இப்போ போஸ்டுக்கு போவோம்...பதிவுக்குன்னு சொன்னேன்...
உள்ள போனேனா...நேரா நம்ம ***** செக் இன் கவுண்டர் (counter...kavunder இல்லை சொல்லிபுட்டேன் ஆமாம் ) தெரிய நேரா ஸ்கேன் செய்ய போனேன்
பெட்டிய தூக்கி அந்த பெல்ட் மேல வைக்கணும்...முன்னாடி இருக்கும் ஆளு அசால்ட் ஆறுமுகம் போல...ஜம்முன்னு எடுத்து வச்சார் ..நானோ பொட்டிய நகர்த்த கூட முடியாம விழிக்க.
சரி நமக்கு சனியன் சூட்கேஸ் ல வந்தா நான்என்ன செய்ய முடியும்?? மெதுவா பொட்டிய தூக்க முர்ப்படும்போழுது ஒரு குரல் " மேடம் நான் ஹெல்ப் பண்ணவா " ஏர்போர்ட் ஹெல்பர்...ஆஹா தானே வலிய வந்து மட்டுறாங்கன்னு ஓகே தேங்க்ஸ் என்று சொல்ல பாவம்..செக்கின் முடியும் வரை உதவ..எவ்ளோ சார்ஜ் என்று கேட்டா..இருநூறு என்றார்.ஆஹா என் கைல மொத்தமே அவ்ளோதான் இருந்துது!!! வச்சான் வேட்டு!!
பேசாமல் கொடுத்துவிட்டு...அப்பாவிடம் கொஞ்சம் லவுட்டி கொண்டு டாடா சொல்டு மேல போனா...ஆஹா....கரீட்டா நான் போறப்போ ஒரு செக்யூரிட்டி செக்கின் மிஷின் மக்கர்..ஆல் டைம்...ம்ம எல்லாம் முடிச்சு..போய் அப்பாடான்னு ஒக்காந்து ஒரு ஒரு தருக்கா போன் பண்ணி பேசிட்டு இருந்தேன்..
அப்போ ஒரு குரல்..." சுவர்ணா மணிகண்டன் ப்ளீஸ் கம் டு கேட் த்ரீ இம்மிடியாட்லி " இது என்னடா வம்பா போச்சு...ஒரு வேலை பேச்சு ஸ்வரசியதுல பிளேன விட்டேனா?? என்ன ஆச்சுன்னு ஓடினா..
" போர்டிங் பாஸ் ப்ளீஸ் " என்றார் ஒருவர்..மற்றொருவர் " சுவர்ணா..." என்று இழுக்க..." மை டாட்டர் " என்றவுடன் முகம் மாறியது..என்னடா இது
எதோ மணிரத்னம் படம் மாதிரி மாறி மாறி பேசி பேசி லுக் விட்ரங்கன்னு முழிக்க..
" சாரி மேடம் , ப்ளைட் இஸ் புல் ! ...... ( ஐயோ நாசமா போச்சே நான் தான் ஆன்லைன் செக்கின் பன்னேனே !! ) சோ வி ஹவே டு சேஞ் யுவர் டிக்கெட்..( நோ......................................) டு பிசினெஸ் கிளாஸ் ! ( !!!!!!!!!??????????????#########)
என்றார் பாவமாக..எதோ எனக்கு இடையூர் செய்தது போல் !! ( ஆஹா ஆண்டவா என்மேல் என்ன இப்படி ஒரு கருணை ???? ( பாவம் சுவர்நாவின் பெயர்தான் வந்திருகிறது போல..கூட என்னை எதிர்பார்க்க வில்லை..)
எகிறி எகிறி மனதுக்குள் குதித்துக்கொண்டு பிளேன நோக்கி போனோம்...
மேடம் ப்ளீஸ் என்று கையில் இன்ருந்த பெட்டியையும் ஒருவர் வாங்கி baggage ல போட்டுவிட்டார்..நடப்பது என்னவென்றே தெரியாமல்..குஷயாய் உள்ளே போனா..................
ஜமுன்னு பெரிய சீட்..நட்சத்திர ஹோட்டல் போல் வந்து வந்து கேட்டு கேட்டு
சேவை செய்றாங்க..சுவர்ணா தூங்கிட்டா...நானும் தூங்கலாமுன்னு சீட் எல்லாம் ரிக்லைன் செய்து கண்ணா மூடினா..
"ஆண்டி.......ஹாய் " ஒரு குரல் திரும்பிய் பாத்தா..ஒருபத்து வயது மதிக்க தக்க பய்யன்...( என்னது ஆண்டியா??? அடபாவி...என்ன கெட்டப்புல வந்தாலும் மானத்த வாங்க ஒரு கூட்டம் இருக்கும் போல !! ) வந்த கோவத்தை அடக்கி கொண்டு " ஹாய் " என்றேன் ...அவன் " Am unaccompanied minor , see my badge..i always travel in business class ( கொடுத்து வச்சவன் ) ...தாத பூட் தஞ்சாவூர் என்று மொக்கை போட ஆரம்பித்தான்.." ஓகே ஆண்டி நைஸ் மீட்டிங் யு " என்று அவன் சொல்ல
" thanks for flying with us........we have landed in dubai... ( ஆஹா தூக்கத்துல துண்டப்போட்டானே ) ஊரே வந்துருச்சு..அட என்ன கிலாச்னா என்ன மனுஷன் தூங்க முடியலையே...
