" என்ன நாங்கன்னா அவ்ளோ எகத்தாளமா போச்சா?? பேயா சுத்துறது எவ்ளோ கஷ்டமான வேலை தெரியுமா?????? நாங்க தங்க தனி வீடு உண்டா??? தனி வண்டி........ அட்லீஸ்ட் தனி பஸ்??? ஒரு ஸ்பெஷல் ஹோட்டல்??? .ச்சே எப்போ பாத்தாலும் பயமுடுதுற மாதிரி கல்லறை இல்லன புளியமரம் மேக்ஸிமம் முருங்கை மரம் !!
நாங்களே கஷ்டப்பட்டு வாழறோம்!!!! இதுல நீ என்னடான்னா ஓஜா போர்டு அந்த போர்டு இந்த போர்ட்டுன்னு பேய கூப்றேன் ஜோசியம் பாக்கறேன் ன்னு பீட்டர உட்டுன்னு அலையிரியா????? அதும் இன்டர்நெட் ல....... உன்ன................ இரு என் அங்கிள் காட்டேரி கிட்ட சொல்றேன் !!! " என்று கத்திக்கொண்டே பேய் ஒன்று என்னை துரத்த........
ஆஆஆஆஆஆ ..என்று அலறியபடி வேர்த்து விறுவிறுத்து கண்ணத் தொறந்தா...கனவு....அடக்கொடுமையே...இதுக்கா இப்படி??...எதோ கனவுல ஜானி டெப் வருவான்னு பாத்தா...பேய் வந்து தொரத்துதே...!!!
கண்ணெதிர கடிகாரம் சின்ன முள்ளு எட்டுலயும் , பெரிய முள்ள ஒன்பதுக்கு நகுத்தலாமா வேணாமா என்று குழம்பியபடி..எட்டிலிருந்து எட்டிப்பார்த்தது...
இதுல மெலிச ஒரு முள்ளு யோசிக்காம ஓடிக்கிட்டே இருந்தது...
பக்கத்துல சுவர்ண கடிகாரத்துக்கு போட்டியா சுத்திக்கிட்டு இருந்துருக்கா போல..கொஞ்ச நேரம் அப்றமா செல் போன் ல அழைப்பு வருது...
"என்னம்மா?? பாக்கிங் எல்லாம் ஓவரா?? லாஸ்ட் மினிட் ல டென்ஷன் ஆகாதே சரியா நான் ஆபீஸ் கலம்பாறேன் " என்று அவர் பாவம் ஞாபக படுத்த போன் செய்தார்..ஐயோ..அப்படி ஒருவிஷயம் மறந்தே போச்சே நான் எப்போ பாக்கிங் பண்ணி எப்போ கிளம்பி???
இன்னிக்கி சாயங்காலம் ஏழு மணிக்குள்ள ஏர்போர்ட்ல இருக்கணுமே!!!!
பிடி ஓட்டம்...கால் டாக்ஸிக்கு போன் போட்டு வரசொல்லி...எல்லார்கிட்டயும்
சொல்லிக்கொண்டு கேளம்பினேன் நன்கனல்லூருக்கு ( புகுந்தவீடு..எங்கே புகுந்தே ஏன் புகுந்தேன்னுலாம் கேக்க கூடாது...மாமியார் வீடு அட மணி வீடு இப்போ என் வீடும் கூட போறுமா குழப்பினது????? )
" ரெண்டு நாள் இருந்தாலே நீ பெட்டி கட்ட டைம் போறாது...இதுல ஒரு நாள் கூட முழுசா இல்லை..என்னப்பன்ன போறியோ போ ...நான் சாயங்காலம் ஒரு ஆறரை மணிக்கு வரேன் பிக்அப் பண்ண " என்று பாசமாக!!??## வழி அனுப்பினார் அப்பா...
