லை,பதிவும் போடுவதில்லை.பின்னூட்டமும் இடமுடியவில்லை!.அப்படா சந்தோஷம் என்று அலுத்து கொண்ட சிலரும்,நீ இல்லேன்னா பதிவுலகத்தோட அதான் நம்ம தமிழ் பதிவுலகத்தோட எதிர்காலமே கேள்விக்குறியாகிடும் என்று புலம்ப மனது ரொம்ப கஷ்ட பட்டேன்...
எல்கே அண்ணன் குஜராத் போறாராம், தங்கமணி அக்கா இந்தியா போய்ட்டு
இப்போதான் வீடு திரும்பினார், அருண் சினிமா புதிரா போட்டு மக்களை சிந்திக்க வைக்கிறார், ஆதவனோ சேட்டனின் சேட்டைகளை பதிவை போட்டு என்டி டிவி க்கு சவால் விடுகிறாராம்,
இவர்களிடமிருந்து மக்களை மீட்டு காப்பாற்ற வேண்டும் என்று ஒரு ரசிகர் மன்றாட.........வந்துவிட்டேன்..
ஆனா நான் ஏன் வரல? என்ன பண்ணேன் இவ்ளோ நாள்?? எப்படி என் கண்மணிகளை பிரிந்து இருந்தேன்?? இந்த கேள்விகளெல்லாம் உங்க மனசுல வந்திருக்கும் எனக்கு தெரியும் சொல்றேன் சொல்றேன் ...அதுக்குதான் வந்தேன்..
கொஞ்ச நாள் முன்ன காலிங் பெல் அடிச்சது, நான் போய் திறந்தா.....
" உன்னபாத்துஎத்தன நாள் ஆச்சு? எப்டி இருக்கே ? நாங்க உங்க கூட கொஞ்ச நாள் தங்கிவிட்டு போகலாம்னு ஆசையா வந்துருக்கோம் என்றபடியே வீட்டினுள் என் அனுமதியை கூட எதிர்பார்க்காமல் உரிமையாய் என்டர் ஆனது அந்த குடும்பம்!
அம்மா அப்பா பிள்ளைகள் என்று ஆளுக்கொரு மூளைக்கு படையெடுத்தனர்.
இவங்கள யார் உள்ளவிட்டது என்று ரங்கமணி ஆத்திரமாய் சீற, என் பொண்ணோ அம்மா எனக்கு பயமா இருக்கு போக சொல்லுமா என்று அலற.. செய்வதறியாது திகைத்து நின்றேன்.
சிலர் நம்ம வீட்டிற்கு வரமாட்டான்களா தங்கமாட்டாங்களா என்று நாம எண்ணி ஏங்குவோம், சிலர் எப்போடா போவாங்கன்னு விரக்தி அடைய வைப்பாங்க..இவர்கள் இரண்டாவது ரகம்..அம்மாக்காரிக்கு வேலையே இல்லையோ.... எத்தனை பிள்ளைகள்??
அப்பனோ ஜொள்ளு நான் போற இடத்துக்கேலாம் வந்து நிக்கறது...
கிச்சென்னுக்கு வந்து நான் சமைக்கறதயே உத்து பாக்குறது,
சமைச்சு டேபிளுக்கு கொண்டு வந்து வச்சா துளி மூட மறந்தாலும் சாப்பாட்டுல கை வைகுறது, அட தூங்கும் பொழுது கூட பக்கத்துல படுத்து தூங்க பாக்குறான் அல்ப பிறவி.
பிள்ளைகள்!! ஐயோ பசங்களா அதுங்க?? கண்ட எடத்துல ஏறவேண்டியது கண்டத்த தின்ன வேண்டியது, பட்னி போட்டா கூட தண்ணி குடிச்செனும் வாழ்வேன் ஆனா உன்ன விட்டு பிரியமாட்டேன் அன்பு தொல்லை.
இப்படியே ஒரு மாசம் பொறுக்க முடியவில்லை ,
அப்பொழுதுதான் துணிந்து அந்த பாவ செயலை செய்ய துணிந்தோம்.. விஷம் கொடுத்து கொள்ள மனசு வரவில்லை, என்னதான் இருந்தாலும் விருந்தாளி.
ரங்கமணி பொறுமை இழந்தார், போன் போட்டார் இரண்டு அடியாட்களை தயார் செய்தார். சனிக்கிழமை நாங்க வரோம், குழந்தை இருந்தா நீங்க வெளில போயிடுங்க கொலை செய்வதை குழந்தை பார்த்தால் பிஞ்சு மனசு உறைந்து போகும், கொலை செய்வது எங்கள் வேலை ஆனா மத்தத நீங்கதான் பாத்துக்கணும் என்று கண்டிஷன் போட்டார்கள்..
அவர்கள் கொலை செய்வதில் பெயர்போனவர்களாம் ! ஒரே அடி டிக்கெட் நிச்சயம் என்று அனைவரும் பேசிக்கொண்டனர், இது ரொம்ப ஆபத்தான முடிவு என்று சிலர் எச்சரித்தனர்.அப்பொழுதுதான் துணிந்து அந்த பாவ செயலை செய்ய துணிந்தோம்.. விஷம் கொடுத்து கொள்ள மனசு வரவில்லை, என்னதான் இருந்தாலும் விருந்தாளி.
