எனக்கு சொலுங்கள்..பாவம் எத்தனை பேர்தான் தவறை திருத்தி கொள்ளுங்கள் ன்னு எழுதிட்டு போவாங்க ? எப்போதான் நானும் தமிழை பிழை இல்லாமல் எழுத
போறேனோ! தமிழ் தட்டச்சு லம் உதவாது எனக்கு தமிழே தகராறு ஆகையால் நான் எழுதும் தமிழை சரி பார்க்கும் மென்பொருள் தேவை.
HELP ME OUT OF THIS EMBARRASSING PROBLEM !!!!!
47 comments:
:))))
Good post ஹி ஹி ஹி
இப்படியும் கூட பதிவா...!! கலக்குங்க தோழி... !!
தவறுகள் திருத்த படலாம்.... பழைய ஒரு வருசத்து தமிழ் பேப்பரையும் மொத்தமா வாங்கி படிச்சி பாருங்க.... ஆனா உங்க அந்த மழலை தமிழுக்கு நான் ரசிகை தெரியுமா...?!!
@LK
தலைவரே சிரிச்சுட்டு பொய்டீங்களே ..help
@Kousalya
நான் எழுதும் தமிழுக்கும் ரசிகையா? சந்தோஷமா இருக்கு..ம்ம் செய்டு பார்கரேன்.நன்றி..
@அருண் பிரசாத் : நீங்களுமா ம்ம் நாட்லே எல்லரும் என் பதிவை படிச்சுட்டு சிரிச்சா சந்தோஷமாத்தான் இருக்கு..ஆனாலும் இது உன்மை நிஜமாவே எனக்கு உதவி தேவை.
இதுவே கொழந்த பேசற மாதிரி நல்லாத்தான் இருக்கு..
இதுக்காக ரொம்ப வருத்தப்பட வேண்டாம். நாளடைவில் சரியா போய்டும் .
//சந்தோஷமா இருக்கு..ம்ம் செய்டு பார்கரேன்.நன்றி..//
'செய்டு' ha ha ha..
try to use 'thu' for soft letters.. & use double 'a' for 'visargam ie etg Aanandham etc. practice will make u perfect.
கக்கு - மாணிக்கம் - உங்கள் ஊக்கத்திர்க்கும் கருத்திர்க்கும் நன்றி..
Madhavan - இதுக்குத்தான் இப்போ எல்லர்கிட்டேயும் உதவி கேக்கரேன்.நன்றி
செந்தமிழும் நாப்பழக்கம், சித்திரமும் கைப்பழக்கம்.
எழுதுங்கள் சரி ஆகி விடும்
நேத்தே சொல்லனும்னு நினைச்சேன். சொன்னா தப்பா எடுத்துப்பீங்களோன்னு சொல்லல.. பேச்சு வழக்கு தமிழ்ல பதிவுன்னா ஓக்கே. எல்லாரும் பதிவுலகல செய்யிறது தான். பேச்சு வழக்கு தமிழ்லயே எழுத்துப்பிழைன்னா கொஞ்சம் கஷ்டம். (இதுல ஒற்றுப்பிழை மட்டும் மன்னிக்கப்படும். நான் உள்பட பலரும் செய்யிறது தான் ஹி ஹி)
ஒரே ஒரு வழி தான் இருக்கு. இனி எழுதும் போது அச்சுத் தமிழ்ல எழுதுங்க. பிழைகள் கொஞ்சம் குறையும். உதாரணமா உங்க பதிவுல வர்ர வரிகளையே எடுத்துப்போம்
பண்ணி பாக்கறேன் - செய்து பார்க்கிறேன்.
இனி பிழையில்லாமல் எழுத வாழ்த்துகள் மேடம் :)
@LK
ம்ம் முயற்சிகள் தொடரும்..நன்றி
@☀நான் ஆதவன்☀
தப்பாலாம் எடுத்துக்க மாட்டேன் !
