கொல்லபக்கதுல இருக்கற கொட்டங்குச்சிய கொண்டுவந்து..அம்மா பாட்டில்ல கொட்டி வச்சுருக்கற பால அதுல விட்டு, புடிச்சுட்டு வந்த நாய்க்குட்டிய வாசக்கதவுல கட்டி இந்த பால அதுக்கு குடுத்து அது குடிகரத பக்கர்துல அப்படி ஏதோ சாதிச்சுட்ட மாறி ஆனந்தம்.குடிச்சதும் அந்த நாய்க்குட்டிய கயற்றி விட்டுடுவேன் இதையே ஒருவேலையா தினமும் செய்துவந்தேன் ! ( எவ்வளோ நல்ல எண்ணம்) அந்த நாய்க்குட்டியும் என்ன நடக்குதுன்னு தெரியாமலேயே பாலகுடிச்சுட்டு விட்ட போரும்னு ஓடியே போய்டும்.
அம்மா எத்தனையோ தரம் கண்டிச்சு இருகாங்க இதுலாம் செய்யாதே நீ செய்யறது உனுக்கும் நல்லது இல்ல , அந்த நாய்க்கும் சரி இல்லன்னு.. நான் எதையும் கேட்டதே இல்ல ..( ஆமா நாமலாம் என்னிக்கி சொன்னத கேட்டு இருக்கோம் ?? )
இப்படியே என் லூட்டி தொடர்ந்தது,ஒரு நாள் மதியம் வழக்கம் போல அந்த நாய்க்குட்டி பால குடிச்சது நானும் கயத்த கயற்றிவிடேன்.அப்போ தான் அந்த கொடுமையான சம்பவம் நடந்தது..எங்க வீடு மெயின் ரோடுல இருந்தது..வீட்டைவிட்டு ஓடின நாய்க்குட்டி சாலையை கடந்தப்போ ரோடுல வந்த பல்லவன் பஸ் அதுமேல ஏறிடுச்சு ..அப்போ அந்த நாய் குட்டி அலறியது என்னக்கு இன்னி வரை கேட்குது..அந்த தெருவே ஒரு நிமிடம் உறைந்தது போனது அதிர்ச்சியில்! என் அம்மா கோவத்துல என்ன அடிச்சுட்டு அழுதுண்டே போனாங்க..என்னால நடந்தத நம்பமுடியல.நானும் அழுகொண்டேதான் இருந்தேன் .ஆனா அழுது என்ன ஆகபோகுது போன உயிர் போனதுதான் ! அதுவும் என்னால போச்சு..
அம்மா சொன்னத கேட்டு இருந்தா..நான் அந்த நாய புடிக்காம இருந்து இருந்தா அது அன்னிக்கி அப்படி ஒரு பரிதாபமான கொடுமையான முடிவ சந்திச்சுருக்காது.
இப்பொழுதும் எந்த நாய்க்குட்டிய பார்த்தாலும் அந்த நாய்க்குட்டி ஞாபகம் தான் வருது..எனக்குள் அந்த குற்றஉணர்வு அழியவே இல்லை..
இந்த பதிவு அந்த குட்டிநாய்க்கு சமர்ப்பணம்..நீ என்னை மன்னிப்பாயா ?
22 comments:
//இந்த பதிவு அந்த குட்டிநாய்க்கு சமர்ப்பணம்..நீ என்னை மன்னிப்பாயா ? /
அறியா வயதில் செய்தது. கண்டிப்பாக அந்த நாய் மன்னிக்கும் ..
தமிளிஷ்ள சப்மிட் பண்ணுங்க
நன்றி LK அதயேதான் நானும் எதிர்பார்கரேன்.
ஸப்மிட் செய்துவிட்டேன்.
நாய் நன்றி உள்ளது அது மன்னிக்கும்
நன்றி சௌந்தர் சார்
ஜாலியா எதுனா கலாய்ப்பேன்னு வந்தா
சென்டி ஆக்குறயேமா, நீ....
என்னா சொல்றது...?
http://vaarththai.wordpress.com
ஹாய் காயத்ரி!
இதொ வந்துவிட்டேன் தோழி!
காயத்ரி உயிர் போரதும் வர்ரதும் நம்ம கைல இல்லப்பா அது இறைவனோட நாட்டம் ஸோ டோண்ட் ஃபீல் கில்டி...!
not easy to digest..
உங்கள் வருகைக்கும் கருதிர்க்கும் நன்றி தோழி..
மறுபடியும் வாங்க.
madhavan; yes sir i still feel guilty
ம்ம் :(
உங்களிடம் இருந்து நிறைய எதிர்பார்கிறேன்.. பதிவுகளை சுவாரஸ்யமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்.. நிறைய பதிவர்களின் பதிவுகளை ஆழ்ந்து படித்தால் உங்களுக்கு எளிதாய் வந்துவிடும்.. வாழ்த்துக்கள்.
நாய் மன்னித்துவிட்டதாக என்னிடம் சொன்னது.
கலாய்கலாம்னு வந்தேன், Feel பண்ண வெச்சிட்டீங்களே சகோதரி. தப்பு உங்க மேல இல்லை, பல்லவன் மேல.
ஒரு டவுட்,
நீங்க நல்லவனா? கெட்டவனா?
நாயோட ஆவி உங்களை ஒண்ணும் செய்யலியே?
சாரென்று அழைப்பதை தவிர்த்து விடவும் ப்ளீஸ்..நானும் உங்கள மாதிரி புதுசுதான்னு நினைச்சுக்கங்க...
@ ஆதவன் - நன்றி
@ கே.ஆர்.பி.செந்தில் ; அப்போ இப்போ நல்ல எழுத தெரியலன்னு சொல்ரேளா ha ha ha ..
நன்றி என்னால் முடிந்தவரை முயர்ச்சி செய்கிரேன்.
@ சந்ரு - நல்ல செய்தி சொன்னீங்க மிக்க நன்றி.
@ அருண் பிரசாத் : மன்னிக்கவும் இனி நல்ல நகைச்சுவையான ?!# பதிவுகளையே எழுதுகிரேன்.
தெரியலயே பா ( தென்பாண்டிச் சீமையிலே மியுசிக் ஒலிக்கிறது !! )
@ ப்ரியமுடன் வசந்த் : ஏன் இந்த வேன்டாத வேலை..பேய் ஆவி பிசாசுன்னு?
நான் இன்னிக்கு தூங்கின மாதிரிதான்.
சரி இனி சார் மோர் லாம் இல்லை.சகோதரரே!
//அப்போ எனக்கு ஒரு முன்று வயசு இருக்கும்.. //
ஆஹா...அப்போ நடந்தது கூட ஞாபகம் இருக்கா உங்களுக்கு ....சூப்பர் மா...
//ஆமா நாமலாம் என்னிக்கி சொன்னத கேட்டு இருக்கோம்//
ஹி ஹி ஹி...அதானே...
நாய் நன்றி உள்ளது அது மன்னிக்கும்
@அப்பாவி தங்கமணி
சில மனதை பாதித்த விஷயங்கள் மட்டும் நினைவில் இருக்கிறது..
நன்றி
ஐயோ !!! நாயா இத நான் படிக்கவே இல்லை..
Post a Comment