அந்த பய்யன் எங்கேன்னு தேட ஆள் எஸ் !!! சரின்னு பெருமையா ( ஓசி பிசினெஸ் கிளசுன்னு யாருக்கு தெரியும் ? ) எல்லாருக்கும் முன்னாடி வெளியில் வந்து போட்டி எடுக்க பெல்டுக்கு போனா...
ஒரு முப்பது நிமிஷம்...ஜனங்க வராய்ங்க பொட்டிய எடுக்குராய்ங்க போராய்ங்க...என் பொட்டிய காணும்,,வந்துச்சு கடைசியா...ச்சே
(என்னதான் என்னைய தடவி மண்ணுல பொறந்தாலும் ஒட்டுரதுதான் ஓட்டும்.....)
வெளியே வந்தால் ஆவலா ?? காத்துகுட்டு இருந்த நம்மாளுகிட்ட " என்னங்க
எப்படி இருந்துது தெரியுமா பிசினெஸ் கிளாஸ் என்று சுத்தோ சுத்துன்னு கதை விட " மனிதர் ஒரு ரியாக்ஷனும் இல்லாமல் இருந்தார்...
" இனி போனா பிசினெஸ் கிளசுலதான் போகணும் " என்றேன் ( அப்படி போடு அருவாள ) என்ன ? என்றார்..( சிவாஜி தோற்ருபோனார்! என்ன ஒரு முறை ! )
வாய தொரப்பேனா???கேப் சிப் என்று வீடு வந்து சேர்ந்தேன்..
அவரோ சிரித்து விட்டு உள்ளே சென்றார் ..அந்த சிரிபிர்க்கு என்ன அர்த்தமோ..
ஆகையால் சகலமான வர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் ...நான் ஜாக்ரதையா ஊருவந்து சேர்துட்டேன்!! பயணம் இனிதே அமைய வாழ்த்திய நண்பர்களுக்கு நன்றி !! ( அப்பாடா இத முனாடியே சொல்லி தொலைக்க கூடாதா?? அதுக்கா இப்படி இரண்டு பதிவு.. தீட்டு டா அருவாள ! எடுடா அந்த சுமோவ ! )
ஆஹா மீ எஸ்கேப் !
40 comments:
சரியான மொக்கை சாரி, அருமையான பதிவு.
Good one. Enjoyed it.. Thanks for sharing
Seemachu
http://seemachu.blogspot.com
அடடா... துபாய் சீக்கிரம் வந்துட்டுதே!!.பத்திரமா வந்துட்டீங்கல்ல :-)))
//"ஆண்டி.......ஹாய் "//
உங்க புகழ் எங்கெல்லாம் பரவியிருக்கு பாருங்க :)
//பயணம் இனிதே அமைய வாழ்த்திய நண்பர்களுக்கு நன்றி !!//
ஸ் ஸ் முடியல :)
இன்ட்லில இணைக்கலியா இன்னும்?
அப்புறம் எப்டி வோட்டுப் போடுறது?
ஹா ஹா அப்படி ஓசியிலயே பிசினஸ் கிளாஸ்ல பயணம் செய்துட்டீங்க. அந்த புண்ணியம் பண்ணிய ஏர்லைன்ஸ் எதுவோ?
அது சரி துபாய்ல எங்க...அட்ரஸ திருப்பிச் சொல்லுங்க.. :)
சரி ஊருக்கு போனதும் என்கிட்டே வாங்கின ஒரு லட்ச ரூபாய திருப்பி அனுப்புறதா சொன்னீங்க. எப்ப அனுப்புறீங்க?
ஹா! ஹா! ஹா ஹா super Gayathri!
காயூ..நன்றாக எழுதி இருக்கீங்க..
ஆனா பேச்சு வழக்குல எழுதினாலும் தப்பு தப்பாதான் எழுதனுமா?
அப்புறம் அந்தப் பையன் ஹை,க்ரானி'ன்னு கூப்பிட்டா மாதிரில்ல காதுல விழுந்தது...நான் பின்னாடி முன்னாடி சீட்டுல இருந்து கேட்டேனே..
Very Nice, small spelling mistakes. Gret Keep it up!
//அப்பாவிடம் கொஞ்சம் லவுட்டி கொண்டு டாடா சொல்டு மேல போனா..//
அதான் வழக்கமா நடக்கறது ஆச்சே, இதை வேற சொல்லனுமா?
ஆண்டவா!
தமிழ காயத்திரிட்டருந்து காப்பாத்தூஊஊஊ
ஆகையால் சகலமான வர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் ...நான் ஜாக்ரதையா ஊருவந்து சேர்துட்டேன்!! //
கூட வந்தவங்க பத்திரமா வீட்டுக்கு போனாங்களா?