நீங்க சொல்ற மாதிரி செய்து பார்க்கிறேன்..நன்றி
சொல்ல மறந்துட்டேன். தொடர்ந்து எழுதினா தான் தவறுகள் குறையும். அதுனால எழுதுறத நிறுத்தாதீங்க. நிறைய தமிழ் பதிவுகளை படிங்க. தவறுகள் தானாக குறையும்.
//நீங்க சொல்ற மாதிரி செய்து பார்க்கிறேன்..நன்றி//
அடடே ஆரம்பிச்சாச்சு போலயே! :)
சகோதரி, நீங்கள் நெருப்பு நரி (அதாங்க Firefox) உபயோகித்தால் கீழே கொடுத்துள்ள Add on ஐ Install செய்யுங்கள்.
https://addons.mozilla.org/en-US/firefox/addon/8902/
இது ஒரு தமிழ் Spell Checking software.
Wait, Wait, Wait - Try பண்ணிட்டு பாராட்டுங்கள்.
Maximum உங்களுக்கு Help செய்யும்னு நம்புறேன்
@☀நான் ஆதவன்☀
ஏதோ என்னால் முடிந்தது ..நன்றி
@அருண் பிரசாத்
மிக்க நன்றி..நீங்கள் மேற்சொன்ன வற்ற செய்துவிட்டேன் ..ஆனால் அது சுத்தமான தமிழாக இருக்கே.. நன்றி..
பிரயோகித்து பார்கிறேன்
இந்த பதிவுல தப்பே காணோமே... சூப்பர்... நல்ல முன்னேற்றம்... "சித்திரமும் கை பழக்கம் செந்தமிழும் நா பழக்கம்" காயத்ரி... எழுத எழுத தானே சரி ஆய்டும்...
@Gayathri
தூய தமிழ்ல எழுதுங்க, பிறகு வழக்கு தமிழ் தானா வரும்.
சரி, நம்ம பிளாக் பக்கம் வந்து போறது
// HELP ME OUT OF THIS EMBARRASSING PROBLEM !!!!! //
There is nothing to be embarrassed... கூப்பிட்ட குரலுக்கு இத்தனை நண்பர்கள் ஆலோசனை சொல்லும் போது எதுக்கு embarrassmet?
என் ஆலோசனை ஒன்று தான். பதிவிடுவதற்கு முன், ஒரு 4 தடவை வார்த்தை விடாமல் வாசித்துவிட்டு, பிறகு பதிவேற்றுங்கள்... நிறைய படியுங்கள்..
தங்கமணி அக்கா சொன்னது போல் "சித்திரமும் கை பழக்கம் செந்தமிழும் நா பழக்கம்"
காயத்ரி நானே கஷ்டபெட்டு எப்பிடியோ எழுதறே ...சரி நீ வீட்டுக்கு வா என்னால் முடிஞ்சது போல் சொல்லி தரேன் ...
தொடர்ந்து எழுதுங்க.. காயத்ரி.. தன்னால சரி ஆயிரும்..!!
உங்க நட்புக்கு நன்றி.. தோழி :-))
Good post ஹி ஹி ஹி
@அருண் பிரசாத்
வந்தேன்..அருமையான பதிவு கம்மேன்ட்சும் போட்டேன்
@Bala
நான் படிச்சுத்தான் பர்கறேன்..கொடுமை அணி என்னனா..தப்பை சரி பார்க்கிற அளவுக்கு எனக்கு தமிழ் தெரியாதே! ஹா ஹா ...இத்தனை நண்பர்கள் இருகிறார்கள் என்று எண்ணி நானே என்னை கிள்ளி பார்த்துகொண்டு இருக்கிறேன்..
@sandhya நன்றி மாமி வந்த அப்பறம் தமிழ் டியூஷன் ஸ்டார்ட் பண்ணிடலாம்..
