நமக்கிந்த சீரியஸ் போஸ்ட் சரிவராதுன்னு ரசிக பெருமக்கள் ...எனது சில நண்பர்களும் , எசக்கு பிசக்கான முகபாவத்தோடு நேத்து நொந்து நூட்லஸ் ஆய்போனமதிரி போலம்பிய் தள்ளி விட்டார்கள்..என்னமோ என் மனதில் பட்டதைதான் நான் எழுதுகிறேன்.இனியும் எழுதுவேன்..
ஆதவன் சார் சொன்னமாதிரி “தலைப்பை மாற்ற முடியாயதுனா சீரியஸ் பதிவ தவிர்கலாம்”..பேசாம இதே மாதிரி சீரியஸ் பக்கம் ஒன்ன துவங்கிடலம்னு ஒரு பக்கம் தோனிய பொழுது...
அவன் அவன் ஏற்கனவே தினமும் வேலை சுமை , தான் செய்த வேலைக்கு பாராட்டை வெட்கமில்லாமல் பெறும் அற்புதமான மேலதிகாரி , பதவி உயர்விற்காக இங்கே என்னதான் தலைகிழாக வேலை செய்தாலும்.......சோப்பு , ஜால்ரா போன்ற சிறப்பு தகுதிகள் இல்லாத ஒரே காரணத்தினால் , வாய்ப்பை தன்னுடன் வேலைபார்க்கும் திருவாளர் ஜால்ரா அவர்களுக்கு விட்டு கொடுத்துவிட்டு பொலம்பிய் கொண்டும் ,மதிய உணவிற்காக மனைவி கொடுத்த தயிர் சாதத்தில் தயிரெல்லாம் வழிந்தோடி வெறும் ஊறுகாய் சாதம் மட்டும் இருப்பதை கண்டு செய்வதறியாது முழித்துக்கொண்டும், வரும் தூக்கத்தை கட்டுபடுத்த முடியாமல்( இதை போன்ற பதிவை படித்து துங்காம என்னத்த பண்றது ?? ) அரைதூக்கத்தில், மீடிங்கில் ஆணி புடுங்கி விட்டும் , வீடு திரும்பும் பொழுது கண்டபடி வண்டி ஒட்டி தன்னை கடுப்படிக்கும் நல்லவர்களையும் பொறுத்துக்கொண்டு ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தால்.......போரும் முடியல.... இதனை கொடுமைகளையும் அன்றாடம் சந்திக்கும் சகோதிரர்களே...( அப்பா...இப்போவே கண்ண கட்டுதே..)
காலைல எழுந்து கண் கண்ட தெய்வத்தையும் (கணவன்மார்கள சொன்னேன் பா இதுகூடவா சொல்லிதரனும் ? ) , நண்டு சுண்டு களையும் எழுப்பிவிட்டு.. ஆபீசுக்கு டைம் ஆகுது , பள்ளிக்கூடத்துக்கு லேட் ஆய்டும் என்று கூவி கூவி தொண்டை வரள அவர்களை கிளப்பி, ப்ரேக் பாஸ்ட் செய்து , லஞ்ச் செய்து ( இதற்கென்று ஒரு தனி வலைபதிவே போடலாம்… அப்பாக்கு இட்லி வேணும்னா பொண்ணுக்கு வேற ஏதான தானே வேணும்…குடும்பத்தில் அனைவரும் ஒரே மாதிரி சாப்பிட்டால்தான் நிம்மதியாச்சே.)… ஒருவழியாக கணவரை கிளப்பி…. ( ஆபீஸ்க்கு பாஸ்…காலிலேயே சண்டைக்கு கிளப்பும் நல்லெண்ணம் எனக்கில்லை) ஸ்கூல் பஸ்ஸை ஓடிப்பிடித்து குழந்தைகளை ஏற்றிவிட்டு வீடு வந்து அடுத்தடுத்த வீட்டு வேலைகளை செய்து முடிபதற்குள் ( வேலைக்கென்று ஆள் இல்லாமல் இருக்கும் பொழுது வேற யார் செய்வா? ), பள்ளியில் இருந்து வரும் குட்டிஸ அழைத்துவந்து அவர்கள் படிக்கிறார்களோ இல்லையோ! அவர்களுக்காகப் படித்து ( நம்ம அம்மாவ நாம படுத்தியதால் வந்த பாவம் தான் இதுலாம்.. ஒரு வரி எழுத முதுகில் வரிகளை வாங்காமல்த்தான் நாம் வீட்டுப்பாடம் செய்ததே இல்லையே!)