என்னது ஆண்டியா?///
தம்பி ஏன் இப்படி உண்மைய எல்லாம் சொல்றிங்க
அந்த பையனை எங்கேன்னு தேட ஆள் எஸ் !!!///
எதுக்கு அந்த பையன் உங்களை ஆண்டி சொன்னதுக்கு அடிக்க வா இல்லை தூங்க விடமா செய்தற்க்கு அடிக்கவா
முடியலைடா சாமி !!! ஊருக்கு போனதுக்கே இரண்டு போஸ்டா
///சோ வி ஹவே டு சேஞ் யுவர் டிக்கெட்..( நோ......................................) டு பிசினெஸ் கிளாஸ் ! ( !!!!!!!!!??????????????#########)என்றார் பாவமாக..எதோ எனக்கு இடையூர் செய்தது போல் !! ( ஆஹா ஆண்டவா என்மேல் என்ன இப்படி ஒரு கருணை ???? ///
அட அட.... பிசினஸ் கிளாஸ்-ல பயணமா??
ஆஹா... கலக்கல்ஸ்.. போங்க...
//// ( ஆஹா தூக்கத்துல துண்டப்போட்டானே ) ஊரே வந்துருச்சு..அட என்ன கிலாச்னா என்ன மனுஷன் தூங்க முடியலையே/////
ஹா ஹா ஹா.. ஆனா கிடச்ச வாய்ப்பை குட்டி பையன் வந்து டிஸ்டர்ப் பண்ணிட்டனா??
////" இனி போனா பிசினெஸ் கிளசுலதான் போகணும் " என்றேன் ( அப்படி போடு அருவாள ) என்ன ? என்றார்..( சிவாஜி தோற்ருபோனார்! என்ன ஒரு முறை ! ///
ஹ்ம்ம்.. அவர் பிரசின அவருக்கு... பிசினஸ் கிளாஸ்-ஆஆஆஆஆஆ??? ன்னு அவரு ரியாக்ஷன் குடுத்திருக்கணும்..
நல்ல அனுபவம் தான்.. :-))
நல்ல அனுபவம் தான் ..ஆனாலும் ஆன்டி ன்னு கூப்பிட அந்த பையன்னு அவ்ளோ தைரியமா ?ஹி ஹி சும்மா தமாஷு
அப்பாட அப்படீனாநீங்க ஊருக்கு போய்டீங்க next postla திரும்பவும் இந்த மொக்கையவே தொடரமாடீன்களே தெய்வமேஏஏஏஏ இந்த எழுதாலர்கிட்டே இருந்து எங்களை காப்பாத்துங்களேன்
அப்பால எனக்கு ஒரு doubttu மேல இருக்குரதுதான் உங்க family photo வா நீங்க ரொம்ப cute பாஆஆஆஆஆஆஆஅ
@DrPKandaswamyPhD ஆஹா..எனக்கு வேணும்
@Anonymous தேங்க்ஸ் சீமாச்சு..
@அமைதிச்சாரல் ஆமா சீக்ரமா வந்துருச்சு...நான்லாம்..நன்றி
@Balaji saravana ஆஹா ஏன் இப்படி
@kavisiva நம்ம எமிரேட்ஸ் தான்
@ரகுநாதன் அத்தான் நம்ம வடிவேலு சொல்றாரே
@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) ஒஹ் மறந்தே போயிட்டேன்..நம்ம அருணும் ஆதவனும் எனக்கு தலா மூன்று லட்ஷம் தரனும் அவங்க குடுத்த உடனே தந்துர்றேன்
@என்னது நானு யாரா? மிக்க நன்றி
@sukanya நன்றி சுகன்யா
@அருண் பிரசாத் ஹா ஹா அப்போ அப்போ உண்மையா சொல்லன்னும்ல அதான்
@pinkyrose ஹிஹி தமிழ் கண்டிப்பாக வாழும்..அனைவரும் இனிதே இல்லம் சென்றனர்
@சௌந்தர் ஆஹா அவன நீங்கதான் அனுப்புநீன்களா??
@சௌந்தர் எல்லாத்துக்கும் தான்
@GSV மூனா போடனும்ன்னு இருந்தேன்..ஆனா பாருங்க நேரமே இல்லை அதன் ரெண்டு
@Ananthi ஹிஹி ஆமா ஓசி பிசினெஸ் கிளாஸ் தான்..ஹிஹி அவர் மனசுல என்ன என்ன ஓடிச்சோ
@sandhya வாட் டு டூ எல்லாம் என் நேரம்
@vinu இல்லை இல்லை நம்ம பதிவுலக நம்பார்களின் புகைபடங்கல்தான்..ஆனா அந்த கைல கம்பா புடிச்சுகிட்டு இருக்குறது நீங்கதானே..
aunty nanum oruku poitu vanthuvitennnnnnnnnnnnnnnnnn...
varthukula GETTUP ELLAM CHANGE PANNI sorry blogs temp late elam change pani vachu erukenga..summa daringa erukku aunty..
Post a Comment