@Ananthiநன்றி தோழி
@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
thanks
அம்மிணி, ரொம்ப வருத்தப்படாதீங்க. நான் முதல் முதல்ல தமிழ் டைப் அடிக்கிறேனு கீ போர்ட தடவ ஆரம்பிச்சத எங்க பிளாட்ல இருக்கிற நண்டுலேர்ந்து நாட்டாம பெருசுக வரையிலும் , கியூல நின்னு வேடிக்கை பார்த்துட்டு நக்கல் பண்ணாங்க, அதுகேல்லாம் .. அசந்துருந்தா ... இன்னிக்கு நான் உலகத்தரமான பதிவுகள எழுத முடிஞ்சிருக்குமா?!!!. எதையும் ஆரம்பிக்கும்போது சின்ன சின்ன அடிகள் விழத்தான் செய்யும், அத நாம வீரத்தழும்புனு சொல்லி பின்னாடி ஊர நம்ப வச்சிரலாம்.
வேனும்னா ஒரு ஐடியா, 2 பிரபல பதிவர்கள!!! நான் எழுதினத ஸ்பெல் செக் பண்ணி தரதுக்கு அப்பாய்ண்ட் பன்னிருக்கேன். பதிவு போடுறதுக்கு முன்னாடி அவங்களுக்கு அனுப்புவேன், அவங்க பொறுப்பா அஞ்சே நிமிசத்துல செக் பண்ணி அனுப்புவாங்க, அது மாதிரி நீங்களும் அப்பாய்ண்ட் பண்ணிக்குங்க. என் பிளாக்ல வந்து கமெண்ட்டும், ஒட்டும் போடுரதனாலதான் உங்களுக்கு இந்த சீக்ரெட் ஐடியாவ சொல்லிருக்கேன், யாருகிட்டேயும் சொல்லிராதீக, அடிச்சி கேப்பாக அப்பவும் சொல்லிரதீக...
@ Jey - யார் அந்த நல்லவங்க ? நான் எங்கே போவேன் proof readers ku? நன்றி..உங்க அரிவுரைகளுக்கும் நன்றி..எனக்காக உங்க சீக்ரெட்டலாம் வேற சொல்டீங்களே உங்களுக்கு ப்ரச்சனை ஆகாதா?
உங்க தமிழ் ஆசைக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
அன்பின் காயத்ரி
கலங்க வேண்டாம் - பழகுக - பழகப் பழகத் தமிழ் தானாகவே வரும். விரைவினில் நல்ல தமிழில் எழுத நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
எல்லா ப்ளாக்கும் படியுங்கள்.... தமிழில் spell check சரியாய் வருமா தெரியாது.. ஏனெனில் கல், கால், கள் இவை எல்லாமே தமிழில் சரியான சொற்களே...நீங்கள் எந்த சொல்லை எழுத வருகிறீர்கள் என்பது உங்களுக்குதானே தெரியும்? அதை நீங்கள்தானே தெரிவு செய்ய முடியும்?
கோவை செந்தமிழ் மாநாட்டில் இலவசமாக கொடுத்த வட்டு வாங்கவில்லையா??
:-)))
ஹாய் காயத்ரி..!
கலக்றீங்கப்பா!
ஓ என் பதி உலகமே நீ இவ்வளவு நல்ல உள்ளங்களை கொண்டுள்ளாயா!
காயு சார்பில் அனைவருக்கும் என் அன்பை தெரிவித்து கொள்கிறேன்...
ஆஹா.. கொஞ்சம் நாம லேட்டா
வந்துட்டோம் போல..
நம்ம ஆளுங்க ஐடியா பின்றாங்களே..
நானும் எதாவது சொல்லலைன்னா
என்னை இந்த ஆட்டத்துல சேர்த்துக்க
மாட்டீங்களா..?
உங்க தமிழ்ல நல்ல முன்னேற்றம்
தெரியுதே..
ஹி., ஹி., முதல் Comment-ல
நானும் ஒரு Spelling Mistake பண்ணிட்டேன்..