ரங்கமணி பொறுமை இழந்தார், போன் போட்டார் இரண்டு அடியாட்களை தயார் செய்தார். சனிக்கிழமை நாங்க வரோம், குழந்தை இருந்தா நீங்க வெளில போயிடுங்க கொலை செய்வதை குழந்தை பார்த்தால் பிஞ்சு மனசு உறைந்து போகும், கொலை செய்வது எங்கள் வேலை ஆனா மத்தத நீங்கதான் பாத்துக்கணும் என்று கண்டிஷன் போட்டார்கள்..
சனியன் சனிக்கிழமை வரான் என்று விருந்தினர்களிடம் நாங்கள் சொல்லவில்லை. மரணத்தை ஏற்று கொள்ளும் மனப்பக்கும் அவர்களுக்கு ஏன் யாருக்குத்தான் இருக்கிறது??
ஒரு வழியாக வந்தது சனிக்கிழமை, சத்தம் போடாமல் ஒவ்வருவராக தயாரானோம், வெளியில் செல்வதை காட்டிக் கொள்ளவில்லை !
மணி நாலு முப்பது அடித்தது
அதே காலிங் பெல் , கதவை திறந்தால்....இருவர் பார்க்க கொலைகாரகலைபோல் தெரியவில்ல மிகச்சாதாரணமாக இருந்தார்கள். நீங்க வெளியே போயிடுங்க நாங்க வேலைய முடிச்சுட்டு கீழே வந்து சொல்றோம்.திரும்ப வந்து நீங்கதான் பிணங்களை அப்புற படுத்த வேண்டும் வாடை வீசலாம் பார்த்து கொள்ளுங்கள் என்று எச்சரித்துவிட்டு கொலைவெறியுடன் வீடு புகுந்தனர், நாங்கள் என்ன ஆகுமோ ஏதாகுமோ என்று உறைந்து கொண்டு கீழே சென்று நின்றோம் .
என்ன அதிசயம் ஒரு சத்தம் இல்லை அலறல இல்லை பத்து நிமிடங்கள் கழிந்தன , வெற்றிப்புன்னகையுடன் அவர்கள் வந்தார்கள்." முடிச்சுட்டோம்! கொஞ்ச நேரம் கழிச்சு போய் கிளீன் பண்ணிடுங்க, " என்று கூறி விடைபெற்றனர்.
மூன்றுமணிநேரம் செய்வதறியாது ஷாப்பிங் மாலுக்கு சென்று வீடு திரும்பினோம், ரங்கமணிக்கு அப்படி ஒரு துணிச்சல் , " நான் போய் பிணங்களை அப்புறப்படுத்துறேன் குழந்தை பார்க்க வேண்டாம் நீ கொஞ்ச நேரம் பொறுத்து மெல்ல வா " என்று உத்தரவு போட்டுவிட்டு வீட்டிற்குள் சென்றார்..
சிலநிமிடங்கள் கழித்து....
காயத்ரி....................... .. என்று ஒரு அலறல், உயிர் நின்றே போனது எனக்கு
பதறி அடித்து கொண்டு போனேன்!!!
கடவுளே என்ன காரியம் செய்துவிட்டோம் என்று பயம் வேறு தொற்றிக்கொண்டது ..மெதுவாய் கதவை திறந்தேன்.காயத்ரி.......................
பதறி அடித்து கொண்டு போனேன்!!!
முகம் முழுதும் வியர்வையும் பயமும் தாண்டவமாட கண்கள் சிவந்து
கண்ணீர மல்க ரங்கமணி,
" காயத்ரி நாம பட்ட கஷ்டமெல்லாம் இப்படி ஆகிடுச்சே! அவங்க சாகல போகவும் இல்லை!! என்ன செய்ய போறோம்?? நாம இவங்க கூடத்தான் வாழனுமா ?? அவனுக்க கொன்னுட்டதா போய் சொல்லிட்டாங்க?? பாரு என்று காட்ட "இதுவரை அப்படி அதிர்ந்ததில்லை. ஒருவருக்கும் ஒன்றும் ஆகவில்லை அடிகூட படல!! அவனுங்கள பேசி கவுத்துடான்களோ?? என்ன கொடுமை?? எப்படி இப்படி???
எப்படி இவங்க இப்படி தப்பிச்சாங்க?? விடை கிடைத்தது அது கடைசியில் !
இப்பொழுது வேறு வழி இன்றி அவர்களுடன் ஒன்று பட்டு வாழ மனதை தயார் செய்துகொண்டு வருகிறோம் :(எப்படி தப்பித்தார்கள்?????
மேல ஏறித்தான்!! பாவி பசங்க கீழே அடிச்சா இவங்க மேல ஏறி டேக்கா குடுத்திருக்காங்க!!!
அவங்கள பாக்கனும்னு ஆசையா இருக்க?
இவங்க தான் அவங்க எங்க வீடு விடா கண்டன் கொடா கண்டன் போகாமல் சாகடிக்கும் விருந்தாளிகள்மேல ஏறித்தான்!! பாவி பசங்க கீழே அடிச்சா இவங்க மேல ஏறி டேக்கா குடுத்திருக்காங்க!!!
அவங்கள பாக்கனும்னு ஆசையா இருக்க?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.