தூங்கிகொண்டிருந்த சுவர்நாவை எடுத்துகொண்டு கிளம்பினேன்...நங்கநல்லூரில் இருக்கும் வீட்டுக்கு சென்று ஒரு வழியா மூட்டை முடுச்சுக்களை ஏற்றி வீட்டுக்கு போனா.." என்னம்மா இது டைம் இல்லையே பாத்து பாத்ரமா பேக் பண்ணு என்று கூறிவிட்டு மாமியார்..செல்ல
ஆடுதிருடின கள்ளி போல் முழி முழின்னு முழிச்சுக்கிட்டு மெதுவா வேலைய தொடங்கினேன்...நல்லாத்தானே போய்கிட்டு இருந்துது.... இடம் இருக்குன்னு நெனச்சு லூசட்டும் ஷாப்பிங் பண்ணி இப்போ பாத்தா....ஒரு தனி போட்டியே வேணும் அப்போதான் நான் வந்கினதேல்லாம் உள்ளே போகும்!!
அடக்கடவுளே ஏன் இப்படி சோதிக்கிற..ஒரு வழியா நாலுமணிக்கு மூட்டை முடிச்சை கட்டி முடித்து...வெளியே சும்மா ரவுண்டு போயிட்டு வந்தா மணி ஆறு!!!!!!!
அலறி அடிசுண்டு ரெடி ஆகி முடிக்கறதுக்குள்ள அப்பா வந்துட்டார்..எல்லாரிடமும் விடைபெற்று கொண்டு ஏர்போர்ட் கேளம்பினேன்..." காதல் அணுக்கள் உடம்பில் எத்தனை " என்றுஎந்திரன் ரஜினி கேட்க....ஐயோ மொத்தம் எத்தனை பெட்டி ?? என்னவே இல்லையே...என்று மண்டை குழம்பா எர்போர்டும் வந்தது...
ஓடி போய் சுறு சுறுப்பா ஒரு ட்ராலியை கொண்டுவந்து பொட்டிய மேல வெச்சு தள்ளினா...அத்தனையும் சரிஞ்சு விழுந்தது...சூப்பர் ஆரம்பமே இவ்ளோ அமோகமா இருக்கே..இன்னும் போய் ஈரான்கரதுக்குள்ள என்னவெல்லாம்
சர்பரைஸ் எனக்காக காத்துகிட்டு இருக்கோ !...
சரின்னி வேற ட்ராலிய எடுதுட்டுவந்து கொளுவச்சு நகர ஆரம்பிச்சா...அம்மா....நான் போட்டிமேல ஒக்காரனும் ஒக்காரவை மா என்று சுவர்ண அழ ஆரம்பித்து விட்டாள்..நாசமா போச்சு..இந்த மூட்டையை எப்படி தள்ளரதுன்னு முழிக்குரப்போ இவ வேற நேரம் காலம் தெரியாம அடம்பிடிக்க
அவளையும் தூக்கி ஒக்கார வச்சு தள்ளிட்டு போனேன்...
என்ன எதோ சர்கஸ் கோமாளி மாதிரி பார்க்கறாங்க எல்லோரும்.இதெல்லாம் இவ போட்டிகளா இல்லை லேடி கூலியன்னு நெனச்சுருப்பாங்க..போல...யார் என்ன நெனச்சா எனக்கென்ன என் தலைவலி எனக்கு..இதுலயும் ஒரு தமாசு இருக்கேன்னு பேசமா உள்ள போனேன்..
மீதி part 2
g3
52 comments:
ஊர் போய் சேர்ந்தீங்களா இல்லியா?
//ஆடுதிருடின கள்ளி போல் முழி முழின்னு முழிச்சுக்கிட்டு மெதுவா வேலைய தொடங்கினேன்...//
மாடு திருடின கள்ளி எப்படி முழிப்பாங்க சகோ?
@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) aahaa ippadilaam கேப்பீங்கன்னா மாடு பண்ணி எருமைன்னு எல்லாத்தையும் சொல்லுருப்பேன் !!