அதான் Del பண்ணிட்டேன்..
@ காயத்ரி..,
" யானைக்கு மட்டுமல்ல..,
டைனொசருக்கும் அடி சறுக்கும்.."
இதை இந்த உலகத்துக்கு உணர்த்தவே
யாம் அந்த திருவிளையாடலை
நிகழ்த்தினோம்..
* திருவிளையாடல் = முதல் Comment-ல Spelling Mistake
@ சி. கருணாகரசு - நன்றி.
@ cheena (சீனா) - நன்றி , முயர்ச்சி செய்துக்கொன்டு இருக்கிரேன்.
@ ஸ்ரீராம் - நீங்கள் சொல்வது சரிதான்.செய்து பார்கிரேன்.
@ வடுவூர் குமார் - புரியவில்லயே..வட்டு என்றால் என்ன ?
@ pinkyrose - நன்றி தோழி..ஆம் பதிவுலகில் இத்தனை நன்பர்கள் கிடைபார்கள் என்று நானும் எதிர்பார்கவே இல்லை.மற்ற பதிவர்களை ஊக்கப் படுத்துவதிள் நம் பதிவுலக நன்பர்களைப் போல் எவரும் இல்ல.அவ்வப்பொழுது என்னை நானே கிள்ளிப் பார்த்துக்கொள்கிரேன்.
@ வெங்கட் - லேட்டா வந்தாலும் எம்பெருமான் சிவனின் தூதுவன் போல் வந்துள்ளீர்கள்.உங்கள் திருவிளையாடல் எனக்கு ஊக்கத்தாய் தந்தது.நன்றி.
உங்க " யானைக்கு மட்டுமல்ல..,
டைனொசருக்கும் அடி சறுக்கும்.." அப்போ நான் யானை நீங்க டைனொசாரா..ஆகா வலய்பதுவுல யானையும் டைனொசாரும் பதிவு எழுதுவது நம் தமிழுக்கு பெருமை..அவ்வ்..(இதை தமிழிடம் யாரும் சொல்லவேண்டாம்.)
நன்றி சகோதிரரே!
http://www.google.com/transliterate/indic
இதை பயன் படுத்துங்கள்,
இரண்டு சுழி, மூன்று சுழி , லகரம், ழகரம் , ளகரம் ஆலோசனைகள் அளிக்கிறது, பெரிதும் உதவியாக இருக்கிறது எனக்கு
யாம் பெற்ற இன்பம் பெருக இந்த வையகம்
@ ராம்ஜி_யாஹூ: நன்றி முயர்ச்சி செய்து பார்த்துவிட்டு சொல்கிரேன். மிக்க நன்றி
ஹீம்ம்ம்ம்... இப்ப நல்லா இருக்கு.
/////பதிவுலக நண்பர்களே உங்கள் யாருக்காவது ஏதேனும் தமிழ் spell check software பற்றி தெரிந்தால்
எனக்கு சொலுங்கள்////////
நீங்கள் கேட்டு இருக்கும் இந்த கேள்விக்கான சரியான பதில் நீங்கள்தான் நண்பரே . உங்களின் விடா முயற்சி மற்றும் தொடர்ச்சியான எழுத்து முறை ,அதிக வாசிப்பு போதும் நீங்கள் பிழை இல்லாமல் எழுத .!
ஒரே மாதத்திற்குள் ஒரு சிறந்த பதிவராக நீங்கள் வரலாம் முயற்சித்துப் பாருங்கள் . வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள் .
எனக்கே எழுத்து பிழை வரும் நீங்கள் சொல்லுங்கள்
நீங்கள் Google transliteration தானே உபயோக படுத்துகிறீர்கள் ;நாளடைவில் நீங்களே சிறப்பாக எழுத முடியும் .
அது வரை நீங்கள் உங்கள் தோழிகளை கூட பிழை திருத்ததிற்கு பயன் படுத்தி கொள்ளலாமே !
Post a Comment