… ராத்திரி உணவு சமைத்து ( சரி சரி மதிய உணவை சூடு செய்து ஒப்பேற்றும் கண்மணிகளை நான் சொல்ல வில்லை…யாரான என்ன கை காட்டினால் அவ்ளோதான்…ஆமாம் ! ஹி ஹி ஹி ) ஆபீஸ் லேந்து வரும் தலைவரின் எரிச்சலை தாங்கிக்கொண்டு ( வேற வழி??? நாமும் சேர்ந்து கத்தினால் தான் பிள்ளைகள் நம்ம எதோ “ ஹை! டாம் அண்ட் ஜெர்ரி விட அப்பா அம்மா பைட்டு சூப்பர் “ என்பது போல் மெய்மறந்து பார்ப்பார்களே! …வீட்டுக்கு வீடு இதெல்லாம் சகஜம் தானே !) இப்படி போய்கொண்டிருக்கும் சகோதரிகளும்…( ஹைய்யா ஒரு வழியா போஸ்ட்ட ஒரு பக்கத்துக்கு நீட்டிட்டோம்ல !! அவ்வ்வ் )
இங்கு வந்து இந்த மொக்கையை எனக்காக படிக்கும் பொழுது நானும் எதற்கு சீரியஸா பேசி கழுத்தருக்கணும் ??????????? இந்த பதிவே ஒரு கழுத்தறுப்பு என்று யார் சொன்னது??? உங்க வீட்டுக்கு பக்கத்துல சுமொவருதன்னு பாத்துட்டு பேசவும் !! (ஹை நான் கூட நம்ம ஹீரோக்கள் மாதிரி வெட்டி சவுண்டு உட ஆரம்பித்துவிட்டேன் )
ஸோ மொக்கை பதிவே போதும்…ஆணியே புடுங்கவேன்டம் …பிழிந்து பிழிந்து அழவைக்க டிவிக்கள் சீரியல்கள் என்ற பெயரில் நற்சேவை செய்துவருகிறார்களே…நானும் அவிங்க கூட சேந்து கும்மி அடிக்க விரும்பவில்லை…
மூச்சு வாங்குது நாளைக்கு பாப்போம்…………………………….. ஒருவழியா ஒரு பக்கம் பூராவும் உளறிமுடிதாகிவிட்டது..நன்றி நன்றி நன்றி ( ஒரு ஆப்பிள் ஜூஸ் ப்ளீஸ் )
டிஸ்கி : இதை படித்து என்மேல் கொலைவெறி கொள்ளாமல் உங்கள் கருத்துகளையும் அர்ச்சனைகளையும் கமென்ட் போட்டில கொட்டி தீர்த்துவிட்டு போங்க..புன்யமா போகும்…….
35 comments:
you have improved your language gr8. keep going!
நான் நேற்றே சொல்ல வேண்டும் என நினைத்தேன். மறந்து விட்டேன் . தலைப்புக்கும் எழுதும் விஷயத்துக்கும் சம்பந்தம் தேவை இல்லை.. நம் மனதில் எண்ணப் படுகிறதோ அதை எழுதுங்கள். உங்கள் திருப்திக்காக அடுத்தவரை புண்படுத்தாமல் எதுவும் எழுதலாம். எப்படி இப்படி எல்லாருக்கும் ஒரு ஐஸ் வச்சிருக்கீங்க (கணவன் + மனைவி )
@ சுகன்யா அக்கா நன்றிக்கா...அப்போ அப்போ வந்து என் பதிவ படிச்சுட்டு எதாச்சும் நல்லதா நாலு வார்த்தை போட்டுட்டு போக்கா..தேங்சுகா
nice your narration is good.
@ எல்கே: எல்லரையும் காகா பிடிச்சாதானே நம்ம வலய்பதிவு பக்கம் நாலு பேராவது வருவாங்க..சும்ம இரு மொக்க போச்ட் பொடலாம்னு தோனித்து அதான்.
நன்றி...
பதிவ (தமிழ) படிச்சிட்டு சிரிச்சிட்டே இருக்கேன் :)
@ பிரசன்னா : அதுக்குத்தானே எழுதுகிரேன்.சிரித்துக்கொன்டு இருக்கிரீர்கள் என்பதே எனக்கு மகிழ்ச்சி..நன்றி..
கமெண்டு எழுத கொம்சம் டயம் கொடுங்க தாயீ.. ஒரு போச்டப் படிக்கறதுக்குள்ள அடுத்தப் போஸ்டா..
//குடும்பத்தில் அனைவரும் ஒரே மாதிரி சாப்பிட்டால்தான் நிம்மதியாச்சே.//
//சரி சரி மதிய உணவை சூடு செய்து ஒப்பேற்றும் கண்மணிகளை நான் சொல்ல வில்லை…யாரான என்ன கை காட்டினால் அவ்ளோதான்…ஆமாம் ! //
//உங்க வீட்டுக்கு பக்கத்துல சுமொவருதன்னு பாத்துட்டு பேசவும்//
//ஒரு ஆப்பிள் ஜூஸ்//
இது சீரீயஸ் இடுகையா இல்ல மொக்க இடுகையா...?