ம்ம் ஷார்ஜா வந்து சேந்துட்டேன்...வந்த கதை நாளைக்கு
//.." காதல் அணுக்கள் உடம்பில் எத்தனை " என்றுஎந்திரன் ரஜினி கேட்க....ஐயோ மொத்தம் எத்தனை பெட்டி ?? என்னவே இல்லையே...என்று மண்டை குழம்பா எர்போர்டும் வந்தது...//
ஒரே தமாசு போங்கள்.
குழந்தையை பத்திரமா கூட்டிட்டு போயிடீங்கல்லே. லக்கேஜ் அதிகம்னு மறதில விட்டுடீங்களா? ஹிஹி
@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) ஹிஹி அவதான் என்ன கூட்டிகிட்டு வந்தா
Marvelous!! pichuttey pooo
@sukanya hey thanks a lot da
என்ன இது சின்ன புள்ள தனமா....
@வெறும்பய நான் சின்ன பொண்ணு தானே.அவ்வவ்வ்வ்வ்
ஒரே Adventure Story-யா இல்ல இது இருக்குது! அப்புறம் என்னாச்சி...???
தொடரும் வேற போட்டுட்டிங்க காயத்திரி
ஹாஹாஹா ஊர் போய் சேர்ந்தீங்களா இல்லையா?
//கத்திக்கொண்டே பேய் ஒன்று என்னை துரத்த..//
அச்சச்சோ.... பேய் பயந்துடலையா?
//அவர் பாவம் ஞாபக படுத்த போன் செய்தார்.//
Husbands வேலை எப்பவும் இதுதானே, கடைசில பேக் பண்ணலைனா அவர் வந்தா பேக் பண்ண முடியும்
@அருண் பிரசாத் " அச்சச்சோ.... பேய் பயந்துடலையா? "
இதுக்கு அந்த பேய் தான் பதில் சொல்லணும்..இருங்க இன்னிக்கி கனவுல கேட்டு சொல்றேன்...
பாவம் அவர பொறுப்பா ஞாபக படுத்தினார்..நான் தான் கொஞ்சம் சோம்பேறி
@என்னது நானு யாரா? ஹிஹி எஸ் funny adventure
இது என்ன புது கதைய இருக்கு ....அடுத்த பதிவில் பார்போம்
@kavisiva பாத்ரமா வந்துட்டேன் நன்றி
//மாமியார் வீடு அட மணி வீடு இப்போ என் வீடும் கூட போறுமா குழப்பினது?????//
அப்போ சுவர்ணா வீடு இல்லையா? கூப்புடுங்க உங்க பெண்னை ஒரு நியாயம் கேக்கனும்
@அருண் பிரசாத் ஆஹா குடும்பத்துல கொழப்பத்த கேளப்பிடுவீங்கபோல
//ஒரு வழியா நாலுமணிக்கு மூட்டை முடிச்சை கட்டி முடித்து...//
மூட்டை? சோத்து மூட்டை எதுக்கு, பிளைட்ல ஃப்ரியா குடுப்பாங்க
@அருண் பிரசாத் ஐயோ அது முட்டை இல்லை மூட்டை...நான் சுத்த சைவம் ப்ரோ
சார்ஜாலா ஏன் கரண்ட் கட் ஆனிச்சுன்னு எனக்கு இப்போ புரியுது....
ரஜினி பாட்ட கேட்டவுடனே கவுண்டிங்க் நினைவுக்கு வந்துச்சாம்...பார்றா.....
// என்ன நாங்கன்னா அவ்ளோ எகத்தாளமா போச்சா??//
நாங்கன்னா.. எத்தனை பேரு நீங்க....?
@இம்சைஅரசன் பாபு.. நன்றி..ம்..கூடிய விரைவில் போடறேன்
@dheva ஹாஹா...வந்துச்சே அதான் முக்கியம்
மத்த பேய்கள் சார்பா ஒரு பேய் துரத்தியது
//ஆடுதிருடின கள்ளி போல் முழி முழின்னு முழிச்சுக்கிட்டு மெதுவா வேலைய தொடங்கினேன்//
நீங்க ஆடு திருடுவீங்களா...............
ஜெ அண்ணன் கிட்ட சொல்லுறேன்
//மூட்டை? சோத்து மூட்டை எதுக்கு, பிளைட்ல ஃப்ரியா குடுப்பாங்க//
பழைய சோறு குடுக்க மாட்டாங்க அருண்
@ஜய்லானி & தேவா
ஷார்ஜா வர்ரதுக்கு இவ்வளோ கஷ்டபடனுமா?? சொல்லவே இல்லை....
//ஒரே Adventure Story-யா இல்ல இது இருக்குது!
அப்புறம் என்னாச்சி...???//
நானும் ரொம்ப பயந்து படிச்சேன் பேய்ன்னு வேற எழுதிருந்தான்களா பயந்துட்டேன்
//இரு என் அங்கிள் காட்டேரி கிட்ட சொல்றேன் !!!//
அருண்!!! ரமேஷ் உனக்கு அங்கிளா.... என்ன கொடுமை இது...
vankka terror
அருண் எதனை தடவ சொல்லுறேன் ரமேஷ் அ uncle ன்னு கூப்பிடதீங்கன்னு தாத்தான்னு கூப்பிடுங்க
ஷார்ஜாக்குலாம் போகறீங்க.. எங்க ஊட்டான்டையும் அடிக்கடி வந்து போங்க.. இப்பலாம் வர்றதில்லையே.. கோவமா?
-- http://madhavan73.blogspot.com
//கண்ணெதிர கடிகாரம் சின்ன முள்ளு எட்டுலயும் , பெரிய முள்ள ஒன்பதுக்கு நகுத்தலாமா வேணாமா என்று குழம்பியபடி..எட்டிலிருந்து எட்டிப்பார்த்தது...
இதுல மெலிச ஒரு முள்ளு யோசிக்காம ஓடிக்கிட்டே இருந்தது...//
வர வர வழுக்கி விழாம நடக்கறிங்க (நல்ல நடை சொன்னேன்..)
@இம்சைஅரசன் பாபு.. " நீங்க ஆடு திருடுவீங்களா............... "
ஆஹா ஒரு உவமைக்கு சொன்னா
@Madhavan ஆஹா அப்படிலாம் ஒன்னும் இல்லை..கண்டிப்பா வரேன்
@TERROR-PANDIYAN(VAS) ஆஹா நன்றி
என்னங்க நீங்க எழுதினதை பார்த்தா ஷார்ஜா கிளம்பின மாதிரி இல்லையே ... எங்கோ space ship போற மாதிரி இவ்வளவு தெளிவா விளக்கமாக....பாதையெல்லாம் சொல்லி எழுதி இருக்கீங்க))))))
@ganesh ஆஹா இதுக்கே இப்படியா..நான் உண்ணும் ரெண்டு பார்ட் ப்ளான் பன்னிருக்கேனே.ஹா ஹா
குழந்தையை பத்திரமா கூட்டிட்டு போயிடீங்கல்லே. லக்கேஜ் அதிகம்னு மறதில விட்டுடீங்களா? ஹிஹி
//
repeatuuuuuuuu
( புகுந்தவீடு..எங்கே புகுந்தே ஏன் புகுந்தேன்னுலாம் கேக்க கூடாது...மாமியார் வீடு அட மணி வீடு இப்போ என் வீடும் கூட போறுமா குழப்பினது????? )
ரொம்ப தெளிவா சொன்னது இது தான்
என்ஜாய்........ என்ஜாய்.......... என்ஜாய்.......
@pinkyrose ஆஹா அப்போ போஸ்ட் ஒன்னும் புரியலையா...நம்ம அருண் அன்னாகிட்டையும் டேர்றோர் அண்ணா கிட்டயும் கேளுங்க..
@Chitra நீங்க போஸ்ட என்ஜாய் பண்ணீங்களா??