(பம்மல் K சம்மந்தம் படத்துல வர்ற கமல் டையலாக் மாதிரி குழப்பமா இருக்கே)
நாங்களும் மொக்க பின்னூட்டம் போடுவோம்ல....
http://vaarththai.wordpress.com
அடக்கடவுளே.. சீரியஸ் பதிவு எழுத வேணாம்னு யார் சொன்னது. நமக்கும் கோபமெல்லாம் வருமில்ல.. தலைப்பு வேணும்னா கொஞ்சம் மாத்த ட்ரை பண்ணலாம்.
//ஆதவன் சார்//
சாரா?????????????? அவ்வ்வ்வ்வ்
இப்போ என்ன சொல்ல வாரீங்க. அத மொதல்ல சொல்லுங்க
" வேற வழி??? நாமும் சேர்ந்து கத்தினால் தான் பிள்ளைகள் நம்ம எதோ “ ஹை! டாம் அண்ட் ஜெர்ரி விட அப்பா அம்மா பைட்டு சூப்பர் “ என்பது போல் மெய்மறந்து பார்ப்பார்களே! …வீட்டுக்கு வீடு இதெல்லாம் சகஜம் தானே !)"
ஆஹா சூப்பர்
எச்சூச்மி , நல்லாருக்கு
படிக்கிறதுக்குள்ள குழப்புது , பதிவ கொஞ்சம் அலைன் பண்ணுங்க , நல்லா கேப் விட்டு எழுதுங்க , நிறைய பாரா , பாராவா எழுதுங்க (யோவ் மங்கு நீ பெரிய்ய பருப்பு அடுத்தவுகளுக்கு அட்வைஸ் பண்றியா , பஸ்ட்டு நீ ஒழுங்கா எழுதபாறு)
எங்கள் கட்சியில் சேர்ந்த மறு நாளே இப்படி மொக்கையா
நீங்க எதோ சொல்ல வரீங்கன்னு தெரியுது ஆனா என்னனுதான் புரியல..
சூப்பர்.. காயத்ரி..
வீட்டில் நடக்கற எல்லாம், நகைச்சுவையா சொல்லிட்டீங்கப்பா..
இருங்க, ஆப்பிள் ஜூஸ் கொண்டு வரேன்.. :-)
உங்கள் நட்பிற்கு ஒரு விருது வழங்கி இருக்கிறேன்..
பெற்றுக்கொள்ளுங்கள்.. :-))
http://anbudanananthi.blogspot.com/2010/07/blog-post_15.html
”ஆப்பிள் ஜூஸ்”
எடுத்துக்கங்க தோழி...
ஆன உங்க பதிவ படிச்சு எனக்குல்ல மூச்சு வாங்குது ஸோ நானே குடிச்சுடுரேன் க்ளக் க்ளக்...
enathu puthu pathivu.
http://pattikattaan.blogspot.com/2010/07/blog-post_16.html
@Madhavan கமென்ட் பொறுமையா போடுங்க பரவால்லை
@soundrதெரியலையே.......
@☀நான் ஆதவன்☀ சரி..சார் இல்ல இனி...சகோதிரரே..
@அருண் பிரசாத் ஆஹா ஒரு பக்கம் பூரா சொல்லி இருக்கேனே...
@sandhya நன்றி மாமி..எல்லாம் நடக்கறது தானே
@மங்குனி அமைசர் உங்கள் கருத்துகள் ஏற்றுக்கொள்ளபட்டது...சரி செய்யறேன் சகோதிரரே...நன்றி
@ஸ்ரீராம். நன்றி
@சௌந்தர் அதனால்தானே மொக்கை பதிவு..எப்பூடி...ஹ ஹ
@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) எனக்கு புரிந்தவுடன் மறக்காமல் சொல்லிவிடுகிறேன்..
@Ananthiநன்றி தோழி..ஆப்பிள் ஜுஸ்க்கும் நன்றி..
@pinkyroseஹா ஹா..நன்றி..தோழி..
@Jey
படித்தேன்..மிகவும் ரசித்தேன்...அருமை...நன்றி
ஹா ஹா ஹா .. இந்தாங்க ஆப்பிள் ஜூஸ்.... சூப்பர் தான் போங்க .... (இல்லேனா சுமோ வருமாமே... மீ எஸ்கேப்...................)
daily oru post pooduveelaa neenga??? sssssssssssssapaa kannai kattuthudaa sami!!..:)
@அப்பாவி தங்கமணி சுமொவுக்கு பயந்துதான் ஆப்லே ஜூஸ் ஆ? என்ன கொடுமை தோழி இது...ஹ ஹ ஹ ..நன்றி
@தக்குடுபாண்டிஆமாம் தினமும் ஒரு பதிவாவது எழுதனுன்னு ஆசைதான் எவ்ளோ நாள் முடியுதோ எழுதறேன்..நன்றி
Post a Comment