அருமை.,
ஆமா நீங்க சென்னைல இருந்து ஷார்ஜா போறீங்க. கிளம்பும் அன்று கணவர் சென்னைல அலுவலகம் போறேன் என்று சொல்கிறார், புரிய வில்லை
"ஆடுதிருடின கள்ளி போல் முழி முழின்னு முழிச்சுக்கிட்டு மெதுவா வேலைய தொடங்கினேன்"
இது வேறேயா எப்போ திருடினே சொல்லவே இல்லை ..சரி அடுத்த தடவை என்னேயும் கூப்பிடு நானும் ரொம்ப நாளா ஆடு திருட போலாம் ன்னு நினைச்சிட்டு இருக்கேன் ..
ஊருக்கு போயி நாலு நாளாச்சு இப்பொ ஆவது பதிவுலக நண்பர்களை ஞாபகம் வந்ததுச்சு இல்லே சந்தோசம் ..
மெட்ராஸ் ஏர் போர்ட் இண்டர்நேஷனல்ல போனிங்களா இல்லை லோக்கல் உள்ளே போனீங்களா அதை முதல்ல சொல்லுங்க ஹி..ஹி..
பேயா சுத்துறது எவ்ளோ கஷ்டமான வேலை தெரியுமா??????///
என்னது நீங்க பேயா
ச்சே... கனவா... ச்சே... நானும் கூட நெஜமா ஏதோ பேய் கிட்ட சிக்கிடீங்களோனு எவ்ளோஓஓஓஓ சந்தோசப்பட்டேன் (!@#$%^) தெரியுமா ... ஹும்... எல்லாம் வெறும் கனவா போச்சே... ஹும்... இதுல ஜானி டெப் வேறயா... (ஹா ஹா ஹா)
லேடி கூலி... ஹா ஹா ஹா... சூப்பர் ஜோக்... ஹா ஹா அஹ... என் அவஸ்தை உனக்கு ஜோக்கானு திட்டறேன்னு தெரியுது காயத்ரி... இருந்தாலும் ஹா ஹா ஹா... அடகொடுமையே... இதுல பார்ட் 2 வேறயா? இது எல்லாம் ரெம்ப ஓவர்... சொல்லிட்டேன் ஆமா.. ஹா ஹ ஹா
சர்பரைஸ் எனக்காக காத்துகிட்டு இருக்கோ !...
சரின்னி வேற ட்ராலிய எடுதுட்டுவந்து கொளுவச்சு நகர ஆரம்பிச்சா...அம்மா....நான் போட்டிமேல ஒக்காரனும் ஒக்காரவை மா
ithuthaan immediate surprise ahaaaa
////எதோ கனவுல ஜானி டெப் வருவான்னு பாத்தா...பேய் வந்து தொரத்துதே...!!!///
ஹா ஹா ஹா.. செம சூப்பர் போங்க.. சிரிச்சு முடியல.. :D :D
///காதல் அணுக்கள் உடம்பில் எத்தனை " என்றுஎந்திரன் ரஜினி கேட்க....ஐயோ மொத்தம் எத்தனை பெட்டி ?? என்னவே இல்லையே...என்று மண்டை குழம்பா எர்போர்டும் வந்தது...///
எத்தன பொட்டின்னு சரியா பாத்தீங்களா.. இல்லியா?? :D :-))
///ஓடி போய் சுறு சுறுப்பா ஒரு ட்ராலியை கொண்டுவந்து பொட்டிய மேல வெச்சு தள்ளினா...அத்தனையும் சரிஞ்சு விழுந்தது...சூப்பர் ///
ஹா ஹா... எனக்கும் இதே அனுபவம் உண்டுப்பா.. செம கடுப்ப வரும் தெரியுமா...??
அதுவும் பொட்டி எல்லாம் வெயிட்டா வேற இருக்கும்.. எடுத்து அடுக்கும் முதல்,, ஒரு வழி ஆயிரும்.. :-))
உங்க நிலைமை புரியுது...
நல்லா இருக்குப்பா உங்க அனுபவம்... :-)
லேட்டா வந்ததுல ஒரு வசதி பாருங்க..
ரெண்டாம் பாகம் போட்டுட்டீங்களே... அதையும் இப்ப படிச்சிருவேன்.. :-))
Post a Comment